Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லண்டனில் இருந்து 400 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட தூரம் நடந்து பரிஸ் நகரைச் சென்றடைந்துள்ள சிவந்தன், இன்று 11வது நாளில் லாக்கூர்னோவ், ஒபவில்லியே, பரிஸ் நகரசபைகள் ஊடாக தனது நடை பயணத்தை தொடருகின்றார். நேற்று செவ்றோனைச் சென்றடைந்திருந்த சிவந்தன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அக வணக்கம் செலுத்தியதுடன், அங்கு நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டிருந்தார். இன்று காலை அதே இடத்தில் இடம்பெற்ற அக வணக்கத்தைத் தொடர்ந்து சிவந்தனும், பொதுமக்களும் லாக்கூர்னோவ் நோக்கி நடந்து செல்வதுடன், பின்னர் அங்கிருந்து ஒபவில்லியே செல்லவுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2:30 மணியளவில் பரிஸ் நகரசபையை அவர் சென்றடைந்தது…

    • 0 replies
    • 632 views
  2. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அமர்வுகள் இம்மாத முதல் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிபுணர்கள் குழுவின் உத்தியோகபூர்வ அமர்வுகள் ஆகஸ்ட் மாத முதல் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின் அடிப்படையில் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளரின் பேச்சாளர் சொன்ஹா சோய் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் போது இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமர்வுகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் நிபுணர்கள் குழு…

    • 2 replies
    • 981 views
  3. எங்களுக்கு உங்களின் உதவி உடன் தேவை - இ.மெயில் மூலம் கே.பி கேட்கிறார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-01 06:47:12| யாழ்ப்பாணம்] எங்களுக்கு உங்கள் உதவிதேவை. உட னடியாகத் தேவை. அந்த உதவி உளப் பூர்வ மானதாகவும்,அறிவு பூர்வமானதாகவும், பொருளாதார ரீதியானதாகவும் உடல் உழைப் பாகவும் வழங்கப்படுவதனை நாங்கள் எதிர் பார்க்கிறோம். என்றவாறாக இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலைகளைச் சுட்டிக்காட்டி கனேடிய வர்த்தக சமூகத்தினரின் மின் அஞ்சலுக்கு கே.பியின் கடிதத் தலைப்பில் 2 பக்கங்களிலான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிடோ ( North East Rehabilititon & Development Organazation or NERDO) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்…

    • 5 replies
    • 1.8k views
  4. விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியமை பெரும் தவறு என்றும், பலமாக இருக்கும் போது உரிமைகளை பெற்றிருக்கலாம் என்றும் ஆனால் அவர்கள் தவறிழைத்து விட்டார்கள் என்றும் ஜோய் மகேஸ்வரன் கூறியுள்ளார். ஜோய் மகேஸ்வரன் 2002-2005 வரை பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளின் குழுவில் அங்கம் வகித்தவர் என்பதும் அதன் பின்னர் குழுவில் இருந்து விலக்கப்பட்டவர். பின்னர் 2009 இல் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு பின்னர் கே.பி. பத்மநாதனின் குழுவில் அங்கம் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேச்சுவாத்தையில் இருந்து பின்வாங்கியதன் மூலம் தமக்கு தாமே புலிகள் குழி தோண்டிவிட்டதாக நீண்ட நாள் ஆய்வின் பின்னர் கண்டுபிடித்து கூறியுள்ள ஜோய் மகேஸ்வரன். இனிமேல் புலிகள் தழைப்பதற்கு வாய்ப்பே இல…

    • 15 replies
    • 2.3k views
  5. இடம்பெயர் மக்கள் விவகாரத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது – TNA இடம்பெயர் மக்கள் விவகாரத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் தமது சொந்த இடங்களில் மீள குடியேறுவதற்கான உரிமை சில பிரதேசங்களில் மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இடம்பெயர் மக்களின் வீடுகளில் இராணுவத்தினர் தங்கியிருப்பதாகவும், சில பிரதேசங்கள் இராணுவமயப்படுத்தப்பட்டு வருவதாகவும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இடம்பெயர் …

  6. தமிழ்க் கட்சிகளின் அரங்கம் (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான தமிழ்க்கட்சி களின் கூட்டு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தனது அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. அதனால் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதி கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் தேடிச் சென்று சந்திக்கவும் தயாராக இருப்பதாக அறிவித் துள்ளார்கள். தமிழ் மக்களின் அமோக ஆதரவு பெற்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்பதனை கடந்த பொதுத்தேர்தல் தெட்டத் தெளிவாகக் காட்டி உள்ளது. அதனால் கூட்டமைப்பைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம் தமிழ்க் கட்சிகளின் அரங்கத் துக்கு. இதனைத் தமிழ் மக்கள் எவரும் புரிந்துகொள் வர். ஒற்றுமையே பலம். ஆகையால், தமிழ்க் கட்சிகள் யாவும் ஓரணியில் திரண்டு, ஒரே குரலில் ஒலித்தால், அரசாங…

    • 0 replies
    • 1.5k views
  7. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று பிற்பகல் பரிஸ் நகரைச் சென்றடைந்துள்ளார். லண்டனில் இருந்து டோவர்வரை 100 கிலோமீற்றர்கள்வரை நடந்து சென்ற சிவந்தன், பின்னர் பிரான்சின் கடற்கரையான கலைசில் இருந்து பரிஸ் நகர்வரை 296 கிலோ மீற்றர்கள் நடந்து சென்றுள்ளார். மேலும் 60 கிலோமீற்றர்கள் நடக்கவுள்ள சிவந்தனின் நடை பயணம் மீண்டும் நாளை தொடரவுள்ளது. இன்று பிற்பகல் செவ்றோனைச் சென்றடைந்த சிவந்தனும், அவருடன் இணைந்து சென்றவர்களும் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியிலும், மரம் நடுகை செய்யப்பட்ட இடத்திலும் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த அ…

    • 0 replies
    • 690 views
  8. கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்தவரான ராமசந்திர விக்னேஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினரை, தண்டனைக் காலம் முடியும் தருவாயில், பொய் வழக்குகளை புனைந்து திரும்பவும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது இலங்கை அரசு. நெடுமாறன் என்ற புனைப்பெயரில் விடுதலைப்புலி அமைப்பில் வழங்கல் துறையிலும், பின்னர் புலனாய்வுத்துறை தளபதியாகவும் செயல்பட்டு வந்தவர்தான் கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்தவரான ராமசந்திர விக்னேஸ்வரன். இவருடைய தகப்பனாரை இந்திய அமைதிப்படை 1989ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கு உணவு கொடுத்து உதவினார் என்று குற்றச்சாட்டப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார். ஆனாலும், விக்னேஸ்வரன் என்ற நெடுமாறன் தனது 15வது வயதிலேயே ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு, 1987ம் ஆண்டே விடுதலைப்புலி இயக்கத்…

    • 0 replies
    • 759 views
  9. 02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள் திகதி: 02.08.2010, 2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில …

  10. சென்னை அரசியல் பள்ளி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தி வீக் செய்தி ஆசிரியர் கவிதாவினால் வாசிக்கபட்ட கட்டுரை ஒர் ஊடகவியலாளராக, குறிப்பாக ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பணிபுரியும் ஊடகவியலாளராக, இங்கு நின்று பேசுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கும் சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை இந்திய ஊடகங்களின் மொழி குறிப்பாகத் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஊடகங்களின் மொழி சில வார்த்தைகளுக்குள் சுருங்கிவிட்டது. புலி எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு என்று சுருங்கிவிட்ட மொழியைக் கொண்டு, அதனடிப்படையிலும் அந்தப் பின்னணியிலும் பெரும்பாலான ஊடகங்கள் செயற்படுகின்றன. பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் ப…

  11. ஐந்து ரூபாயுக்கு தர்ப்பை தரித்தவர்கள் தாங்களும் உபயகாரர்களாம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-02 10:09:24| யாழ்ப்பாணம்] தமிழினத்தின் அழிவுக்கெல்லாம் அடிப்படை எங்களிடம் இருக்கக் கூடிய ஒற்றுமையீனம் என்பது தெரிந்தவிடயம். இதற்கு அடுத்ததாக பொதுநலம் என்று கூறிக்கொண்டு சுயநலத் தின் அடிப்படையில் செயற்படும் கொடூரம்-இதன் விளைவாகவே தமிழினம் உய்வுபெற முடியவில்லை. விடுதலைப் புலிகளின் மீதான போர், அந்தப் போரில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி, இதில் பொது மக்கள் சந்தித்த இழப்புக்கள் என்ற பட்டி யலை மனதிலிருத்திப் பாருங்கள்.தமிழ்... தமிழ்... அதுவே எங்கள் மூச்சு என்று மேடையில் முழங்கிய பலர் எங்கே நிற்கிறார்கள் என்பதை உற்று நோக்குங்கள். இந்த அநீதித்தனம் இருக்கும் வரை எங்கள் இனம் …

  12. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தனிமனித சொத்தல்ல... திகதி: 01.08.2010, "விடுதலைப் புலிகள் என்பது தமிழ் மக்களின் பிள்ளைகளான 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களினதும், பல்லாயிரக்கணக்கான போராளிகளினதும் அர்ப்பணிப்பால் உருவான ஒரு அமைப்பாகும். தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு சொந்தமாகும். சுருக்கமாக சொன்னால் அது தமிழ் மக்களினுடைய சொத்தாகும். உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்பதும் அந்த இயக்கம் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இயக்கம் என்பதும் தமிழ் மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறு அல்ல என்பதும் மேற்குலகத்திற்கு இராஜதந்திர முறைப்படி தெழிவுபடுத்தப்பட வே…

  13. தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் மேற்கொள்ளும் 10வது நாள் மனிதநேய நடை பயணம் பரிஸ் நகரை அண்மித்துள்ளது. பரிஸ் நகரில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன், சற்று முன்னர் வில்லியேஸ் நகரை சென்றடைந்தபோது அங்குள்ள தமிழ் மக்கள் ஒன்றுகூடி அவரை வரவேற்றதுடன், உள்ளுர் பத்திரிகையாளர்களும் சிவந்தனைச் சந்தித்திருந்தனர். தற்பொழுது செவ்றோன் நோக்கி நடந்து செல்லும் சிவந்தன் செவ்றோனை சென்றடைந்ததும், இன்று பிற்பகல் 3:00 மணியளவில் முள்ளிவாய்க்கால் மக்களிற்காக செவ்றோன் நகரசபையால் மரநடுகை செய்யப்பட்ட நினைவிடத்தில் இடம்பெறும் மக்கள் ஒன்றுகூடலில் கலந்துகொள்ள இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து லாக்கூர்னோவ் என்ற இடத்தில் பிரிகேடியர்…

  14. கடவுளை நம்பி தோணியை கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத்தமிழர் நிலை கடவுள் தன்னை எப்படியும் வந்து காப்பாற்றிவிடுவார் என்ற நினைப்பில் அருகில் வந்த படகையும் கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத் தமிழரின் நிலை. எப்படியும் அருகில் இருக்கும் இந்தியா தமிழீழத்தை பெற்றுத்தந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஈழத்தமிழர், இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நாட்டுடனும் இராஜதந்திர மற்றும் சிநேகபூர்வமான தொடர்பைப் பேணவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். சீனாவுடன் நல்லதொரு தொடர்பை வைத்திருந்திருந்தால் நிச்சயம் ஈழத்தமிழர் இன்று சுதந்திர தமிழீழத்தை பெற்றிருப்பார்கள். ஏதோ வாய்க்கு வந்தபடி சீனாவையும் அதன் தோழமை நாடுகளையும் வசைபாடுவதனால் இந்திய சமுத்திரப் பிராந்திய பூகோள-அரசியலில் தமிழர் எதன…

  15. பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 1,350பேருக்கு எதிராக வழக்கு தொடர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு வழக்கு தொடர்வதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 650பேர் வவுனியா தடுப்பு முகாமிலும் ஏனைய 700பேரும் காலி, பூஸா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஈழநாதம்

    • 0 replies
    • 850 views
  16. சிவராசா பிருந்தாபன் என்னும் வான் புலி தளபதியை சர்வதேச புலனாய்வு பிரிவு தேடுகிறது. இவர் ஆரம்பத்தில் சங்கர் உடன் செயற்பட்டு வந்தவர் ஆகும்.இறுதி யுத்தத்தில் இவர் பங்கு பெறவில்லை என்பதுவும் குறிப்.பிடத்தக்கது. கட்டுநாயக்கவில் இடம் பெற்ற தாக்குதல் மற்றும் பல விமானத்தாக்குதல்கள் இவர்தலமையில் நடந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. http://www.youtube.com/watch?v=AnKHVoWONUw http://www.thedipaar.com/news/news.php?id=16626

    • 3 replies
    • 3.3k views
  17. 3ஆம் இணைப்பு‐ கே.பி எனப்படும் கே.பத்மநாதன் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி ‐ தமிழில் புவுN 01 யுரபரளவ 10 01:49 யஅ (டீளுவு) விடுதலைப் புலிகளின் சர்வதேசப்பிரதிநிதியாக இருந்து இலங்கை அரசால் மலேசியாவில் வைத்து கைது செய்து கொண்டு செல்லப்பட்ட கே.பி எனப்படும் கே.பத்மநாதன் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி இது 2006 தொடக்கம் 2009 வரையான போர்க்கள நிலவரங்களை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள்? முதலில் கிழக்கு பின்னர் வன்னி கள நிலவரங்கள் குறித்து விடுதலைப் புலிகள் உங்களுக்கு அறியத் தந்தார்களா? போர்ப்பிராந்தியத்திலிருந்து வெகு தொலைவில் நானிருந்தேன். கிழக்கு மற்றும் வன்னிக்கள முனைகளில் என்ன நடைபெறுகிறது என்பதனை நான் அறிந்தவன…

    • 2 replies
    • 1.8k views
  18. 2006.08.04 ம் திகதியன்று திருகோணமலை மூதூர் நகரில் ACF எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பணியாளர்கள் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் எனது உயிர் நண்பர்கள். சிலர் எனது நண்பர்களின் உறவினர்கள். அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  19. சினிமாவிலும் சிங்கள சதி சரத் அசின் அம்சா! "உலகத்தின் கண் பார்க்க... ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் ரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈழத்தின் வீழ்ச்சி குறித்து மனம்…

  20. யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு மீது இந்தியா செல்வாக்குச் செலுத்த முடியாதிருப்பது துரதிர்ஷ்டம் -கேணல் ஹரிகரன் நாடுகளுக்கிடையிலான உறவுகளை அர்த்தபுஷ்டியுடையவையாக உருவாக்குவது மக்களே தவிர உடன்படிக்கைகள் அல்ல. இரு நாட்டு மக்களினதும் வாழ்வில் வித்தியாசங்களை இந்தியா ஏற்படுத்தாதவிடத்து பரந்துபட்ட கேந்திரோபாய பாதுகாப்பு விடயங்களில் இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் பரிகாரத்தைத் தேடித்தராது. இரு தசாப்தங்களின் பின்னர் ராஜீவ் ஜயவர்தனா உடன்படிக்கையை நாம் பார்க்கும்போது எடுத்துச் செல்லும் முக்கியமான விடயமாக இதுவே காணப்படுகிறது. இவ்வாறு தெற்காசியா தொடர்பான இராணுவ புலனாய்வு நிபுணரும் 1987 1990 க்கு இடையில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் ப…

  21. யாழ்ப்பாணத்தில் தொடரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் பெரும் அதிர்ச்சி‐ யுவதி ஒருவர் 5 இளைஞர்களால் பாலியல் வன்புணர்வு‐GTNசெய்தியாளர் யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு இடம்பெற்று வரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். வலிகாமத்தின் அளவெட்டிப் பகுதியில் ஆலயத் திருவிழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு 5 இளைஞர்களால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞர்களை அப்பகுதி காவற்துறையினர் காக்க முற்பட்டமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ஜீரீஎன் ச…

  22. திகதி: 31.07.2010, சர்வதேச அரசியல் உறவுகளைச் சரிவரப் புரிந்து அவற்றை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாள்வதிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் பெரிதும் தங்கியுள்ளது. தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஒர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனை என்ற மிக எளிமையான அடிப்படை உண்மையை பெரிதும் கருத்திலெடுக்கத் தவறியமையின் விளைவே கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலான தொடர் தோல்விகளுக்கான மையப் புள்ளியாய் உள்ளது. இவ் வகையில் சர்வதேச யதார்த்தத்தை சரிவரப் புரிந்து கொள்ளவும், அதற்குப் பொருத்தமான வகையில் எம்மை மறுசீரமைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் வேண்டிய இரு முக்கிய பணிகள் உடனடித் தேவைகளாய் உள்ளன. தற்போதைய சர்வதேச அரசியல் உறவை ஒரு நூற்றாண்டிற்கு முற…

  23. கிளிநொச்சியில் ஏ9 பாதைக்கு மேற்கே அமைந்துள்ள பொன்நகர் வீட்டுத்திட்டத்தில் மக்கள் மீளக்குடியமரப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர். கிளிநொச்சிச் செயலக அதிகாரிகளால் வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 35 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு மீளக்குடியமர்த்துவதற்காகக் கூட்டிச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சென்ற மக்களைக் குடியமர படையினர் அனுமதிக்க மறுத்து விட்டனர். கொதிப்படைந்த மக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திரும்பிப்போக முடியாது என்று அவர்கள் விடாப்பிடியாக நின்றனர். எனினும் செயலக அதிகாரிகள் அவர்களைச் சமாதானப்படுத்தி அழைத்துவந்தனர்.தற்போது அந்த மக்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பொன்நகர் பகுதியில் வலுவிழந்தோர்…

    • 0 replies
    • 745 views
  24. வருது வருது என்று இதோ வந்துவிட்டது மஹிந்தவின் சிங்கள குடியேற்றம். முருகண்டி பகுதியில் 5000 ஏக்கர் தமிழர் நிலம் பறிக்கப்பட்டு அங்கு 12 ஆயிரம் சிங்கள இராணுவ குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு சண்டே லீடர் மஹிந்தவின் சிங்கள குடியேற்றம் எனும் தலைப்பில் இக் குடியேற்றம் பற்றி அம்பலப்படுத்தியுள்ளது. வடக்கில் தமிழரது சனத்தொகை ஆதிக்கத்தை குறைத்தல், தமிழர் தமது தாயகம் எனும் கோட்பாட்டை சிதைத்தல், எப்போதுமே தமிழர்களை ஓர் அச்சுறுத்தலிற்குள் வைத்திருத்தல் போன்ற நீண்ட கால திட்டத்தினை அடிப்படையாக வைத்து இந்த திட்டம் மஹிந்தவினால் நன்கு திட்டமிட்டு நடைபெறுகின்றது. 12,000 இராணுவ குடும்பங்களும் அங்கு நிரந்தரமாக இருந்து பணியாற்றுவார்கள் அத்துடன் அவர்களுக்கான சிங்க…

    • 0 replies
    • 808 views
  25. சிறையிலுள்ள 7180 போராளிகளில் 3000 வரையான போராளிகள் நோய்வாய்ப்பாட்டுள்ளனர். இவர்களுள் விதவைப்போராளிகள், சிறுவர் போராளிகளும் உள்ளடங்குவர் என புனர்வாழ்வு ஆணையாளர் ரணசிங்க கூறியுள்ளார். அல்சர், டயபற்றிக்ஸ்,குருதிச்சோகை, புற்று நோய், வலி, செங்கண்மாரி நோய் மற்றும் மாறாத காயம் அகியவற்றால் தொடர்ந்தும் அவதியுறுவதாகவும். இவர்களை விரைவில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் ஆணையாளர். சில விதவைப்போராளிகளுக்கு பெற்றோர் உறவினர்கள் யாரும் இல்லையென்றும் இவர்கள் தாம் விரும்பிய இடங்களுக்கு செல்லலாம் என்றும் கூறியுள்ளார். ஈழநாதம்

    • 0 replies
    • 915 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.