ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
நளினி விடுதலை மறுப்பு ஏன்? அரசு விளக்கம் இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது ஆயுட் கைதியாக உள்ள நளினியின் சமூக, குற்றப் பின்னணியும், குற்ற நடத்தையும், தெரிந்தே குற்றத்தை செய்ய உடைந்தையாக இருந்ததும் அவருக்கு விடுதலைப் பெறும் தகுதியைத் தரவில்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. இராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, 19 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவிட்ட தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நளினியின் மனுவை எதிர்த்து, அவரை விடுவிக்கக் கூடாது என்று கூறி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமியும் மனுத் தாக்கல் செய்தார். இந்த வ…
-
- 1 reply
- 1k views
-
-
மூலச் செய்திக்கு: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=௫௫௯௮ புதுவை இரத்தினதுரையின் விடுதலை குறித்து டக்ளஸிடம் அவரின் சகோதரி வேண்டுகோள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன் னர் செயற்பட்ட முக்கியஸ்தர்களில் ஒரு வரும் கவிஞருமான புதுவை இரத்தின துரையின் விடுதலை குறித்து அவரது சகோதரி இராசலட்சுமி நேற்றுமுன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந் தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவையின் சகோதரி தனது கணவரான பத்மநாதனுடன் வந்து அமைச்சரைச் சந்தித்தார் என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சினால் வெளியி டப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்காலில் ந…
-
- 9 replies
- 2k views
-
-
எங்களின் பண்பாட்டு வரலாற்று அடையாளங்களையும் தொன்மைகளையும் அழியவிட்டுப் பார்த்திருப்போமா? பேராசிரியர் இரா.சிவசந்திரன் சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்டத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய சூழலில் மிகவும் வேண்டப்படும் கருத்துக்களாக அமைகின்றன. தமிழர்களுக்கான வரலாறுகள் மறைக்கப்படுவதும் அடையாளங்கள் மாற்றப்படுவதும் இப்பொழுது மிகவும் சாதரணமாகத் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற சம்பவங்களாகிவிட்டன. அண்மையில் யாழ்.நூலகம் கொண்டிருந்த மிக முக்கியமான அடையாளம் சாயம் பூசி மறைக்கப்பட்டுவிட்டது. யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின் கைகளில் 1613 இல் வீழ்ந்தது. அதன…
-
- 15 replies
- 816 views
-
-
இலங்கையில் பான் கீ மூன் நிபுணர்கள் குழு அமைப்பதற்கு காட்டிய எதிர்ப்பை அணிசேரா நாடுகள் விலக்கியுள்ளன இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமிக்கவிருந்த நிபுணர்கள் குழு தொடர்பில் தமது எதிர்ப்பை காட்டிய, அணி சேரா நாடுகள் தமது எதிர்ப்பை விலக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழுவை நியமிப்பது தொடர்பில் இலங்கையுடன் இணைந்து அணிசேரா நாடுகள் அமைப்பு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தது. எனினும் அந்த எதிர்ப்பு தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூன், அணி சேராநாடுகளுக்கு கடிதம் ஒன்ற…
-
- 0 replies
- 742 views
-
-
தென்மராட்சியின் சாவகச்சேரிப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முதல் கப்பம் கோரப்பட்டு காணாமல் போன சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருச்செல்வம் கபில்நாத் எனப்படும் 17 வயதுடைய மாணவனே கடத்தப்பட் நிலையில் சுமார் 15 நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு ஒன்றினது உறுப்பினர் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் அவர் தமது அமைப்பில் இல்லை என அந்த அமைப்புக் கூறுகின்றது. யாழ்ப்பாண நகரின் முன்னணி வர்த்தகரின் மகனான இந்த இளைஞன் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்த சிலரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு தொடர்ச…
-
- 24 replies
- 1.7k views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிப் பிரதிநிதிகள் கூட்டமைப்பினர் சந்திப்பு. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சமகால அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக்கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும், புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக பல்லைக்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். http://www.2tamil.com/
-
- 0 replies
- 621 views
-
-
சனிக்கிழமை, 27, மார்ச் 2010 (12:54 IST) இலங்கையில் மீண்டும் போர் தொடங்கும்: வைகோ இலங்கையில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும் என்று மதிமுக வைகோ பேசினார். கட்சி வளர்ச்சிக்காக ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள வைகோ, மீஞ்சூர், பொன்னேரிக்கு வந்தார். அப்போது கட்சிக் கூட்டத்தில் பேசிய வைகோ, பின் அங்கிருந்து புறப்பட்டு நாலூர், ஏரிக்கரை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் கட்சி கொடி யேற்றி இனிப்பு வழங்கினார். பின்னர் பொன்னேரி புதிய பஸ்நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது: தமிழகத்திலே 7 1/2கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையிலே லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே அரசு சுட்டுக் கொன்றதை இங்குள்ள தமிழர்கள் வேடிக்கை பார்த்தார்கள். இலங்கை தமிழர்களின்…
-
- 29 replies
- 2.4k views
-
-
புகலிடம் வழங்கும் சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்தத் திட்டம் ‐ கனடா புகலிடம் வழங்கும் சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்த கனேடிய அசராங்கம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய சட்ட அமுலாக்களின் மூலம் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து அரசியல் தஞ்சம் கோருவோருக்கு பாதிப்பு ஏற்படக் கூடுமென சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது கனடாவில் அமுலில் உள்ள குடிவரவு மற்றும் புகலிடம் வழங்கும் சட்டங்களில் பல்வெறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடிவரவு மற்றும் புகலிடம் வழங்குதல் தொடர்பில் கனடா மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையையே தற்போது பின்பற்றி வருகின்றது. அதிகளவான புகலிடம் கோருவோருக்கு அடைக்கலம் வழங்கும் …
-
- 1 reply
- 878 views
-
-
“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கையுடன் இலங்கையின் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.tamilnationalpf.org என்ற இணையத்தளத்தில் இந்தக் கட்சி பற்றியும், அதன் கொள்கைகள், வேட்பாளர் விபரங்கள், மற்றும் கட்சியின் நாளாந்தச் செய்திகள் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள முடியும். தமிழ் மக்களின் ஆயுதப்பலம் மெளனிக்கப்பட்டுள்ள முக்கிய காலகட்டத்தில், மக்களை தோல்வி மனநிலைக்குள் தள்ளாது, விடுதலைப் பாதையின் நியாயத்தை பன்னாட்டு சமூகத்திற்கு எடுத்து விளக்கவும், தமிழ் மக்கள் தமது பேரம்பேசும் அரசியலை முன்னெடுத…
-
- 3 replies
- 1k views
-
-
உலகத்தின் கண்கள் பார்த்திருக்க, உப்புக் காற்று மெள்ள மெள்ள உயிர் குடிக்க, நடுக் கடலில் தத்தளிக்கும் ஈழத் தமிழர்கள் இன்னமும் கரை சேரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரு சிறிய படகில் 260-க்கும் அதிகமான தமிழர்கள் 'எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என அனைத்துலகம் நோக்கிக் கையேந்தி நிற்கின்றனர். ஆஸ்திரேலியா மறுக்கிறது. இந்தோனேஷியா எதிர்க்கிறது. என்ன செய்வது, எங்கு போவதெனத் தெரியாமல் இந்தியப் பெருங்கடலில் இப்போதும் தத்தளித்து நிற்கின்றனர் ஈழத் தமிழர்கள். 01.10.2009-ல் இலங்கையில் தொடங்கிய பயணம் இது. ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அகதிகளாகத் தஞ்சம் கோருவது அவர்களின் நோக்கம். இடையில் இந்தோனேஷியக் கடற் படை மடக்க, 'நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்றது ஆஸ்திரேலியா. 'பாதுக£ப்பை'…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவிஸ் தமிழர் பேரவை தேர்தல்; 30 பேர் தெரிவு 17 பேர் இளையோர்கள் இலண்டன் நிருபர் திங்கட்கிழமை, மார்ச் 29, 2010 சுவிஸ் தழுவிய ரீதியில் நடைபெற்ற ஈழத்தமிழரவைக்கான தேர்தல் இன்று ஞாயிறு 28.03.2010 18மணியுடன் முடிவடைந்துள்ளது. சுவிசின் 17 மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வாக்கெடுப்பில் கணிசமான மக்கள் கலந்து கொண்டு சுவிஸ் ஈழத்தமிழரவைக்கான தமது பிரதிநிதிகளை தேர்ந்துள்ளனர். ஈழத்தமிழரவைக்கான தேர்தலில் தெரியப்பட்டுள்ள 30 பிரதிநிதிகளில் 14 இளைய தலைமுறையினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் 6 பெண்பிரதிநிதிகளும் அடங்குவர். அத்துடன் தமிழர் அல்லாத இரு சுவிஸ்நாட்டு பிரiஐகளும் இத்தேர்தலில் பங்கு பற்றி தெரியப்பட்டுள்ளனர். ஈழத்தமிழரவைக்கான போட்டியி…
-
- 1 reply
- 741 views
-
-
கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 24.03.2010 அன்று பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 15 வயது மாணவியை ஆனைவிழுந்தான் சந்தியில் காவலரண் அமைத்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி காவலரணிற்குள் அழைத்துச் சென்றனர். அப்பகுதியால் வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவர் இச்சம்பவத்தைப் பார்த்ததும் அயலிலுள்ள மக்களிடம் விரைந்து சென்று தகவலைச் சொன்னார். அப்பகுதி மக்கள் ஒன்றாகத் திரண்டு உடனடியாகவே அக்காவலரணை முற்றுகையிட்டு உள்நுழைந்து அம்மாணவியை மீட்டனர். உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரிடமிருந்து அம்மாணவி மீட்கப்ப…
-
- 14 replies
- 1.1k views
-
-
காலநிலை சீரானதும் சுமார் 5000 கிலோ மீற்றர் ஆபத்தான கடல் பயணத்தை மேற் கொண்டுஅவுஸ்திரேலியா செல்வதற்கு ஆயிரக்கணக்கான இலங்கை மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று அவுஸ்திரேலியாவின் டெய்லி ரெலிகிறாப்ட் பத்திகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆட்களை சட்ட விரோதமாக கடத்திச் செல்லும் முகவர்கள் பாரம்பரிய வழியான இந்தோனேசியா, மலேசியா ஆகியவற்றை தவிர்த்து ஆபத்தான பாதைகள் வழியாக நேரடியாக கிறிஸ்மஸ் தீவுக்கு மக்களை கொண்டு செல்ல இருக்கிறார்கள் என்று சிரேஷ்ட கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட இலங்கை கடற்படை அதிகாரிகள் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகளுடன் இத்தகைய சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் ஒரு மாதத்திற்கு முன்னரே உயர் மட்ட கலந்துரையாடல்களை நடத்தியதுடன், சட்டவிரோத ஆட்கடத்தல்களால் மனித …
-
- 0 replies
- 660 views
-
-
பார்வையாளனாக அடிக்கடி களத்திற்கு வந்துபோனாலும் நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் களஉறவுகளுடன்தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம்கிட்டியது. இணையத்தில் உலாவரும்போது தற்செயலாக ’சுவடி’ suvadi எண்மிய நூலகம் பற்றிய தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. அழிவின் அதி உச்சங்களைக் கண்ட எம் சமுதாயத்தின் இளையதலைமுறையினர் தாங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெற்றுக் கொள்ள எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும் இந்த வழியில் அவர்கள் அவர்கள் எம்மிடமிருந்து பணஉதவியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் ஆலோசனைகள் மற்றும் நூலகத்திற்குத் தேவையான மின்னாவணமாக்கப்பட்ட நூல் சஞ்சிகை பத்திரிகை பிரசுரம் அறிக்கைகள் ஆய்வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
நாளை நண்பர் ஒருவர் நாடுகடந்த அரசியல் பிரிவுடன் பேட்டி எடுக்க உள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பாக உமது கேள்விகளை இங்கே பதியவும்;அவற்றிற்கு பதில்களை பெற நாம் முயற்சிக்கிறோம்... --நன்றி---
-
- 46 replies
- 2.7k views
-
-
ஆசிய நாடொன்றே பொன்சேகாவுக்கு பெருமளவு பணத்தை வழங்கியிருந்தது: புலனாய்வுத்துறை SUNDAY, 28 MARCH 2010 03:32 RISHI இலங்கை செய்திகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆசிய நாடொன்றே அதிகளவு பணத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்காக வழங்கியிருந்ததாக சிறிலங்காவின் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அண்மையில் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலின் போது ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆசிய நாடு ஒன்றே பணத்தை வழங்கியிருந்தது. பொன்சேகாவின் உறவினர் ஒருவரின் வங்கி பாதுகாப்பு அறையில் இருந்து சிறீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் 527,000 டொலர்களை கைப்பற்றியிருந்தனர். இந்த பணமானது ஆசியா நாடு ஒன்றின் த…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது மறக் கப்பட்டு வரும் ஒரு மனிதராக மாறிக் கொண்டிருக்கிறார். இது எதிர்பாராத ஒரு விடயம் அல்ல. ஆனால், நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்தி ருக்க வாய்ப்பில்லை. அப்படி எதிர்பார்த்திருந்திருப்பாரேயானால் அரசியலில் அவசர அவசரமாகக் குதிக்கும் முடிவை எடுத்திருக்கமாட்டார். கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை மெல்ல மெல்ல அரசாங்கம் சாகடித்துக் கொண்டிருப்பதாக ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. அரசியல் ரீதியாக அவர் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறார் என்பதே உண்மை. கடந்த வருட இறுதியில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி என்ற பதவியை உதறித்தள்ளி விட்டு ஜனாதிபதித் தேர…
-
- 2 replies
- 1.2k views
-
-
நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும் மலேசிய நிருபர் புதன்கிழமை, மார்ச் 24, 2010 மே 31 - ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த , ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக. வீடுகள் தோறும் ஒரு செங்கல்லு கேட்கப்பட்டது நூலகத்தினை கட்டுவதற்காக உண்மையில் நூலகம் கட்டுவதற்காக என்பதனை விட எல்லோர் மனதிலும் நூலகம் எரிந்தது போல் பற்றி எரியவேண்டும் என்பதற்காகவே அந்த …
-
- 34 replies
- 2.7k views
-
-
யுத்தம் முடியவில்லை; அது புதுவடிவம் பெற்றுள்ளது! நெஞ்சில் ஈரமற்ற வரண்டு இறுகிய கற்பாறைகளால் தமிழ் இதயங்களை நசுக்கிப் பிழிந்த சாற்றில் இருந்து சிங்கள சமூகம் அரசியற் கெந்தகம் ஆகிவிட்டது. இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவு இப்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கு. இந்து சமுத்திரம் சார்ந்த வல்லரச நலன்கள் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையில் மையங்கொண்டது. நுனித்துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித்துலாவுக்கு மாறிவிட்டது. பச்சைக் கண்களின் பார்வையில் முள்ளிவாய்க்காலில் சிங்கமும் – புலியும் சண்டையிட்டன என்பதுதான் தெரியும். ஆனால் யார் யாரோ நலன்களுக்காகவெல்லாம் வெள்ள முள்ளிவாய்க்கால் இரத்த வாய்க்கால் ஆனது. பச்சைக் கண்களால் பார்க்கும் அரசியற் கண்ணற்றோரின் பார்வையில் யுத்தம் முடிவடை…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிங்கள தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தி வன்னியில் அகழப்படும் மாவீரர் துயிலும் இல்லங்கள் .தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன. நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது. வன்னியில் மீளக் குடியமரச் சென்ற மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அப்பாதைக்கான கிரவல…
-
- 8 replies
- 2.4k views
-
-
. பிழையான தீர்ப்பு வழங்கியிருந்தால் ஜனாதிபதி இந்நேரம் சிறையில்! : முன்னாள் பிரதம நீதியரசர் அரச ஊடகங்கள் என்மீது சேறு பூசுகின்றன. எனது தீர்ப்புகள் பிழையானவை எனக் கூறுகின்றன. நான் பிழையான தீர்ப்பு வழங்கியிருந்தால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று சிறையில் இருந்திருப்பார். சுனாமி தொடர்பான விடயத்தில் நான் சரியான தீர்ப்பினை வழங்கியிருந்தேன்" என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார். தற்போதைய நிலை தொடர்பாக விளக்கமளிக்கும் உரையொன்று நேற்று குருணாகல் 'சீசன்ஸ்' விருந்தகத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய முன்னாள் நீதியரசர் மேலும் தெரிவித்ததாவது, "இன்று ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பாகப் பேச அரசாங்கக் குழுக்கள் பல செல்கின்றன. ஐரோப்பிய யுனியன் அவசரக…
-
- 1 reply
- 772 views
-
-
மட்டக்களப்பு கொக்குவிலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்கள் மீது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான குழு இன்று ( Sunday) பிற்பகல் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பிள்ளையாரடி கொக்குவில் பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன்.செல்வராசாவும் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமாரும் இன்று பிற்பகல் மட்டக்களப்பு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு கொக்குவில் ஆலமரத்தடியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டம் இடம்பெற இருந்தது. பிற்பகல் 4மணிக்கு கூட்டம் ஆரம்பமாக இருந்த நிலையில் சுமார் 3மணியளவில் கிழக்…
-
- 3 replies
- 705 views
-
-
அவுஸ்ரேலியாவுக்கு கடந்த வருடம் 254 இலங்கையரை சட்டவிரோதமாக அழைத்து செல்லமுயன்ற கப்டன் பிராம் என்று அறியப்படும் ஏபிரகாம் லவுகேன பெஸ்லி என்பவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 25 மில்லியன் ரூபியாவை தண்டப்பணமாக அபராதம் விதித்துள்ளது கப்பல் பயண சட்டத்தை மீறியதாக 18 மாதங்களை நன்நடத்தை காலமாகவும் அறிவித்துள்ளது. ஜாயா லெஸ்ரறி என்ற கப்பலுக்கு போதிய ஆவணங்கள் இல்லாமல் பணியாளர்களை நியமித்த குற்றச்சாட்டும் இவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது; இந்தோனேசியத் தீவான பாட்டமிலிருந்து 254 தமிழர்களை அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கப்பலில் கொண்டு செல்ல முற்பட்டபோது இந்தோனேசிய கடற்படையால் கப்பல் பிடிபட்டது;இவர் கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாள 1500 க்குமேற்பட்ட புகலிடம் கோருவோரை அவுஸ்ரேலியாவுக்கு …
-
- 6 replies
- 849 views
-
-
நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது. நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அ…
-
- 2 replies
- 5.4k views
-
-
சென்னை, மார்ச் 24: மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மானின் பெயர் மட்டும் இணையதளத்தில் நீக்கப்படாமல் உள்ளது. பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இந்திய அரசிடம் அண்மையில் அளித்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சண்டை கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. 2009 மே 18}ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், இலங்கையிலுள்ள நந்திக்கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அந்நா…
-
- 53 replies
- 3.6k views
-