ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142984 topics in this forum
-
தமிழர் வாழ்விடங்களில் தென்னிலங்கை முதலீட்டாளர்களை குவிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் யாழ்ப்பாணத்தில் பெருமளாவான தென்னிலங்கை வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொண்டு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை யாழப்பாண மக்களின் வளங்களை சுரண்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். தென்னிலங்கை வணிகர்களின் வருகையினை தொடர்ந்து யாழ்பாண மக்களின் பணங்கள் தென்னிலங்கை சிங்கள மக்களிள் வங்கிக் கணக்குகளுக்கு செல்வதாக பெருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் வடக்கில் சுதந்திர வர்தக வலயங்களை அமைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளத்தினை முதன்மையாக கொண…
-
- 8 replies
- 1.2k views
-
-
தமிழர் தாயகத்தில் எண்ணெய் வள தேடுதல் வேட்டை ஆரம்பம் சிறிலங்காவில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா [Cairn India] நிறுவனம் அடுத்த மாதம் துவங்க இருக்கும் சோதனை துளையிடல் திட்டத்தின் ஒரு பகுதியாக பெருங்கடலின் நீரோட்டம், காற்று வீச்சு தொடர்பான விபரங்களை சேகரிக்கும் மற்றும் கண்காணிக்கும் பணியைத் தொடக்கியது. மன்னார் வளைகுடாவின் கடல் வளம், நீரோட்டம் மற்றும் காற்று வீச்சு தொடர்பான இந்த வளிமண்டல ஆய்வுகளின் துணை ஒப்பந்தம் சிறிலங்காவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என ஆய்வை பார்வையிட்ட சிறிலங்க பெட்ரோலிய வளம் மற்றும் மேம்பாட்டு செயலக தலைவர் நெயில் டி சில்வா [Neil de Silva] தெரிவித்தார். துளையிடப்படும் இடங்களில் அலை வீச்சின் அளவு…
-
- 2 replies
- 642 views
-
-
. ஆனந்தசங்கரியுடன் இணையும் சந்திரகாசன்? தந்தை செல்வாவின் மகனும் நீண்ட காலமாக இந்தியாவில் அரசியல் அஞ்ஞாதவாசம் புரிந்தவருமான திரு சந்திரகாசன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கொழும்பு வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர் திரு ஆனந்தசங்கரியுடன் இணைந்து இவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய உளவுப் பிரிவுடன் இணைந்து செயற்படுவதாக இவர் பலராலும் குற்றஞ் சாட்டப்பட்டு வந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பின்னர் இவரது அரசியல் மீள்பிரவேசம் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பொருத்தமானவர்களிடம் தலைமைப் பொறுப்புளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அண்மையில் கூட்டணியின் தலைவர் …
-
- 11 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்களைக் கையளித்துள்ளது. யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மாவை சேனாதிராசா மற்றும் அப்பாத்துரை வினாயகமூர்த்தி ஆகியோர் வேட்புமனுவைக் கையளித்தனர். இதற்கிடையே திருகோணமலையில் இரா.சம்பந்தன் தலைமையிலும், வன்னியில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலும் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு தனது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அதிகளவில் இளம் இரத்தங்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று இரா.சம்பந்தன் கூறியிருந்தார். ஆனால் 40 வயதுக்குக் குறைந்த…
-
- 5 replies
- 987 views
-
-
வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக சிறிலங்கா செல்லும் தமிழர்களிடம் இருந்து திட்டமிட்ட முறையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கப்பப் பணமாக சிறிலங்கா புலனாய்வுத் துறை பெற்று வருவதாக கொழும்புத் தகவல்க்ள தெரிவிக்கின்றன. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து விசாரணை என்ற போர்வையில் அவர்கள் குறித்த விபரங்களையும் தங்குமிட முகவரி போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளும் புலனாய்வுத் துறை அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உள்ளது எனக் கூறி கைது பத்து லட்சம் முதல் இரண்டு கோடி வரை லஞ்சமாகப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் கோடிக்கணக்கான பணம் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக் குறித்து அஞ்சும் தமிழர்கள்…
-
- 16 replies
- 1.8k views
-
-
ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி யாழ் மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சற்று முன்னர் தமிழ் மிரர் இணைய தளத்துக்கு தெரிவித்தார். இந்தச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது,யாழ்ப்பாணத்திலிருந்து எம்முடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தாம் யாழ். செயலகத்தை நோக்கி தற்போது சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஈ.பீ.டீ.பீ கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும்,ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாணத்தில் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.…
-
- 3 replies
- 1.1k views
-
-
விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: � பத்மினி சிதம்பரநாதன் [Thursday, 2010-02-25 17:37:05] தமிழ் தேசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைத் தவிர தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்திருக்கிறார். தொலைக்காட்சிச் சேவையொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். தமிழரின் ஒற்றுமையைக் காப்பதற்காகவே தாம் எதுவித விமர்சனங்களையும் முன்வைக்காமல் இதுவரை இருந்ததாகவும் எனினும் தற்போது விமர்சனங்களுக்கான காலம் வந்துவிட்டது எனவும் தெரிவித்த பத்மினி சிதம்பரநாதன் அரசியலை விட்டு ஒதுங்கும் எண்ணம் தனக்கு இருந்ததாகவும் எனினும் பலதரப்பட்டவர்களின் விண்ணப்பத்தை ஏற்று தாம் தமது முடி…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழீழத்திற்கான எதிர்காலம் இல்லையாம்: அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு தெரிவிப்பு தமிழீழத்தை அமைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும், புலம்பெயர் தமிழ் சமூகம் அதில் இருந்து வெளிவரவேண்டும் எனவும் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகளின் தோற்கடிக்கப்பட்ட கொள்கைகளில் இருந்து புலம்பெயர் தமிழ் சமூகம் வெளியே வரவேண்டும். சுதந்திர தமிழீழத்திற்கான போராட்டத்தை புலம்பெயர் தமிழ் மக்கள் நேர்மையாகவும், ஜனநாயக வழிகளிலும் மேற்கொள்ள முனைந்துள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகளின் வன்முறையான போக்குகளை அவர்கள் எதிர்க்க வேண்டும் என அதன் ஆசிய பிராந்திய திட்டப் பணிப்பாளர் றொபேட் ரெம்பர் தெரி…
-
- 2 replies
- 856 views
-
-
54 இளம் பெண்கள் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து பூசாவுக்கு மாற்றம் திகதி: 25.02.2010 // தமிழீழம் சிறீலங்காபடைப் புலனாய்வுப்பிரிவினரால் பலாத்காரமாக மேலும் 54 இளம் பெண் யுவதிகள் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து பூசா வதை முகாமுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. முறையே யாழ், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 12, 16, 09 பெண்களுடன் ஏனையவர்கள் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா திருமலையைச் சேர்ந்த பெண்கள் எனத் தெரியவருகின்றது. கடந்த 14ம் திகதி இவ்வாறே 49 இளம் பெண் யுவதிகள் பூசாவிற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=37…
-
- 6 replies
- 858 views
-
-
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=22230
-
- 4 replies
- 3k views
-
-
சிறீலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம் – கோர்டன் பிறவுண் திகதி: 25.02.2010 // தமிழீழம் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுணை, நேற்று (24-02-2010) பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து உரையாடியுள்ளனர். நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்ற சந்திப்பில், உலகத் தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள மக்களை விடுவித்தல், போர்க்குற்ற விசாரணைக்கான செயற்பாடுகள், மற்றும் மக்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசை பற்றியும் வினயமாக எடுத்துரைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த கோர்டன் பிறவுண், சிறீலங்கா அரசுக்கு…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசியத்தை உறுதியாக வலியுறுத்தியதற்காக விலக்கப்பட்டுள்ளேன்: பத்மினி சிதம்பரநாதன் தமிழ் தேசியத்தை உறுதியாக வலியுறுத்திய தம்மை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனவும் தமிழ் தேசிய ஒற்றுமையை காப்பதற்காகவே இதுவரையும் எவற்றையும் விமர்சிக்காமல் இருந்ததாகவும் ஆனால் இப்போது அதற்கான அவசியம் வந்துவிட்டதாகவே தாம் உணர்வதாகவும் எனவும் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பாளராக அவரை சேர்த்துக்கொள்ளப்படாததையிட்டு ஜி தொலைகாட்சிக்கு அளித்துள்ள தொலைபேசி மூலமான நேர்காணலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள இக்கட்டான நிலையில் தமிழ் தேசிய ஒற்றுமையை காப்பதற்காக அரசியல…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சவால்? புகைப்படங்கள் இணைப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சவாலான முறையில் நாம் இந்த தேர்தலில் சுயேற்சையாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் இவ்வாறு வன்னி மாவட்ட சுயேற்சைக்குழுவின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் வன்னி மாவட்ட ஈபிஆர்எல்எவ் எம்பியுமாகிய இராசு குகனேஸ்வரன் தெரிவித்தார். வன்னியில் இடம் பெயர்ந்த மக்களுடைய சுயமான மீள்குடியேற்றம் அதுமட்டுமல்ல அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகளை வழங்கப்படவேண்டும். இந்த விடயத்தை முன்னுரிமைப்படுத்தி தேர்தலின் போட்டியிட முன்வந்துள்ளோம். வன்னி மாவட்ட மக்களுடைய தேவைகளை இயன்றளவு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதும் எமது நிலைப்பாடுகளில் ஒன்றாகும் என குறிப்பிட்ட திரு குகனேஸ்வரன், நாங்கள் எந்த தேசி…
-
- 4 replies
- 1.7k views
-
-
இந்தோனேசிய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் முறையான மீள் குடியேற்றக் கோரிக்கையை முன்வைத்தே உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறியவர்களுக்கு பல்வேறு நாடுகளில் குடியேற அனுமதி வழங்கப்பட்டதை போல, தமக்கும் தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் டன்ஜுன் பினாங் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 இலங்கையர்களும், 8 ஆப்கானிஸ்தானியர்களும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதற்கிடையில் குறித்த 10 இலங்கையர்களும் நேர்மையான அகதிகள் என உறுதி செய்யப்பட்டதன் பின்னரும், சுமார் ஒரு வருட …
-
- 0 replies
- 563 views
-
-
பிரபாகரன் குறித்த செய்திகள்: காலம் தான் சொல்ல வேண்டும்- ருத்திரகுமாரன் புதன்கிழமை, பிப்ரவரி 24, 2010, 17:04[iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] இயக்கத் தலைவர் பிரபாகரன் [^] குறித்த செய்திகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன். இதுகுறித்து இலங்கைத் தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ள செய்தி.. பெண்ணிய உளவியல் ஆய்வாளரான பரணி கிருஷ்ணரஜனி தலைமையிலான ஐவர் குழு ருத்திரகுமாரனுடன் சிறப்பு நேர்காணலை நடத்தியது. அப்போது, பிரபாகரனின் மரணம் குறித்த கேள்விக்கு ருத்திரகுமாரன் பதிலளிக்கையில், சில விவகாரங்களில் எது உண்மை என்பது சர்சைக்கு உள்ளாகும்போது அதற்குரிய பதிலை காலம் தா…
-
- 5 replies
- 1.8k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கருணாவிற்குப் பொருத்தமான பதவியொன்றைத் தருவதாக மகிந்த றாஜபக்ச உறுதியளித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாக கருணா உறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதி தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அதற்கேற்ப தான் தேர்தலில் பணியாற்றப் போவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய கருணா தெரிவித்தார். SOURCE: http://www.eelamweb.com
-
- 22 replies
- 2.4k views
-
-
மேலும் ஆயிரம் தமிழர்கள் இலங்கையில் குடியமர்த்தம் பிப்ரவரி 25.2010.00:00 கொழும்பு: முகாம்களில் வசித்த தமிழர்களில், மேலும் ஆயிரம் பேர், அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு அதிகாரிகள் கூறியதாவது: இலங்கையில், உள்நாட்டு சண்டை முடிவுக்கு வந்தபின், முகாம்களில் வசித்த தமிழர்கள் படிப்படியாகஇ அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதுவரை, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று (நேற்று முன்தினம்) மேலும் 1000 பேர், முகாம்களில் இருந்து, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்…
-
- 1 reply
- 962 views
-
-
கூட்டமைப்பு மூன்றாக உடைந்து விட்டது. சம்பந்தர் அணி சிவாஜிலிங்கம் சிறீகாந்தா அணி கஜேந்திரன் - கஜேந்திரகுமார் அணி சம்பந்தர் தன் முடிவை மாற்றமுடியாது என்கின்றார். குறைந்தது மற்றைய இரு அணிகளையுமாவது ஒன்றாக்க புலம்பெயர் மக்கள் முன்வருவார்களா? இதில் சிறீகாந்தா ஒரு பிரச்னையாக இருப்பதாக என்னால் அறியமுடிகின்றது. மற்றயவர்கள் இவரை ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை. சிவாஜிலிங்கம் இவரை விட்டு வருவதாக இல்லை. வாக்குகள் சிதறாமல் இந்த இரு அணிகளையும் இணைக்க வழிகள் உண்டா? இவர்கள் இணைந்தால் தேசியத்திற்கு ஆதரவு அளிப்பவர்களின் பலம் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு. வாத்தியார் .............
-
- 24 replies
- 2.4k views
-
-
பி.எம்.முர்ஷிதீன் கச்சதீவில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வருகை தரவுள்ளார் என்ற செய்தியை இலங்கை வெளிநாட்டமைச்சு நிராகரித்துள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் கருணாநிதிக்கு யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இலங்கை அரசின் அனுமதிக்காக முதலமைச்சர் காத்திருப்பதாகவும் கூறப்பட்டது.இதுகுறித்து தமிழ் மிரர் இணையதளம் வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டபோது,உயர் அதிகாரியொருவர் இதனை நிராகரித்தார். இதேவேளை,இந்தச்செய்தி தொடர்பாக யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையுடன் தமிழ் மிரர…
-
- 3 replies
- 1.5k views
-
-
அம்பாறை மாவட்ட குறைந்தபட்ச தமிழ் வாக்குகளை பிரிக்க தற்போது நான்கு அணி கள் களத்தில் குதிக்கவிருப்பதாக நம்பகமாக தெரிகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 10 வேட்பாளர்களையும் தெரிந்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கட்டத்திற்கு வந்துள்ளனர். ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி இணைப்பாளர் கு. இனியபாரதியும், இன்னுமொரு தமிழ் வேட்பாளரும் இடம்பெறலாமென தெரிகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் சீலன் தலைமையிலான குழுவினரை இறக்க முஸ்தீபு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோஸ் அணி சார்பில் மாவட்ட இணைப்பாளர் லால் தலைமையிலான குழுவினர் பட்டி யல் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் நான்கு தரப்பினர் தமிழர் வாக்குகளைப் பி>க…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று (24.02.2010) புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் தமிழீழ விடுதலை நோக்கிய பயணம் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வை பிரித்தானிய வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர் டேவிட் மலிபான்ட் (David Miliband) அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றுகையில், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு, ஓர் அணியில் செயற்பட வேண்டும் எனவும் இன்றைய சூழலில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்தும் தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதே வேளை உலகத்தமிழர் பேரவையின் குழுவினர் பிரித்தானியப் பிரதமமந்திரி அவர்களுடனும் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன் லண்டனில் நடைபெறுகின்ற இந…
-
- 2 replies
- 847 views
-
-
யாழ் தீவகத்தில் புதிய புத்தர்சிலை நாட்டுவதற்குரிய பணிகளில் சிறீலங்காப்படையினர் திகதி: 24.02.2010 // தமிழீழம் யாழ் தீவகத்தில் புதிய புத்தர்சிலை நாட்டுவதற்குரிய பணிகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தின் தீவகத்தின் முதன்மை வீதியில் 1996ஆம் அண்டு நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் அரசமரத்தினை நாட்டியுள்ளார்கள். தற்போது சிறிய அரசமரமாக வளர்ந்துள்ள நிலையில் அதனைச்சுற்றி மேடை ஒன்றினை அமைக்கும் பணியில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்பாணம் தீவகத்திற்கு செல்லும் வழியின் பண்ணைப்பாலத்தினை அடுத்த பகுதியில் சிறீலங்காப் படையினரின் காவலரணுக்கருகில் அமைந்துள்ள இந்த அரசமரத்தினை வழிபாட்டுதலமாக மாற்றுமாறு நைனாதீவிற்கு செல்லு…
-
- 2 replies
- 771 views
-
-
சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் கேவலமாகிவிட்டது. பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சனைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள பலருக்கு தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டா…
-
- 8 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களின் இருப்பு குறித்தான ஆய்வரங்கம் ஒன்று பெப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்றது. தமிழ் சமூக மேம்பாட்டு அசைவியக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆய்வரங்கினை அரசியல் ஆய்வறிஞர் ஏ.சி.தாஸீசியஸ் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். ஊடகவியலாளர்கள் - கலைஞர்கள் - வர்த்தக பிரிதிநிகள் இளையோர்கள் - சமூக ஆர்வலர்கள் என 10க்கும் மேற்பட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பங்கெடுத்து ஆய்வு நடத்தினர். “அகவிடுதலைப் பண்பாடு ” கவிஞர் பாலகணேசன் ” முள்ளிவாய்காலின் பின் மண்ணில் பெண்களின் நிலை” சமூகசேவகி சுபா ” ஒன்றுபடுதல் ” இசைஞர் தமிழ்செல்வன் ” தமிழர்களின் போராட்டங்களும் பிரென்சு ஊடகங்களின் பார்வையும் ” இளையோர் அமைப…
-
- 2 replies
- 701 views
-
-
உலகத்தமிழர்களின் நாடு தழுவிய அமைப்புக்களின் குடை அமைப்பான உலகத்தமிழர் பேரவையின் ஆரம்ப நிகழ்வில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இன்று கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. குறித்த அமைச்சரின் பங்குகொள்ளலானது தமக்கு பெரியளவான ஆதரவாக இருக்கும் என பேரவையின் தலைவரான எஸ்.ஜே. இம்மானுவேல் தெரிவித்துள்ளார். கனடா பிரித்தானியா அமெரிக்கா அவுஸ்திரேலியா உள்பட பலநாடுகளிலிருந்து புலத்து தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே அங்கு சென்றுள்ளார்கள். உலகத்தமிழர் பேரவையானது வன்முறையற்ற அரசியல், சிறிலங்காவின் உற்பத்தி பொருட்களை புறக்கணித்தல், போர்க்குற்றங்களை வெளிப்படுத்தல் போன்ற விடயங்களை மையப்படுத்தி தமது வேலை…
-
- 11 replies
- 1.1k views
-