ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதமான அதிகாரப் பகிர்வை எட்டுவதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாகவும் இதனை அனைத்துத் தரப்பினரிடமும் தாம் எடுத்துக் கூறியதாகவும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபெர்ட் பிளேக் தெரிவித்தார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் யார் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தாம் அக்கறை காட்டவில்லை என்றும் யார் வெற்றி பெற்றாலும் அவருடன் ஒத்துழைப்புடன் பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் பிளேக் தெரிவித்தார். http://www.tamilstar.org
-
- 1 reply
- 494 views
-
-
கையில் சிறு வீக்கத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமியின் முழங்கையில் குண்டுச் சிதறல் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வன்னிப்பகுதியில் நடைபெற்ற யுத்தத்தின்போது குறித்த சிறுமிக்கு கையில் காயமொன்று ஏற்பட்டுள்ளது. உரிய மருத்துவ வசதிகள் இல்லாததால் மேலதிக பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அந்தக் காயத்துக்கு மருந்து மட்டுமே கட்டப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணத்தில் தந்தையுடன் இச்சிறுமி மீளக்குடியேறி யுள்ளார். அவரின் கையில் காயப்பட்ட இடத்தில் சிறு வீக்கமொன்று காணப் பட்டதால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தபோதே சிறுமியின் முழங்கைப் பகுதியில் குண்டுச் சிதறல் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. மீளக்குடியேறிய பலருக்கும் இதுபோன்று உட…
-
- 0 replies
- 586 views
-
-
மன்னார் கடலோர பகுதியில் எரிபொருள் அகழ்வுபணிகளை இந்திய கம்பனியான கெயர்ன் இந்தியா ஆரம்பித்துள்ளது. 100 மில்லியன் டொல்ர்கள் பெறுமதியில் இந்த அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் இந்த அகழ்வுபணிக்கான முப்பரிமாண வரைபட அறிக்கையினை இலங்கையிடம் இருந்து 10 மில்லியன் டொலர்களுக்கு இந்திய கம்பனி பெற்றுக்கொண்டது. இந்த ஆய்வு பணிகளை ஏற்கனவே நோர்வே பிரித்தானியா ஆகிய நாடுகள் செய்து கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 11 அகழ்வு புள்ளிகளையும் இந்தியா, சீனா, பிரித்தானியா, நோர்வே, ஈரான் ஆகிய நாடுகளுக்கு விற்க தீர்மானித்து அதனை வழங்கியும் உள்ளது இலங்கை அரசு. தற்போது இந்திய கம்பனிகளால் ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம் 2011 நடுப்பகுதியில் முடிவடையும் என தெரிவிக்கப்படுகின்றது. எ…
-
- 0 replies
- 442 views
-
-
தமிழ் வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தை கைவிட்டது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2009-12-11 05:47:52 வேட்பு மனுத் தாக்கலின் பின்னரே தேர்தல் நிலைப்பாடு முடிவு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், அத்தகைய நடவடிக்கை எதையும் முன்னெடுப்பதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துவிட்டது. எனினும், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து பின்னர் கூடி ஆராய்வது என்றும் அது தீர்மானித்துள்ளது. ஆனாலும், எதிர்வரும் 17 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ்க் கூட்டமைப்பின் முழுமையான நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் நடைபெ…
-
- 1 reply
- 968 views
-
-
இலங்கைத் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்: எம்.பி. ஜெயானந்தமூர்த்தி மட்டக்களப்பு பகுதி தமிழ் எம்.பி.யான ஜெயானந்தமூர்த்தி குமுதம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி. `பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அவர் இறந்துவிட்டதாக, இந்தியாவையும், தென்பகுதி சிங்கள மக்களையும் இலங்கை அரசு நம்ப வைத்து நாடகமாடுகிறது’ என்று கூறியிருக்கிறீர்களே. எந்த நம்பிக்கையில் இப்படி…? “பிரபாகரன் இதுவரை இலங்கை மற்றும் இந்திய ராணுவத்தின் எத்தனையோ சுற்றிவளைப்புகளில் இருந்து வெற்றிகரமாகத் தப்பியவர். எங்கள் தேசியத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று இதுவரை எத்தனையோ முறை பரப்புரைகள் மேற்கொள்ளப் பட்டன. அதுபோலத்தான் கடந்த மே மாதம் 19-ம் தேதி, முள்ளிவாய்க்கால் போரில் அவர் கொல்லப் பட்ட…
-
- 2 replies
- 690 views
-
-
மக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா ? கிழக்கில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. கியூபாவுடனும், பாலஸ்தீன விடுதலை அமைப்புடனும் இணைந்து இந்த மக்கள் விடுதலை இராணுவம் செயற்படப் போவதாக தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம், ஊடாக செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள கொமாண்டர் கோணேஸ் என்பவர் லண்டன் டைம்ஸுக்கு நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார். 1970 துகளில் கியூபா மற்றும் பாலஸ்தீன நாடுகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவியது என்பதில் ஜயமில்லை. இருப்பினும் அப்போது இருந்த அரசியல் பின்ணணி, புரட்சி அமைப்புக்களின் கொள்கைகள் என்பன எமது விடு…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடும் மனநிலை பாதிப்பிற்குள்ளாகியிருப்பதால் அவரை உடனடியாக விசேட மனோவைத்திய நிபுணரின் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு இருதய நோய் சம்பந்தமான நிபுணர் மருத்துவர் வஜிர தென்னகோன் ஆலோசனை வழங்கியிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜனாதிபதியின் இரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதால் அவரது தனிப்பட்ட மருத்துவரான ரொஹானினால் இந்த விசேட வைத்திய நிபுணர் வஜிர தென்னகோன் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் ஜனாதிபதி மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக வஜிர தென்னகோன் தீர்மானித்துள்ளார். இந்த நிலைமையில், அநாவசியமான பிரச்சினைகளை ஜனாதிபதிக்குத் தெரிவித்து அவரைப் பதற்றத…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையில் இருந்த இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த புள்ளியாக புதுமாத்தளன் பிரதேசம் கருதப்படுகிறது. அந்தப் பிரதேசம் கட்டிக் காக்கப்பட வேண்டிய பிரதேசம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கல்லறைகளை அகற்றுவதை நான் பாரதூரமான விடயமாகக் கருதவில்லை. இவ்வாறு நேற்று பி.பி.ஸிக்கு அளித்த விசேட பேட்டியில் அமைச்சர் விநாயகமூர்த்திய முரளிதரன் தெரிவித்துள்ளார். முரளிதரன் மேலும் கூறுகையில், “யுத்தத்தை வென்ற இடமாக புதுமாத்தளன் பார்க்கப்படுகின்றதே தவிர தமிழர்களை வென்ற இடமாகவோ, தமிழர்களைக் கொன்று குவித்த இடமாகவோ இது பார்க்கப்படவில்லை. ஏனென்றால் ஆயுதப்போர் முடிவுற்ற இடமாகவே புதுமாத்தளன் பிரதேசம் பார்க்கப்படுகிறது. ஆகவே ஜனாதிபதி புதுமாத்தளன் பகுதியில் திறந்து வைத்த …
-
- 0 replies
- 1.3k views
-
-
சரத் பொன்சேகாவைக் கொலை செய்வதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்டதுதான் மக்கள் விடுதலை ராணுவம் என்ற அதிர்ச்சி தகவலை அந்நாட்டு தமிழ் எம்.பி. மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையின் கிழக்குப் பகுதியில் மக்கள் விடுதலை ராணுவம் என்ற புதிய ஆயுத அமைப்பு உருவாகி உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன், அதிபர் தேர்தலுக்கு முன்பாக, எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொலை செய்வதற்காக இலங்கை அரசால் இந்த புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். புலனாய்வுத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, இலங்கை அரசின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ராஜப…
-
- 1 reply
- 1.8k views
-
-
பிச்சைக்காரன் வருகிறான் உஷார் தமிழா உஷார் எங்கள் குஞ்சுகளின் ரத்தம் காயமுன்னர் நினைவுச்சின்னம் அமைக்கிறானாம் கொடுங்கோலன் மகிந்தா. கொடிய சிங்களத்திகள் றபான் அடித்து நாட்டியம் ஆடுகிறாள்களாம். மடுவில் மானங்கெட்ட மடைத்தமிழச்சி பொட்டு வைக்கிறாளாம். நெஞ்சு பொறுக்குதில்லையே. அடேய் முப்பத்தையாயிரம் போராளிகளே இந்த மானங்கெட்ட தமிழினத்திற்காகவா உங்கள் இன்னுயிரைக் கொடுத்தீர்கள். தாங்க முடியவில்லையடா சில தாசித் தமிழினம் செய்யும் கூத்துக்களை. தமிழன் வீடெல்லாம் வோட்டுக் கேட்டு வருகிறான் கொடுங்கோலன் மகிந்த மகிந்த. உஷார் தம்பி உஷார். மீண்டும் ஒரு ஆறு வருஷம் பேயாட்சி புரிவதற்கு வாக்ககுக் கேட்டு வருகிறான். தாங்கமுடியுமா தமிழினத்தால் துரோகிகள் எல்லாம் மகிந்தனின் பக்கமாம் மற்றவை இன்…
-
- 0 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து விபரங்களை முடிந்தால் ஜனவரி 26ம் திகதிக்கு முன்னதாக வெளியிடுமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவின் பேச்சாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல்களுக்கு முன்னதாக ஜெனரல் சரத் பொன்சேகா தனது சொத்து விபரங்களை வெளியிட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் தனது சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தனியாக ஜனாதிபதி மட்டும் தனது சொத்…
-
- 1 reply
- 482 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 700 பேரும் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பியுமான பசில் ராஜபக்விடம் கலந்துரையாடியுள்ளதாக தொழிற்பயிற்சி பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதேவேளை இவ்வாறு பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் 50 வீதமானோர் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரெஷ் தெரிவித்தார். நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்விருவரும் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர். ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் இரா…
-
- 0 replies
- 410 views
-
-
நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனத்திற் கொள்ள வேண்டுமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தும் தற்போதைய நிலைமைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் தேசிய திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் மனித உரிமை நிலைமைகளை மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்ககைள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். யுத்தமொன்று முடிவடைந்துள்ள நிலையில் மனித உரிமை நிலைமைகளில் பாரிய முன்னேற்றத்தை உடனடியாக ஏற்படுத்துவது சிக்கலானதென அவர் தெரிவித்துள்ளார். http://www.g…
-
- 0 replies
- 473 views
-
-
அண்மையில் வத்தளையைச் சேர்ந்த வர்த்தகர், பொலிஸ் உயரதிகாரி உள்ளிட்ட நான்கு பேரை அதிரடிப்படையினரே கடத்தியிருப்பதாகவும் இந்தக் கடத்தலின் சூத்திரதாரி அமைச்சர் மேர்வின் சில்வா என்பதும் தெரிய வந்துள்ளது. கொழும்பில் பல வர்த்தகர்களிடம் கப்பப் பணம் அறவிட்டு வரும் மேர்வின் சில்வா தனக்கு மாதா மாதம் வழங்கி வந்த 2 இலட்சம் ரூபா கப்பப் பணத்தை குறித்த வர்த்தகர் செலுத்தத் தவறியமைக்காகவே அந்த வர்த்தகரைக் கடத்த உத்தரவிட்டதாகவும் இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கடத்தப்பட்டதால் விடயம் பூதாகாரமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் மேர்வின் சில்வா, மகிந்த ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இந்த விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. http:/…
-
- 0 replies
- 596 views
-
-
கிழக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதுடன் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ மயமாக்கல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச்சட்டப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெவித்தார். சம்பந்தன் எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது: திருகோணமலை மாவட்டம் நாலாபுறம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ சூழலுக்குள் சிக்குண்டுள்ள இங்குள்ள தமிழ் மக்களின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் திட்டமிடப்பட்டவகையில்…
-
- 16 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 6.1k views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்திய ஆலோசனைகளை ஏற்று தேவையான அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டு தமிழர்களுக்கு தீர்வு வழங்க தயாராக இருப்பதாக பசில் இராஜபக்ஷ கூறியுள்ளார். இந்திய ஊடகங்களுக்கு இது பற்றி தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரச அதிபர் தேர்தலின் பின்னர் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளதாக பசில் கூறியுள்ளார். இதே நேரம் கூட்டமைப்பிடம் மஹிந்த கருத்து தெரிவிக்கையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் இல்லை என்ற தொனியிலும் அதே நேரம் அதிகார பரவலாக்கல் நடைமுறைக்கு தமிழர்கள் முதிர்ச்சியடையவில்லை என்றும் கூறியமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 850 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டார்கள். தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி வவுனியா, அனுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தப் பேரணியை அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். மனித உரிமைகள் ஆணையகத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் எதிரே கூடிய இவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கியிருந்தார்கள். தமது கோரிக்கையை வெளிப்படுத்தும் மகஜர் ஒன்றினை மனித உரிமைகள் ஆணையக அதிகாரிகளிடம் அவர்கள் கையளித்தனர். அதன் பின்னர் வவுனியா புகையிரதநிலைய வீதிவழியாக குருமண்காட்டுச் சந்தியைச் சென்றடைந்து அங்கிருந்து மன்னார் வீதிவழியாக வவுனியா அரச …
-
- 0 replies
- 586 views
-
-
இலங்கையில் இருந்த இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த புள்ளியாக புதுமாத்தளன் பிரதேசம் கருதப்படுகிறது. அந்தப் பிரதேசம் கட்டிக் காக்கப்பட வேண்டிய பிரதேசம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கல்லறைகளை அகற்றுவதை நான் பாரதூரமான விடயமாகக் கருதவில்லை.இவ்வாறு நேற்று பி.பி.ஸிக்கு அளித்த விசேட பேட்டியில் அமைச்சர் விநாயகமூர்த்திய முரளிதர தெரிவித்துள்ளார். முரளிதர மேலும் கூறுகையில் "யுத்தத்தை வென்ற இடமாக புதுமாத்தளன் பார்க்கப்படுகின்றதே தவிர தமிழர்களை வென்ற இடமாகவோ, தமிழர்களைக் கொன்று குவித்த இடமாகவோ இது பார்க்கப்படவில்லை. ஏனென்றால் ஆயுதப்போர் முடிவுற்ற இடமாகவே புதுமாத்தளன் பிரதேசம் பார்க்கப்படுகிறது. ஆகவே ஜனாதிபதி புதுமாத்தளன் பகுதியில் திறந்து வைத்த நினைவுத் தூப…
-
- 0 replies
- 889 views
-
-
இலங்கையில் போர் மும்முரமாக நடந்து தமிழர்கள் தினமும் ஆயிரக் கணக்கில் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு செய்தி தமிழ்நாட்டில் இருந்து வந்தது: இலங்கையில் போர்நிறுத்தம் கோரி, தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு உற்சாகமாகப் பேசினார். நேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ எ…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழ், முஸ்லிம் மக்களைப் புண்படுத்தும் வகையில் வெளிநாட்டுப் பத்திரிகை யொன்றுக்குச் செவ்வி வழங்கிய சரத் பொன் சேகாவை கண்டித்துப் பாராளுமன்றத்திற்கு உள் ளேயும், வெளியேயும் எதிர்ப்புத் தெரிவித்த ரவூப் ஹக்கீம் இப்போது முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை அவருக்குப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி இருப் பது எவ்வளவு வேடிக் கையானது? இவ்வாறு ஜனாதி பதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதி காரியுமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். கடந்த சனி, ஞாயிறு தினங்களில் ஹேவாஹெட்ட, கலகெதர, கண்டி, செங்கடகல ஆகிய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக நடைபெற்ற மக்களை விழிப்பூட்டும் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய அல்ஹாஜ் அஸ்வர் மேலும் கூறியதாவது :- ச…
-
- 0 replies
- 623 views
-
-
மேலதிக தகவல்களை தெரிந்தோர் இங்கு இணைக்க நன்றி
-
- 11 replies
- 1.5k views
-
-
சனாதிபதி தேர்தலில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம் என இந்தியா கூட்டமைப்பினரை கேட்டுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்து நேற்று புதுடில்லி புறப்படவிருந்தார். அதற்கு முன்பதாக நேற்றுமுன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினருடன் அவர் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிடக்கூடாது என்ற ஆலோசனை இந்தியத் தரப்பினால் வழங…
-
- 2 replies
- 1.6k views
-
-
யாழ். குடாநாட்டில் 40,000 படையினர் உள்ளதாகவும், இந்த எண்ணிக்கையை குறைக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேசந்திரன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தின் எல்லா வீதிகள் மற்றும் தெருக்களிலும் பெரும்பாலான நேரங்களில் படையினர் காணப்படுவதாகவும் இதனால் மக்கள் பெரும் இன்னல்ககளை எதிர்நோக்கி வருவதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனினும்இ இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. http://www.tamilstar.org
-
- 1 reply
- 458 views
-
-
. வீரகேசரி இணையம் 12/9/2009 1:41:49 PM - இன்று அதிகாலையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகச் சத்தம் கேட்டதாகவும் இதனைத் தொடர்ந்து காலையில் வீதியில் சென்றவர்கள் சடலத்தைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பொறுப்பெடுத்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதிலும், குறிப்பிட்ட இடத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தமையால் உடனடியாக எவரும் செல்லிவில்லை எனவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம், பலாலி வீதியில் தபால் கட்டைச்சந்திக்கு அருகில…
-
- 3 replies
- 1.4k views
-