ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசி இறக்குமதி : பணிப்பாளர்களுக்கு பயணத்தடை! போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வந்து நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு அவற்றை விநியோகித்தமை தொடர்பில் இரண்டு சுகாதார அதிகாரிகள் உட்பட மூவருக்கு மாளிகாகந்த நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகர, சுகாதார அமைச்சின் விநியோகப் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, மற்றும் மருந்து உற்பத்தி செய்யப்பட்ட நிறுவனத்தின் அதிகாரியான சுகத் ஜானக பெர்னாண்டோ ஆகியோருக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 313 views
-
-
வட மாகாண மாணவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆளுநர் வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வருகிறது. இளம் வயதினர் கல்வியில் சிறந்து விளங்கினால் தான் நாடு முன்னோக்கி செல்லும் என கூறியுள்ளார். வடமாகாணத்தை பொறுத்தவரையில் கல்வியில் பின்னோக்கி செல்வது வேதனையான விடயமாகும் என்பதோடு வடக்கில் தற்போது பாடசாலையில் இருந்து இடை விலகும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து செல்லும் நிலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்…
-
- 0 replies
- 623 views
-
-
வடக்கில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு! adminOctober 31, 2023 வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வருகிறது. இளம் வயதினர் கல்வியில் சிறந்து விளங்கினால் தான் நாடு முன்னோக்கி செல்லும். வடமாகாணத்தை பொறுத்தவரையில் கல்வியில் பின்னோக்கி செல்வது வேதனையான விடயமாகும். வடக்கில் தற்போது பாடசாலையில் இருந்து இடை விலகும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து செல்கிறது. அதேவேளை சுயமாக வாசிக்கும் , எழுத…
-
- 0 replies
- 356 views
-
-
Published By: DIGITAL DESK 3 31 OCT, 2023 | 10:34 AM யாழ்ப்பாணம் - கொடிகாமம் - பருத்தித்துறை பயணிகள் பஸ் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது என அறியமுடிகிறது. கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பஸ் குடைசாய்ந்துள்ளதாக அறியமுடிகின்றது. இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதோடு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/168128
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடுத்த வருடம் முதல் ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி செய்யப்படும் எனவும் அதற்காக செலவிடப்படும் தொகை அறுபது மில்லியன் ரூபாவை தாண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். எம்.பி.க்களின் வயது வரம்பில் ஏற்பட்ட மாற்றம், சமூக பாதுகாப்பு வரி திருத்தங்கள் காரணமாக வரித் தொகையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக காப்புறுதித் தொகை அறுபது மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். https://thinakkural.lk/article/279123
-
- 2 replies
- 323 views
- 1 follower
-
-
அடுத்த பட்ஜெட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரி – விஜித ஹேரத் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 2024 ஜனவரி முதல் சொத்து வரி மற்றும் Inheritance Tax போன்ற புதிய வரிகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்திற்கான பொது முன்மொழிவுகளை கோரி நிதி அமைச்சின் செயலாளர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது வழமை என்றாலும் இவ்வருடம் அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ச…
-
- 2 replies
- 677 views
- 1 follower
-
-
Simrith / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 12:38 - 0 - 39 நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2013 ஆம் ஆண்டு ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ள போதிலும், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் …
-
- 0 replies
- 450 views
-
-
30 OCT, 2023 | 10:10 AM “யாழ் நிலா” ரயில் சேவையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) பயணித்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரால் விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதிச் சேவையை விசேடமாக வழங்கவென கொழும்பு - காங்கேசன்துறைக்கு இடையில் 'யாழ் நிலா' என்ற பெயரில் ஒரு ரயில் சேவையைத் திணக்களம் ஆரம்பித்தது. ஒருவருக்கு ஒருவழி கட்டணம் 4,000 ரூபாவாகும். வெள்ளிக்கிழமை (27) இரவு 10 மணிக்கு கல்கிஸையில் இருந்து புறப்படும் ரயில் சனிக்கிழமை காலையில் காங்கேசன்துறையை சென்றடையும். அதுபோல காங்கேசன் துறையிலிருந்து ஞாயிறு மாலை 9.30 மணிக்கு புறப்பட்டு திங்கள் காலை கல்கிஸை வரைப் பயணிக்கும். ரயிலின் என்ஜினில் ஏத…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்கவரியில்லா சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் அல்லது வரியில்லா ஷொப்பிங் மொல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கான அளவுகோல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின்படி, ஒரு முதலீட்டாளர் வரியில்லா சில்லறை வணிகத்தை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்க வேண்டும் மற்றும் வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் சர்வதேச அளவிலான அனுபவத்தைப் பெற வேண்டும். மேலும், கொழும்பு துறைமுக நகரில் தீர்வை இல்லாத ஷொப்பிங் மொல் வர்த்தகத்தை…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
30 OCT, 2023 | 04:57 PM அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 220 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ 260 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசிக்கு 210 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு குறைந்தபட்சம் ஒ…
-
- 0 replies
- 426 views
- 1 follower
-
-
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார். அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பு தேவைப்படுவதாக தெரிவித்தார்.…
-
- 7 replies
- 643 views
- 1 follower
-
-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். களப்பணிகளுக்கு செல்லும்போது தமது வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருளின் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இரத்த வங்கி, மகப்பேற்று மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், சிறுநீரகப் பிரிவுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் போன்றவை பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 30 OCT, 2023 | 10:25 AM அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் ஜனாதிபதிகள் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். 25ம் திகதியிடப்பட்ட கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திரசில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை என சரத்வீரச…
-
- 1 reply
- 555 views
- 1 follower
-
-
27 OCT, 2023 | 03:03 PM விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றதாக இரத்த வங்கியினர் தெரிவிக்கின்றனர். இந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் இரத்த வங்கியில் எல்லாவகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாம் பல இடங்களுக்குச் சென்று குருதியை சேகரித்தாலும் குறிப்பிட்ட சில காலங்களில் குருதியின் கையிருப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் க…
-
- 1 reply
- 490 views
- 1 follower
-
-
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளிப்பு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று சனிக்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை மன்னார் மாவட்டம் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் தலைமன்னார் கடற்படையினர் கையளித்துள்ளனர். தலைமன்னார் கடற்படை முகாமில் மலேரியா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் 23 மீனவர்களும் கையளிக்கப்பட்டனர். கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளி…
-
- 0 replies
- 468 views
-
-
உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண இந்தியா சென்றுள்ள இலங்கை விளையாட்டு ரசிகர்கள் அந்நாட்டு மைதானங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம்(29.10.2023) இடம்பெற்றிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. கடும் வாக்குவாதம் இந்நிலையில் குறித்த போட்டியை பார்வையிடவந்த இலங்கை விளையாட்டு ரசிகர்கள் கொண்டு வந்த தேசியக் கொடிகளை மைதானத்திற்குள் எடுத்துச் செல்வதற்கு மைதானத்தின் நுழைவு வாயில்களுக்கு அருகில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது. போட்டியை காண ரசிகர்கள் இலங்…
-
- 0 replies
- 158 views
-
-
இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம். ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில், ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இன் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்; கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் இந்தியா தமிழர்களை எதிரியாகவும் சிங்களவர்களை நண்பனாகவும் கொண்டு செயற்படுவது போல இலங்கை தமிழர்களையும் இந்தியாவையும் எதிரியாகவும் சீனாவை நண்பனாகவும் கொண்டு செ…
-
- 8 replies
- 861 views
-
-
மட்டக்களப்பு, இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மட்டக்களப்பு, இருதயபுரத்தில் சிலருடன் வருகை தந்த சுமனரத்தின தேரர், 'மீண்டும் யுத்தம் வரும்; தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்' என்று கூறியுள்ளார். இவருடைய கருத்தை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று, மிகப்பெரும் அழிவுகளை சந்தித்த நாடு, தற்போது நிலையான அமைதியையும், இனப் பிரச்சினைக்கான நிலையான தீர்வையும் நோக்கி பயணி…
-
- 35 replies
- 2.3k views
- 2 followers
-
-
ஜனாதிபதி ரணிலுக்கு கூட்டணி அரசியல் தொடர்பாக தெளிவில்லை : நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டணி அரசாங்கமொன்றில், ஏதேனும் முக்கியமான தீர்மானமொன்று எடுக்க வேண்டுமாக இருந்தால் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். ஆனால், கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பலரால் முன்வைக்கப…
-
- 14 replies
- 1.2k views
-
-
29 OCT, 2023 | 10:05 AM இலங்கை - யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர், கைதான அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/167978
-
- 2 replies
- 479 views
- 1 follower
-
-
குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு பு.கஜிந்தன் குறிகட்டுவான் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை (29) மேற்கொண்டிருந்தார். குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி உறுதிப்படுத்துவதற்காக இரண்டு கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிக்கட்டுவான் இறங்கு…
-
- 0 replies
- 572 views
-
-
அம்பிட்டிய தேரர், சாணக்கியன் உட்பட 40 பேருக்கு எதிராக வழக்கு கனகராசா சரவணன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்புக்கு ஒக்டோபர் 7ஆம் 8 ஆம் திகதிகளில் விஜயம் செய்திருந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கலடி மற்றும் நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 40 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள், கால் நடை பண்ணையாளர்கள், அரசியல் வாதிகள் ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஏறாவூர், மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வெள்ள…
-
- 0 replies
- 359 views
-
-
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது. முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டி மூன்று வாகனங்கள் மீது மோதியதையடுத்து நேற்றிரவு மெரின் டிரைவ் பகுதியில் வைத்து வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1356120
-
- 0 replies
- 748 views
-
-
28 OCT, 2023 | 05:50 PM ஆர்.ராம் ‘வடமாகாண அபிவிருத்திக்கான புத்தாக்கம்’ எனும் தலைப்பில் வடமாகாண அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கான யோசனையொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் முன்வைக்கப்பட்டு அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கான திட்ட முன்மொழிவை வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாராஜா கையளித்துள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாண அபிவிருத்தி என்ற தலைப்பில் அதிகாரிகளிடம் உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இணையாக வடமாகாணத்திலும் பாரிய அபிவிருத்தியொன்று இடம்பெற வேண்டுமென நம்புகின்றேன். யுத்தத்தினால் யாழ்ப்பாணத்தின் ப…
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
29 OCT, 2023 | 10:11 AM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து, கைதான இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 419 views
- 1 follower
-