Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது மாணவர்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். இதனை நன்கு உணர்ந்து ஆசிரியர்கள், செயற்பட வேண்டும் என உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கனெவள மகுள்கஸ்வௌ மகாவித்தியாலயத்தில் இருபத்தைந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணனி அறை கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கும், பெற்றோர்க்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளையின் கலவிக்காக மிகவும் கஸ்டப்படுகின்றனர். தனது பிள்ளையின் கல்விக்கு பெருமளவு பணத்தை மிகவம் கஸ்டத்திற்கு மத்தியில் செலவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் ஒழுக்கத்தை கற்…

  2. காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என்று வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- வலிகாமம் கிழக்கின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் வல்லைப் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆறுக்கும் மேற்பட்ட உயிர்கள் அண்மைக்காலத்தில் பறிபோயுள்ளன. அத்துடன், காயங்களை ஏற்படுத்திய, வாகனங்கள் சேதமடைந்து பல விபத்துகளும் அண்மையில் இடம்பெற்றுள்ளன. வல்லைப் பாலம் மேலும்மேலும் ஆபத்தானதாக மாறிவரும் நிலையில், அதைச் சீரமைப்பதற்கு உடனடி ந…

  3. மட்டு மாவட்டத்தில் சிங்கள வீராங்கனைகளுக்கு மத்தியில் ஒரு தமிழ் பெண் - வறுமையிலும் ஒரு சாதனை மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த இராசா கஜேந்தினி (வயது 19) என்ற பெண் தேசிய கபடி அணிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பெண்கள் கபடி அணியில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழ் பெண் ஆவார். கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவர், 12 பேர் கொண்ட கபடி அணியில் 11 சிங்கள பெண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு தமிழ் பெண்ணாக தெரிவாகியுள்ளார். எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் தனது முதலாவது கபடி போட்டியில் பங்குபெறுவதற்காக ஈரான் பயணமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்(அ…

  4. புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் ! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமான குறித்த பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் அரசியலமைப்பு சபையினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன வரலாற்றில் இணைகிறார். https://athavannews.com/2025/1440826

  5. கபிலவஸ்து புனிதப் பண்டத்தை அலரி மாளிகையில் காட்சிப்படுத்தும்முயற்சி தோல்வி? 09 செப்டம்பர் 2012 இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட கபிலவஸ்து புனிதப் பண்டத்தை அலரிமாளிகையில் காட்சிப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல்வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், இதற்குஇந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை நிராகரித்த காரணத்தினால் இரு நாடுகளுக்கும்இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் ஊடாக, ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவிற்…

  6. மாநிலங்களை உருவாக்க முடியாது! - வடமாகாணசபைக்கு மஹிந்த பதிலடி [Wednesday 2016-04-13 08:00] மாகாணசபைகளின் தேவைக்கேற்றவாறு மாநிலங்களை உருவாக்குவதற்கு வாய்ப்புக் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை – கால்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்படுகின்றமை தொடர்பில் வட மாகாண சபையினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளின் தேவைக்கேற்றவாறு மாநிலங்களை உருவாக்குதல், மாநிலங்களை இல்லாத…

    • 3 replies
    • 708 views
  7. Published By: VISHNU 08 AUG, 2025 | 10:31 PM (நா.தனுஜா) இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்க…

  8. துணை இராணுக்குழுவின் தலைவரை சந்திக்க மறுத்த இந்தியப் பிரதமர் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:04 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் துணை இரணுவக்குழுவான பிள்ளையான் குழுவின் தலைவரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்தியப் பிரதமருடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு துணை இராணுவக்குழுவின் தலைவரான பிள்ளையான் மேற்கொண்ட இறுதி நேர முயற்சியும் பலன் தரவில்லை. பிள்ளையானை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் மேனன் பிள்ளையானை சந்திப்பதற்கு விரும்பம் தெரிவித்திருந்தார். …

    • 1 reply
    • 927 views
  9. 20 AUG, 2025 | 12:54 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) ந…

  10. மணலாறு பகுதியில் சிறிலங்காப் படையினர் ஐந்து முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடலங்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மணலாறு சிலோன் தியேட்டர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் படையினர் மிகச்செறிவான எறிகணைத் தாக்குதல்களுடன் ஐந்து முனைகளில் முன்நகர்வுத்தாக்குதலை நடத்தினர். இந்த பெருமெடுப்பிலான நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் நால்வரின் உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் பு…

  11. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து வீரமரணத்தை தழுவிக்கொண்டுள்ள தமிழீழ ஆதரவாளர் விஜயராஜ் அவர்களுக்கு யாழ் குடாநாட்டு மக்கள் தமது வீர வணக்கத்தை தெரிவித்துள்ளதுடன் நெஞ்சுருகும் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்கியுள்ளனர். அவரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் குடாநாட்டு மக்கள் தமது ஆறுதலையும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தமிழகத்து உறவுகள் இனிமேல் இவ்வாறான உயிரை மாய்க்கும் தியாகச் செயல்களில் ஈடுபடவேண்டாமென்றும் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்தும் ஜனநாயக வழியில் போராடுமாறும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் தமிழக உறவுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக குடாநாட்டு மக்கள் இன்று செவ்வ…

  12. “ஈழக்” கொள்கைக்கு இடமில்லை : ஜனாதிபதி நாட்டில் “ஈழக்” கொள்கைக்கு இடமில்லை. அது முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை பலாத்காரமாக பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியைப் பலப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு இன்று தடைகள் போடப்ப்படுகின்றன. இதனை கண்டு நான் அஞ்சமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அம்பலாங்கொடை தர்ம அசோக மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; …

  13. Posted on : 2008-08-14 இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆரூடம் கூறும் நாராயணர்கள் "அறப் படித்த பல்லி கூழ்ப் பானைக்குள் வீழ்ந்ததாம்!' என் றொரு பேச்சுமொழி நம் மத்தியில் உண்டு. கூரை விட்டத்திலிருந்தபடி பலருக்கும் எதிர்காலம் குறித்துச் சாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி, தனது எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் இருந்துவிட்டு, விட்டத்திலிருந்து தவறு தலாகக் கூழ்ப் பானைக்குள் விழுந்து இறந்துபோனதாம் என்ற பேச்சு வழக்குக் கதைபோல இவ்வாறு கிண்டலாகக் கூறப்படுகின்றது. இதுபோலவே இலங்கை விவகாரத்தில் இலங்கை அரசுக்குப் புரியாத விடயம் என்று குறிப்பிட்டு ஓர் ஆலோச னையை போதனையை வெளிப்படுத்தும் இந்தியத் தேசி யப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தாம் கூறும் அதே கருத்துத் தமக்கும் புர…

  14. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று முதல் பார்வையிட முடியாது! யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று(புதன்கிழமை) முதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இருவாரங்களுக்கு பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என சிறைச்சாலை திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவ…

  15. 12 Sep, 2025 | 04:35 PM பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் (12) அடிக்கல் நாட்டப்பட்டது. 41 அடி உயரம் கொண்ட பூசாந்திர சித்திரத் தேருக்கான புதிய தேர் இருப்பிடத்தின் கட்டுமான வேலைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்போது விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. https://www.virakesari.lk/article/224920

  16. அம்பாறை, கல்முனையில் தாயும் மகனும் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை வீதியிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்று அதிகாலை 1:30 அளவில் சென்ற ஆயுத நபர்கள் இவர்களைக் கடத்திச் சென்றனர். 40 அகவையுடைய நவரத்தினம் மஞ்சுளா, உயர்தரப் பரீட்சையில் தோற்றும் அவரது மகனான 18 அகவையுடைய நவரத்தினம் கலைவாணன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்திச் செல்லப்பட்ட வீட்டில் இருந்து 75 மீற்றர் தொலைவில் துணைப்படைக் குழு ஒன்றின் முகாம் அமைந்திருக்கின்றது. nitharsanam: கல்முனையில் சார்க் அமைப்பின் தலைவரின் அம்பாறை இணைப்பாளரால் தாயும் மகனும் கடத்தல்!!

  17. ஐ.நாவுட்பட எந்தவொரு தரப்பும் தமமிடம் வந்திருக்கவோ எட்டிப்பார்த்திருக்கவோ இல்லையென கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இலங்கை அரசிற்கு நற்சான்றிதழ் வழங்குவதா ஐநாவின் பணி என கேள்வி எழுப்புகின்றனர். 'நாம் எங்களது சொந்த மண்ணில் வாழ விடுங்கள் என்று மட்டுமே கேட்டோம் அதற்காக படையினரால் பழிவாங்கப்படுகிறோம். நட்ட நடு காடடில் நாங்கள்; குடியேற்றப்பட்டிருக்கிறோம், மூன்று நாட்களாக தண்ணீருமில்லை, உணவுமில்லை. அருகாக மலசல கூடத்திற்கு கொண்டு வந்து கொடுத்த தண்ணீரையே குடித்து வாழ்கின்றோம் என கேப்பாபிலவு மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். கேப்பாபுலவு மக்கள் மீள்குடியமர்வு எனும் பேரில் சூரியபுரம் கிராமத்தில் விடப்பட்டுள்ள நிலையில் இப்பகுதிக்கு இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உற…

  18. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காமல் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் 23 Sep, 2025 | 03:50 PM போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித கமல் ஜினதாச மற்ற…

  19. இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து மணலாறு மற்றும் முல்லைத்தீவு முன்னரங்கப் பகுதிகளில் உயிரிழந்த இராணுவத்தினரின் சடலங்களைப் பாதுகாப்பதற்காக பதவிய வைத்தியசாலையின் பிரேத அறையின் குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சீரமைத்துள்ளது. அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளின் குளிரூட்டப்பட்ட களஞ்சியங்கள் அண்மையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் புனரமைக்கப்பட்டிருந்தன. மோதல்களில் உயிரிழந்த இராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் சடலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏ-9 வீதியின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இடம்பெறும் மோதல்களில் இந்த வருடத்தில் மாத்திர…

  20. (எம்.மனோசித்ரா) பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் சுமார் 26 நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார். அதற்கமைய மருத்துவ ஆலோசனைகளின் படி குறித்த 26 பேரும் அந்த பகுதியிலேயே தன…

    • 11 replies
    • 965 views
  21. 03 Oct, 2025 | 05:25 PM புதிய ஒரு சட்டம் அமலுக்கு வரும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் "செப்டம்பர் மாதம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித கேரத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஒக்டோபர் மாதம் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தங்களது அரசின் நிலைப்பாடு என்ன” என கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என நாங்கள் எமது க…

  22. [size=4]விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்களை இன்னும் சில வாரங்களில் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சட்ட ஆலோசனைக்குழு நேற்று அறிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு செயன்முறையின் இறுதி நடவடிக்கை மற்றும் அடுத்தக்கட்ட செயற்பாடு என்பவை தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என அதன் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் விசார…

    • 0 replies
    • 483 views
  23. மூன்று ஆண்டுகளில் 6216 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்; சாகல ரத்னாயக்க [ Wednesday,18 May 2016, 03:49:47 ] நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் ஆயிரத்து 618 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆறாயிரத்து 216 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்றின்போது, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அறிக்கையிடப்பட்ட கொலைகள், கற்பளிப்புகள், திடீர் விபத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு என எழுப்பப்படட வினாவிற்கு பதிலளிக்கையில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். 2013ஆம் ஆண்டில் 586 பேரும், 2014இல் 548 பேரும், 2015இல் 476 பேரும் கொலைசெய்யப்பட்டுள்ளதாக அ…

  24. வட மாகாணத்தின் உண்மையான முன்னுரிமை விருப்புக்களை ஆளுநரால் வெளியிட முடியாது வட மாகாணத்தின் உண்மையான கருத்துக்களையும் அபிலாஷைகளையும் முன்னுரிமை விருப்புகளையும் சரியாக வெளியிடுவதற்கு ஆளுநரால் இயலாது எனவும் அதற்கான தகுதி அவருக்கு இல்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உயர்நீதிமன்றில் இன்று தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 154 ஜீ (3) ஷரத்து ஒவ்வொரு மாகாணசபைக்கும் அனுப்ப வேண்டுமென கூறுகின்றது. இந்த சட்டவாக்க செயல்முறையில் மாகாண ஆளுநருக்கு வகிபங்கு ஏதும் இல்லை என மாவை சேனாதிராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த திவிநெகும சட்டமூலம் பற்றி தனது கருத்தை ஆளுநர் தெரிவித்தமை நிர்வாகத்…

  25. அரநாயக்கவில் அனர்த்தம்: 15 பேர் காயம் அரநாயக்கவில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க - மாவனெல்ல பிரதான வீதியில் பொல் அம்பேகொட பிரதேசத்தில், தனியார் பஸ்கள் இரண்டு, ஒன்றோடு ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், இரண்டு பஸ்களின் சாரதிகள் உட்பட பயணிகள் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திப்பிட்டிய அரநாயக்க மாவட்ட வைத்தியசாலை மற்றும் மாவனெல்ல ஆதர வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக, எலஹபிடிய சாமசர மலையில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.