ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142934 topics in this forum
-
டெல்லி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், சீனாவும், பாகிஸ்தானும் மாறி மாறி இலங்கைக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்த இந்தியா முயல வேண்டும், இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்ளக் கூடாது என்று தமிழகத்திலிருந்து அத்தனை தலைவர்களும் காட்டுக் கத்து கத்தியபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த இந்தியா, இப்போது சீனா, பாகிஸ்தானின் செயலால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிக்கப் பார்க்கிறது இலங்கை. அதற்கு சீனா, பாகிஸ்தான் உறுதுணையாக உள்ளன. அனைத்து வகையான அபாயகரமான ஆயுதங்களையும் சீனாவும், பாகிஸ்தானும் தாராளமாக வழங்கி வருகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாத…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆஸி.யை தொடர்ந்து கனடாவிலும் இந்தியர் மீது தாக்குதல் வான்கூவர்: ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தற்போது கனடாவிலும் இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கனடா போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படிக்க சென்றுள்ள இந்திய மாணவர்களின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் கனடாவின் வான்கூவர் நகரில் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த 6 இந்திய வீரர்கள் மீது கனடாவை சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வான்கூவருக்கு அருகில் இருக்கும் அப்போட்ஸ்போர்டு என்னும் பகுதியில் இந்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு 20 நாடுகளிடமிருந்து புலனாய்வு மற்றும் இராணுவ உதவிகள் கிடைத்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம பாராளுமன்றத்தில் கூறினார். “எமது அரசாங்கப் படைகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகள் பெரிதும் உதவியாகவிருந்தன. இராஜதந்திர நடவடிக்கைகளாலேயே உடனடியாகத் தேவைப்பட்ட பொருள்கள் ஆகாயமார்க்கமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன” என அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் குறித்து நட்பு நாடுகளிலிடமிருந்து புலனாய்வுத் தகவல்கள் உடனக்குடன் கிடைத்துவந்ததால் அதனை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தால் இலகுவாக இருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனி…
-
- 5 replies
- 1.5k views
-
-
வெளிநாடுகளில் தற்போது தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரில் மூன்று பேர் தமது விடுமுறைக்கான பிரேரணைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக வைத்திய சான்றிதழ்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறையை மேலும் நீடிப்பது தொடர்பான பிரேரணை சபையில் முன் வைக்கப்பட்ட போது ஆளும் தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் ஆட்சேபனைகளும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை தனது முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்திருந்தார்.நேற்று மாலை சபாநாயகருடன் இடம் பெற்ற சந்திப்பில் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வைத்திய அறிக்கை சமர்ப்ப…
-
- 0 replies
- 630 views
-
-
மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன். இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது. கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகள…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா அமைத்துவரும் துறைமுகப் பணிகளை விரைவுபடுத்த சீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா அமைத்துவரும் துறைமுகப்பணிகளை விரைவுபடுத்த சீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறிலங்காவுடன் அனைத்துலக சமூகம் பகைமை கொண்டுள்ளது எனக்கூறுவது கனவு. சீனாவும், ஜப்பானும் சிறிலங்காவில் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. சிறிலங்காவில் சீனா மூன்று பாரிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. நுரைச்சோலையில் அமைக்கப்படும் அனல் மின்நிலையமும் சீனாவின் முதலீடாகும். …
-
- 2 replies
- 759 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டனில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான ஜனனி ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளார். எனினும் லண்டனில் தனித்துப்போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றுள்ளார். 50 014(2.9 வீதம்) வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
-
- 27 replies
- 4.6k views
-
-
வவுனியா முகாம்களில் கடந்த 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரது உடல்கள் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் 9 ஆம் திகதி வரையான 16 நாட்களில் உயிரிழந்தவர்களின் உடல்களே இவையாகும். இந்த 62 பேரில் பெரும்பாலானோர் செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாம்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள முகாம்களைச் சேர்ந்தவர்கள். நோய், போதிய பராமரிப்பின்மை, போசாக்கு குன்றியமை காரணமாகவே இதில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர். இந்த 62 சடலங்களில் 51 சடலங்கள் வயோதிபர்களுடையது. இவர்களது குடும்பத்தவர்கள் இவர்களைப் பிரிந்து வெவ்வேறு முகாம்களில் இருப்பதால் …
-
- 0 replies
- 608 views
-
-
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ.24 உலங்குவானூர்தி விடுதலைப்புலிகளுக்கு எதிராக 400 விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்திகளை வீழ்த்த விடுதலைப்புலிகள் 35 முறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவரை வெற்றியளிக்கவில்லை என பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர். இலங்கை விமானப் படையினரிடம் 14, எம்.ஐ.24 உலங்குவானூர்திகள் உள்ளன. இந்த வானூர்திகள் மீது விடுதலைப்புலிகள் 37 முறை வேட்டுகளை தீர்த்துள்ள போதிலும் அவற்றை இரணைமடு பிரதேசத்தில் உள்ள படையினரின் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பாக விமானிகள் தரையிறக்கியதாகவும் குறுகிய காலத்தில் இவ்வாறு நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்திய விமானப் படையினர் உலகில் இல்லை என விமானப்படையின் உயரதிகாரி ஒ…
-
- 0 replies
- 960 views
-
-
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத கலாச்சாரம் நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. பொதுவாக மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயல்களை புரிபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத ஓர் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலமாக இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. கடத்தல்கள், காணாமல்போதல் மற்றும் படுகொலைகள் போன்ற கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் சுதந்திரமாக திரியக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 1991ம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள…
-
- 0 replies
- 559 views
-
-
பேச்சுவார்த்தைகளுக்கு அஞ்சியே தன்னை இலங்கை அரசாங்கம் நாடு கடத்தியதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் றே தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விஜயம் தொடர்பில் அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயத்திடம் ஏற்கனவே அனுமதி பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இராஜதந்திரி ஒருவரை நாடு கடத்தியமை வெட்கப்பட வேண்டிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனேடிய பாராளுமன்றப் பிரதிநிதியாகிய தனக்கு இவ்வாறான ஓர் நிலையென்றால் சாதாரண பொதுமக்களுக்கு இலங்கையில் எவ்வாறான ஓர் மரியாதை கிடைக்கும் என்பதனை யூகிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விஜயம் குறித்து ஏற்கனவே அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொப் றே தெரிவித்துள்ளார். இ…
-
- 0 replies
- 928 views
-
-
கடந்த செப்டெம்பர் 2008 முதல், ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் Paris (Ile de France) தொகுதியில் இருந்து நான் போட்டி இடும் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து, எனக்கு ஆதரவளித்த, என்னுடன் தேர்தல் வேலை செய்த, எனக்கு ஆலோசனைகள் நல்கிய, வாக்குச் சீட்டுக்களைப் பல்வேறு நகரமன்றங்களில் கை அளித்த, எனது விளம்பரத்தாள்களை ஒட்டிய, விநியோகித்த, வாக்குச் சாவடிகளில் எனது பிரதிநிதிகளாய் பணியாற்றிய, வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டிய, களைப்பைப் பாராமல், நேரத்தைக் கணக்கிடாமல் வேலைசெய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், சகோதர - சகோதரிகளுக்கும், எனக்கு வாக்களித்த 6526 தமிழர்களுக்கும், பிரெஞ்சு மக்களுக்கும், அரபு - ஆப்ரிக்க மக்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நாம் மேலும் வாக்குகளைப…
-
- 4 replies
- 869 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் றேயை நாடு கடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என கனடா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடாவின் வெளிவிவகாரத்துறையின் பேச்சாளர் எமா வெல்போட் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரை நாடு கடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது. வானூர்தி நிலையத்தில் பொப் றே தடுத்துவைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாம் எமது அதிருப்திகளை தெரிவித்துக் கொள்கின்றோம். கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரை சிறிலங்கா அரசாங்கம் நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர். புதினம்
-
- 2 replies
- 872 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்குவது தொடர்பான தீர்மானத்தை அவுஸ்ரேலிய அரசாங்கம் கைவிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக ஒழித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதும், புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை கொழும்பு கோரியிருந்தது. எனினும், விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய கடந்த வருட டிசம்பர் மாதத்தில் இரகசியமாகக் கூடித் தீர்மானித்திருந்த அவுஸ்ரேலிய அரசாங்கம் அதனை உடனடியாக அமுல்படுத்தாமல் இழுத்தடித்திருந்தது. இந்த நிலையிலேயே தனது தீர்மானத்தை அவுஸ்ரேலியா தற்பொழுது கைவிடத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலிய உடகமொன்று தெரிவித்துள்ளது. ஆனாலும், விடதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்யும் …
-
- 1 reply
- 1.6k views
-
-
Sonia Gandhi promises help for Lankan Tamils
-
- 1 reply
- 667 views
-
-
வீரகேசரி இணையம் - இடம்பெயர்ந்து யாழ். புகையிரத நிலையத்திலும் புகையிரத சொத்துக்களிலும், விடுதிகளிலும் தங்கியுள்ளவர்களை உடனடியாக எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறு யாழ். அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். வவுனியாவிற்கும் காங்கேசன் துறைக்கும் இடையே புகையிரத சேவையை ஆரம்பிக்கும் முகமாவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனையடுத்து அங்கு தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனினும் இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் எவையும் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப் படவில்லை. 1990 ஆம் ஆண்டு உயர்பாதுகாப்பு வலயமாக வலிகாமம் வடக்கு பிரகடனப்படுத்தபட்ட பின்னர் அங்கு வசித்த பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து புகையிரத திணைக்களத்திற்கு…
-
- 0 replies
- 524 views
-
-
சிறீலங்காவின் மத்தியவங்கி சர்வதேச நாணயநிதியத்திடம் இருந்து கடன்தொகையாக பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த 1.9 பில்லியன் கடன்தொகை யூன்மாத முடிவில் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அதன் ஆளுநர் அஜித்டேவிட் கப்றியால் றொட்டஸ் செய்திதாபனத்திற்கு கருத்து தெரிவிக்கையில் இதுவரை நாம் பெற்ற தரவுகளின்படி இம்மாத முடிவிற்குள் அக்கடன்தொகை தமக்கு கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் மேற்கொண்ட இறுதிப்போர் காலப்பகுதியில் இக்கடன்தொகை தொடர்பில் விவாதிப்பதற்குரிய நேரம் இதுவல்ல என அமெரிக்கா தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட மனிதஉரிமை மீறல்கள் தொடர…
-
- 1 reply
- 668 views
-
-
இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சொன்னது ஒரு வகையில் சரிதான் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவ்சங்கர் மேனன் கூறியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 344 views
-
-
சிறிலங்கா இனவாத அரசாங்கத்தின் கனடா விரோத போக்கை கண்டித்து கனடாவின் ரொறன்ரோ நகரில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 417 views
-
-
பிரபாகரன் வார்த்தையில் இறந்திருக்கலாம் - வாழ்க்கையில் மரணம் அடைய மாட்டார்: சீமான் சென்னை: பிரபாகரன் செத்து விட்டாராம். மாவீரனுக்கு ஏதடா மரணம்?. வார்த்தையில் வேண்டுமானால் அவர் மரணம் அடைந்திருக்கலாம். வாழ்க்கையில் அவர் ஒருபோதும் மரணம் அடைய மாட்டார். பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக, அற்புத மனிதனாக இருந்ததுதான் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை யில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பெருமளவிலானோர் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில் சீமான் அனல் பறக்க பேசினார். அவர் பேசுகையில், இயக்குனர் பாரதிராஜா ஒரு மா…
-
- 57 replies
- 6.2k views
-
-
கணேடிய தொழிற்கட்சிப் பாரளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஆர்வளருமான திரு. பொப் ரே அவர்களை கொழும்பு விமான நிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பிய சிங்களப் பயங்கரவாதம். கணடா டொரொன்டோ பகுதியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவரும், தமிழர்களுக்கெதிரான சிங்களப் பயங்கரவாத இன அழிப்புப் போரை கடுமையாக விமர்சித்து வருபவருமான கணேடியத் தொழிற்கட்சி உறுப்பினர் திரு பொப் ரே அவர்களை கொழும்பு விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதும் இன்னொரு விமானத்திலேற்றி திருப்பியனுப்பியிருக்கிறது சிங்களப் பயங்கரவாதம். சிங்களப் பயங்கரவாதத்தால் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட சுமார் 25,000 தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு பாராளுமன்றுக்கு உள்ளேயும், வெளியிலும் குரல் எழுப்பி வந்த இவரின் கொழும்பு விஜயமானது சிங்…
-
- 10 replies
- 1.4k views
-
-
புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவில் என்றும் புலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசு கேட்டுள்ளது SL wants Australia to ban LTTE
-
- 0 replies
- 748 views
-
-
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் றே சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
-
மட்டக்களப்பு மேயர் சிவகீதா, சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தார் Written by Sara Tuesday, 09 June 2009 14:07 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆலோசகரும், மட்டக்களப்பு மாநகர மேயருமான சிவகீதா பிரபாகரன், அக்கட்சியில் இருந்து விலகி இன்று முதல், சிறிலங்கா சுதந்திர கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.இன்று காலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமயில் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தி நடைபெற்ற கட்சியின் உயர் மட்ட கூட்டத்தின் போதே, சிவகீதா பிரபாகரன், ஆளும் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கொண்ட தகவலை உறுதிப்படுத்தினார். அதன் போது, சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் தனது எதிர்கால அ…
-
- 17 replies
- 1.7k views
-