ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
சீனாவில் இருந்து அதி நவீன டாங்கிகள் 160 இலங்கைப் படையினருக்கு அனுப்பி வைப்பு? சீனாவில் இருந்து 160 டாங்கிகள் இலங்கைப் படையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தம் என அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் முல்லைத் தீவை நோக்கிய நகர்வில் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கருதிய இலங்கை அரசு சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து நவீன கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பாகிஸ்;தான் சென்ற நிலையில் மறுபுறம் சீன அரசிடமும் ஆயுத உதவிகள் கோரப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கு…
-
- 5 replies
- 3k views
-
-
சென்னை: இந்த ஆட்சி விலகினால், நாளையே தமிழ் ஈழம் மலரும் என்ற நிலை இருந்தால், இந்த ஆட்சியைத் துறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் அந்நாட்டுப் படையினரின் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரபாகரன் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. முல்லைத்தீவை விரைவில் ராணுவம் பிடித்து விடும் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால் இந்த சண்டையில் 4 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சிக்கி சிதறுண்டு வருவதை அனைவருமே கவனிக்கத் தவறி வருகின்றனர் அல்லது மறந்து விட்டனர். வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் படும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சாப்பாடு, மருந்து, உடை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் விலங்குகளை விட மோசமான நிலையில் உ…
-
- 16 replies
- 3.1k views
- 1 follower
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் மாணவர்கள் நேற்று சனிக்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 912 views
-
-
பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும்.. வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவிப்பு.
-
- 105 replies
- 61.2k views
- 1 follower
-
-
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தீவிரமான வன்முறைகளையிட்டு புதிய அமெரிக்க அரசாங்கம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 881 views
-
-
வணக்கம், அனைவரும் யேர்மனிய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றியை தெரிவியுங்கள். தொடர்புகளுக்கு: http://www.auswaertiges-amt.de/diplo/de/In...aktformular.jsp அவர் வெளியிட்ட அறிக்கை யேர்மன் மொழியில்: http://www.auswaertiges-amt.de/diplo/de/In...2-SriLanka.html அவர் வெளியிட்ட அறிக்கை: http://tamilskynews.com/index.php?option=c...0&Itemid=53 நன்றி
-
- 7 replies
- 2.4k views
-
-
38 வருடங்களாக கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை - லும்பினி விகாராதிபதி ஜ வெள்ளிக்கிழமைஇ 23 சனவரி 2009 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு பொது மக்களுடன் வருகைதந்த பிக்கு ஒருவரும் கிளிநொச்சியில் வைத்து படையினரிடம் சரணடைந்துள்ளார். கிபிலுவரசுமணசார என்ற பௌத்த பிக்குவே தர்மபுரம் பகுதியில் வைத்து சரணடைந்துள்ளார். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தென்பகுதியில் பிறந்தவர். பின்னர் 1960 இல் ஆசிரிய சேவையில் இணைந்து 1970 இல் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். இதன்பின் கிளிநொச்சி லும்பினி விகாரையில் கடந்த 38 வருடங்களாக பணியாற்றியுள்ளார். கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லையென சுமணசார தேரர் த…
-
- 25 replies
- 5.1k views
-
-
நூல்வெளியீடு படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் அழுத்தவும்:
-
- 2 replies
- 2.4k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009, 01:18.34 PM GMT +05:30 ] பயங்கரவாதத்தை தோல்வியடைய செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் இன்று மேற்கொண்ட சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். மிக விரைவில் இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடனான ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசுசி அகாசி, நாளையதினம் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்தேசிய…
-
- 10 replies
- 1.6k views
-
-
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் தர்ஷன் தர்மராஜ் விடுதலைப்புலி சந்தேக நபர் என காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி தைபொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு> அனுராதபுரத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்ற தர்ஷனை முகத்துவார காவற்துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்று காவற்துறையில் வைத்து தாக்கியுள்ளனர். கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஜீப் வண்டியில் சென்ற காவற்துறையினர் தர்ஷனை விடுதலைப்புலி சந்தேக நபர் எனக் கூறி பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர். இதன் போது தான் மச்சான் சிங்கள திரைப்படம் மற்றும் சீனவசந்தய என்ற சிங்கள தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ளதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். அதனையும் பொருட்படுத்தாது காவற்துறையினர்…
-
- 1 reply
- 4.2k views
-
-
அரசின் திட்டமிட்ட கொலை வலயத்திற்குள் 3வது நாள் - தேராவிலில் 4பேர் படுகொலை 10 பேர் படுகாயம் ( சனிக்கிழமைஇ 24 சனவரி 2009 ) ( ரவிலோகன் ) விசுவமடு தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. உடையார்கட்டு, இருட்டுமடு குரவில் ஆகிய பகுதிகள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு தொடக்கம் இன்று காலை 10:00 மணி வரை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதயறூபி (வயது 28) வெலிஸ்கோ (வயது 35) வேந்தன் (வயது 33) சைலா (…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழர்களின் உயிரை காப்பாற்ற அனைவரும் ஓரணியில் திரவோம்: இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் [ சனிக்கிழமை, 24 சனவரி 2009, 03:28.30 AM GMT +05:30 ] இலங்கை தமிழர்களுக்காக தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இராணுவம் தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 3 இலட்சம் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லையெனில், உலகிலேயே கொடூரமான மனித படுகொலை முல்லைத்தீவு காட்டில் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுவிடும். முதலமைச்சர் கருணாநிதி பல சமயங்களில் கோரிக்கை வைத்தும், அசைந்து கொடுக்காத மத்திய அரசுக்கு இறுதி வே…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் நேற்று முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர்கள்: 1. கெம்ப குமார் - தொடர்பு எண் : 92455-81684 2. திருமுருன் 3. விஜயகுமார் 4. மணிவேல் 5. பிரவீன் 6. சுரேஷ் 7. ராஜா 8. ராஜ்குமார் 9. முஜிபுர் ரகுமான் 10. முனிஷ் குமார் 11. நவீன் 12. பிரியன் 13. பிரபு 14. ஆறுமுக நயினார் திரு. கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும் தமிழக…
-
- 6 replies
- 1k views
-
-
ஒவ்வொரு நாட்டு தமிழர் அமைப்புக்களும் தனித்தனியாகவும்இ கூட்டாகவும் பின்வரும் இடங்களுக்கு அவசர மனுவினை அனுப்பவும். மனுக்களை பக்ஸ் மூலம் அனுப்பிவிட்டு நாளை மாலை இதுபற்றி குறித்த பணியகங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும். - ஐநா செயலாளர்நாயகம் பணிமனை -ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணிமனை -சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் -கொழும்பில் உள்ள உங்கள் நாட்டு தூதரகம் -உங்கள் நாட்டு வெளிவிவகார அமைச்சு மனுவில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் 1. 50000 மேற்பட்ட சிறீலங்காப் படைகள் வன்னியில் 400 000 பொதுமக்கள் வாழும் பகுதிகளை சுற்றி வளைத்து தொடர்ச்சியான கடும் போரினை நடாத்துகின்றது. இந்தப் போர் புலிகளுக்கு எதிரானதாகக் சொல்லப்பட்டாலும், இது மக்களுக்கு எதிரானத…
-
- 8 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையை இருட்டடிப்பு செய்து வன்னியில் நாள்தோறும் படுகொலை செய்யப்படும் மக்களின் துன்ப துயரங்களை வெளிக்கொணராமல் பிபிசி பாராமுகமாய் இருப்பதை கண்டித்து லண்டனில் உள்ள பிபிசி தலைமையகத்துக்கு முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 810 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 829 views
-
-
ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா! -த.எதிர்மனசிங்கம்- ஈழ தேசம் என்பது இன்று இல்லையாம் அதனால் ஈழத் தமிழர் என்ற இனமும் இல்லையாம். தமிழச்சியே அல்லாத இந்த அழகு சுந்தரிக்கு இப்படி ஒரு அதிசய சிந்தனை எழுவதில் எவருக்கும் வியப்பு ஏற்பட நியாயம் இருக்காது. வெள்ளிப் பணத்துக்கு வெள்ளித் திரையில் ஆட்டம் போட்ட அம்மணிக்கு பூர்வீகம் தமிழ் நாடு அல்ல. அதனால் அவர் தமிழச்சியும் அல்ல. அதனால் தமிழர் இனம் பற்றியும் தமிழர் நாடு பற்றியும் அவருக்கு பட்டறிவு கிடையாது. அவரது படிப்பறிவும் நாடுகள், இனம் அல்லது வரலாறு பற்றியதாக இருக்கும் வாய்ப்பே நிச்சயமாக இல்லை. அதுவல்ல, எமது பிரச்சினை. இங்கு ஈழம், ஈழத் தமிழர் பற்றிய அவரது பொன் மொழிகள் எமது தாய் மண் மற்றும் தமிழ்…
-
- 3 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 974 views
-
-
எருதின் புண் காக்கை அறியாது மற்றவரின் வலியையும் துயரத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் சுய இலாபத்தையே கருத்தாக கொண்டவர்களைப் பற்றி நமது நாட்டில் கூறப்படும் பழமொழி இது. இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்துவரும் துயரத்தை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் மட்டுமின்றி, உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்களும் ஒருசேர குரல் கொடுத்துப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் குரலிற்கு டெல்லி அரசு செவிசாய்க்கவில்லை என்றாலும், ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில்தான் கடந்த 17ஆம் தேதி எம்.ஜி.ஆர். ப…
-
- 1 reply
- 3.7k views
-
-
இலங்கையில் நடைபெற்று வரும் "இன மோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன" என்பதனை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமும், 2002 - 2006 காலப்பகுதியில் நடைபெற்ற அனைத்துலக சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளியிடப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 625 views
-
-
கல்மடு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
வரலாறு படைப்போம்! யாழ் களத்திற்கு வருகைதரும் நம்மில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்தாலும் தமிழ் தேசியத்தின்மீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்மீதும் ஆழ்ந்த பற்றுதியும், அக்கறையும் கொண்டவர்கள். தமிழீழ Nசியத் தலைமை மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு குண்டு வன்னியில் விழுந்தாலும் மனம் பதைப்பவர்கள். வன்னியில் எமது உடன்பிறப்புகளின் அவல நிலையை தாங்கமுடியாது கதறிக் கண்ணீர் வடிப்பவர்கள். தங்களால் இயன்ற ஏதாவது உதவி செய்யவேண்டும் என துடியாய் துடிப்பவர்கள். நாங்கள் வன்னியில் இப்பொழுதுள்ள நெருக்கடியிலிருந்து எமது மக்களைக் காப்பாற்ற பல செயற்பாடுகளைச் செய்துவருகின்றோம். ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையை கண்டித்து உண்ணா விரதங்கள், ஊர்வலங்கள், ஒன்றுகூடல்கள், பிர…
-
- 3 replies
- 2.2k views
-
-
வன்னி - இந்தியாவின் இன்றைய தேவை என்ன?; -எ.இராஜவர்மன்- உளவு விமானம் அடிக்கடி வன்னியின் வான்பரப்பில் பறக்கிறது என்றொரு செய்தி, அந்த விமானத்தில் ஏவுகணை இருப்பதாக இன்னொரு செய்தி, வன்னிக்கு சிவிலுடையில் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் சென்றார்கள் என்றொரு செய்தி என பல செய்திகளால் நாங்கள் பலமாகக் குழம்பி இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியாகி விட்டது. இந்தியா தான் இந்தப் போரை நடத்துகிறது என்றுகூட நம்புமளவிற்கு சென்றுள்ள இந்த நிலைக்கான நிஜமான காரணங்களில் முக்கியமானது விடுதலைப் புலிகளின் மரபு வழிப் பலம் அல்லது விடுதலைப் புலிகளின் இராணுவ நேர்த்தி பற்றிய இந்தியாவின் அச்சமே என்பதை அலசி அதற்கான மாற்று வழி காணும் களமாக இன்றைய இந்த ஆய்வை நாங்கள் எடுத்துக் கொள்வோ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த குழந்தைப்போராளியின் உடலத்தை பொறுப்பேற்க ராதிகா குமாரசாமி வன்னிக்கு செல்கிறார்.....?? (வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009 ) ( இரா.பார்த்தீபன் ) முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலத்தை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த விஜயகுமார் தனுசன் எனும் சிறுவனின் உடலத்தினை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு உடையார்கட்டில் இயங்கும் நட்டாங்கண்டல் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நன்றி - நிதர்சனம் -----------------------------------------------------…
-
- 5 replies
- 3.5k views
-
-
வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை அரசின் நீதி மற்றும் சட்டம் மறுசீரமைப்புத் துறை மலையகத் தமிழ் அமைச்சர் புத்திரசிகாமணி சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்துப் பேசினோம். ஈழ தமிழர்களை ஒரு பக்கம் ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கும் சிங்கள அரசில், சகோதரத் தமிழர்களான மலையக மக்களின் பிரதிநிதியாக நீங்கள் அங்கம் வகிப்பது என்பது... ``இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்களில் மூன்று பிரிவினர் இருக்கிறார்கள். அதாவது வடக்கில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள். கிழக்கு இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்கிற மூன்று பிரிவுதான் அது. ஈழத்துத் தமிழர்கள் மலையகத் தமிழர்களான எங்களையும், கிழக்குப் பகுதி தமிழர்களையும் இரண்டாம், மூன்றாம் தர…
-
- 7 replies
- 1.7k views
-