ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
போர்க்குற்ற ஆவணங்களில் காணாமல் போனோர் குறித்த பட்டியலும் இணையும் சாத்தியம் -இதயச்சந்திரன் கடந்த புதன்கிழமையன்று, விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றிய ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் படுகொலை குறித்த செய்தி ஆய்வு ஒன்றினை பிரித்தானிய “சனல்4′ தொலைக்காட்சி ஒளிபரப்பியது. போர்க்குற்ற மேகங்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ள இவ்வேளையில் புதிது புதிதாக வெளிவரும் காணொளி ஆதாரங்கள், ஐ. நா. சபையின் பொதுச் செயலாளர் அமைத் துள்ள போர்க் குற்ற விசாரணைக்கான ஆலோசனைக் குழுவிற்கு அழுத்தங்களைக் கொடுக்குமென எதிர்பார்க்கலாம். இக்காணொளி குறித்த செய்தி ஆய்வினை மேற்கொண்ட, “சனல் 4′ தொலைக்காட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோநாதன் மில்லர் (Jonathan Miller) பிரித்தானிய பிரபல சட்டத்தரணி ஜுலி…
-
- 0 replies
- 615 views
-
-
உள்ளுர் சந்தையில் தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்தவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பண்டிகைக் காலத்திற்கு முன்பாக மலேஷியா, இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்வதற்கு பாரம்பரிய தேங்காய் ஏற்றுமதியாளரக்ளுக்கும் தெங்கு அபிவிருத்திச் சபைக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கும் என உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13124-2010-12-16-10-33-20.html ========================================================================== சிறீலங்காவின் உற்பத்திப்பொருட்களில் பாரிய வீழ்ச்சி – தே…
-
- 10 replies
- 742 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. – அதற்கு மேல் செய்ய எதுவுமில்லை. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சட்டம் இயற்றி அதற்கு என ஒரு குழுவையும் நியமித்து உள்ளோம். ஆகவே அது தொடர்பில் திரும்பவும் பேச விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார். யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் தொழினுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்த பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்தப் பாடசாலைக்கு வரும் வழியில், காணாமல் போனோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண…
-
- 1 reply
- 365 views
-
-
நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைக்கும் – நாமல் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் புத்தளம் – ஆனமடுவ தொகுதிக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டுமொரு தடவை நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுன அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் வியாபாரிகளிடம் அதிக வரியை அறிவிட்டால், அந்த வியாபாரம் வீழ்ச்சியடைவதைத் தவிர்க…
-
- 0 replies
- 160 views
-
-
நடு வீதியில் வைத்து அமரிக்க தூதரக பெண்ணின் கைப் பை கொள்ளை - சிறப்பு விசாரணைகள் ஆரம்பம் By VISHNU 01 NOV, 2022 | 10:00 PM ( எம்.எப்.எம்.பஸீர்) அமரிக்க தூதரகத்தில் சேவையாற்றும், அமரிக்க பிரஜையான பெண் ஒருவரின் கைப்பையை, நடு வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கொழும்பு - 7, கறுவாத்தோட்டம் பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்கவுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தனர். கொள்ளையர்கள் கொள்ளையிட்ட கைப்பையில், குறித்த தூதரக பெண்ணின் 1250 டொலர் பெறுமதியான அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசி, 20 ஆயி…
-
- 2 replies
- 279 views
- 1 follower
-
-
[color=blue]புலிவிரோதக் கருத்துக்களுக்கு, புலிஎதிர்ப்பு முத்திரையை குத்தி விற்க்கப்படுவதை விட, புலிஆதரவு முத்திரையை குத்தி விற்க்கப்படுபவை, நற்சாதகங்கள் அநுபவிக்கின்றன. சமூகச்சீர்கேட்டுக் குப்பைக்குள்ளே வயிற்றுப்பிழைப்புச் செய்யும் சீவியங்களாக, தெய்வநம்பிக்ககையை வியாபாரம் செய்கின்ற தெய்வத்-துரோகிகளாக, வாழ்வியலின் மனித ஒழுக்கம் பேணாத காட்டுமிராண்டிகளாகவுமே மக்கள் மனங்களில் பதிவாகிவிட்டனர் இந்த புலிஎதிர்ப்புவாதிகள். எனவே இவர்கள் திருவாக்குகள் மக்கள்மனங்களை வெல்லும் அருகதை பெறுமா? ஆதலால் இந்த சூழ்நிலையை எதிர் நீச்சல் செய்வதுதான் புலிஆதரவு முகமூடிப்பாணி. போர்நடவடிக்கைகளில் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுவது புலித்துரோகமா? புலிஊடகங்களின் செயற்ப்பாடுகளில் அதிருப்…
-
- 3 replies
- 2.6k views
-
-
கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவு செய்து தமிழ் மக்கள் குறிப்பாக குடா நாட்டு மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியை நேசிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்த அதியுத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை பாராட்டுகின்றோம் என்று யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகை தருகின்ற அமைச்சர்கள் வாயார புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துத் தெரிவித்துச் செல் கிறார்கள். "யுத்தம் முடிவடைந்துள்ளது இனி மேல் எந்தத் தமிழ் மகனும் துப்பாக்கி யால் சாகமாட்டான்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததும் இந் தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் கள நிலைமைகள் அப்படி யில்லை.தற்போது குடாநாட்டில் மீண்டும் துப்பாக்கி முனைகள் நீட்டப் பட்டு உயிர் களைத் துவம்சம் செ…
-
- 14 replies
- 1.5k views
-
-
இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் தேவையாகவுள்ளது. இதன் தாற்பரியத்தை புரிந்துகொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா ஊடாக தமது தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றது என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் அது இங்குள்ள அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார். பதவி விலகிச் செல்லும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை விடயத்தில் பக்கச்சார்பாகவே செயற்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் புலம் பெயர் மக்களின் தேவைக்காகவே அவர் இவ்வாறு செய…
-
- 1 reply
- 406 views
-
-
குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! பதவி நீக்கம் செய்யப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் தாம் பதவியில் இருந்தவேளை மேற்கொண்ட தவறுகள் குறி்த்த குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கப்படுத்தாது மூடி மறைத்து வைப்பதற்கு வடக்கு முதலமைச்சர் முயற்சி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இறுதியாக இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வின் போது இந்த விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்தது. வடக்கு மாகாணசபையின் …
-
- 7 replies
- 657 views
-
-
துப்பாக்கியை எடுத்துச்சென்ற சட்டத்தரணி கைது 07 NOV, 2022 | 10:04 PM அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றை வேனில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய சட்டத்தரணி தனது வேனில் சாலியவெவ கலவெவ பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோதே துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/139387
-
- 0 replies
- 498 views
- 1 follower
-
-
சிவராம் எழுதிய கட்டுரை தற்காலத்திற்கும் பொருந்தும் இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம் டி.சிவராம் (தராக்கி) சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக் காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாதபட…
-
- 0 replies
- 1.2k views
-
-
16 – 23 ஆக பிளவுபட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனிவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தாரநாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜெயரத்ன, சுமேதா ஜெயசேன, ரி.பி.எக்கநாயக்க, திலங்க சுமதிபால. இவர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த போது, கூட்டு …
-
- 0 replies
- 156 views
-
-
சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அதே சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர் தொடர்பில் விசாரணை! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 12:05 PM 17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி, அந்தக் கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்தி சமூகமயப்படுத்தினார் எனக் கூறப்படும் தொலைபேசி பழுதுபார்ப்பவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் தனது தொலைபேசியை பழுதுபார்ப்பதற்குக் கொடுத்ததாகவும், சில மணித்தியாலங்களின் பின்னர் அதனைப் பழுதுபார்த்து தன்னிடம் கொடுத்ததாகவும் சிறுமி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்க…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
வலிந்த தாக்குதலை- யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலகல்: நோர்வேத் தூதுவரிடம் புலிகள் தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் க…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீட்டின் முன் வெள்ளை வான் நிற்க தலைதெறிக்க ஓடினார் வர்த்தகர்! [09 ஜனவரி 2011, ஞாயிற்றுக்கிழமை 7:40 மு.ப இலங்கை] யாழ்ப்பாணம்,ஜன.9 வீட்டின் முன்பக்கத்தில் திடீரென வந்துநின்ற "ஹைஏஸ்"வாகனத்தைக் கண்டு வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து ஓடினார் வீட்டுக்காரர்! திகிலடைந்து கண்மண் பாராது ஓடிய அவரது காலைப்பதம் பார்த்தது உடைந்த போத்தல்.குடாநாட்டில் வெள்ளைவான் பீதி மக்களை எவ்வாறு அச்சத்தில் உறையவைத்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது போத்தல் ஓடு (பிசுங்கான்) வெட்டியதில் அவரது கால் பாதம் பிளந்த நிலையில் தலை தெறிக்க ஓடிய அவர், அயல் வீடொன்றில் அடைக்கலம் புகுந…
-
- 0 replies
- 949 views
-
-
"வன்னிப்போரின் இறுதிதருணங்களில் நிகழ்ந்தவை குறித்த புதியகதைகள்" - குளோபல் தமிழ்ச செய்தியாளர் - கொழும்பு:- சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இலங்கையின் சில அரசசார்பற்ற அமைப்புகள் ஒன்றுசேர்ந்து வன்னிப்போரின் இறுதிதருணங்களில் நிகழ்ந்தவை குறித்த புதியகதைகளை முன்வைப்பதாக மனிதஉரிமை பணியாளர் நிமல்கா பெர்ணாண்டோ குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மனிதஉரிமை பாதுகாவலர் சுனிலா அபயசேகர நினைவுப்பேரூரையை நேற்று கொழும்பில் ஆற்றிய வேளையே அவர் இதனை தெரிவித்தார். அண்மையில் மார்கா அமைப்பும், இலங்கையின் மனித நேயஅமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவே அவர் இந…
-
- 0 replies
- 381 views
-
-
வாள்வெட்டுக்களில் இருவருக்குக் காயம்!! வாள்வெட்டுக்களில் இருவருக்குக் காயம்!! கொடிகாமம், மற்றும் தெல்லிப்பழைப் பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந் துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமத்தில் மந்துவில் கிழக்குப் பகுதியில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வீதியருகே நின்றிருந்த இளைஞர்…
-
- 1 reply
- 515 views
-
-
இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்ற…
-
- 0 replies
- 263 views
-
-
சிறிலங்காவுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரோஸ் இது தொடர்பில் கூறியதாவது: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் அமைப்பதை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னர் வரவேற்றிருந்தார். ஆனால் தற்போது உள்நாட்டு ஆணையத்தை அமைக்க உள்ளது. கடந்த கால எந்த ஒரு வன்முறை தொடர்பிலான விசாரணைகளையும் அரசாங்கம் அக்கறையோடு நடத்தவில்லை. உள்நாட்டு நிர்வாக அமைப்புக்கள் செயற்படவில்லை என்பதையே இது வெளிப்படையாகக் காட்டியது. உள்நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவானது…
-
- 0 replies
- 787 views
-
-
’சம்பந்தன் விலக வேண்டும்’ புதிய அரசமைப்புத் தொடர்பான பணிகளை ஆரம்பிக்க முடியாவிடின், இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகுதல் நல்லது என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தன்னுடைய டுவிட்டர் கணக்கில், பெரும்பான்மையினத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி, அமைச்சர் நேற்று (17) வெளியிட்ட டுவீட்களிலேயே, இக்கருத்தை அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினை அன்று எனத் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் முன்னுரிமைப் பட்டியலில், இனப்பிரச்சினையே முதலிடம் வகிக்கிறது எனத் தெ…
-
- 0 replies
- 149 views
-
-
தவிர்க்கப்பட வேண்டிய தலையீடுகள் இலங்கையில் இனப்பிரச்சினை, தமிழ்ப் பேசும் மக்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில்தான். இந்தப் பிரச்சினைக்கு அமை தித் தீர்வு காண வேண்டுமானால் நாட்டின் மூவின மக்களான தமிழர் களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் ஒன்று சேர்ந்துதான் அதனை மேற்கொள்ள வேண்டும். புறச் சக்திகளின் முறையற்ற தலையீடு மூலம் இலங்கை மீது திணிக்கப்படும் எந்தத் தீர்வு முயற்சியும் பலன் தரப் போவதில்லை. தீர்வு உள்ளிருந்து உருவாக வேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிக்கப்பட வேண்டியதல்ல. இதற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்ல முன்னுதாரணம்; பட்டறிவு. இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்பு களுள் ஒன்றான தமிழர்களோடு பேசாமல் கலந்துரையாடாமல் அவர்களின் நியாயமான ஆதங்கங்களைக் க…
-
- 0 replies
- 803 views
-
-
அமெரிக்கா வந்துள்ள மஹிந்தவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை [ பிரசுரித்த திகதி : 2011-01-20 07:49:50 AM GMT ] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான அதிர்சி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார். இது தொடர்பிலான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில்,…
-
- 2 replies
- 1.3k views
-
-
சீனா ஜனாதிபதியின் விஜயத்திற்;கு முன்னதாக இலங்கை துறைமுகத்திற்க்கு அந்த நாட்டின் அதிநவீன நீர்மூழ்கியும்,போர்க்கப்பல்களும் வந்ததாக குளோபல் தமிழ் செய்திகள் தெரிவித்திருந்தது உறுதியாகியுள்ள அதேவேளை இந்தவிடயம் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளதாகவும் மோடி மகிந்த சந்திப்பின்போது இடம்பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன-.இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது ஐ.நா கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது உறுதியாகிவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து புதுடில்லி உறுதி செய்துவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின்போது அரசமைப்பின் 13 வது திர…
-
- 1 reply
- 356 views
-
-
ஆரோக்கியமற்ற நிலைமையில் தமிழ்த் தேசிய அரசியல்! தமிழ்த் தேசிய அரசியல் இப்போது பரபரப்பு நிறைந்த திருப்புமுனைப் புள்ளியொன்றுக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால வெற்றிப் பயணம் தற்போது முக்கியத்துவம் மிகுந்த இடமொன்றில், பலவிதமான குழப்பங்களுடனும், தடுமாற்றங்களுடனும் தேக்க நிலையை அடைந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு, கிழக்கு மக்கள் மத்…
-
- 0 replies
- 337 views
-
-
யாழ்.மாவட்டத்தில் இதுவரை 19 சுயேட்சைகள் கட்டுப்பணம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிச்சபைத் தேர்தலில் யாழ்.மாவட் டத்தில் போட்டியிடுவதற்கு நேற்றுமாலை வரை 19 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.அதேவேளை இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை வேட்பு மனுத் தாக்கலுக்குரிய கால எல்லை என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் கடந்த 5 தினங்களுக்குள் 19 சுயேட்சைக் குழுக்கள் மட்டுமே கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.யாழ்.மாவட்டத்தில் பிரத…
-
- 0 replies
- 351 views
-