ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143604 topics in this forum
-
வடபோர் அரங்கில் ஏப்பரல் 23ம் திகதி மேற்கொள்ளபட்ட பாரிய படை நடவடிக்கைக்குப் பின்னர், படைத்தரப்பு இப்பகுதிகளில் பெருமெடுப்பிலான தாக்குதல் நகர்வுகளைத் தவிர்த்து வருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்ற அளவில் கூட இப்பொது தாக்குதல்கள் நடைபெறுபவதில்லை. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களை எடுத்துக் கொண்டால் 53 மற்றும் 55 ஆவது டிவிசன்களைச் சேர்ந்த படையினர், இயந்திர காலாற்படைப்பிரிவின் உதவியுடன் பல மட்டுப்படுத்தப்பட்ட நகர்வுகளைச் செய்திருந்தனர். புலிகள் முதல் வரிசைக் காவலரண்கள் வரை முன்னேறிச் செல்வதும். பின்னர் தளம் திரும்பிவிட்டு புலிகளின் காவலரண் வரிசையை அழித்து விட்டு மீண்டதாக செய்தி வெளியிடுவதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அப்படியான தாக்குதல் நகர்வுகள்…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1k views
-
-
04.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 1 reply
- 1.4k views
-
-
03.06.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்திய கூட்டமைப்பு எமக்கு முக்கியம். கருணாநிதி (புது வீடியோ!)
-
- 1 reply
- 2.3k views
-
-
பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தவர் ஜயலத் ஜெயவர்த்தன [07 - June - 2008] * அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார அண்மையில் காலமான விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவர் பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கியவர் ஜயலத் ஜெயவர்த்தன எம்.பி.யெனக் குற்றம் சாட்டிய அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார, ஜயலத் எம்.பி.க்கு புலிகளுடன் சிநேகபூர்வமான உறவுகள் இருப்பதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ""விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு பொறுப்பாளரான தயா மாஸ்டர் சிகிச்சை பெறுவதற்காக அப்பலோ மருத்த…
-
- 2 replies
- 2.4k views
-
-
மன்னாரில் எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்ளும் உரிமத்தை இந்தியாவின் கெயார்ன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்க இலங்கை முடிவு! மன்னாரின் கரையோரப் பகுதிகளில் எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்ளும் உரிமத்தை இந்தியாவின் கெயார்ன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்க இலங்கை முன் வந்திருக்கிறது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இம்மாதம் நிறைவடையுமென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்தியாவின் கெயார்ன்ஸ் நிறுவனத்துக்கு எண்ணெய், வாயுவள ஆய்வு மேற்கொள்வதற்கு இடமளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜூன் 30 இல் இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வருகை தருமாறு அந்த நிறுவனத்துக்கு நாம் அறிவித்துள்ளோம் என்றும் பௌசி கூறியுள…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக விலகிய 600 பேரை பொது போக்குவரத்துச் சேவையின் பாதுகாப்பிற்கு என விரைவில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் தர்சன ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 788 views
-
-
வவுனியா வடமேற்கு குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 902 views
-
-
சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சில் பாடசாலை கட்டடம் சேதம் [சனிக்கிழமை, 07 யூன் 2008, 08:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளது. புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் மக்கள் குடியிருப்பினை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:10 மணிக்கு சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-29 ரக வானூர்திகள் இக்குண்டுத் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் ஆனந்தபுரம் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளதாகியுள்ளதாக பாடசாலை முதல்வர் தெரிவித்துள்ளார். புதினம்
-
- 1 reply
- 797 views
-
-
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து தமிழ் மக்கள் மதவாச்சி ஊடாக சிறிலங்காவிற்குச் செல்வதற்கு சிறிலங்காப் படைத்தரப்பினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 587 views
-
-
முகமாலை வெற்றி-முன்னும் பின்னும் தமிழீழத்தின் வட பகுதி இது வரை காணாத மிகப் பெரும்போரைச் சந்திக்க இருப்பதாக சிங்கள இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா சூளுரைத்து ஒரு சில நாட்களில் சிங்கள இராணுவம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. யாழ்ப்பாண முன்னரங்கில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை தொடங்க உள்ளதாகவும் கிலாலி முதல் நாகர்கோவில் வரை இந்த நடவடிக்கை விரிவாக நடைபெறும் எனவும் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு தளபதி சரத் பொன்சேகா செவ்வி வழங்கி இருந்தார். இதுவரை நடைபெற்ற போர்களில் மிகப்பெரும் போராக இப்போர் இருக்கும் என்றும் இதன் முடிவில் வடக்கு மாநிலத்தில் புலிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக சிங்கள இராணுவத்தின் சிறப்புப் பய…
-
- 3 replies
- 1.8k views
-
-
இந்தியப்படைகளின் அட்டூழியத்தை பிரியங்கா அறிவாரா? ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மார்ச் 19ம் தேதி வேலூர் சிறைக்குச் சென்று அங்கே ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியை நேரில் சந்தித்துப் பேசியிருக் கிறார். இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்து வத்தைப் பார்க்கும்போதுஇ இந்திய ஊடகம் எப்போதுமே ஒரு செய்திப் பசியுடன் அலைந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு தேசியக் கட்சியின் தலைவரின் மகள்இ தன் தந்தையைக் கொன்ற குற்றவாளி நளினியுடன் சந்திப்பு என்பதாக பரபரபபான தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஆச்சரியத்துக்கோ பரபரப்புக்கோ என்ன இருக்கிறது என்று புரியவில்லை. ஊடகங்கள் அரசியல்வாதிகளையும்இ நீதிமன்றத்தையும்இ மற்றும் பல அரசு நிறுவனங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
உடன்பாட்டை மதியாத சிங்கள அரசு இரா. உமா சற்றேறக்குறைய அரை நூற்றாண்டு காலமாகத் தமிழினத்தை அழித்தொழிப்பதில் வெறிகொண்டு செயல்பட்டுவருகிறது இலங்கை அரசு. சர்வதேசப்போர் விதிகளுக்குக் கட்டுப்படாமல் அப்பாவித் தமிழர்களின் வாழ்விடங்கள் மீதும பள்ளிகள், மருத்துவமனைகள் மீதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திக்கொண்டுள்ளது. இப்படி ஒருபுறம் தமிழர்கள் வாழும் பகுதிகளில இராணுவத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுக்கொண்ட
-
- 0 replies
- 660 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கி அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிப்பதற்கான யோசனையை அக்கட்சியின் செயற்குழுவிடம் முன்வைப்பதற்கு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 689 views
-
-
முருங்கனில் சிறிலங்காப் படையினரால் குடும்பஸ்தர் சுட்டுப் படுகொலை [சனிக்கிழமை, 07 யூன் 2008, 05:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் மாவட்டம் முருங்கனில் உள்ள அளவக்கைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முருங்கன் அளவக்கைப் பகுதி குளம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணியளவில் குளிக்கச் சென்றிருந்த வேளை இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 515 views
-
-
குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்களுக்கு இலக்காகும் தனியார் பேருந்துகளின் இலக்க வழிப்பாதை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் பாதுகாப்புச் சபையிடம் பரிந்துரைக்கவுள்ளனர் என்று தெரியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 622 views
-
-
வீரகேசரி இணையம் - வவுனியா மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதியாக (ஆணையாளராக) நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசினையடுத்துஇ ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 16.05.2008 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை அரசியலமைப்புச் சட்டம் 7 மற்றம் 13 ஆவது திருத்;தச் சட்டங்களின் அடிப்படையில்இ 111 (அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் முன்னிலையில் வியாழக்கிழமையன்று, இவர் மேல்நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் நீதிபதி இளஞ்செழியன் வவுனியா மாவட்டத்தில் எட்டரை வருடங்களும், மன்னார் மாவட்டத்தில் மூன்று வருடங்களும் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார். யாழ் மாவட்ட செம்மணி பு…
-
- 0 replies
- 705 views
-
-
வீரகேசரி இணையம்- மொரட்டுவைஇ கண்டி பொல்கொல்ல ஆகிய இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களையடுத்து, வடபகுதியில் இருந்து தமிழ் மக்கள் மதவாச்சி ஊடாகத் தென்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியிலிருந்து இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் குறைந்தது 22 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளதனால், வவுனியா மன்னார் பிரதேசங்களில் இருந்து தெற்கு நோக்கிச் செல்பவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. வவுனியா, மன்னார் பகுதிகளில் இருந்து தெற்கு நோக்கி பஸ்களிலோ அல்லது ரயிலிலோ தமிழ் மக்கள் செல்லமுடியாது எனவும், இது தற்காலிக நடவடி…
-
- 0 replies
- 577 views
-
-
தாயகவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 21,051 மாவீரர்கள் வீரச்சாவு தாயகவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 21,051 என தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது. மாவீரர்கள் ஆண் மாவீரர்கள் - 16,516 பெண் மாவீரர்கள் - 4,535 மொத்த மாவீரர்கள் - 21,051 கரும்புலிகள் ஆண் கரும்புலிகள் - 256 பெண் கரும்புலிகள் - 97 மொத்தக் கரும்புலிகள் - 353 தரைக் கரும்புலிகள் - 102 கடற்கரும்புலிகள் - 251 எல்லைப்படை மாவீரர் - 279 நாட்டுப் பற்றாளர்கள் - 4…
-
- 11 replies
- 3.3k views
-
-
இஸ்ரேல் பாணியில் சிறீலங்காவிலும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் சுமார் 20 பேரை நேற்று அப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடந்த அசம்பாவிதச் சம்பவத்தை அடுத்து மொறட்டுவப் பிரதேசத்தை விட்டு அவர்களின் சொந்த இடங்களாக மட்டக்களப்பு, திருமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற இடங்களுக்குப் போகும் படி கொழும்பு பம்பலப்பிட்டு சிறீலங்காப் பொலீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு வெளியேறிச் சென்ற மாணவர்களில் 3 வர் மதவாச்சியிலும் மேலும் 17 பேர் வவுனியா ஈரப்பெரியகுளத்திலும் வைத்து சிறீலங்கா சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் கொழும்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குற்றங்கள் அற்றவர்கள் என்ற நிலை நிரூபிக்கப்பட்ட பின் பாதுகா…
-
- 2 replies
- 1.2k views
-
-
சர்வதேச யுத்த சட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை [ சனிக்கிழமை, 07 யூன் 2008, 06:09.08 AM GMT +05:30 ] சர்வதேச யுத்த விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதக் குழுக்களிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளதாக பி.பி.சி. உலக சேவையின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சிவில் மக்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. படுகொலைச் சம்பவங்கள் கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் போன்ற செயல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சிவிலியன்கள் மீதான தாக்க…
-
- 45 replies
- 5k views
-
-
ஊடகவியலாளர்களுக்கு உயிராபத்தை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என்று பிறசல்லை தளமாகக்கொண்டு இயங்கும் அனைத்துலக செய்திகள் பாதுகாப்பு நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 979 views
-
-
திருகோணமலை புடவைக்கட்டு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் இடையில் இன்று அதிகாலை மோதல் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.7k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மொறட்டுவப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கம் தனது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-