Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கும் கிழக்கும் மோடியின் கைகளில்! – அண்ணாமலை தெரிவிப்பு இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாணமக்கள் நம்பியிருக்கிறார்கள். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.13 ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.” – இவ்வாறு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழகம் சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசியல் திருத்தம் நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும்,…

  2. “வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்! யாழ்.மாநகர சபையில் சிலர் “வைக்கோல் பட்டறை நாய்” போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத சம்பளத்தையும் இரத்து செய்துள்ளனர். யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, சபையில் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி “சபையில் சிலரின் செயற்பாடுகள் வைக்கோல் பட்டறை நாய்” போன்றுள்ளது என கூறியிருந்தார். அதனால் சபையில் சில உறுப்பினர்கள் கடும் ஆவேசமடைந்து அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து “வைக்கோல் பட்டறை ந…

  3. பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது – ஜனா பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த காலங்களில் 50 இற்கு மேற்பட்ட ஊடக…

  4. ஸ்ரீலங்கன் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SRI LANKAN AIRLINES இயந்திர கோளாறு ஏற்பட்ட 3 விமானங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக, தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் …

  5. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை Published By: NANTHINI 19 FEB, 2023 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம்) உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாமல் போனால் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அரசியலமைப்பின் ஊடாக விதிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய ஒரு வருடகாலத்துக்கு ஆட்சி காலம் நீடிக்கப்பட்டிருந்…

  6. வடக்கில் திடீரென தோன்றிய சிவலிங்கம் சிவராத்திரி நாளான நேற்று (19) சனிக்கிழமை, நாட்டிலுள்ள பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில், யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி - முடங்குதீவுப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரி விரதம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. எனினும், குறித்த சிவலிங்கம் வெள்ளிக்கிழமை இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதி ஊடாகப் பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்துக்குப் பூ வைத்து, கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்கின்றனர். https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடக்கில்-திடீரென-தோன்றிய-சிவலிங்கம்/7…

  7. இந்திய விசா விண்ணப்ப மையம் மீண்டும் நாளை திறக்கப்படும் தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பில் உள்ளஇந்திய விசா விண்ணப்ப மையம், நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசா மற்றும் பிற சேவைகளுக்கான விசா விண்ணப்ப மையம் நாளை முதல் வழமையாக இயங்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 15ஆம் திகதியன்று, இரவு எழுந்த பாதுகாப்பு சிக்கல் காரணமாக, இந்திய விசா விண்ணப்ப மையம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/240609

  8. இராணுவத்திலிருந்து விலகிய 30 ஆயிரம் பேர் இன்னும் சரணடையவில்லையாம்! Published By: NANTHINI 19 FEB, 2023 | 01:47 PM இராணுவ சேவையிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்காக பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், முப்படையை சேர்ந்த மேலும் 30,000 பேர் இன்னும் சரணடையவில்லை என்பதை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்துள்ளனர். பொது மன்னிப்பு காலத்தின்போது, ஆயுதப் படையிலிருந்து வெளியேறிய 70 அதிகாரிகள் உட்பட 22,729 பேர் சரணடைந்ததாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் ஜனவரி 3ஆம் திகதி வரை 56 அதிகாரிகள் மற்றும் 20,116 சிப்பாய்கள் சரணடைந்துள்ளனர். …

  9. பொருளாதார மறுசீரமைப்பு அவசியம், இல்லையெனில் நெருக்கடியிலிருந்து மீளமுடியாது – சிரேஷ்ட பொருளியலாளர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டும் என உலக வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பொருளியலாளர் சாந்த தேவராஜன் தெரிவித்துள்ளார். அதனை செய்யாமல் விட்டால் தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையால் மீளமுடியாது என்றும் 5 வருடங்களின் பின்னர் மீண்டும் கடன்நெருக்கடி ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய உணவைப் பெற்றுவதற்குத் பலர் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் செல்வந்தர்களுக்குத் தொடர்ந்து நிதியளிக்கப்படுவது வேதனையளிப்பதாக கூறியுள்ளார். இலங்கை மக்கள் கொண்டிருக்கும் இயலுமையை வலுவிழக்கச்செய்யாமல…

  10. சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் – சி.வி விக்னேஸ்வரன் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டியை கோருபவர்கள் லண்டனில் போய் அதனை கோருமாறு சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போத்துக் கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும். பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல தமிழ் பெயரும் அல்ல. எனவே அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1324341

  11. நல்லூரில் வாள் வெட்டு ; இருவர் காயம் Published By: VISHNU 19 FEB, 2023 | 10:48 AM யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/148543

  12. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சமிக்ஞை கிடைத்ததும் கோட்டாவின் அமைச்சரவையில் மாற்றம் !!! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பில்லியன் டொலர் கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி கிடைக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றுமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அமைப்புகள் கோரியுள்ளன. இந்நிலையில் விளையாட்ட…

  13. அமெரிக்க இராஜதந்திர தூதுக்குழுவின் திடீர் விஜயம் குறித்து நாட்டுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் : சுதந்திரக் கட்சி Published By: NANTHINI 18 FEB, 2023 | 08:06 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்க இராஜதந்திர தூதுக்குழுவின் திடீர் வருகைக்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஜே.வி.பி. ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அதேவேளை, அவற்றை இந்திய, அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் முடக்குவதற்கு அரசாங்கம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதன் பிரதிபலன் 1983 கலவரத்தை விட மோசமானதாகவே இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தா…

  14. சம்பூர் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தின் நிர்வாக செலவுகளுக்காக ஒரு கோடியே 11 இலட்சம் நிதி ஒதுக்கீடு Published By: DIGITAL DESK 5 18 FEB, 2023 | 12:36 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) திரு‍கோணமலையின் சம்பூரில் அமைந்துள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் செயற்திட்ட நடவடிக்கைகள் எதுவும் நடத்தப்படாதபோதும், ஒரு கோடியே 11 இலட்சத்து 87 ஆயிரத்து 455 ரூபா அதன் நிர்வாகச் செலவுக்காக செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பூரில் 50 மெகா வொட் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்காக 2018 ஆம் ஆண்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றி…

  15. உக்கும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டம் Published By: DIGITAL DESK 5 18 FEB, 2023 | 12:45 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கையில் முதன்முறையாக அரச நிறுவனமொன்று உக்கும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது. இந்த செயற்திட்டத்தின் மூலமாக நாளாந்தம் நாட்டின் தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பிற்கு 35 கிலோ வொட் மின்சாரம் சேர்க்கப்படவுள்ளது. இந்த செயற்பாட்டை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் தலைமையில் கட…

  16. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் - இலங்கையின் ஆதரவை கோரியது ஜெர்மனி Published By: RAJEEBAN 18 FEB, 2023 | 04:36 PM ரஷ்யாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவளிக்க வேணடும் என ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் ரம்சோர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை கடந்த வருடம் தவிர்த்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/148525

  17. சிவராத்திரியில் ஏற்றப்படும் தீப ஒளியால் துன்பங்கள் நீங்கி, வளமான இலங்கையின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி Published By: NANTHINI 18 FEB, 2023 | 04:19 PM நமது உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்தால், நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் கடந்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாட்டை நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், மஹா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன். உலகெங…

  18. இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு அரிதாகவே கருதப்படும் நிலுவைத் தொகையில் கடன் வழங்கும் கொள்கையின் கீழ் இலங்கைக்கு உரிய கடன் வசதியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நாடு தனது கடனை மறுசீரமைக்க நல்ல நம்பிக்கையுடன் முயற்சி செய்தால், பொருத்தமான கொள்கைகளைப் பின்பற்றி, சர்வதேச நாணய நிதியம் நிலுவைத் கடன் கொள்கையின் கீழ் கடன்களை வழங்குகிறது. எவ்வாறாயினும், கடனை மறுசீரமைப்பது தொடர்பான சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் செயற்படுவார்கள் எனவும், அதற்கான நிதியத்தின் ஆதரவை வழங்குவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இப்போதும், இலங்கையின் கடனை மறுசீரமைப்பது…

  19. விபத்தில் உயிரிழந்த மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் கெளரவிப்பு ! Published By: NANTHINI 18 FEB, 2023 | 02:58 PM விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால், சிறுநீரக ‍தேவையை எதிர்பார்த்து, அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அந்த வகையில் இச்சிறுநீரக தானத்தை உயிரிழந்தவரது பெற்றோரின் ஒப்புதலுடன், அவர்களது விருப்பத்தின் பெயரில் இன்னொருவருக்கு சிறுநீரகம் தானமாக வழங்கப்பட்ட நிலையில், சிறுநீரக செயலிழப்பி…

  20. சிவராத்திரியன்று மாட்டுக் கன்றின் தலையை வெட்டி வீசிய விஷமிகள் !!! சிவராத்திரி தினமான இன்று மாட்டு கன்று ஒன்றினை வெட்டி, அதன் தலையையும், இதர மாமிச கழிவுகளையும் வீதியில் விஷமிகள் வீசி சென்றுள்ளனர். கோண்டாவில், முத்தட்டுமட வீதியில் காலை மாமிச கழிவுகள் வீசப்பட்டு காணப்பட்டமையை அடுத்து, அப்பகுதி மக்களால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , நல்லூர் பிரதேச சபை கழிவகற்றும் வாகனத்தின் ஊடாக கழிவுகளை அகற்றினர். சிவராத்திரி விரத நாள் அன்று மாட்டு கன்றினை வெட்டி அதன் தலையை வீசி சென்று இருந்தமை அப்பகுதி மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விஷமிகளின் இந்த செயற்…

    • 1 reply
    • 610 views
  21. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்து முன்னாள் கடற்படைத்தளபதி நினைவுகூரல் 18 Feb, 2023 | 10:02 AM கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் குவெட்டாவின் கட்டளை, பணியாளர்கள் கல்லூரியில் பயின்ற இலங்கை பட்டதாரிகளுக்கிடையே மற்றுமொரு ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்துபசார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. பாகிஸ்தான் கூட்டுப்படைத்தலைவர்கள் குழுவின் பிரதானி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சாவின் இலங்கை விஜயத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இராப்போசன விருந்தில் இலங்கை இராணுவத்த…

    • 3 replies
    • 668 views
  22. மார்ச் 9 இல் தேர்தல் நடைபெறாது – தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போதிய நிதி கிடைக்காத காரணத்தினால், தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை குறிப்பிடவுள்ளதாக அதன் தலைவர் கூறியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு முன்னதாக அறிவித்திருந்தது. தபால் வாக்குச்சீட்டுகள் அரச அச்சகத்தில் இருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால், தபால் மூல வாக்குப்பதிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, உ…

  23. மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் எண்.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது. பெப்ரவரி 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் குறித்த வர்த்தமானியில் படி, மின்சாரம், பெட்ரோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன. மேலும் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சேவ…

  24. சீனா இல்லாமல் இலங்கைக்கு உதவுவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை ! சீனாவின் கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கு கடனுதவியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருகின்றது. சீனாவின் முறையான உத்தரவாதம் கிடைக்காவிடினும் இலங்கைக்கான கடனை அங்கீகரிக்க சர்வதேச நாணய நிதியம் அதன் கொள்கையைப் பயன்படுத்தலாம். நிதி தேவைப்படும் ஒரு நாட்டிற்கான உதவியை கடனளிபவர் தடுபின் அதனை தடுப்பதற்காக இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கைக்கான நிதியுதவியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம், அதன் கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதி உத்தரவாதத்தை எதிர்பார்த்திருந்தது. இருப்பினும் 10 வருடங்களுக்கு கடன் …

  25. மசாஜ் நிலையத்தில் 22 வயதான அமெரிக்க யுவதி பாலியல் துஷ்பிரயோகம் – மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு! ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் ஊழியரினால் தனது 22 வயது மகள் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையின் சுற்றுலா பொலிஸ் பிரிவின் பணிப்பாளரிடம் அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் மூலம் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி கடந்த டிசெம்பர் மாதம் தனது பெற்றோருடன் இலங்கைக்கு வந்து ஹிக்கடுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், டிசம்பர் 26ஆம் திகதி தனது தாயுடன் ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் மையத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.