ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
வியாழன் 15-11-2007 18:22 மணி தமிழீழம் [தாயகன்] மகேஸ்வரனும் கட்சி தாவுவார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனும் மகிந்த அரசுடன் இணைந்துகொள்ள இரு;பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுடன், மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான குருநாகல் உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மஹ்றூப் ஆகியோரும் அரசுடன் இணைந்துகொள்வார்கள் என தகவல்கள் கசிந்துள்ளன. சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் மூவரும் இன்று சந்தித்து இரகசிய பேச்சு நடத்தியுள்ளனர். pathivu.com
-
- 11 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா உலங்குவானூர்திகள் தொடரணியில் வந்த உலங்குவானூர்தி ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மன்னாரில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பவர்கள்- ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள்- ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 992 views
-
-
வியாழன் 15-11-2007 14:45 மணி தமிழீழம் [தாயகன்] மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் இல்லை - பான்-கி-மூன் சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவில்லை என, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பான்-கி-மூனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மனித உரிமை மீறலைக் கட்டுப்படுத்தும் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை விசாரிக்கவென மகிந்த அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு உரிய முறையில் பூரணமாகச் செயலாற்றவில்லை எனவும், திருமலையில் சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் மனிதநேயப…
-
- 0 replies
- 951 views
-
-
மகிந்த அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை விதிக்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றுமாறுதான் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 793 views
-
-
சிறீலங்க வங்கிகளில் அதிக வட்டிக்காக வைப்பில் இடப்படும் பணங்கள் அரசினால் உள்ளக வங்கிக் கடன்களாக அரசினால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இது அரசின் யுத்த பொருளாதாரத்திற்கு அண்மை வருடங்களில் அதிகரித்த அளவில் பலம்சேர்த்து வருகிறது. மோட்டுச் சிங்கள்வங்கள் எண்டா உவங்கள் தான்
-
- 1 reply
- 2k views
-
-
மகிந்த ராஜபக்ச தனது அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடையச் செய்து மகிந்த ராஜபக்சவை கவிழ்த்துவிட வேண்டும் என்பதற்காக எதிரணியினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சிறிலங்காவின் அரசியலில் "தாவல்" விளையாட்டுகளும் "பேர"ங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 796 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு தாவ உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழில் மனிதப் பேரவலம் தலைவிரித்தாடுகிறது என்று யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் கைது வீரகேசரி இணையம் பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பேராதனை பொலிஸார் நேற்று கைது செய்தனர். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் றேந்று மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவரது உத்தரவின் பேரிலேயே இவர் இங்கு தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ அமைதிப் பேச்சுக் குழுத் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளை படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்து தமிழகத்தின் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய புரட்சிகர இளைஞர் முன்னணியின் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 969 views
-
-
வணக்கம், சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறப்படவேண்டிய ஈழத்தமிழரின் சமகாலப் பிரச்சனைகள் யாழ் இணையத்தில் கருத்துப்படங்களாக வெளிவந்துகொண்டு இருப்பது யாவரும் அறிந்ததே. இந்தக் கருத்துப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் பிரசுரிக்ககூடிய தரத்தை உடையனவாக காணப்படுகின்றன. எனவே, இவற்றின் முக்கியத்துவம் கருதி அண்மைக்காலங்களில் யாழில் வந்த கருத்துப்படங்களை தொகுத்து எமது தரப்பு நியாயங்களை சர்வதேசத்திற்கு கூறத்தக்கவகையில் ஒரு சிறிய காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. காணொளியை முழுத்திரையில் பார்க்க: http://www.youtube.com/watch?v=YFHZ8PfJzC8 கருத்துப்படங்கள் எண்ணக்கரு: யாழ் செய்திக்குழுமம் ஓவியம்: ஓவியர் மூனா. கருத்துப்படங்களை வரைய அருமையான எண்ணக்கருக்களை கொடுக்கும் யாழ் செய்திக்க…
-
- 10 replies
- 4k views
-
-
வன்னிக்குச் சென்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்து அவரை சிறையில் அடைக்கப் போவதாக கூறும் அரசு அவர் குறட்டைவிட்டுத் தூங்கும் மனிதரல்லர் என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் எம்.பி. தங்கேஸ்வரி தெரிவித்தார். வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டு சட்டப் பிரேரணையின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: தேங்காயும் பால்மாவும் சாதாரண மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களாகும். தற்போது இப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை மக்களை பெரும் துன்பத்தில் தள்ளியுள்ளது. பயங்கரவாதத்தை அழிக்கப் போவதாகக் கூறிவரும் அரசு தமிழ் மக்களை அழித்துதொழிக்கவே திட்டமிட்டுள்ளது. வன்னிக்குச் சென்று அங்கு பிரபாகரன…
-
- 0 replies
- 2.3k views
-
-
-1- பல்தேசி நிறுவனங்கள் நாடுகளிற்கு எதிரான புறக்கணிப்பு முயற்சிகள் பொதுவாகவே தாக்கத்தை உண்டு பண்ணுமா, அதன் மூலம் மாற்றங்களை உருவாக்க முடியுமா? ஜனநாயக உலகில் தனிமனிதரின் வாக்குரிமைக்கு அடுத்தாக அவர்களது நுகர்வு ஏற்படுத்தும் பொருளாதாரம் ஒரு பலமான ஆயுதமாக இருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் நுகர்வோரை மய்யப்படுத்திய முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தனிமனிதரின் தெரிவு என்பது மேலும் முக்கியத்துவமடைகிறது. தனிமனிதரின் வாக்குரிமை எவ்வாறு குறித்த கொள்கைகள் நிலைபாடுகள் நோக்கி குவிக்கப்படும் பொழுது ஒருமித்த வெகுஜன பலமாகி ஒரு நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறதோ அதேபோலவே ஒற்றுமையாக தமது நுகர்வுகளில் மேற்கொள்ளும் தெரிவுகளும் ஒருமித்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார பலமாக மா…
-
- 6 replies
- 2.5k views
-
-
மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள் இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து இராணுவத்தினரின் கவனத்திற்குக் கொண்டுவந்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 1 reply
- 2.3k views
-
-
புதன் 14-11-2007 23:01 மணி தமிழீழம் [தாயகன்] ஈரான் செல்லவுள்ள மகிந்த, வானூர்தி வாங்க கடன் கேட்பார் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இம்மாத இறுதியில் ஈரானிற்குச் செல்லவிருப்பதுடன், அவரது இந்தப் பயணத்தின்போது ஈரானிடம் கடனுதவி கேட்பார் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு பெறப்படும் றிதியின்மூலம் அண்மையில் அநுராதபுரத்தில் விடுதலைப் புலிகளால் தாக்கியழழிக்கப்பட்ட வானூர்;திகளுக்குப் பதலீடான வானூர்திகளைக் கொள்வனவு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், சிறீலங்காவிற்குத் தேவையான எரிபொருட்களையும் கடன்திட்ட அடிப்படையில் தருமாறு கோரிக்கை முன்வைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ஸவின் பயணதிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கென அமைச்சர் மிலிந்த மொ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் "தமிழர் தன்னாட்சி அரசாங்கத்தை" அமைப்பதை அனுமதிக்கும் வகையில் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் திருத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று இலங்கை விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் கூனதிலகே கூறியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது விடுதலைப் புலிகள் வன்னிப் பகுதியில் மிகக் குறுகிய இடத்திற்குள் சுருங்கி விட்டனர். எனவே பிரபாகரனைப் பிடிப்பது கடினமான காரியமாக நாங்கள் கருதவில்லை. விடுதலைப் புலிகள் தலைவரின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் விமானப்படை வீரர்கள் பிரபாகரன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவர். மக்களும் விமானப்படைக்கு உதவ முன் வர வேண்டும். பிரபாகரன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். விமானப்படை உள்ளி…
-
- 14 replies
- 4.2k views
-
-
புதன் 14-11-2007 18:41 மணி தமிழீழம் [தாயகன்] அமெரிக்காவின் றாடர் கருவி: இந்தியா அச்சத்தில் - இந்தியப் பத்திரிகை அமெரிக்கா வழங்கியுள்ள றாடர் கருவி தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கரிசனை செலுத்தி வருவதாக, இந்தியாவிலிருந்து வெளிவரும் "ரைம்ஸ் நவ்" என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. வவுனியாவில் தற்பொழுது தளப்படுத்தப்பட்டுள்ள இந்த றாடர் கருவி மூலம் இந்தியாவின் தென்பகுதியிலுள்ள முக்கிய படைத்தளங்களை அவதானிக்க முடியும் என இந்திய படை நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. pathivu.com
-
- 4 replies
- 2.5k views
-
-
இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டை இன்று சூனியப் பிரதேசமாக காட்சியளிக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கொள்ளையர்களும் காடையர்களும் மட்டுமே உள்ளனர் என்று எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
புதன் 14-11-2007 16:27 மணி தமிழீழம் [தாயகன்] இவ்வருடம் இருபதாயிரம் புதிய படை உறுப்பினர்கள் - கோதபாய சிறீலங்காவின் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பில் இவ்வருடம் மட்டும் இருபதாயிரம் இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இளைஞர்கள் படைகளில் இணையும் வகையில் விளம்பர உதவிபுரிந்த அரச ஊடகங்களுக்கு கோத்தபாய நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, மன்னாரிலும், முகமாலையிலும் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் பல நூற்றுக்கணக்கான படையினர் களத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், சிறீலங்காப் படைக்கு மீண்டும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று முன்தினம் முதல் படையிலி…
-
- 1 reply
- 1.2k views
-
-
13.11.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....7701cbc8a1653ad
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசின் 2008 ஆம் ஆண்டிற்கான நிதி வரவுசெலவுத் திட்டம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பரபரப்பான சூழலில், மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலரிடமும் தோன்றியுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டு உங்கள் இலங்கை அரசியல் தொடர்பிலான அறிவை பரீட்சித்துப்பாருங்கள். இதில் வெற்றிபெறும் நபருக்கு இலங்கையில் விரைவில் வெளியிடப்படவுள்ள 5000 ருபாய் நாணயத்தாள் ஒன்றின் பிரதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். (வெளியிடப்பட்ட பின்பு) இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள சிறு உதவிக் குறிப்புகள்: பொதுசன ஜக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க் கட்சிக்கு வரிசைக்குக் கட்சி தாவல் ஆளும் பொதுசன ஐக்கி…
-
- 17 replies
- 1.8k views
-