ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பம்! “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியில், பல்கலைகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் , சிவில் சமூக பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2023/1323072
-
- 0 replies
- 272 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவதுதிருத்தத்திற்கு அமைய …
-
- 3 replies
- 434 views
-
-
ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் மீண்டும் ஆஷு மாரசிங்க By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 12:16 PM நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரந்தனாவின் வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஆதர்ஷா கரந்…
-
- 3 replies
- 656 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவதுதிருத்தத்திற்கு அமைய …
-
- 2 replies
- 675 views
-
-
இரவு 7 மணிக்கு பின் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு By NANTHINI 22 JAN, 2023 | 04:03 PM (இராஜதுரை ஹஷான்) கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்கு பின்னர் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது. பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக துண்டிப்பை அமுல்படுத்தாமல் இருப்பது சாத்தியமற்றது. குறித்த காலப்பகுதியில் மின்விநியோகத்தை துண்டிக்காமல் இருக்க வேண்டுமாயின், மேலதிகமாக 4 பில்லியன் ரூபாய் மின்னுற்பத்திக்காக செலவிட நேரிடும் என இலங்கை ம…
-
- 14 replies
- 616 views
- 1 follower
-
-
சனிக்கிழமை வரை மழை தொடரும் ! காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளதாம் ! By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 10:49 AM யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திருகோணமலையின் சீனன்குடாவுக்கும் உப்புவெளிக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வெளிவளையம் நிலப் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுவதும…
-
- 5 replies
- 717 views
- 1 follower
-
-
வசந்த முதலிகே நீதிமன்றத்தால் விடுதலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிமன்றம், அவரை விளக்க மறியலில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட…
-
- 1 reply
- 515 views
-
-
உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை – வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்சங்க செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.”தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படாதநிலையில் 37 கோடி ரூபாய்களை செலவளித்து சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. எமக்கான சுதந்திரம் 75 வருடங்களாக கிடைக்கவில்லை. எமக்கான உரிமைகள் கிடைக்காத நிலையில் இந்த சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை. வவுனியா மாவட்ட வலிந்துக…
-
- 0 replies
- 218 views
-
-
( எம்.நியூட்டன்) கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார் அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் புதிய அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக இம் மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு …
-
- 8 replies
- 968 views
-
-
அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரியாக சவேந்திர சில்வா சாதனை ! இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார். 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில், முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா (விஎஸ்வி) விருதை வழங்கினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கௌரவமான நிகழ்வின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தை…
-
- 2 replies
- 337 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி… ஈஸ்டர் தாக்குதலுக்கும் மன்னிப்பு கோரினார் !!! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் துயரச் சம்பவம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதி பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ரணில் வ…
-
- 19 replies
- 720 views
- 1 follower
-
-
க. அகரன் கொள்கை என்ற பெயரில் இந்தியாவுக்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளுக்கு இடையேயான போட்டி என்று தெரிவித்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரெலோ புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியன இந்தியாவின் முகவர்கள் என்றும் விமர்சித்தார். அனைவராலும் இன்று பேசப்படும் 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற ஓர் கட்டமைப்பு. ஒற்றையாட்சி என்பது சிங்கள பௌத்த ஆட்சி. வேறு எவருக்கும் அங்கு அதிகாரம் இல்லை. அதனாலேயே தமிழ் பெருந்தலைவர்கள் நீண்டகாலமாக இதனை நிராகரித்து வந்திருக்கின்றார்கள். விடுதலைபுலிகள் கூட அதனை ஏற்றுகொள்ளவில்லை என்றார். வவுனியாவுக்கு இன்று (02) விஜயம்செய்த அவர் தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் கலந்துகொண்டுவிட்டு கருத்து …
-
- 3 replies
- 725 views
-
-
(எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பின்னணியில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையில் நேற்று (ஜன. 31) செவ்வாய்கிழமை டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத…
-
- 5 replies
- 910 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென வலியுறுத்தல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமாறுகால நீதி குறித்து கலந்துரையாடலின் போது, பபயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் வலியுறுத்தின. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத் தொடருக்கு இணையாக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்…
-
- 2 replies
- 403 views
-
-
அரச செலவுகளை 6 வீதத்தால் குறைப்பதற்கான சுற்று நிரூபத்தை வெளியிட்டது நிதி அமைச்சு By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 03:27 PM (எம்.மனோசித்ரா) வரவு - செலவு திட்டத்தில் 2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள செலவுகளில் 6 வீதத்தை குறைக்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் திட்டமிடப்பட்டுள்ள அரசின் உத்தேச வருமானத்தை திரட்டுதல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலையில் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை குறைத்துக்கொள்ளும் நோக்கில், மீண்டெழும் செலவை 6 வீதத்தால் இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
முத்தையன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு ! தாழ்நில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை! By VISHNU 02 FEB, 2023 | 12:26 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்துக்குள் முத்தையன்கட்டு நீரேந்துப் பகுதியில் 116 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்ற நிலையில் அதிக நீர்வரத்து காரணமாக 24'00" கொள்ளளவுள்ள முத்தையன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23'06" ஆல் உயர்ந்துள்ள நிலையில் நான்கு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2 வான்கதவுகள் 09" உம் 2 வான்கதவுகள் 1'3" உம் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு …
-
- 1 reply
- 660 views
- 1 follower
-
-
நாளை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது! By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 02:30 PM நாளை 3 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் வழங்கிய உறுதிமொழியை மீறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உ…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
மன்னார் காற்றாலை மின் நிலையக் கோபுரம் இடிந்து விழுந்ததில் கிரேன் சாரதிக்கு காயம் மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட நறுவில்லிக்குளம் கடற்கரைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வந்த காற்றாலை மின் கோபுரத்தின் ஒரு பகுதி கிரேன் மீது விழுந்ததில் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நறுவிலிக்குளம் கடற்கரைக்கு அருகில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலை மின் நிலையத்துக்குச் சொந்தமான 6 கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஒரு கோபுரத்தின் ஒரு பகுதியை கிரேன் மூலம் தூக்கும் போது காற்றாலை மின் கோபுரத்தின் ஒரு பகுதி கிரேன் மீது இடிந்து விழுந்துள்ளது. இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை…
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
இலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும் 105 புற்றுநோயாளிகளில் 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தி மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 50 சதவீதம் பேர் இறப்பு இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“2020 ஆம் ஆண்டில் மொத்தம் 38,229 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 16,691 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதுடன் ஆண்களில் இறப்பு விகிதம் அதிகமாக காணப்படுகின்றது. 20…
-
- 1 reply
- 670 views
-
-
டென்மார்க்கிலுள்ள ஒருவரால் பணம் அனுப்பி யாழில் வன்முறை : முக்கிய சந்தேக நபர் கைது By Digital Desk 5 02 Feb, 2023 | 10:46 AM யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்க முரண்பாடு ஒன்று காரணமாக டென்மார்க்கில் உள்ள ஒருவர் பணம் அனுப்பி இந்த வன்முறையை வழி நடத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். …
-
- 0 replies
- 512 views
-
-
அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் எதனையும் ஜனாதிபதி அறியவில்லை - டலஸ் By T. SARANYA 01 FEB, 2023 | 06:44 PM (இராஜதுரை ஹஷான்) அரச நிதி சேமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்சானியா நாட்டின் பதில் ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹசனை சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் எதனையும் ஜனாதிபதி அறியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (பெப் 01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையி…
-
- 0 replies
- 534 views
- 1 follower
-
-
வலி. வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் நாளை விடுவிப்பு! யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளன. பல ஆண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகள் 2019 ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளைய தினம் பொது மக்களுக்கு சொந்தமான 108 ஏக்கர் காணிகள் இராணுவத்தினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி பத்திரங்கள் வழங்கி விடுவிக்கப்படவுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். …
-
- 0 replies
- 514 views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் – அலி சப்ரி பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை செ…
-
- 0 replies
- 526 views
-
-
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இக்கட்டான காலங்களில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை உறுதியளித்திருந்தார். பொருளாதார நெருக்கடி, இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் மற்றும் அனைத்…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் – விக்னேஸ்வரன் தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள பேரணியை வரவேற்றார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றதை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். தன்னைப் பொறுத்தவரை 1958 இல் சுதந்த…
-
- 1 reply
- 499 views
-