ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
மணலாற்றைப் பௌத்தமயமாக்க திரைமறைவில் தீவிர முயற்சி! முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களை சத்தம் சந்தடியில்லாமல் பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு திரைமறைவில் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழர்களின் பூர்வீகமான மணலாற்றின் கற்தூண்பகுதியை மகாப்பிட்டிய என்னும் பெயரிலும், வண்ணாமடு பகுதியை வண்ணாமடுவ என்னும் பெயரிலும், அக்கரைவெளி பகுதியை அக்கரவெலிய என்னும் பெயரிலும், மணற்கேணிப் பகுதியையும் அதேபெயரிலும் பௌத்த பிரதேசமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு தமி…
-
- 0 replies
- 467 views
-
-
சங்கிலியன் மந்திரிமனையின் மீளுருவாக்கப் பணிகள் இரு வாரங்களில் நிறைவடையும் - பேராசிரியர் புஷ்பரட்ணம் Published By: Digital Desk 5 21 Mar, 2023 | 11:09 AM சங்கிலியன் தோரண வாயில் வேலைகள் இரண்டு வார கால பகுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் மந்திரி மனை மீள் உருவாக்க செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான நிதியுதவிகளை மக்களிடம் கோருகிறோம் என தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் பரமு.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மந்திரிமனை வளாகத்தினுள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ,அது தொடர்பில் மக்கள் மத்திய…
-
- 0 replies
- 243 views
-
-
கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை !! இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத …
-
- 4 replies
- 902 views
-
-
மாத இறுதியில் இருந்து மாணவர்களுக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ – அமைச்சர் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தேசிய பாடசாலைகளிலும் 30 ஆம் திகதி முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். தரம் 6–9 மற்றும் 10–13 வகுப்புகளில் இருந்து அனைத்து பாடத்திட்டங்களையும் சர்வதேச நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறையில் புதிய இலக்கை அடைவதற்கு இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்ன…
-
- 0 replies
- 230 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா குற்றச்சாட்டு இலங்கையில் கடந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு விசாரணை செய்து அவர்களை தண்டிக்க அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த மே 9 அன்று கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நட…
-
- 0 replies
- 376 views
-
-
பொது மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை! நாட்டில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka மற்றும் OnmaxDT ஆகிய நிறுவனங்கள் வங்கிச் சட்டத்தின் 83C இன் விதிகளை மீறியுள்ளனவா என்பதைக் கண்டறிய இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை மேற்கொண்டது. நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பாக, சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள், நிறுவுனர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்க…
-
- 0 replies
- 421 views
-
-
பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் உயிர் மாய்ப்பு - யாழில் சம்பவம் Published By: T. SARANYA 20 MAR, 2023 | 03:27 PM மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு கொடுத்து ஏமாந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு கட்டுமாறு கூறியுள்ளார். மகனின் பணத்தினை பெற்றவர் காணி வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் , எதிர்பார்த்த காணி கிடைக்காமையால் , காணி வாங்குவதனை…
-
- 4 replies
- 913 views
- 1 follower
-
-
நீதியரசர் குழாமை பாராளுமன்றக்குழுவில் விசாரிப்பது நாட்டின் நீதித்துறையை மேலும் பாராதீனப்படுத்தும் - சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரிக்கை Published By: T. SARANYA 18 MAR, 2023 | 10:39 PM (நா.தனுஜா) உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்க மறுப்பதும், அதனை பாராளுமன்றக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதும் ஏற்கனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை ஆபத்தான நிலையிலுள்ள இலங்கைக்கு மிகமோசமானதொரு முன்மாதிரியாகவே அமையும் என்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. அதுமாத்திரமன்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதற்கான நிதி வழங்கப்படுவதை உறுதிசெய்யும்வகையில் உயர்நீதிமன்றத்…
-
- 2 replies
- 495 views
- 1 follower
-
-
தாம் பெறும் சம்பளத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் 41 இலட்சம் குடும்பங்கள் தாம் பெரும் வருமானத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது இலங்கையில் உள்ள 48 வீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்திற்கு உணவைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தைக் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இலங்கையில் 43 வீதமான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடும் பணத்தை குறைத்து அந்த பணத்தை உணவு…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் அரச உத்தியோகத்தர்களுக்கு அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டம் சமூக சீர்கேடுகளுக்கு பயன்படுகிறது Published By: VISHNU 20 MAR, 2023 | 05:34 PM கரைச்சி நிருபர் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பனிக்கன்குளம் கிராமத்தில் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு 2012இல் அரச காணியில் 54 காணித்துண்டுகள் வழங்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபா கடனும் வழங்கப்பட்டு அமைக்கப்பட்ட வீடுகளில் எவரும் குடியேறாத நிலையில் பாழடைந்து காணப்படுவதோடு, சமூக சீர்கேடுகளும் இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட அரச உத்தியோகத்தகர்களு…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
இலங்கையில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியவரை தேடி தமிழ்நாடு வந்த இளைஞர் - என்ன நடந்தது? படக்குறிப்பு, ஜெயக்குமார் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல நினைத்த பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டு தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கையைச் சேர்ந்தவரை கண்டுபிடிப்பதற்காக, பணத்தை பறிகொடுத்த இளைஞர்களில் ஒருவர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளார். தன்னை ஏமாற்றிய நபர் குறித்து அவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்…
-
- 1 reply
- 686 views
- 1 follower
-
-
மாவை – சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை தமிழரசு கட்சியிலிருந்து ஓரங்கட்ட நினைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாவட்ட நிர்வாகத் தெரிவை முடிக்கவேண்டும் என கூறப்படுகின்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னரே புதிய நிர்வாகம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அதேவேளை, கட்சியின் யாப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடையில் மத்திய கூட்டம் ஒன்றை நடத்தி அதைத் திருத்தி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கே தெரியாது மேலும் உள்ளுராட்சி வேட்பாளர் த…
-
- 1 reply
- 342 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட 21 பேரும் வவுனியா, கிளிநொச்சி மற்றும் பூசா முகாம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் …
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் – டக்ளஸ்! நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328052
-
- 1 reply
- 396 views
-
-
உள்ளுராட்சி தேர்தல்களை தாமதிப்பது பொருத்தமற்றது - மகிந்த தேசப்பிரிய Published By: Rajeeban 20 Mar, 2023 | 09:53 AM உள்ளுராட்சி தேர்தல்களை தாமதிப்பது பொருத்தமற்றது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய 25 ம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை உள்ளுராட்சி சபைகளின் காலம் முடிவடைவதால் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நிலை எவ்வாறானதாகயிருந்தாலும் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு அப்பால் தேர்தல்களை பிற்போடுவது உகந்த விடயமல்ல எனவும் மகிந…
-
- 0 replies
- 503 views
-
-
40 அரச நிறுவனங்களை மூட அரசாங்கம் தீர்மானம்! சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். …
-
- 0 replies
- 502 views
-
-
ரணிலை விரட்டும் ஆட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம் அந்துவன் "ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் - ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முகங…
-
- 1 reply
- 461 views
-
-
19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் – ஜனக வக்கும்புர! உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து அரச சொத்துக்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், அவற்றின் நிர்வாகம், மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொ…
-
- 3 replies
- 416 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்திலும் காற்று மாசு அதிகரித்துள்ளது யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்ட லத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. எனவே சிறுவர்கள்,முதியவர்கள் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ள வர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராயச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடானது யாழ்ப்பாணத்தில் 120 (ஏ. கியூ. ஐ), கொழும்பு – 142 குருநாகல் – 117, கண்டி – 103, கேகாலை – 106, புத்தளம் – 129, பதுளை – 109 என்று பதிவானதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதி கரித்தும் குறைந்தும் வருவதாக சுவிற்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காற்றின் தரம் குறி…
-
- 5 replies
- 835 views
- 1 follower
-
-
எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் – வஜிர எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சனத்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் எல்லை நிர்ணய நடவடிக்கை பாரிய அநீதியை இழைத்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328021
-
- 0 replies
- 388 views
-
-
இ.போ.ச வில் நீண்டதூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன் ஆசனப்பதிவு : இணையமும் தொலைபேசி இலக்கமும் அறிமுகம்! Published By: DIGITAL DESK 5 16 MAR, 2023 | 04:29 PM இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான நீண்ட தூர சேவை பஸ்களில் ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி நேற்று (15) அறிமுகப்படுத்தப்பட்டது. மாகும்புர போக்குவரத்து நிலையத்தில், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தலைமையில் இது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இணையம் திறந்து வைக்கப்பட்டது. இருக்கை முன்பதிவு தொடர்பான இணையதளமும் அங்கு திறக்கப்பட்டது. மேலும், மூன்று மொழிகளிலும் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் 1315 என்ற தொலைபேசி மூலம் இருக்கைகளை மு…
-
- 5 replies
- 386 views
- 1 follower
-
-
உர விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 36,000 மெற்றிக் தொன் உர விநியோகம் நாளை (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய உர இருப்பு இன்று (19) பிற்பகல் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, யாழ் பருவத்தில் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உரம் இருப்பு விநியோகிக்கப்பட உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/245391
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
வவுனியா குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு! Published By: NANTHINI 19 MAR, 2023 | 10:33 AM வவுனியாவில் உள்ள குளமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (19) மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் வான்கதவுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்நிலையில் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வருவதால் ஒருசில நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படாத நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
12,500 ஆசிரிய இடமாற்றங்கள் இரத்து செய்யப்படும்? கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் இடமாற்றச் சபையின் பரிந்துரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இந்த ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. போக்குவரத்துப் பிரச்சினைகள், அதிக செலவுகள் உள்ளிட்ட பல மனிதாபிமான பிரச்சினைகளின் அடிப்படையில் ஆசிரியர்களின் இடமாற்றத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் அல்லது …
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
சாக்குப்போக்கு கூறாமல் தேர்தலை உடன் நடத்துங்கள் – சம்பந்தன் வலியுறுத்து எவ்வித சாக்குப்போக்கையும் சொல்லாமல் உடனானடியாக தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சித் தேர்தலையே நடத்த இந்த அரசாங்கம் பின்னடிக்குமானால், மாகாணசபை, பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் நிலைமை என்னாகும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். மக்களின் வாக்குரிமையை தட்டி பறிக்க முடியாது என்பதனால் விரைந்து உள்ளூராட்சித் தேர்தலை அரசங்கம் நடத்திட வேண்டும…
-
- 6 replies
- 430 views
-