ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இனப்பிரச்சினைக்கான தீர்வை வரவேற்கும் கோட்டாபய – ரணில் சிறந்த தலைவர் எனவும் புகழாரம் அரசியல் தீர்வை காணும் நோக்குடன் தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள பேச்சை வரவேற்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேசி அரசியல் தீர்வை விரைந்து காணத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அது கைகூடவில்லை. தமிழ்க் கட்சிகளும் என் மீது நம்பிக்கை வைக்கவில்லை. பழையதைப் பேசுவது இப்போது உகந்ததல்ல. அனைவரும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.…
-
- 0 replies
- 329 views
-
-
பேச்சுக்களுக்கு இந்திய அனுசரணை, உலக நாடுகளின் மேற்பார்வை அவசியம்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் விடயம் ஜனாதிபதியின் இந்த பேச்சுவார்த்தை முயற்சி சம்பந்தமாகவே. எங்களைப் பொறுத்தமட்டில் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம். அதில் ராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்த…
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
16 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை துரிதமாக முன்னெடுக்க பரிந்துரை - நீதி அமைச்சர் By DIGITAL DESK 5 23 DEC, 2022 | 04:35 PM (இராஜதுரை ஹஷான்) பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள். 16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் வெள்ளி…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை உறுதி - அமைச்சர் விஜயதாஸ By DIGITAL DESK 5 23 DEC, 2022 | 04:38 PM (இராஜதுரை ஹஷான்) சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மொத்த எண்ணிக்கையில் 74 சதவீதமானோர் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையுடன் தொடர்புடையவர்கள். 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை உறுதி என நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
125 நவீன ரக பொலிஸ் ஜீப்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா By DIGITAL DESK 2 23 DEC, 2022 | 04:36 PM (எம்.மனோசித்ரா) இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்தியாவினால் 125 நவீன ரக பொலிஸ் ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு படைகளுக்கு தேவையான 500 வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக இவை கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் , பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன உள்ளிட்டோரிடம் குறித்த ஜீப் வாகனங்கள் வியாழக்கிழமை (டிச. 22) கையளிக்கப்பட்டன. …
-
- 5 replies
- 749 views
- 1 follower
-
-
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார். R Tamilmirror Online || வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம்
-
- 1 reply
- 252 views
-
-
இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 27 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் ஹங்கேரிக்குள் இரகசியமாக நுழைய முயன்ற டிரக்கொன்றை கைப்பற்றியுள்ளதாக ருமேனியாவின் எல்லை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். துணிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஏற்றப்பட்ட டிரக்குகளில் மறைந்திருந்தவாறு ஹங்கேரிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். நட்லாக் எல்லைபகுதியில் எல்லையை கடக்க முயன்ற டிரக்கை ருமேனிய அதிகாரிகள் சோதனையிட்டவேளை உள்ளே 16 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட டிரக் ஆடைகளை கொண்டு செல்கின்றது என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததுஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 16 வெளிநாட்டவர்கள் மறைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றிற்…
-
- 1 reply
- 219 views
-
-
பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொம்மைகள் கொண்ட பொதிகள் மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு 7 பொதிகளை சோதனையிட்டபோதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த போதைப்பொருட்களில் 4,673 கிராம் குஷ் மற்றும் 9,586 மாத்திரைகளும் அடங்குவதாக சுங்கத்தினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 496 views
-
-
(எம்.நியூட்டன்) வடக்கில் போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வட மாகாண விவசாய அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச கால்நடை வைத்தியர் எனும் பெயரில் போலியான நபர்கள் கால்நடைகளுக்கும் வீட்டுப் பிராணிகளுக்கும் சட்டவிரோதமான முறையில் சிகிச்சைகளை மேற்கொண்டு, பெருமளவு நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களால் மேற்கொள்ளப்படும் தவறான சிகிச்சைகளால் பெறுமதி மிக்க கால்நடைகள் அதிகளவில் இறந்துள்ளதாக அந்த மாவட்டங்களின் பண்ணையாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்…
-
- 4 replies
- 649 views
- 1 follower
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியில் காணப்பட்டபோது யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு உணவினை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்த இந்த திட்டம், மாணவர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பசியினை ஆற்றிச்செல்கின்றனர். இந்நிலையில் சமையலறையில் மரக்கறி வெட்டுவதில் இருந்து மாணவர்களுக்கு உணவ…
-
- 10 replies
- 804 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி தீர்வு வழங்க எதிர்த்தவர் தற்போதைய ஜனாதிபதி! கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தார். ஆனால் தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா தமிழ் மக்களின் அரசியர் தீர்வுக்கு ஆதரவு வழங்ககும் என்றதை வரவேற்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூச்சு என்னும் தொனிப் பொருளில் நேற்று (22) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா 39 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி…
-
- 1 reply
- 239 views
-
-
நாங்கள் மூச்சை வழங்குவது - மூச்சை திணறடிக்கும் தரப்புக்கு வேடிக்கை! தான் மக்களுக்கு மூச்சுவிட உதவும் போது மக்களது மூச்சைத் திணறடிக்கும் கும்பல்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், இவற்றால் தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும்,சம்பிரதாய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்திலிருந்து விடுபட்டு நாட்டிற்கு பெறுமதி சேர்க்கும் விடயத்தில் எந்த வித பின்வாங்கலுமின்றி நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பாடசாலைகளுக்கு பஸ் வழங்கும் போது சிலர் சிரிப்பதாகவும்,பாடசாலைகளுக்கு கணனி ஆய்வு கூடம் வழங்கினால் சிலர் சிரிப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்நாட்டின் மருத்துவமனை கட்டமைப்புக்கு மூச்சு வேலைத்திட்டத்தின் மூலம் உதவும்போது கூட சிலர் சிர…
-
- 1 reply
- 233 views
-
-
கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல – சி.விக்கு அறிவித்தார் ரணில்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அதில், அரசாங்கத் தரப்பில், பிரதமர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன், சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக, அடு…
-
- 5 replies
- 334 views
- 1 follower
-
-
நாட்டில் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகளுக்கு தட்டுப்பாடு! மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக 150 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் ஆய்வக பொருட்கள் தற்போது கையிர…
-
- 2 replies
- 254 views
-
-
தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் – நாலக கொடஹேவா உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலை பிற்போட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடைமுறை சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலை பிற்போட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள…
-
- 1 reply
- 145 views
-
-
சாரதிகளை கண்காணிக்க அதிநவீன உபகரணம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் க…
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொள்ள தென் கொரிய இடர் உதவிகள் நிதியத்தின் தலைவர் நேற்று சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு சென்றுள்ளார். ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் 30 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக தென் கொரிய இடர் உதவி நிதியத்தின் தலைவர் சூ சோ லீ, ராஜாங்க அமைச்சர் உட்பட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது. தாமதம் என்பது வெட்பட வேண்டிய விடயம் இந்த கூட்டம் 30 நிமிடங்கள் தாமதமானமை குறித்து வெட்கப்பட வேண்டும் எனவும் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இதனை விட மிக பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும் எனவும் சூ…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும் சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை மீண்டும் பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருந்த நிலையில் குறித்த பேச்சு இடம்பெற்றுள்ளது. அரசு தரப்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் ந…
-
- 3 replies
- 856 views
-
-
குடிவரவுத் திணைக்களத்தின் 2021 அறிக்கையின்படி, 912 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக இலங்கையில் அகதிகளாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். அவர்களின் எண்ணிக்கை 709 ஆகும். மேலும், 113 ஆப்கானிஸ்தான் பிரஜைகள், 24 ஈரானிய பிரஜைகள், 6 பாலஸ்தீனியர்கள், 4 சூடான் பிரஜைகள், 15 யேமன் பிரஜைகள், 35 மியான்மர் பிரஜைகள் மற்றும் பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த தலா ஒருவர் என அகதிகளாக இந்நாட்டில் தங்கியிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. அகதிகள் விவகாரப் பிரிவின் மேற்பார்வையிலேயே இந்தக் குழு இலங்கையில் தங்கியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 709 பேர் இலங்கையில் அகதிகளாக தஞ்சம்! | Virakesari.…
-
- 12 replies
- 597 views
-
-
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்மாச்சி என்ற பாரம்பரிய உணவகத்தை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை விவசாய பணிப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளி மாவட்டங்களிலிருந்து மன்னார் பகுதிக்கு வருவோருக்காகவும் மன்னார் மாவட்ட மக்கள் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழவும், 2018ஆம் ஆண்டு முருங்கன் பிரதான வீதியில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் விவசாய திணைக்களத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த உணவகம் திறக்கப்பட்டமையால் பெண்கள் தலைமைத்துவம் கொண்டவர்களும் வறுமை கோட்டில் வாழ்ந்த குடும்ப பெண்களும் வருமானத்தைப் பெற்று வந்தனர். அத்துடன் குறித்த உணவகத்தில், குறைந்த விலையில் பார…
-
- 0 replies
- 736 views
-
-
(இராஜதுரை ஹஷான்) நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல அரச நிறுவனங்களையும் ஒருமுகப்படுத்தி தயாரிக்கப்படும் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பான அதிகாரிகளிடம் குறிப்பிட்டார். பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதி பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்து மக்களுக்கு தேவையான காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஒருசில அரச சேவையாளர்கள் உக்ரைன் -ரஷ்யா போன்று செயற்படுகிறார்கள்.மக்களுக்கான சேவையை இழுபறி நிலையில் முன்னெடு…
-
- 0 replies
- 165 views
-
-
26 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினம் ! By VISHNU 22 DEC, 2022 | 12:11 PM டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. 25 ஆம் திகதி நத்தார் பண்டிகை இம்முறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகின்றமையால் மறுநாள் திங்கட்கிழமை விசேட அரசவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/143833
-
- 0 replies
- 527 views
- 1 follower
-
-
சஜித் பிரேமதாசவால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு! By DIGITAL DESK 2 22 DEC, 2022 | 03:34 PM திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக் (சுவாசம்)' வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொடர் பயணத்தின் 55ஆவது நிகழ்வில் பங்கேற்க இன்று வியாழக்கிழமை (டிச. 22) சஜித் பிரேமதாச திருகோணமலை மாவட்டத்துக்கு சென்…
-
- 0 replies
- 561 views
- 1 follower
-
-
தென் கொரிய தூதுக்குழு தலைவர் பிரதி அமைச்சருக்கு டோஸ் தென் கொரியாவில் இருந்து வந்து, பிரதி அமைச்சருடனான சந்திப்புக்காக காத்திருந்த நிலையில், அமைச்சரின் குழு அரை மணிநேர தாமதமாக வர, கடுப்பாகிய குழுவின் தலைவர், போட்டுத் தாக்கி உள்ளார். ஒரு அமைச்சர் தாமதமாக வந்து, நொண்டி சாட்டுகளை சொல்லிக் கொண்டு இருப்பது தவறு. முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு சந்திப்புக்கு, நேரத்துடன் செல்லவேண்டும் என்பதை பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இது போன்ற பழக்கங்கள் தான், இலங்கையின் முன்னோக்கி செல்வதை தடுக்கின்றது என்று பொரிந்து தள்ளி விட்டார். வாங்கிக் கட்டிய அமைச்சரின் அப்பாவி முகம் இந்தாளுக்கு தலைவர் சொல்லியதை, மொழிபெயர்த்து சிங்களத்தில் யாராவத…
-
- 3 replies
- 624 views
-
-
இலங்கை சீனா இந்தியாவின் கடன் உத்தரவாதங்களிற்காக காத்திருக்கின்றது - மத்திய வங்கி ஆளுநர் By Rajeeban 22 Dec, 2022 | 11:28 AM இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக இலங்கையின் மத்தியவங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். தசாப்த காலங்களில் இல்லாத வகையில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை செப்டம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின்2…
-
- 0 replies
- 403 views
-