Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை ! By VISHNU 12 DEC, 2022 | 08:00 PM (எம்.மனோசித்ரா) மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் பொதுமக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தள செய்திகள் போன்றவற்றின் ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்துமாறு கோரி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றனர…

  2. திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். 5 மீனவர்களுடன் பயணித்த 'ஹிம்சரா' பல நாள் மீன்பிடி இழுவை படகு சீரற்ற காலநிலையை தொடர்ந்து சங்கமன் கந்த முனையிலிருந்து 46 கடல் மைல் தொலைவில் படகு கவிழ்ந்தது. மேற்படி விடயத்தை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக தகவலை உறுதிப்படுத்திய பின்னர் மீனவர்களை மீட்பதற்காக தென்கிழக்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ் எல் என் எஸ் ரணரிசியை கடற்படையினர் அனுப்பியுள்ளனர். அனர்த்தம் பற்…

  3. (எம்.மனோசித்ரா) இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பட்ட வளி மாசடைவின் தாக்கம் கடந்த சில தினங்களாக இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (12) திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, ஞாயிற்றுக்கிழமையுடன் ஒப்பிடும் போது சில மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை பாரியளவில் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் , சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவோர் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் , மேலும் ஓரிரு நாட்களுக்கு இந்நிலைமை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமைய காற்று தரக்குறியீடான…

  4. தேர்தல்களில் கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட ஆராய்வு! தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (11) வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றது. அதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் மத்திய கு…

  5. இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டைப்பெற்று இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே பேச்சுவார்த்தையின் நோக்கம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:10 AM இந்த இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய தேவை ஒன்று இருப்பதால் நாங்கள் எங்களுடைய முக்கியத்துவத்தை இந்த சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் என்ற வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்…

  6. ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருந்தால் இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இணங்க வேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன் By DIGITAL DESK 5 12 DEC, 2022 | 10:07 AM ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஒற்றை ஆ…

  7. யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்! யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்படும் விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும். இதனையடுத்து மீண்டும் எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும். இதற்கமைய, சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதேவேளை 2019 ஒக்டோபர் மாதம் பலாலி விமான நிலையம் நல்லாட்சி அரசாங்கத்தினால் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1315030

  8. தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது – இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி விலக்கி, வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சம்பந்தனுடன் பேசுவதற்கு மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் அடங்கிய 4…

  9. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான எந்தவொரு சொற்பதமும் ஜனாதிபதியின் அழைப்பில் இல்லை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான எந்தவொரு சொற்பதமும் ஜனாதிபதியின் அழைப்பில் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சிக்குள் தீர்வு எந்தவகையும் சாத்தியமில்லாத நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு மக்களை ஏமாற்ற தாம் விரும்பவில்லை என்றும் ஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சிக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கான அரசியல் அங்கீகாரத்தினை தேட முனையும் பேச்சுக்களில் பங்கேற்று வரலாற்று தவறிழைக்க தாம் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும…

  10. “ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது” ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது என்றும் அதுவே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத ஜனாதிபதி துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயின…

  11. காத்தான்குடியில் ஆசிரியர் கடத்தல் பிரதான சந்தேக நபர் கைது ! மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜ்வத் ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார். பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 27 வயதுடைய குறித்த சந்தேக நபர் ஈரான் சிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாடகைக்குப் பெறப்பட்ட வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். கடந்த 6ம்திகதி மாலை முதல் குறித்த ஆசிரியர் காணாமல் போன சம்பவம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காத்தா…

  12. ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம் - ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் 11 DEC, 2022 | 08:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்க்ததில் ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம். குறுகிய காலத்துக்குள் மக்கள் பலத்துடன் வளர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க இடமளிக்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது கட்சி சம்மேளனம் கொழும்பு - கெம்பல் மைதானத்தில் இன்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து…

  13. பொருளாதார நெருக்கடியால் நாட்டில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளின் பெறுமதி எவ்வளவு தெரியுமா ? ஆய்வில் வெளியான தகவல் By VISHNU 11 DEC, 2022 | 02:22 PM (எம்.மனோசித்ரா) கணக்கெடுப்பொன்றின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக 200 பில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. உரிமம் பெற்ற 13 வணிக வங்கிகள் மற்றும் 10 அடகு நிலையங்கள…

  14. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை ஆட்சியாளர்களுக்கு எதிராகவேதான் போராடுகின்றோம் – சாணக்கியன் இலங்கை நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும் சரி உங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை தினத்தையிட்டு கலந்து கொண்ட பேரணியல் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் “பல மனித உரிமைகளுக்கு பேர் போன நாடுதான் இலங்கை 1948 ம் ஆண்டில் இருந்து மனித உரிமை மீறல் பெருமளவு நடந்தது பெரும்பான்மை மக…

  15. பாடசாலையில் போதைப்பொருள் : ஆயுர்வேத வைத்தியர் கைது By NANTHINI 11 DEC, 2022 | 12:17 PM மல்வத்துஹிரிபிட்டிய, புத்பிட்டிய பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலையில் போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் (68 வயது) 5,500 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கம்பஹா குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான ஆயுர்வேத வைத்தியர் மருந்தகத்தை நடத்தி வந்துள்ளார். கடந்…

  16. செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!! கூகுள் தேடல் மென்பொருளில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவின்படி இரண்டாவது இடத்தை வியட்நாமும், மூன்றாவது இடத்தை பங்களாதேஷும் பெற்றுள்ளன. இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே செக்ஸ் என்ற வார்த்தை அதிகமாக கூகுள் மென்பொருளில் தேடப்பட்டுள்ளதாக குறித்த தரவுகள் காட்டுகின்றன. இதேவேளை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்கள் பெற்றுள்ளன. https://athavannews.com/2022/1314970

  17. யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்! போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போராளிகள், சட்டத்தரணி தவராசா மற்றும் சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டிந்தனர். https://athavannews.com/2022/1314985

  18. குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம்-மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும் ,பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதால் இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார். இதேவேளை இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, மக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளாரா? கல்வியில் முதன்மை பெற்றுள்ளாரா…

  19. மூன்று நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் யாழுக்கு விஜயம்! தாய்லாந்து , இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு இவர்கள் விஜயம் செய்தனர். இதன்போது சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்தையும் பார்வையிட்டனர். அங்கு நெசவுப் பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினை பார்வையிட்டதுடன், பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டனர். மேலும் குறித்த தூதுவர் குழு நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, யாழ் கோட்டைக்கும் விஜயமொன்றினையும் மேற்கொண்டிருந்தனர். https://athavannews.com/2…

  20. மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்ல தடை ! மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீரற்ற காலநிலை காரணமாக விலங்குகள் திடீரென மரணிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே பொது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1314933

  21. மாவை தலைமையில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ! தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ள நிலையில், அதில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதில் கரிசனை கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, கடந்த மத்திய குழு கூட்டத்தில் இம்மாதம் 18ஆம் திகதி திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது. அத்தினத்தில் மாநாடு தாமதமடைவதற்கான …

  22. கொழும்பு மற்றும் யாழிலும் காற்று மாசுபாடு ! இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09 மணியளவில் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்புகள் மேலும் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது. அதன்படி, கண்டி 157, யாழ்ப்பாணம் 153,தம்புள்ளை 119, இரத்தினபுரி 112, அம்பலாந்தோட்டை 105, கொழும்பு 103, நீர்கொழும்பு 97 ஆக பதிவாகியிருந்தன. 100 – 150 ற்குள் பதிவாகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. https://athavannews.com/2022/1314959

  23. வவுனியாவில் ஆர்ப்பாட்டம் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து கேள்வி ? By NANTHINI 10 DEC, 2022 | 05:43 PM வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று சனிக்கிழமை (டிச. 10) காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது. இப்போராட்டமானது பஜார் வீதியூடாக ஹோரவப்போத்தானை வீதி வழியே சென்று, ஏ9 வீதியூடாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை வந்தடைந்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 'மனித உரிமை மீறப்பட்ட நாட்டில் மனித உரிமை தினம் எதற்கு?', 'மனித உரிமை தினம் எமக்கு எதிர்ப்பு தினம்', 'மனித உரிமை மதிக…

  24. மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பெண்கள் ஆர்ப்பாட்டம் By DIGITAL DESK 5 10 DEC, 2022 | 05:45 PM சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு 'விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்' எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்பு போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு 2023 ம் ஆண்டு முன்மொழியப்பட்ட தேசிய பாதீட்டில் விசேட தேவையுள்ள நபர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாகொடுப்பனவை குறைப்தாக எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறும். …

  25. கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சீன அரசு சோலார் விளக்குகளை வழங்கியது By NANTHINI 10 DEC, 2022 | 05:45 PM கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு சூரிய மின் (Sollar power) விளக்குகள் வழங்கும் விசேட நிகழ்வு திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை (டிச. 😎 இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhehong Hong இந்த விளக்குகளை வழங்கியுள்ளார். சீனாவின் யுன்ஹான் மாகாண மக்கள் சங்கத்தினரின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 40 பாடசாலைகளுக்கு இந்த சூரிய மின் விளக்குகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.