ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
கடன் நெருக்கடிக்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது – பந்துல பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சுதந்திரத்தின் பின்னர் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை பெருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இவ்வாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை 7 – 8 சதவீதம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரத்தின் பின்னர் பொர…
-
- 1 reply
- 162 views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும் – வெள்ளாங்குளம் பகுதியில் போராட்டம் வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 86 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வெள்ளாங்குளம் பகுதியில் ஊர்வலத்தை முன்னெடுத்த மக்கள், பிரதான வீதிக்கு அருகில் நின்று தமது கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். குறித்த 100 நாள் செயல் முனைவின் 86 ஆம் நாள் போராட்டத்தில் வெள்ளாங்குளம் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தன…
-
- 0 replies
- 217 views
-
-
8 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு ! 24 OCT, 2022 | 05:23 PM அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னதாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் கைதிகள் தொடர்பான தகவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. க…
-
- 5 replies
- 532 views
- 1 follower
-
-
குருந்தூர் மலை - வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் சுமுகமான தீர்வு ? : டக்ளஸ் விஜயதாச விஜயம் 25 OCT, 2022 | 09:30 PM முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி மலை விவகாரங்களை சுமுகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் குறித்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (25.10.…
-
- 2 replies
- 271 views
- 1 follower
-
-
ஒரு வருடத்திற்குள் இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு! இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலை திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அ…
-
- 8 replies
- 475 views
-
-
இலங்கை வந்துள்ள அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் பொருளாதார மீட்சி குறித்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சு By DIGITAL DESK 5 25 OCT, 2022 | 08:25 PM (நா.தனுஜா) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத், நாட்டின் பொருளாதார மீட்சிக்கான வழிமுறைகள் குறித்துப் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (25) நாட்டை வந்தடைந்துள்ள அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத், இலங்கையி…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
மருந்துத் தட்டுப்பாட்டுக்கான காரணத்தை வெளியிட்டது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் By DIGITAL DESK 5 25 OCT, 2022 | 05:09 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்துத் தட்டுபாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 10 விடயங்கள் அடங்கிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு சரியான முறையில் பின்பற்றாமையே நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவக் காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதார அமைச்சின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. தேசிய வைத்தியசாலைகளில் அஸ்ப்ரீன் மருந்துகளுக்குக்கூட பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன், பிரதேச வைத்தியசாலைகளில் சேலைன் போத்தல்களிலிருந்து பரசிட்டமோ…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
பொங்கலுக்கு மேலும் தமிழ் கைதிகள் விடுதலை October 25, 2022 கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் காவல்துறை பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி காவல்துறை மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் மனோ கணேசன் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்த…
-
- 3 replies
- 375 views
-
-
யாழுக்கு விஜயம் மேற்கொள்கிறார் ஜனாதிபதி ரணிலின் மனைவி ! By VISHNU 25 OCT, 2022 | 08:37 PM நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். …
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
இந்திய இராணுவத்தால்.. கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று. யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில உயிரிழந்தவர்களுக்காக சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்திற்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையி…
-
- 7 replies
- 745 views
-
-
தமிழ் தேசியத்தை 13 வருடங்களாக கொன்று குவித்த பேய்களே கூட்டமைப்பினர்! காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கான தீர்வின்றி எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீபாவளி திருநாளான இன்று, தமது பிள்ளைகளும் உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார், “நமது சைவ மதத்தில், இது கிருஷ்ணர் மற்றும் தேவி சத்யபாமாவின் அரக்கன் நரகாசுரனை வென்றதாக கொண்டாடப்படுகிறது. தீயவர்களின் பட்டியலை …
-
- 4 replies
- 742 views
-
-
பொங்கலுக்கு தமிழ் கைதிகள் விடுதலை : மனோவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று (24) அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் …
-
- 1 reply
- 258 views
-
-
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் ராஜகன்ஸக்கள் போட்டியிடமாட்டார்கள்? October 25, 2022 இலங்கைில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஸக்கள் எவரும் போட்டியிட மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட ராஜபக்ஸக்கள் துணிவார்களா எனக் கூற முடியாது. அந்தளவுக்கு ராஜபக்ஸவினர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் அந்த கட்சியின் நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ…
-
- 0 replies
- 634 views
-
-
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இன்று – இலங்கை மக்களுக்கு தென்படும் நேரம் குறித்த அறிவிப்பு 2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காணமுடியுமென ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு பகுதி சூரிய கிரகணமாக தோன்றும் என அந்த மையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் முழுமையாகக் காணக்கூடிய இதனை 22 நிமிடங்களுக்குப் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரையான காலப்பகுதியில் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் எனவும் ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. சூரிய கிரகணத்தின் அதிகபட்ச கிரகணம் மாலை 5.49 மணிக்கு ஏற்பட்டு மாலை 6.20…
-
- 0 replies
- 176 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை! பாடசாலை தேசிய மல்யுத்தப் போட்டியில் முல்/வித்தியானந்தா கல்லூரி ,முல்/கலைமகள் வித்தியாலயம் முறையே தங்கம் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் முதல் முதலாக வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2022 கல்வியமைச்சின் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்படும் தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி 22,23,24 ஆகிய 3 நாட்கள் நேற்று மாலைவரை கம்பகாவில் நடைபெற்றது. இப் போட்டியில் வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் 12 பேர் பங்குகொண்டதுடன் 5 பேர் காலிறுதிவரை முன்னேறியதுடன் கலைமகள் வித்தியாலய 7 மாணவர்கள் பங்குகொண்டனர் ஒருவர் இறுதி…
-
- 0 replies
- 161 views
-
-
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்தின் வாழ்க்கையை சிதைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் – சிறீதரன் வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டினார். அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போதைவஸ்து தொடர்பாக பொலீஸ், இராணுவம்,கடற்படை ஆகிய மூன்று தரப்பிடமே நாணயக்கயிறு காணப்படுகிறது. போதை வஸ்தை கொண்டுவர அனுமதிப்பவர்களும் அதனை கொண்டு வருபவர்கள், விற்பவர்களை ஊக்குவிப்பவர்கள…
-
- 0 replies
- 253 views
-
-
இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் பதவி விலக வேண்டும் ! -தேர்தல்கள் ஆணைக்குழு.- நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர வேறு ஒரு பொறிமுறையின் மூலம் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள் ஆகியுள்ளார். எவ்வாறாயினும், இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தலின் போது வேட்புமனுக்களை ஏற்கும் போது இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்து…
-
- 3 replies
- 264 views
- 1 follower
-
-
“வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம்” – என்ற வேலை திட்டம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது- சுமந்திரன் போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில் அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் போதைப் பொருள் பாவனை காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளதோடு 140 பேர் வரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை கடந்த காலத்தில் “வன்முறை ஒழிப்போம் போதை பொ…
-
- 2 replies
- 487 views
-
-
2048 ல் இலங்கையை அபிவிருத்தியடைந்த அடைந்த நாடாக்குவேன் – ஜனாதிபதி ரணில் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களைச் செய்து அரசியல் அதிகாரத்தைப் பெற முயன்றவர்களை ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். 2048 இளைஞர் மேடையில் அபிவிருத்தியடைந்த நாட்டுக்கான பயணம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1306720
-
- 7 replies
- 743 views
-
-
யாழில் போதை மருந்து விநியோகிக்கும் வைத்தியர்கள் சிக்கினர்! யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயிர்கொல்லி போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான உயிர்கொல்லி போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர் அதிகளவு உயிர்கொல்லி போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளார். அவரது மருந்தகம், சுகாதார மருத்துவ அதிகாரியால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அரச மருத்துவமனைகளில் பணிபுரிய…
-
- 1 reply
- 484 views
-
-
ஆறு கடற்படையினருடன் படகு மாயம் - போதைப்பொருள் கடத்தல் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என தகவல் By RAJEEBAN 14 OCT, 2022 | 08:28 AM ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட படகில் இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளையே கடற்படையினர் காணாமல்போயுள்ளனர். அவர்கள் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள அதேவேள…
-
- 19 replies
- 958 views
- 1 follower
-
-
18 பில். டொலர் முதலீடு: ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட்? தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள பர்பேங்குக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் டிஸ்னிலேண்ட் பூங்கா ஒன்றை அமைப்…
-
- 3 replies
- 327 views
-
-
53 கஞ்சா செடிகளை வீட்டு தோட்டத்தில் வளர்த்த நபர் கைது By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 04:17 PM வீடு ஒன்றின் தோட்டத்தில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக இரகசிய தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் திங்கட்கிழமை (24) தீபாவளி தினத்தன்று தேடுதல் மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்தனர். இவ்வாறு கைதானவர் அன்னமலை பகுதியை சேர்ந்த 58 வயதான சந்தேக நபர் என்பதுடன் வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து குறித்த 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என பொலிஸா…
-
- 4 replies
- 447 views
- 1 follower
-
-
கணவன் - மனைவிக்கிடையில் கத்தி வெட்டு : இருவரும் வைத்தியசாலையில் By VISHNU 24 OCT, 2022 | 01:30 PM யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இருவரும் வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/138318
-
- 4 replies
- 440 views
- 1 follower
-
-
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைக்கவும் - கோப் குழு காணி பணிப்புரை By VISHNU 24 OCT, 2022 | 03:42 PM காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) காணி அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவிற்குப் பணிப்புரை விடுத்தது. இதற்கமைய ஆறு வாரங்களுக்குள் இது தொடர்பில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து கோப் குழுவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு குறித்த கணக்காய்வாளர் நாய…
-
- 0 replies
- 529 views
- 1 follower
-