Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிகரித்தது சாரதி அனுமதிப்பத்திர விநியோக கட்டணம் By T. SARANYA 11 OCT, 2022 | 09:36 AM சாரதி அனுமதிப்பத்திர விநியோகத்திற்கான கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணங்கள், சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தால், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை புதிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றுவதற்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால், அதிவிசேட வர்த்தமானி மூலம் சாதாரண மற்றும் ஒரே நாள் சேவையின் கீழ் உள்ள சாரதி அனும…

  2. சர்வதேசந நாணய நிதிய அதிகாரி கீதா கோபிநாத்தை சந்தித்தனர் இலங்கை குழுவினர் ! By T. SARANYA 11 OCT, 2022 | 10:03 AM இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வீரசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோர் சர்வதேசந நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை எதிர்நோக்கும் பாரிய சவால்கள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளதாக சர்வதேசந நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மற்ற…

  3. கோட்டாபயவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக விகாரை நிர்மாணம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அலஹெர – மினிபுரகம கிராமத்தில் வசிக்கும் ஒருவர் பத்து இலட்சம் ரூபாய் செலவில் இந்த புத்தர் ஆலயத்தை நிர்மாணித்து வழிபாடு செய்துள்ளார். அலஹெர – மினாபுர கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேன பண்டா (45) என்பவரே மினாபுர கரடகொல்ல, சமனல சிகிதி முன்பள்ளியில் அண்மையில் இந்த புத்தர் ஆலயத்தை நிர்மாணித்துள்ளார். கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் அவர் இந்த புத்தர் ஆலயத்தை நிர்மாணித்துள்ளார். பிரதேசத்தில் பல பொது இடங்களில…

  4. கோப்பாய் செல்வபுரம் பகுதியில் பிரபல போதை பொருள் வியாபாரி கைது! நீண்ட காலமாக யாழ். மாவட்டத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த குறித்த நபர் நீண்ட காலமாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய்பொலிசார் தெரிவிக்கின்றனர். அதேவேளை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காட்டு சந்திப் பகுதியில்1கிராம் 400மில்லிகிராம் ஹேரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப…

  5. சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 1287.6% வளர்ச்சி – மத்திய வங்கி அறிக்கை இலங்கைக்கு கடந்த செப்டெம்பர் மாதம் மாத்திரம் 29 ஆயிரத்து 802 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், 5 இலட்சத்து 26 ஆயிரத்து 232 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1287.6வீத வளர்ச்சியாகும் என …

  6. 7000 இராணுவ வீரர்களுக்கு பதவி நிலை உயர்வு By VISHNU 10 OCT, 2022 | 08:49 PM (எம்.வை.எம்.சியாம்) பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பரிந்துரைக்கமைய, இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இராணுவத்தின் (நிரந்தரம் மற்றும் தொண்டர் படை) 372 அதிகாரிகள் மற்றும் 7127 சிப்பாய்கள் பதவி நிலைகளில் அடுத்த தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அதற்கமைய மேஜர் ஜெனரல் தரத்திற்கு 5 பிரிகேடியர்களும்இ பிரிகேடியர் தரத்திற்கு 23 கேணல்களும், கேணல் தரத்திற்கு 28 லெப்டினன் கேணல்களும், லெப்டினன் கேணல் தரத்திற்கும் 35 மேஜர்களும், மேஜர் தரத்திற்கு 125 கெப்டன்கள…

  7. Home Business Notice Events Mor ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271 என்ற விமானத்தில் இன்று அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என கூறப்படுகிறது. ஜனாதிபதியின் அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு வருக…

  8. டொலர் இல்லை: 20 நாட்கள் கடலில் கச்சா எண்ணெய் கப்பல் 99,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் நங்கூரமிட்டுள்ளது. 7 மில்லியன் டொலர்கள் இல்லாத காரணத்தினால் இந்த கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெறவில்லை என்பதோடு தாமதக் கட்டணமும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அதன்படி நங்கூரமிட்ட ஒரு நாளுக்கு தாமதக் கட்டணமாக ஒன்றரை லட்சம் டொலர்கள் செலுத்த வேண்டும் என்றும் மொத்தமாக 110 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரல் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட யூரல் கச்சா எண்ணெய் அடங்கிய இந்தக் கப்பல் செப்டம்பர் 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தது. அதன…

  9. இளம் தலைவர்களை உருவாக்கப்போவதாக சந்திரிக்கா அம்மையார் தெரிவிப்பு ! கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபடாத படித்த இளம் தலைவர்களை உருவாக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டை ஆள முடியாத அளவுக்கு தமக்கு வயதாகிவிட்டது என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில் உருவாக்கப்போகும் இளம் தலைவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். https://athavannews.com/2022/1303903

    • 3 replies
    • 301 views
  10. சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் அதற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் - சாலிய பீரிஸ் By RAJEEBAN 10 OCT, 2022 | 11:20 AM சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் என்றோ ஒரு நாள் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றியமைக்கான விளைவுகளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் தங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறியவர்கள் தங்கள் தவறுகளிற்கான விலைகளை செலுத்தியதை நான் பார்த்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிலர் இழப்பீடுகளை செலுத்தினர்,தங…

  11. ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் விமான சேவை மீண்டும் ஆரம்பம் By NANTHINI 10 OCT, 2022 | 10:58 AM ரஷ்ய ஏரோஃப்ளொட் விமான சேவை நிறுவனமானது இலங்கைக்கான விமான சேவையை ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு முதலாவது வணிக விமானம் புறப்படவுள்ளது. அந்த விமானம் இன்று திங்கட்கிழமை (ஒக் 10) முற்பகல் 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் காலங்களில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் இலங்கைக்கான விமான சேவையை ஏரோஃப்ளொட் விமான நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதனால் ரஷ்ய சுற்றுலாப…

    • 0 replies
    • 609 views
  12. தாயையும் பிள்ளையையும் இழுத்துச்சென்ற பொலிஸார் - ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான நடவடிக்கை குறித்து மகளிர் அமைப்பு கண்டனம் By RAJEEBAN 10 OCT, 2022 | 10:54 AM அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான தொடரும் வன்முறைகளை பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. அரகலயவில் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்காக காலிமுகத்திடலில் 9 ம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் போது தாயையும் குழந்தையையும் பொலிஸார் பலவந்தமாக இழுத்துச்செல்வதையும்,தன்னை நோக்கி வந்த கலகமடக்கு பிரிவினரிடமிருந்து தந்தை தனது பிள்ளையுடன் பின்வாங்குவதையும் நாங்கள் அச்சத்துடன் பார்த்தோம் என பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. …

    • 0 replies
    • 290 views
  13. அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் தேயிலை!! இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேயிலை 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 557.38 ஆக இருந்த நிலையில், தற்போது சராசரியாக 1,599.49 ஆக விற்கப்பட்டதாக சிலோன் டீ நிறுவனம் கூறியுள்ளது. இதுவே கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கிலோகிராம் 1,508.21 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் செப்டெம்பர் மாதம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. 2021 ஆம் ஆண்டு 621.1 ஆக இருந்த குறைந்த ரக தேயிலை செப்டம்பர் மாதத்தில் ஒரு கிலோகிராம் 1,706க்கும் நடுத்தர ரக தேயிலை, 1,336.9 க்கு விற்பனை செய்…

    • 3 replies
    • 685 views
  14. FIFA உலகக் கிண்ண கலந்துகொள்ள வரும் இரசிகர்களை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் நடவடிக்கை ! டோஹாவில் நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கலந்துகொள்ள வரும் இரசிகர்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக நீர்கொழும்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நவம்பர் 20 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் மொத்தம் 64 போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு 32 அணிகள் மோதுகின்றன. டோஹாவில் குறைந்த அளவு தங்குமிட வசதிகள் இருப்பதாலும், மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் அதிக செலவுகள் காரணமாகவும் இரசிகர்களை கவர இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. டுபாய், அபுதாபி பிரபலமான சுற்றுலாத் தலங்களாக இருந்தாலும், இலங்கையில் குறைந்த விலையில் தங்கும் செலவுகள் உட்பட இதர செலவுகள் காரணமா…

  15. நான் எப்படி ஜனாதிபதியானேன் என்பது இரகசியமல்ல – ஜனாதிபதி ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு கிடைத்தது என்பது இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறுகிய அரசியல் கட்சிப் பிரிவினைகள் இன்றி ஜனரஞ்சகமாக செயற்பட எதிர்பார்க்கும் பின்னணியில், தேசிய பேரவை மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்றத்திற்குள், கட்சி அமைப்பிலிருந்து குழுக்கள் உருவாகியுள்ளன. ஆளு…

  16. பசிலின் தலையீடே 22 ஆவது திருத்தம் பிற்போடப்பட்டுள்ளமைக்கு முக்கிய காரணம் - ஐக்கிய மக்கள் சக்தி By VISHNU 09 OCT, 2022 | 01:32 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலையீட்டின் காரணமாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது. எனவே இந்த பாராளுமன்றத்திடமிருந்து இனியும் எந்த நன்மையான விடயங்களையும் எதிர்பார்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். ருவன்வெல்ல தொகுதியில் 08 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறி…

  17. தீவிரமடையும் தான்தோன்றித்தனம் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 03:31 PM என்.கண்ணன் பொருளாதார நெருக்கடியும், அரசியல் உறுதியின்மையும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்தினால் சட்டத்தின் அடிப்படையில் நாட்டை நிர்வகிக்கும் திறன் குறைந்து போயிருக்கிறது. தன்னிச்சைப்படி வர்த்தகர்களும், நிறுவனங்களும், தீர்மானங்களை எடுக்கின்ற நிலை தோன்றியிருக்கிறது. சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து ஒன்றைப் பயன்படுத்திய ஒருவர், தாம் பயன்படுத்திய இரு வேறு நிறுவனங்களின் மருந்துகளுக்கிடையில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார். இதனை அந்த மருத்துவ நிபுணரிடம்…

  18. கொழும்பில் வீடுகளில் பதிவுகளை முன்னெடுப்பதற்கான காரணத்தை விளக்குகிறார் பொலிஸ் பேச்சாளர் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 03:46 PM (எம்.வை.எம்.சியாம்) கொழும்பில் பல பகுதிகளில் வீடுகளில் மேலதிகமாக தங்கியிருக்கும் வெளிநபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகளே மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : கொழும்பில் பல பகுதிகளில் வீடுகளில் மேலதிகமாக தங்கியிருக்கும் வெளிநபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளில் வெளி நபர்கள் தங்கியிருந்தா…

  19. பதவியை துறந்தார் பரஞ்சோதி எம். றொசாந்த் தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஓர் இயலாமையான நிலையில் காணப்படுகின்றார் அதனால், கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் தான் விலகுவதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்துள்ளார். தனது விலகல் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கோப்பாய் தொகுதி சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் ஏற்கெனவே கட்சி தலைமை பீடத்திற்கு பல கடிதங்கள் எழுதி பல விடயங்கள் தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தேன். அதேவேளை கட்சியில…

  20. கோட்டா, மகிந்த, பசில் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மோசமானது புனர்வாழ்வு சட்டம் எனவே இந்த நாட்டிலே நாட்டு மக்களின் எதிர்காலத்தை அழித்த கோட்பாய ராஜபக்ஷ, தேசிய பொருளாதாரத்தை முழுமையாக அழித்த மகிந்த ராஜபக்ஷ, அவரின் சகோதரர் நிதி அமைச்சராக இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் சோர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை அழித்த அஜித் கப்ரால் ஆகியோர் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (08) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் தமிந்த தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி இடம்பெற்ற …

    • 2 replies
    • 650 views
  21. சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுக்கு தயாராகிறது இலங்கை By VISHNU 09 OCT, 2022 | 09:43 AM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வாரம் முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருக்கின்றது. அதன்படி நிதி இராஜாங்க அமைச்சரும், திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கி அதிகாரிகளும் அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 'சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதைத்தொடர்ந்து, நாம் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதை இலக்காகக்கொண்டு இருதரப்பு மற்று…

  22. யாழில் சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் திறந்து வைப்பு யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் இன்று (ஞாயிற்க்கிழமை) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய அகில இலங்கை சைவமா சபையினால் உருவாக்கப்பெற்ற விபுலானந்தரின் திருவுருவச்சிலையினை தென் கையிலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் திறந்து வைத்தனர். அதேபோல் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடைய திருவுருவ சிலையினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமிடியசினால் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் தெ…

  23. 'பட்டினி வலயங்களாக' பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் By VISHNU 09 OCT, 2022 | 10:43 AM (நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் 'பட்டினி வலயங்கள்' என உலக உணவுத்திட்டத்தினால் பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலை உயர்வடைந்துவருவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன்னதாகவே தொடர்ச்சியான காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள், பிராந்திய ரீதியான முரண்பாடுகள், கொரோனா வைரஸ…

    • 1 reply
    • 503 views
  24. கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும்,சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் மற்றும் ஆனந்தசங்கரி இடையில் சந்திப்பு பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும் , சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் இன்று (ஞாயிற்க்கிழமை) தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் குறித்த சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈழத்தமிழர் விடயம் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளும், இலங்கை அரசியல்வாதிகளும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பிளும் இருவரும் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1303714

    • 4 replies
    • 630 views
  25. எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சாணக்கியன்! எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு சட்டம் ஊடாக இந்த நாட்டை சீரழித்த மகிந்த ராஜபக்ஷ குடும்பம் உட்பட இந்த அரசாங்கத்துடன் இணைந்த அனைவரும் புனர்வாழ்வளிக்கப்படவேண்டியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதனைவிட மோசமான புனர்வாழ்வளித்தல் சட்டத்தினை கொண்டுவர அரசாங்கம் முற்படு…

    • 1 reply
    • 662 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.