ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
விவசாய அமைச்சரின் கருத்தினை, நிராகரித்தார்... வர்த்தக அமைச்சர்! வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு ஏற்றதல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிராகரித்துள்ளார். நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சகல அரிசிகளும் மனித பாவனைக்கு ஏற்றவை என அனைத்துப் பரிசோதனைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், விவசாய அமைச்சர் எந்த அடிப்படையில் அவ்வாறு அறிக்கை வெளியிட்டார் எனத் தெரியவில்லை எனவும், அவ்வாறான அறிக்கை தம்மிடம் இருந்தால் அதனை அவர் முன்வைக்க வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கால்நடை…
-
- 0 replies
- 261 views
-
-
யுத்த காலத்தில்... உயிரிழந்தவர்களை, அமைதியாக நினைவேந்த முடியும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன. யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு நேற்று(வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்தநிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த …
-
- 0 replies
- 169 views
-
-
சீதுவை விகாராதிபதியின் கொலை : டுபாய் செல்ல முயன்ற இளம் பிக்கு விமான நிலையத்தில் வைத்து கைது By T YUWARAJ 15 SEP, 2022 | 06:25 PM ( எம்.எப்.எம்.பஸீர்) சீதுவை பகுதியின் விகாரை ஒன்றிலிருந்து, விகாராதிபதி தேரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே விகாரையில் தங்கியிருந்த 19 வயதான பிக்கு ஒருவரே, டுபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 649 எனும் விமானத்தில் டுபாய் நோக்கி செல்ல, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த போது இன்று ( …
-
- 5 replies
- 680 views
- 1 follower
-
-
ரயிலுடன் கார் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு By T YUWARAJ 15 SEP, 2022 | 06:53 PM ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த, நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயிலுடன் யாகொட உப நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையால் பயணித்த கார் ரயிலுடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/135…
-
- 6 replies
- 465 views
- 1 follower
-
-
வெளிநாட்டு கஞ்சா செடி வளர்த்தவர் நுவரெலியாவில் கைது ! By T YUWARAJ 15 SEP, 2022 | 07:25 PM நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை விசேட அதிரடி படையினர் இன்று மாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர் . நுவரெலியா பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள தனிவீடு ஒன்றில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நுவரெலியா பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சா செடிகள் வளர்ப்பில் ஈடுபட்ட 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரால் வளர்க்கப்பட்ட 70 தொடக்கம் 77 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 283 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மந்துவில் படுகொலையின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் By VISHNU 15 SEP, 2022 | 05:16 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில் 1999 ஆம் ஆண்டு இன்று (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 23 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைவு நிகழ்வினை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை அமைதியான முறையில் உயிரிழந்தவர்களை நினைவிற் கொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட இடத்தில் பொதுச்சுடரினை …
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் By T YUWARAJ 15 SEP, 2022 | 05:26 PM இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இலங்கை அணியினரை பாராட்டும் முகமாக அணித் தலைவரை சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்திய உய…
-
- 2 replies
- 200 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிர்காலத்தில் இந்தியா நிதியுதவி வழங்காது - ரொய்ட்டர் By RAJEEBAN 15 SEP, 2022 | 04:50 PM சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுவதால் இலங்கைக்கு எதிர்காலத்தில் இந்தியா நிதி உதவி வழங்காது என விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருடம் 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ள நிலையில் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என விடயமறிந்த இரண்டு தரப்பினர் ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர். மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து மீண்டும் ஸ்திரமான நிலைக்கு திரும்பிக்…
-
- 5 replies
- 726 views
- 1 follower
-
-
பௌத்த – சிங்கள நாட்டில்... புலிப் பயங்கரவாதிகளை, நினைவேந்த... அனுமதி கிடையாது – சரத் வீரசேகர. பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்தநிலையிலேயே ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரச…
-
- 1 reply
- 289 views
-
-
டயனா கமகே... மன்னாரை, ஒரு கலாச்சார சீரழிவுக்கு தள்ளுவதற்கு... முற்படுகின்றார் – இரா.சாணக்கியன். நாங்கள் கல்வியினூடாக எங்களுடைய மாணவர்களை கட்டியெழுப்ப வேண்டும் என யோசிக்கும் பொழுது புதிதாக தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மன்னாரை ஒரு கலாச்சார சீரழிவுக்கு தள்ளுகின்ற வேலை திட்டத்தை ஆரம்பிக்க முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் தேசிய பாடசாலையினுடைய நூற்றாண்டு நிறைவின் “உள்ளம்” சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவ…
-
- 0 replies
- 193 views
-
-
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று ஆரம்பம்! தியாக தீபம் திலீபனின் நினை வேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது . தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறும் . ந…
-
- 2 replies
- 1.2k views
-
-
கசூரினா கடற்படை முகாமை காசு தந்தாலே அகற்றுவோம்! கசூரினா கடற்கரையின் சுற்றுலா மையத்தில் 4 பரப்பு விஸ்தீரணத்தில் உள்ள கடற்படை முகாமை அகற்றுவதற்குக் கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். அதற்காக கடற்படையினர் கோரிய பணம் இன்று பிரதேச சபையால் காசோலை மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கசூரினா கடற்கரை சுற்றுலா மையத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்ததால், அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. அத்துடன் சுற்றுலாவிகளும் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அங்கிருந்து கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்று…
-
- 2 replies
- 420 views
-
-
கடல்சார் வர்த்தகத்தின் மையமாக இலங்கையை மாற்றுவோம் - ஜனாதிபதி 15 Sep, 2022 | 10:50 AM இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 3 replies
- 377 views
-
-
ஜெனிவா விவகாரம் : 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா கடும் அழுத்தம் ; விமல் வீரவன்ச By T. Saranya 15 Sep, 2022 | 10:47 AM (இராஜதுரை ஹஷான்) மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி ஊடாக இலங்கைக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக இம்முறை புதிய பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதனை அரசாங்கம் மாத்திரமல்ல,சகல எதிர்க்கட்சிகளும் நிபந்தனையின்றிய வகையில் கண்டிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். மனித உரிம…
-
- 1 reply
- 275 views
-
-
மார்ச் 20 க்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்! உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த பெப்ரவரியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/மார்ச்-20-க்கு-முன்னர்-தேர்/
-
- 0 replies
- 489 views
-
-
பேராட்டக் காரர்களை... ஒடுக்கும் செயல்பாடுகளை, அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும்- ஜாட்சன் பிகிராடோ வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவது மற்றும் அவர்களின் அலுவலகங்களை உடைத்து சேதப்படுத்தும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார். வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோரியும் குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று காலை யாழ்ப்பாணத்தில் க…
-
- 0 replies
- 128 views
-
-
ஜனாதிபதியின்... வெளிநாட்டு பயணங்களின் பின்னர், புதிய அமைச்சரவை நியமனங்கள். ஜனாதிபதியின் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தங்களுக்கு மேலும் பத்து அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக 18 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தில் 38 இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள…
-
- 6 replies
- 619 views
-
-
"தமிழ் உணர்வாளர்" அமைப்பின் தலைவர், மோகன்... சாகும் வரையிலான உண்ணாவிரதம்! மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியருகே இந்த உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். காணி மாபியாக்களுக்கு சாதகமாக சட்டத்தினை காய்நகர்த்தும் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி,காணி மாபியாக்களின் கைக்கூலி ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி,ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி மீது …
-
- 0 replies
- 150 views
-
-
அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு வருவோரை இது பாதிப்பதாகவும் நாட்டில் இரவு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த அவர், மன்னாரை பொழுது போக்கு வலயமாக மாற்றலாம் என்றும் மேலும் சில சர்சை கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மன்னார் குறித்த அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
20 மாதங்களில் 10 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம் By T. SARANYA 14 SEP, 2022 | 04:58 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) கடந்த 20 மாதங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிக் கட்டுப்பாட்டாளருமான பியூமி பண்டார தெரிவித்தார். கடந்த வருடம் (2021) ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையிலான 20 மாத காலப் பகுதியில் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 992 பேர் புதிதாக கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 10 இலட்சத்து 50 ஆயிரத்து 24 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். …
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-
-
மஹிந்தவை கொல்ல திட்டம் தீட்டியமை : முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பகிர்வு பத்திரம் By VISHNU 14 SEP, 2022 | 01:32 PM ( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைச் செய்ய சதி செய்ததாக கூறி முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் முன்னிலையில் இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ள…
-
- 2 replies
- 253 views
- 1 follower
-
-
இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவிப்பு By T. SARANYA 14 SEP, 2022 | 03:04 PM மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் தலைவர் மசூட் அஹமட்டுடான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய மூன்று நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியன காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இ…
-
- 2 replies
- 255 views
- 1 follower
-
-
சிவில் அமைப்புகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் By T. SARANYA 14 SEP, 2022 | 04:22 PM இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்படுவதும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு செல்லுகின்ற வேளையில் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்புக்களும், ஊடகவியலாளார்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பிற்குள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. அதுமட்டுமன்றி சிவ…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு : அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி 14 SEP, 2022 | 03:50 PM இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) உள்ளிட்ட முதலீட்டாளர்கள் குழுவொன்று கலந்துகொ…
-
- 2 replies
- 277 views
- 1 follower
-
-
அழுதுபுலம்புவதை தவிர பாதிக்கப்பட்டவர்களிற்கு வேறு வழியில்லை- ஜெனீவாவில் சந்தியா By RAJEEBAN 14 SEP, 2022 | 04:15 PM இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து விலக்களிப்பதை மனித உரிமைகள் தொடர்பான அதன் உத்தியோகபூர்வ கொள்கையாக பின்பற்றுகின்றது என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வில் தெரிவித்துள்ளார். வறுமை மற்றும் தொடர்ச்சியாக பின்தொடரப்படுதல் துன்புறுத்தல்கள் மெதுவான மற்றும் பின்தங்கியசட்ட அமைப்பை கொண்ட நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் என்பது அதிகாரபூர்வமற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக காணப்படுகின்றது என சந்தியா எக்னலிகொட ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். அவ்வாறானஒர…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-