Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். இந்திய பாதுகாப்புக்கு ஆபத…

  2. சீனா, பாகிஸ்தான் போர்க்கப்பல்களுக்கு அனுமதித்தமை இராஜதந்திரத்துக்கு தோல்வி Posted on August 13, 2022 by தென்னவள் 11 0 இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கொடுத்தது இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வி எனவே இந்தியா விவகாரத்தில் இலங்கை ஒரு அனிசோரா கொள்கைகளை சரியாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து மேலதிகமான உதவிகளை பெறுவதற்கு வாய்ப்புக்கள் உருவாகும். என கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் ஈபி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற தலைவருமான இரா ,துரைரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகம…

    • 3 replies
    • 483 views
  3. தமிழ்ச் சமூகம் நிரூபிக்க வேண்டிய தருணம் இது! Saturday, August 13, 2022 - 6:00am http://www.thinakaran.lk/sites/default/files/styles/node-detail/public/news/2022/08/12/edito.tkn_.jpg?itok=BN2mnZmL கடந்த ஒன்பதாம் திகதி கொழும்புக்கு சனவெள்ளத்தைத் திரட்டி வந்து புதிய அரசை உலுக்கி எடுப்பதற்கான முயற்சி வெற்றி பெறாது என்பதற்கான சமிக்ஞைகள் ஏற்கனவே தென்பட்டிருந்த நிலையில், அந்த 'அரகலய' பிசுபிசுத்துப் போனதோடு, வெற்றியின் இலக்கமாகக் கருதப்பட்ட அதே ஒன்பதாம் திகதி காலிமுகத்திடல் போராட்டத்தின் முடிவுரையாகவும் அமைந்தது. போராட்டம் என்பது நீண்டு செல்லும் ஒன்றல்ல. ஓர் போராட்டத்தின் தேவைகளை …

    • 2 replies
    • 756 views
  4. செஞ்­சோ­லை படு­கொ­லை­யின்... 16 ஆம் ஆண்டு, நினைவு தினம் இன்று! 2006 ஆம் ஆண்டு முல்­லைத்­தீவு செஞ்­சோலை சிறு­வர் இல்­லத்­தின் மீதான விமானப்படை தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 16ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ஆட்டிகிள் படுகொலை செய்யப்பட்ட 61 மாண­வி­க­ளின் நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபியில் இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி தூவி அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1294668

  5. ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து... ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, அறிக்கை சமர்பிப்பு. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகின்றது. சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதோடு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளனர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர …

  6. பலம் வாய்ந்த நாடுகளுக்கு... இலங்கை, இரையாகி விட்டது – சஜித் தேசிய பாதுகாப்பு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் நிலவும் ஸ்திரமின்மை மற்றும் வங்குரோத்து நிலை காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு இலங்கை இரையாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1294627

  7. ஜெனீவாவை எதிர் கொள்ள... விசேட பொறிமுறையை, தயாரிக்கின்றது அரசாங்கம் – நீதி அமைச்சர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விசேட பொறிமுறையையொன்றை தயாரித்து வருகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 7ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணகத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிக்கையை சமர்பிக்கவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் …

  8. இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார். இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்…

  9. ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட…

    • 15 replies
    • 1.3k views
  10. ஜனாதிபதி ரணில் விங்கிரமசிங்க அவர்கள் கடந்த 03-08-2022 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரை மீதான விவாதத்தில் 12-08-2022 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றியிருந்தார். அவைத்தலைவர் அவர்களே, ஐனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் கூறப்பட்ட விடயங்களில் எங்களுக்கு மிகுந்த கரிசனைக்குரியனவற்றுக்குச் செல்கிறேன். அவரது உரையில் ஒரிடத்தில் வடக்கு – கிழக்கு தொடர்பாகக் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். அவரது உரையின் இறுதிப்பகுதியில் ஒரு பந்தியில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'தமிழ்ச் சமூகத்தினர் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசியற் தீர்வு காண்பதும் அவசியமாகிறது…

  11. கோண்டாவிலில்... சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது குறித்து, யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யோசனை! யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11 ஏக்கர் காணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே மாநகர முதல்வர் இதனை முன்வைத்தார். கோண்டாவிலில் உள்ள மாநகர சபையின் நீர் விநியோக கிணறு அமைந்துள்ள காணி சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ நன்கொடையாளர்களோ முன்வந்தால் அதற்கான அனுமதியை வழங்கலாமா இல்லைய…

  12. புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம். இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc

  13. சீனாவின், இராணுவக் கப்பலிற்கு... இலங்கை அரசாங்கம் அனுமதி. சீனாவின் யுவாங் வாங் 5 கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் குறித்த கப்பலை தடுப்பதற்கான... உரிய காரணங்களை இந்தியாவும் அமெரிக்காவும், முன்வைக்க தவறியுள்ளன. இதன் காரணமாக சீனாவின் யுவாங் வாங் 5 கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் விவகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு பூகோள அரசியல் தலையிடியாக மாறியுள்ள நிலையில் எதிர்வரும் 16 ம் திகதி கப்பல் துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது. குறித்த கப்பல் 11 ம் திகதி துறைமுகத்திற்குள் நுழைய திட்டமிடப்பட்டிருந்த போ…

  14. கோட்டா கோ கமயிலிருந்த... எஞ்சிய, கூடாரங்களும் அகற்றம்! கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் மற்றும் நிர்மாணங்கள் என்பன இன்றைய தினம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்தே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர். கொழும்பு, காலிமுகத்திடல் கோட்டா கோ கமயில் இருந்து வெளியேறுவதாக கடந்த 3 மாதங்களாக போராடி வந்த போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிப்படியாக அகற்றப்பட்டு வந்தன. எ…

    • 3 replies
    • 657 views
  15. வேறு நாடுகளுக்கு செல்லாமல்... தாய் நாட்டிற்கு வருமாறு, கோட்டாவிடம்.. மஹிந்த கோரிக்கை. விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளார். போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்ததை அடுத்து தாய்லாந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ளார். இருப்பினும் தாய்நாட்டுக்கு வருமாறு அவரது சகோதரர் விடுத்த கோரிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிக்க…

    • 8 replies
    • 457 views
  16. "இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள்" - 2000ஆம் நாள் போராட்டத்தில் உறவினர்கள் அதிர்ச்சித் தகவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KOGULAN இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டுப் போர் காரணமாக காணாமல் போனோரை கண்டறிந்து கொடுக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கிறது. வவுனியா - ஏ9 வீதியில் இந்த தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. அதேபோன்று, கிளிநொச்சியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதியும், ம…

  17. யது பாஸ்கரன் கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி ஒருவர் வேலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதுடன், கடையை திறக்க வைத்து 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் குறித்த நபர், வியாபார நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு வீடு சென்றுகொண்டிருந்த போது பன்னங்கண்டி பகுதியில் வைத்து வானில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு நீண்ட நேரம் வானில் வைத்து தாக்கியுள்ளனர். அதன் பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு அழைத்து சென்று கடையை திறக்குமாறு மிரட்டி அங்கிருந்து 10 பவுண் தங்க…

  18. 12 AUG, 2022 | 11:20 AM சீனாவினால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் யுத்தக் கப்பலான பி.என்.எஸ். தைமூர் ( PNS Taimur )இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளது. பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையிலேயே குறித்த கப்பல் இன்று காலை வந்தடைந்தள்ளது. சீனாவில் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த போர்க்கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண அடிப்படையில் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய …

  19. By T. SARANYA (எம்.எப்.எம்.பஸீர்) சர்வதேச பிடியாணை ( சிவப்பு அறிவித்தல்) பிறப்பிக்கப்பட்டிருந்த, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் தொடர்பிலான விஷேட நிபுணத்துவம் உடைய புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ராசநாயகம் தவனேசன், எனும் 48 வயதான குறித்த சந்தேக நபர், அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அபுதாபி சென்ற சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் தலைமையிலான குழுவினரால் நேற்று (11) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கொழும்பு மற்றும் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு …

  20. By RAJEEBAN சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சமீபத்தில் இந்தியா பற்றி தெரிவித்திருந்த கருத்துக்களில் உள்ள உள்ளாந்த விடயங்களை நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக வைத்து இலங்கை மீது சில நாடுகள் அழுத்தங்களை முற்றிலும் நியாயப்படுத்த முடியாத விடயம் என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்திருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது. அறிக்கையில் இந்தியா குறித்து தெரிவிக்கப்பட்டிருந்த உள்ளார்ந்த விடயங்களை நாங்கள் நிராகரிக்கின்றோம்.இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு அது தனது தீர்மானங்களை சுதந்திரமாக எடுக்கின்றது. இதுவரை இந்திய இலங்கை உறவுகளை பொறுத்த…

  21. By VISHNU 12 AUG, 2022 | 05:17 PM சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துமாறு தமிழ் அரசியல் தரப்பினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பல்வேறு முரற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இன்னும் சில தினங்களில் குறித்த விவகாரத்திற்கு தீர்வினை வழங்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பாக நாடாளுமன்றில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு த…

    • 4 replies
    • 387 views
  22. By T. SARANYA 12 AUG, 2022 | 05:27 PM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முகநூல் பதிவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு அநாவசியமான கைதுகளும் அச்சுறுத்தல்களும் கொழும்பில் இடம்பெற்று வருகின்றன. உடனடியாக இத்தகைய அநீதியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும் என மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பில் நடை…

  23. தமிழ் கூட்டமைப்பை... விரும்பாதவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியில்... இணையலாம். – ஆனந்தசங்கரி அழைப்பு. - தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் விரும்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ ஆனந்த சங்கரி தெரிவித்தார். நேற்று ( வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு குறைந்து கொண்டே செல்கின்றது. இதனை நான் கூறவில்லை அண்மை காலங்களில் இடம் பெற்ற தேர்தல…

    • 3 replies
    • 234 views
  24. தீர்வை வழங்குவதாக... வாக்கெடுப்பிற்கு முன்னர், ரணில் உறுதியளித்தார் என்கின்றார்.. விக்னேஸ்வரன். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணியை திரும்பப் பெறுவதற்கும் அவர் இணங்கியதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பிற்கு முன்னர் அவர் இந்த உறுதிமொழியை தனக்கு வழங்கியிருந்ததாக சி.வி.விக்னேஸ்வரன் தெ…

  25. காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளின்... தொடர் போராட்டத்திற்கு, இன்றுடன் 2000 நாட்கள்- கிளிநொச்சியில், மாபெரும் போராட்டமும் முன்னெடுப்பு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கவனயீர்ப்புப்போராட்டமானது பேரணியாகச்சென்று டிப்போ சந்தியில் நிறைவட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.