Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைத்திட்டம் தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பியஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்தை 26 செப்டம்பர் 2015 ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பதில் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஹர்ஸ டி சில்வாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவர் டேவிட் டாலிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை மீள அளிப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை உள்ளிட்ட சில காரணங்களினால் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்திருந்தது. நிபந்தனைகளுக்கு உ…

  2. ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் – திகதி அறிவிப்பு. ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு ஜனாதிபதி வேட்பாளர்களின் பங்கேற்புடன் இந்த விவாதத்தின் முதல் சுற்று எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும் என்றும், இந்த விவாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் சுமார் 12 வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் மார்ச் 12 இயக்கம் அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் நாள் விவாதத்தில் சஜித் பிரேமதாச,…

  3. மன்னார் - மதவாச்சி வீதியில் கிளைமோர்: நான்கு படையினர் படுகாயம் [Monday December 31 2007 12:49:52 PM GMT] [யாழினி] மன்னார் - மதவாச்சி வீதியில் உள்ள கலையாறு பாலத்தடியில் சிறீலங்காப் படையினரின் தொடரணியை இலக்கு வைத்து இன்று மதியம் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று சிறீலங்கா கடற்படையினரும் ஒரு தரைப்படை சிப்பாயும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அநுராதபுர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஹோகமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் [Monday December 31 2007 10:15:27 AM GMT] [யாழினி] ஹோகமை பொலிஸ் நிலையத்தின் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்ப…

  4. நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (09) இரவு இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும், ஜனாதிபதியிடம் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. …

    • 3 replies
    • 765 views
  5. கைபேசி எடுத்துவர முடியாது; வாக்களித்ததை யாருக்கும் சொன்னால் கைது செய்யப்படுவர்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அதிரடி அறிவிப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் வாக்காளர்கள் மட்டுமன்றி வேட்பாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முடியாது என்றும், வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். ‘சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தால் ஏற்பாடு செ…

  6. முல்லைத்தீவை விட்டு வெளியேற என்ஜீஓக்களுக்கு புலிகள் உத்தரவு முல்லைத்தீவு பகுதியில் பணி புரிந்து வந்த என்ஜீஓக்களுக்கு (தேசீய மற்றும் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு) அப்பகுதியை விட்டு கடந்த 2007 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் உத்தரவிட்டிருந்தனர். செஞ்சிலுவை சங்கம் போன்றவை வெளியேறிய போதும் சில நிறுவனங்கள் கிளிநொச்சியில் இருக்கின்றன. இந் நிறுவனங்களை விமான தாக்குதலில் இருந்து காப்பதற்காக விடுதலைப் புலிகள் வெளியேறுமாறு சொன்னாலும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு பங்கர்கள் குறித்த தகவல்கள் இவர்களால் அரசுக்கு செல்கிறது எனும் சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக வெலி…

    • 10 replies
    • 4.6k views
  7. ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பதவிப் பிரமாணம் இந்நிலையில் திட்டமிட்ட வகையில் அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் தோல்வி காலி…

  8. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தன்வசப்படுத்த அரசாங்கம் முனைந்து வருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 674 views
  9. 29 SEP, 2024 | 07:06 PM இலங்கை கடற்படையையும் அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (28) ஊடகங்களை சந்தித்தபோதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சருக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 2016ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை படித்துப் பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் இழுவை மடி தொழிலை செய்வதாக நிறுத்துவதா என்ற நிலைக்கு வர முடியும். எமது நாட்டிலே உள்ள க…

  10. இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது" கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 மார்ச், 2012 - 17:20 ஜிஎம்டி அரசின் நல்லிணக்க ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதி நியமித்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து இயங்கும் “குடிமக்கள் உரிமைகள் இயக்கம்” என்ற அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சமூக பிரச்சினைகளில் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வரும் இந்த அமைப்பு, நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள், தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்லாமல், நாட…

    • 0 replies
    • 593 views
  11. நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம், செவ்வாய்க்கிழமை (6) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. உற்சவகால முன்னாயத்தமாக, திங்கட்கிழமை (5) மதியத்திலிருந்து 01 ஆம் திகதி நள்ளிரவு வரை, வீதி தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அறிவுறுத்தியுள்ளார். வீதித்தடையின் போது, வாகனப் போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள், கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், உற்சவ காலத்தில், சாதாரண காவடிகள், பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன, பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக…

    • 4 replies
    • 1.1k views
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எல்ல-வில் இயங்கும் இலங்கை மலையக ரயில் சேவை 13 அக்டோபர் 2024, 12:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பான, நம்பகமான, மற்றும் சரியான நேரத்தில் ரயில் போக்குவரத்துச் சேவையை குறைந்த செலவிலும் திறமையான முறையிலும் வழங்குவது’ இலங்கை ரயில்வே துறையின் நோக்கம். ஆனால், இதுகுறித்து இலங்கை பொதுமக்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம்: இந்தியத் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மலையகப் பாதையில் ரயில் சேவையைக் குறைக்க முடிவு …

  13. அரசியல் கைதிகள் விடுதலை: வடக்கு முதல்வரின் தலையீடு அவசியம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய வடமாகாண முதலமைச்சர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறப்பாக அமையும் என அரசியல் கைதிகள் விரும்புவதாக அரசியல் கைதிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சில அரசியல்வாதிகள் மத்தியில் அரசியல் கைதிகளுக்கும், பெற்றோராகிய எமக்கும் நம்பிக்கை அற்று போயுள்ளது. சில தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் கைதிகளை த…

  14. தம் மீதான யுத்த அழுத்தங்களைச் சமாளிக்கவே புலிகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் நாடாளுமன்றில் ஜே.வி.பி. குற்றச்சாட்டு புலிகள் தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இலங்கையின் எதிரி நாடுகளின் ஆதரவைத் தம்பக்கம் வளைத்துப் போடுவதற்குமாகவே அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்று ஜே.வி.பி. நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இத்தருணத்தில் புலிகள் மீதான யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதைத் தவிரவேறு வழியில்லை என்றும் அரசு, அரசியல் தீர்வில் காலத்தை வீணடிக்காது யுத்தத்தின் பக்கம் கூடிய கவனத்தைச் செலுத்தி புலிகளை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அக்கட்சி மேலும் கூறியது. இது தொ…

  15. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இந்தியாவின் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் பல என இந்தியாவிற்கு முரனான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. எனினும், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத நிலையில் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் பிராந்தியத்தின் தலைமைத்துவத்திற்கான தகுதியை இந்தியா இழந்து வருவதாகவும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை, இந்தியாவிற்கு பாதக விளைவுகளை ஏற்ப…

    • 6 replies
    • 1.5k views
  16. இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் W.சுதத் எல்.சி. பெரேரா தெரிவித்துள்ளார். கடலாக இருந்த துறைமுக நகரம் தற்போது நிலமாக மாறி, நாட்டின் எல்லைக்குள் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சொந்தமான அனைத்து நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கிய வகையில் புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை வரைபடம் சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கை வரைபடம் ஒன்று முதல் 50 ஆயிரம் வரையிலான அளவையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நில அளவைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஆய்வுகளின் மூலம் இலங்கையின் வரைபடங்கள் இற்றைப்…

  17. ஐ.நா. தீர்மானம் தொடர்பில் ஜி.எல்.பீரிஸ் சொன்னது அவர் தனிப்பட்ட கருத்து: லக்ஷ்மண் யாப்பா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே ஒழிய இலங்கை அரசாங்கத்தின் முடிவை அது எவ்வகையிலும் பிரதிபலிக்கவில்லை என இலங்கை அமைச்சரவை சார்பாகப் பேசவல்ல அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதில் அளித்திருக்கவில்லை என்றும் அதன் உத்தியோகபூர்வ பதில் இனிதான் தெரிவிக்கப்படும் என்றும் யாப்பா கூறினார். ஜெனீவாவில் தீர்மானம் நிற…

    • 4 replies
    • 1.1k views
  18. ராஜிதசேரத்தின - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் அவன்ட்கார்டே கப்பலில் தொடர் இலக்கங்கள் அழிக்கப்பட்டு காணப்பட்ட 43 துப்பாக்கிகள் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அவன்ட்கார்டே நிறுவனத்தின் கப்பலில் காணப்பட்ட ஆயுதங்களில் 43 விடுதலைப்புலிகளுடையவை என அமைச்சர் ராஜிதசேரத்தினவும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஆயுதங்களின் தொடர் இலக்கங்கள் அழிக்கப்படுவதற்கு வேறு காரணங்கள் இல்லை,இது ஓரு முக்கியமான தருணம்,இந்த ஆயுதங்களை அரசபகுப்பாய்வாளரிடம் மேலதிக விசாரணைக்காக வழங்கவுள்ளோம்,இதன் பின்னர் இந்த துப்பாக்கிகள் யாருடையவை என்பது தெரியவரும் எ…

  19. வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (4) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்…. 4ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலை…

  20. எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி ஜெனீவாவிலிருந்தோ, நியூயோர்க்கிலிருந்தோ, வாஷிங்டனிலிருந்தோ எந்த அழுத்தம் வந்தாலும் அதை கையாளும் ஆற்றலுடன் தனது அரசாங்கம் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார். கொழும்பில் நடைபெற்ற அரச ஊழியர்களின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சர்வதேச ரீதியாக நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்காக அரச ஊழியர்களும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கூறிய அவர், இத்தகைய சவால்கள் புதிதல்ல எனவும் தெரிவித்தார். இந்நாட்டை ஓர் ஒற்றையாட்சி நாடாக்குவதற்கான அர்பணிப்பு பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, ப…

  21. தமக்கிடையில் ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, வடமாகாண சபை விடயங்கள் உட்பட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்படவுள்ளன. இந்த சந்திப்பின்போது பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=145237&category=TamilNews&languag…

  22. வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் November 14, 2024 வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.உங்களிடம் செ…

  23. சிங்கள தேசியவாதக் கட்சியான ஜே.வி.பி.யில் உருவாகிய உட்பூசலைத் தொடர்ந்து தனியான அணியை உருவாக்கிய பிரேம்குமார் குணரட்ணம் சனிக்கிழமை அதிகாலை கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். அதிகாலையில் வாகனம் ஒன்றில் வந்த ஆயுதக்குழு ஒன்று அவர் தங்கியிருந்த வீட்டை உடைத்து அவரைத் தூக்கிச் சென்றிருக்கின்றது. அவருடன் கட்சியின் மகளீர் அணிக்குப் பொறுப்பான திமுது என்பவரும் மற்றொரு இடத்தில் வைத்துக் கடத்தப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவங்கள் பிரேம்குமாரின் பக்கம் அனைவருடைய கவனத்தையும் மீண்டும் ஒருமுறை திருப்பியிருக்கின்றது. ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் போராட்டக்குழுவினர் அமைத்த புதிய கட்சியின் ஆரம்ப வைபவம் திங்கட்கிழமை …

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.