ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த வீதி விபத்தில் உயிரிழந்தார்! தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த கபரணை வீதி விபத்தில் உயிரிழந்தார். திருகோணமலை கந்தளாயை பகுதியை சேர்ந்த தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34), இன்று அதிகாலை கபரணை-திருகோணமலை வீதியில் கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இரத்தினபுரியில் இருந்து கந்தளாயில் உள்ள தனது இல்லத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் ஊடகவியலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெரியாத வாகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் இடத்தைவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தப்பி சென்றவரை கைது செய்ய தீவிர தே…
-
- 0 replies
- 148 views
-
-
ஒரு தந்தையின (ஸ்ரீ லங்கா படைச் சிப்பாய்) வேண்டுகோள் ஆதாரம் வீரகேசரி
-
- 10 replies
- 2.7k views
-
-
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் அக்கினிப் பரீட்சை நிகழ்விலே வழங்கிய நேர்காணல். http://www.youtube.com/watch?v=QgyUV76wUfY
-
- 1 reply
- 691 views
-
-
“என்னிடம் இன்னும் பல குரல் பதிவுகள் உண்டு“ – நாடாளுமன்றத்தில் மிரட்டிய ரஞ்சன் by : Yuganthini பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அவர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் கூறிய விடயங்களை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை உருவாக்க வேண்டும். அப்போது ஆவணங்களுடன் அதில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்கின்றேன். மேலும் தன்னிடம் இருக்கும் குரல் பதிவுகளில் ஜனாதிபதி கோட்டாப…
-
- 2 replies
- 839 views
-
-
26 MAY, 2025 | 06:54 PM ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் செலுத்துமாறு திங்கட்கிழமை (26) ஏறாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததனர். இந்நிலையில், கடை உரிமையாளருக்கு அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் உப்பு தயாரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொது சுகாதார பரிசோகருக்கு நீதிமன்றம…
-
- 2 replies
- 234 views
- 1 follower
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறை மந்திகையில் சிறிலங்காப் படையினரின் வாகனத் தொடரணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 659 views
-
-
[size=4]மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான உன்னிச்சை, பாலக்கொடிச்சேனை கிராமத்திலுள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]உழவு இயந்திரமொன்றில் வந்த இனந்தெரியாத குழுவினராலேயே குறித்த பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன் குறித்த மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள நான்கு தற்காலிக குடிசைகள் மற்றும் ஒரு கடை ஆகியனவும் இதன்போது குறித்த இனந்தெரியாத குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன எனவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.[/size] [size=4]இதேவேளை, குறித்த கிராமத்தில் வசித்து வந்த 52 வயதான சபினோன என்ற பெண்மனி நேற்று சனிக்கி…
-
- 2 replies
- 431 views
-
-
அமைச்சர் சரத் பொன்சேகாவின் இன்றைய கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகள், திடுக்கிடும் காட்சிகள் இன்னமும் பல வரவுள்ளன என நான் நினைக்கின்றேன். இது ஒரு சிறு கதை அல்ல, ஒரு தொடர்கதை. இதையே நாங்கள் சொன்னால் இட்டுக்கட்டிய புனைக்கதை. அதையே அவர் சொல்லும்போது அது உண்மைகளை புட்டு, புட்டு வைக்கும் வாக்குமூலம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி விளையாட்டு விழாவில் கலந்துக்கொண்டு பெற்றோர் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதைக்கூறினார். அவர் மேல…
-
- 2 replies
- 511 views
-
-
வடக்கு மாணவர்கள் இந்திய புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில் அக்கறை இல்லை -இந்தியத் துணை தூதுவர் யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹோட்டலில், இன்று கல்விக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இந்தியத் துணை தூதுவர் கே. பாலச்சந்திரன் வடக்கு மாணவர்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில், அக்கறைக் காட்டுவதில்லையென தெரிவித்தார்.இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களை தென்னிலங்கையில் இருக்கின்ற மாணவர்களே அதிகமாகப் பெறுவதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் புலமைப் பரிசில்களைப் பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது எனவும் மேலும் தெரிவித்தார் http://www.…
-
- 11 replies
- 1.4k views
-
-
வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2015 மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில், இவ் வழக்கு இன்னும் தொடரும் நிலையிலேயே உள்ளது. தீ…
-
- 0 replies
- 301 views
-
-
கடந்த ஒரு மாதத்தில் 112 படையினர் பலி: 793 பேர் படுகாயம் [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:52 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த ஒரு மாதத்தில் இடம்பெற்ற மோதல்களில் 112 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 793 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கூடியதும் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடையும் வேளையில் படையினரின் நடவடிக்கைகளை குழப்புவதற்கு எவரும் முனைய வேண்டாம். அரசியலில் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருப்பி…
-
- 0 replies
- 465 views
-
-
சீன நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பு நகரில் உள்ள காணிகள் விற்கப்படுகின்றமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கொழும்பு காலி வீதியில் உள்ள காணி பரப்பு ஒன்றை சீனாவின் ஓரு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அண்மையில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, இது குறித்து நேரடியாக தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது. http://thaaitamil.com/?p=29482
-
- 0 replies
- 1.1k views
-
-
போரின் ஆயுதமாகப் பாவிக்கப்படும் வன்புணர்வு! வடக்கு முதல்வர் சி.வி சுட்டிக்காட்டு வன்புணர்வானது போரின் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பெண்களின் குரல் எனும் அமைப்பினால் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகளிர் தினத்தை நாங்கள் கொண்டாடுவதற்குப் பல நல்ல காரணங்கள் உள்ளன. இன்று பெண்கள் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் ரீதியாகப் பெரும் பங்கு ஆற்றி வருகின்றார்கள். அவர்களின் வெற்றிய…
-
- 0 replies
- 255 views
-
-
செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 29 JUN, 2025 | 11:25 AM கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வல்லுறவு படுகொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என குறிப்பிட்ட இராணுவஅதிகாரிகளில் பலர் இன்னமும் உயர்பதவிகளை வகிக்கின்றனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் இவர்களிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் செம்மணி படுகொலைகள் மற்று…
-
- 0 replies
- 79 views
-
-
[size=4]முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரான காலம் சென்ற அநுருத்த ரத்வத்தையின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தலிருந்து இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எட்டுக் கோடி ரூபாவையும் குறித்த தனியார் வங்கியிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ நேற்று (24) உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]இந்தப் பணம் மற்றும் இதனுடன் இருந்த பல நிலம் தொடர்பான ஆவணங்கள் ரத்வத்தைக்கு சொந்தமானது அல்ல அதாவது கறுப்பு பணம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவனங்களைப் பார்க்கும் போது அவை குடா நாட்டு மக்களிற்கு சொந்தமானவை என அறியமுடிகின்றது. ஆகவே ஒட்டுமொத்த பணத்தினையும், ஆவணங்களையும் உரிய வங்கியிடமே திருப்பி கொடுக்குமாறு நீதிமன்றம் இரகசியப் பொலிசாருக்கு பணித்துள்ள…
-
- 1 reply
- 512 views
-
-
போரின் போது காணாமல் போனோர் மாலைதீவில்! போரின் போது காணாமல்போனதாக கூறப்படும் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம அவர்களில் இருவர் மாலைதீவு சிறைகளில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். காணாமல் போனோர் தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து விரைவில் வெளிப்படுத்துவோம் எனவும், காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு பேர், மாலைதீவு சிறைச்சாலையிலும் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 576 views
-
-
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்! இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடு முழுவதும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இது தொடர்பான ஒரு பத்திரிகை விளம்பரம் இன்று (18)வெளியிடப்பட்டது. அதன்படி, சாரதி பணிக்கு 450 காலியிடங்கள் (ஆண்களுக்கு 425 மற்றும் பெண்களுக்கு 25) மற்றும் நடத்துனர் பணிக்கு 300 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 275 மற்றும் பெண்களுக்கு 25) உள்ளன. விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி 2025 ஜூலை 31 ஆ…
-
- 1 reply
- 213 views
-
-
இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்; இனத்துக்காக தமிழரசு ஒன்றுபட வேண்டும்; ஜெனிவாவில் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களை பயன்படுத்தி இலங்கை தப்பித்துள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 28 JUL, 2025 | 01:20 PM இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (உரோம்) உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் இன அழிப்பு ஆகியவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழிகள் இருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (YMCA) மண்டபத்தில் சரேஷ்ட சட்ட…
-
-
- 1 reply
- 198 views
- 1 follower
-
-
Share0 முல்லைத்தீவு உடையார்கட்டு நஞ்சுண்டான்குள காட்டுப் பகுதியில் பாரிய மரக் கடத்தல் ஒன்று வனவளத் திணைக்களத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மரங்களை கடத்தி உழவு இயந்திரத்தில் கொண்டு செல்ல முற்பட்ட போது வனவள திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர். எனினும் இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் தப்பியோடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியிலான முதிரை மரதுண்டங்கள், பலகைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவியந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மிக நீண்ட நாட்களாக வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சட்டவிரோத மர…
-
- 0 replies
- 532 views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தெரிவான தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் மாகாணசபையில் ஆட்சி அமைக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அடையாளம் தெரியாத சிலரினால் வற்புறுத்தப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை .[/size] [size…
-
- 1 reply
- 456 views
-
-
இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி அன்பாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை அகதிகள் நாடு திரும்பிய போது சட்ட குறைபாடுகளால் நடந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலையடைவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின்…
-
- 0 replies
- 207 views
-
-
சமஷ்டி மூலம் இனவாதம் தலைதூக்கப்பட்டுள்ளது என்பது பைத்தியக்காரத்தனமான கூற்றாகும். பல வருடங்களாக அரசியல்வாதிகள் சமஷ்டி என்றால் நாடு பிளவடைந்துவிடும் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இதனால் நீங்களும் அவ்வாறு நம்புகிறீர்கள். அந்த கூற்று உங்களுக்கு பழக்கமாகிவிட்டது. பத்திரிகை, புத்தகங்களை எடுத்து பாருங்கள். சமஷ்டிமுறை என்றால் என்னவென்பது உங்களுக்கு புரியும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியாவிலும் இந்த சமஷ்டி முறை நடைமுறையில் இருக்கின்றது. கனடாவிலும், சுவிட்ஸர்லாந்திலும் இந்த சமஷ்டி முறைமை நடைமுறையிலுள்ளது. சமஷ்டி முறையினூடாக ஒரு நாளும் நாடு பிரிவடைந்து ச…
-
- 0 replies
- 394 views
-
-
நல்லூர் திருவிழாவையொட்டி அங்கு செல்லும் மக்களை கந்தர் மட சந்தியில் முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தி இராணுவத்திணர் கண்காணித்து வருகின்றனர். இதனால் திருவிழாவிற்கு செல்லும் மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/nallur-2008-08-21.html
-
- 3 replies
- 1.7k views
-
-
180 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் தற்போது தடுப்புக் காவலில் உள்ள 500 முன்னாள் புலிகளில் 320 பேர் மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர். இவர்களில் 320 பேருக்கு நீண்டகாலப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிற…
-
- 1 reply
- 658 views
-
-
செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்; நாளை முதல் செப்ரெம்பர் 29 வரை ஐந்து தினங்கள் நடைபெறும்! தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான த…
-
- 1 reply
- 164 views
- 1 follower
-