ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
ரோம் சாசனம்- சுமந்திரனிடம் தமிழர் தாயக சங்கம் முக்கிய கோரிக்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்…
-
- 0 replies
- 151 views
-
-
இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் 5 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கி உள்ளது. கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. ஜெனீவாவில் சிறிலங்கா மனித உரிமைகள் மற்றும் பேரிடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் அகதிகளுக்கான ஐ.நா. தூதுவர் அன்டனியோ கட்டரஸ் ஆகியோருக்கு இடையே நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுக்களில் இந்த நிதி உதவிக்கான இணக்கம் காணப்பட்டது என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. அகதிகளுக்கான ஐ.நா. தூ…
-
- 0 replies
- 564 views
-
-
செலவு கூடிய இடம் இலங்கை ; சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி உலகிலேயே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளுக்கான செலவு அதிகரித்த நாடாக இலங்கை காணப்படுகின்றது என மதிப்பீட்டு அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக முன்னிலையில் இருந்த இலங்கை அந்த இடத்தில் இருந்து கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளதுடன் இந்தோனேசியாவின் பாலி தீவு முன்னிலைக்கு வந்துள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்னாபிரிக்கா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கை 5 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. அதன்படி ஏனைய நாடுகளின் விடுமுறை விடுதிகளுக்கான செலவுகள் குறைவாக இருக்கின்ற போதும், இலங்கையில் அதற்கான செலவு 45 வீதம் அதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன் 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டுமென முதன் முதலில் நானே குரல் கொடுத்தேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்குரிய வீடு அமைப்பதற்காக உபகார கொடுப்பனவை இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற் கண்டவாறு கூறினார். உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அதன் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன், …
-
- 0 replies
- 500 views
-
-
45000 மின்னியலாளர்களுக்கு, இலவச தேசிய தொழில் தகைமை – உரிமம் வழங்கப்படும்! October 6, 2021 மின்னியலாளர்களுக்கு NVQ 3 (தேசிய தொழில் தகைமை மட்டம் 3) இனை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 2000 மின்னியலாளர்கள் NVQ 3 சான்றிதழை பெற்று உரிமம் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர். இம்மாதத்தில் மேலும் சுமார் 1500 மின்னியலாளர்களுக்கு NVQ 3 இனை பெற்றுக் கொடுப்பதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் எதிர்வரும் நவம்ப…
-
- 0 replies
- 275 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முரண்பாடுகளுக்கு மத்தியில் வட மாகாண சபைக்கான உறுப்பினர்களும், அமைச்சர்களும் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்கின்றனர். பதவிப் பிரமாணத்திற்கு முன்னதாக இன்று காலை 8.30 அளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கௌரவித்து, பின்னர் அருகிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வட மாகாண அமைச்சரவைப் பட்டியல் நேற்று வட மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. எனினும், பட்டியல் குறித்து ஏனைய பங்காளிக்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், சத்தியப் பிரமாண நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏ…
-
- 26 replies
- 1.7k views
-
-
மக்களுக்கு நன்றி எனதினிய தமிழ் நெஞ்சங்களே! அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன. முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள். இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனம…
-
- 0 replies
- 226 views
-
-
வினைத்திறனான செயற்பாட்டுக்கு அடித்தளமிடப்படும் நேர்காணல்: ஆர்.ராம் மூன்று மாத காலப்பகுதியில் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சின் திணைக்களங்கள், நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப் பதற்கான அடித்தளத்தை இடுவதே பிரதான நோக்கமென வடமாகாணசபையில் புதிதாக அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்றுள்ள அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். புதிதாக அமைச்சுப்பதவியை பொறுப்பேற்ற பின்னர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி: அனந்தி சசிதரன் வடமாகாண மகளிர் விவகா ரம்,சமூக சேவை, புனர் வாழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி, உணவுவழங்கல் விநியோகம் மற்றும் தொழில் துறை அமைச…
-
- 0 replies
- 244 views
-
-
வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக !! சமலுக்கு கடிதம் மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்துடன் வடமத்திய மாகாண எல்லையில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு – வட மத்…
-
- 0 replies
- 308 views
-
-
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நிலை குறித்து, அனைத்து துறையினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில், அகதிகள் இன்புற்று வாழ தேவையான நிதி ஒதுக்கப்படும்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முள்வேலி முகாம்களுக்குள் இலங்கையில் தமிழ் அகதிகள் அவதிப்படுவதை எண்ணி கண்ணீர் உகுத்து, அந்த முகாம்களில் இருந்து அவர்களை விடுவிக்க தமிழக எம்.பி.,க்கள் குழு சென் றது. இதன் மூலம் அவர்கள் நிலை அறியச் செய்யப்பட் டது.இதன் விளைவாக, மகத் தான வெற்றி கிடைக்கா விட்டாலும், அடைபட்டிருந்த இரண்டு லட்சம் பேரில், ஒரு லட்சம் பேரையாவது இதுவரை அந்தக் கூண்டுகளிலிருந்து வெளியே கொணர்ந்து, அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல வழிவகை செய்யப…
-
- 0 replies
- 461 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 06-07-2017
-
- 0 replies
- 159 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சி மக்களால் தகுந்த பாடம் புகட்டப்பட்டது. தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நின்றும் தேர்தலில் படுதோல்வியடைந்த ஆனந்தசங்கரி தனது வேதனைகளை மன்னார் ஆண்டகை இராயப்பு ஜோசப்பிடம் கொட்டித் தீர்த்துள்ளார். தனது தோல்விக்கு காரணம் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட சதித்திட்டம் என்று புலம்பியுள்ளார். ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எழுதிய அவரது கடிதம் இதுதான்... 21.10.2013 அதி. வணக்கத்திற்குரிய ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்கு, ஆண்டகை இல்லம், மன்னார். தமிழ் மக்களின் ஒற்றுமை அன்புடையீர், இனப்பிரச்சனைத் தீர்வ…
-
- 11 replies
- 877 views
-
-
http://youtu.be/fR7camXGFUw http://youtu.be/63oDqI7VgQo THANKAS https://twitter.com/francesharris0n
-
- 3 replies
- 709 views
-
-
தேசிய அரசு இருந்தால்தான் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் தெரிவித்துள்ளார். இதோ! தீர்வு வருகிறது என்று மார்தட்டிய சம்பந்தர் ஐயா இப்போது தேசிய அரசு இருந்தால்தான் அரசியலமைப்பை நிறைவேற்றலாம் என்கிறார். தேசிய அரசு எதுவரை இருந்தால் அரசியலமைப்பு நிறைவேறும் என்பதை அவர் நிறு திட்டமாகக் கூறியிருந்தால், ஓரளவுக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும். அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்குவதில் காலதாமதம் செய்யப்படுவது பற்றி எந்தச் சிந்தனையும் இன்றி அப்பாவித் தனமாக, தேசிய அரசு இருக்க வேண்டும். அது இருந்தால்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகும் என சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சருடன்…
-
- 0 replies
- 381 views
-
-
மாவீரர் நாளுக்கு.... தீருவில் திடலை, வழங்க முடியாது – வல்வெட்டித்துறை நகர சபை கைவிரிப்பு! வல்வெட்டித்துறை தீருவில் திடலை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸார் கோரியதால், திடலில் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் ச. செல்வேந்திரா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி தீருவில் மைதானத்தில் நிகழ்வுகளை முன்னெடுக்க நகர சபையிடம் அனுமதி கோரி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் முகமாக நகர சபை தலைவரால் , “இம்மாத இறுதி வரை தீருவில் மைதானத்தில் எந்த நிகழ்வுகளையும் நடாத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸ…
-
- 1 reply
- 470 views
-
-
படையினர் அர்ப்பணிப்புடன் பெற்ற யுத்த வெற்றிக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் வாழ்ந்த ஒரு சிலர் உரிமை கோர முயல்வதாக சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவையே அவர் இவ்வாறு சூசகமாக குற்றம் சாட்டியுள்ளார். ஜெ.வி.பியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்கக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். கட்சியில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் பொம்மைகள் போல இருந்து வரும் பல கட்சி முக்கியஸ்தர்கள் வெகு விரைவில் தமது கூட்டணியில் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மூலம் : http://www.tamilstar.org
-
- 0 replies
- 972 views
-
-
சுயநலமிக்க உலக நடைமுறைக்குள் எமது இனத்தின் விடுதலை முடக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலைமையில், அதிலிருந்து உடனடியாக மீளவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. உலக வரலாற்றில் எந்தவொரு தேசத்தின் விடுதலையும் மிக இலகுவாக கிடைத்ததாக சரித்திரம் இல்லை. அனைத்து விடுதலைப் போராட்டங்களும் பல தியாகங்களையும், சோதனைகளையும், சவால்களையும் தாண்டியே வெற்றி பெற்றன. சவால்களையும், சோதனைகளையும் தாண்டமுடியாத பல விடுதலைப்போராட்டங்கள் தோற்றுப்போன வரலாறுகளும் உண்டு. இதுவரை நமது தமிழீழ விடுதலைக்காக நாம் இழந்தவை அதிகம். விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் பன்மடங்கு வரலாம். ஆனால், இறுதிவரை நம் விடுதலை உணர்வினைமட்டும் சிறிதளவேனும் இழக்கக் கூடாது. சவால்களை எதிர்கொண்டு, இழப்புக்களையும் வலிகளையும் தாங…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, இலங்கை அரச ஊடகம் கமரூனை, பட்டிக்காட்டான், கோமாளி, எருமை என விமர்சித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தனது தலையங்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. கமரூன் விடுத்த கோரிக்கை தொடர்பில் அவர் சிறிதாக அல்ல பெரிய மன்னிப்பை கோரவேண்டும். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்காக வருகை தந்த இந்த பட்டிக்காட்டானான ஒட்டுமொத்தமாக கடுமை குறையாமல் நடந்து கொண்டார். இலங்கை மண்ணில் வந்திறங்கிய நேரத்தில் இருந்து பிரித்தானிய பிரதமர் ஏகாதிபத்திய மடையனாக நடித்தர். அவரது அவமரியாதை தொட்டு உணரக் கூடியதாக இருந்தத…
-
- 3 replies
- 865 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் அதிபர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடாது எதி்ர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேனாட் செவர் தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு மற்றும் நேரப்பிரச்சனை காரணமாக அதிபர் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதில் சிக்கல நிலை தோன்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் சிறிலங்காவின் தேர்தல் திணைக்கள ஆணையாளர் தயானந்த திசநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். இருந்த போதும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள அ…
-
- 1 reply
- 561 views
-
-
நந்திக்கடலின் வலதுபுறமாக மாத்திரம் 11 பாரிய இராணுவமுகாங்கள்! – குளோபல் தமிழ் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்றது. வற்றாப்பளையிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் நந்திக்கடலை அண்டிய பகுதியில் மாத்திரம் 11 இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவுப் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பகுதியை விடுவிக்குமாறு கோரி 156 நாட்கள் கடந்த நிலையில் மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். தமது நிலப் பகுதியை விடுவிக்கும்வரையில் போராட்டம் தொடரும் என்றும் கேப்பாப…
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ்கட்சியின் தேசிய அமைப்பாளர் திரு. யோகராஜன், மஹிந்த கட்சியில் அமைச்சராக இருக்கும் பிரதி கல்வி அமைச்சர் சச்சிதானந்தம் ஆகியோர் இன்று ஐக்கியதேசிய முன்னணியில் இணைந்து சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இன்று தமது பதவிகளை இராஜனமா செய்த இவர்கள் சரத் பொன்சேகாவை தாம் ஆதரிக்க போவதாக கூறியுள்ளனர். 32 வருடங்கள் தொண்டமான்களுடன் இணைந்து சேவை செய்துள்ளேன் ஆனால் இப்போது சுயமாக சிந்தித்து மக்களுக்கு சேவை செய்ய போகின்றேன் என்றார் திரு யோகராஜன். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 647 views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகளும் அரசுடமையாக்கப்பட உள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போருக்கு பிறகு சொத்து மற்றும் உயிர் சேதங்கள் தொடர்பான கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்போது, பிரபாகரனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு வீடுகள் உள்ளிட்ட பல அவரது சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது. பிரபாகரனின் சொத்துக்களுக்கு உரிமை கோர அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உயிரோடு இல்லாத காரணத்தினால், இவ்வாறு அவரது சொத்துக்களும், போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் மக்களின் சொத்துக்களும் அரசுமையாக்க…
-
- 0 replies
- 302 views
-
-
எனது இடத்தை வரலாறு தீர்மானிக்கும் : சபையில் ரவி பண்பாடு மற்றும் ஜனநாயகம் மிக்க ஆட்சிக்கும் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் வகையில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளேன் எனக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நம்பிக் கையில்லாப் பிரேரணைக்கு பயந்து பதவி துறக்கவில்லை. எனது இடத்தினை வரலாறு தீர்மானிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார். அதிகார மோகம் கொண்ட சதிகாரர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு திட்டமிடுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய ரவிகருணாநாயக்க எம்.பி., ஏகாதிபத…
-
- 0 replies
- 240 views
-
-
பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையாயின், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமை மாநாட்டுக்குப் பின் சர்வதேச விசாரணைக்கு ஆளாக வேண்டிவரும். இது இலங்கைக்கு பாரிய பாதிப்புக்களைக் கொண்டுவரும். 2012, 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைவிட இது பாரிய கனதி உள்ளதாக இருக்குமென அரசாங்கத்தை எச் சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்றுக் காலை திருகோணமலை சில்வெஸ்டர் ஹோட்டலில் தற்போதைய இலங்கை அரசியல் நிலை பற்றி விளக்கம் அளிக்கும் கூட்டமொன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 2 replies
- 428 views
-
-
பதிவு செய்யப்படாத மருத்துவனை வவுனியாவில் சுற்றிவளைப்பு!! வவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்துவகைகள் எவ்வாறானவை எனத் தெரியவில்லை. மருந்துகள் அனைத்தும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும். மருந்துகள் சோதனைக்காக அனுப்பப்படும் என்று வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் குறிப்பிட்டார். இந்த வைத்தியசாலை ஹோமியோபதி சிகிச்சைகளை வழங்குகின்றது. மாத்தளையில் இருந்து வவுனியா வந்து சிகிச்சை வழங்கப்படுகின்றது …
-
- 1 reply
- 384 views
-