ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
இழவு வணக்கங்கள், சிறீ லங்கா பயங்கரவாத அரசு தமிழினத்தை அழிப்பதற்கு நீங்களும் ஆதரவு கொடுக்கின்றீர்களா? ஆம் என்றால்... சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பரப்புரைகளிற்கு தொடர்ந்து உங்கள் அமோக ஆதரவை கொடுங்கள். இல்லை என்றால்... சிறீ லங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு, பயங்கரவாத அரசின் இதர ஊடகங்களின், மற்றும் பெளத்த பேரினவாதிகளின் இணையத்தள பதிவுகளை பரப்புரை செய்வதை, வெட்டி ஒட்டுவதை, செய்திகளில் வாசிப்பதை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளுங்கள். சிறீ லங்கா அரசின் பரப்புரைகளை மற்றவர்களுக்கு பரப்பும்போது நீங்கள் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கால அட்டவணைக்கு ஏற்ப தமிழர் போராட்டத்தை முடக்குகின்றீர்கள் என்பதோடு.. தமிழினம் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படுவதற்கு சிறீ லங்கா பயங்கரவாத அரசிற்கு …
-
- 2 replies
- 2k views
-
-
பொது பலசேனா அமைப்பை பகிரங்கமாக மிக விரைவில் காத்தான்குடிக்கு அழைத்துவரவுள்ளேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அண்மைக்காலமாக எமது நாட்டில் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களை அங்கத்தவர்களாக கொண்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை பகிரங்கமாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக பொதுபல சேனா என்ற பௌத்த பேர…
-
- 1 reply
- 787 views
-
-
வடமாகாண கல்வி அமைச்சர் நாங்கள் சொல்வதை கேட்பதுமில்லை. எமக்கு பதிலளிப்பதும் இல்லை – அனந்தி கவலை வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார், வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறினால் அவற்றை உரிய முறையில் கல்வி அமைச்சர் செவிமடுப்பதாக எனக்கு தெரிவில்லை. நாம் ஏதேனும் கேட்டாலும் , இவர்களுக்கு என்ன பதில் சொல்வது போன்றதொரு பாணியில் எங்களை பார்த்து விட்டு அவற்றுக்கு பதில் சொல்வத…
-
- 0 replies
- 354 views
-
-
மணல் கடத்தலை தடுக்க சென்ற பொலிஸார் மீது வாகனத்தை மோதிய கடத்தல்காரர்கள்! வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரிமீது டிப்பர் வாகனத்தால் மோதிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதன் போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கிலிருந்து சட்டத்துக்குப் புறம்பமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் டிப்பர் வாகனத்தில் மணலை ஏற்றிப் பயணிப்பதாக உள்ளூர் மக்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனை அறிந்து பருத்தித்துறை ப…
-
- 0 replies
- 204 views
-
-
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ‘புக்கர் பரிசு’ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற தன்னுடைய நாவலுக்காக இந்த விருதை வாங்கியவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய். இன்று, இலக்கியப் பணிகளுக்கிடையே சமூகத்தின் தீவிரப் பிரச்னைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கெதிராக களமிறங்கி சமூக சேவை யிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அருந்ததி ரோய். இலங்கைப் பிரச்னை குறித்து மேடைகளில் முழங்கத் தொடங்கியிருக்கும் அருந்ததிரோயை எழுத்தாளரும் எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார் அவரை ஜூனியர் விகடனுக்காக சந்தித்துப் பேசினார்: ”இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைஉலகின் வேறு எந்த கொடூரத்தோடு நீங்கள் ஒப்பிடுவீர்கள்?” …
-
- 0 replies
- 679 views
-
-
வடக்கு தேர்தல்களை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் - கபே வடக்கு தேர்தல்களை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பாளாகளை ஈடுபடுத்த வேண்டுமென கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரியுள்ளது. வட மாகாணசபைத் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்து தேர்தல் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்…
-
- 0 replies
- 230 views
-
-
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு – இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத…
-
- 3 replies
- 501 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளாரக முன்னாள் சி.வி விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமையானது, தமிழக அரசியல் வாதிகளின் அழுத்தத்தினாலேயே அன்றி இந்திய மத்திய அரசாங்கத்தின் அழுத்தம் எதுவும் இல்லையென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=23287
-
- 0 replies
- 521 views
-
-
வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிப்பதற்கான உடனடித் தேவைகளை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 364 views
-
-
36 அகதிகள் நாடு திரும்பினர் கனகராசா சரவணன் இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்தது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியது. மும்பையில் இருந்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் தமிழ்நாட்டில் இருந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேருமாக 36 பேர், நாடு திரும்பியுள…
-
- 0 replies
- 190 views
-
-
யாழ்.போதனாவைத்திய சாலையில் இராணுவத்தினர் இரத்த தானம் 512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதில்23 ஆவது கஜபா படைப் பிரிவிலிருந்து 150 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர். இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த நிக்ழவ ஏற்பாடு செய்திருந்ததாகத் 512 ஆவது படைப்பிரிவின் கேர்ணல்,அஜித் பல்லாவல தெரிவித்திருந்தார். http://onlineuthayan.com/News_More.php?id=419062201327515285
-
- 5 replies
- 409 views
-
-
துறைமுகநகர வாக்கெடுப்பில் சந்தேகம் – பொதுஜன பெரமுனவின் முறைப்பாடு குறித்து ஆராய்வு! கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு குறித்து முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்களை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளால் நேற்றைய தினம் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்ற…
-
- 0 replies
- 305 views
-
-
"எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகாமல் 'உதயன்' நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது" என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 'சுடரொளி', 'உதயன்' நாளேடுகளின் பிரதம ஆசிரியரான ந.வித்தியாதரனிடம் உறுதியளித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-
-
பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு ஆலோசனை June 1, 2021 கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வரும்வரையில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு விசேட வைத்தியர்களின் சங்கம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனாத் தொற்று நாட்டில் அதிகரிக்குமாக இருந்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்குமெனச் சுட்டிக்காட்டியுள்ள குறித்த சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ, இதனால் சுகாதாரப் பிரிவு வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி நாட்டை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு அனைவரும் பொது இலக்கின் கீழ் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்த…
-
- 0 replies
- 232 views
-
-
இலங்கை தமிழர்களுக்காக ரூ.500 கோடி எல்லாமே இந்திய அரசின் மாயவித்தை - விஜயகாந்த் வீரகேசரி நாளேடு 7/7/2009 10:36:46 PM - பாராளுமன்றத்தில் நேற்று 2009, 2010ற்கான இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை தமிழர் புனர் வாழ்வு செயற்றிட்டங்களிற்காகவென ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இவை எல்லாமே இந்திய அரசின் மாயவித்தைதான் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரவு செலவு கணக்கை அறிவித்தார்களே தவிர, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் இல்லை. இலங்கை …
-
- 0 replies
- 446 views
-
-
பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனுதவியை ஏமாற்றி பெற விவசாய சிறுகடன் திட்டம் பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, சிறீலங்கா அரசு கபடத்தனமான அறிவித்தல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. வடக்கில் போர் இடம்பெற்ற பிரதேச மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில், விவசாயத்தினை ஊக்குவிக்க இருப்பதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. இதற்கென சிறுகடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும
-
- 0 replies
- 511 views
-
-
கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது பொலிஸாரின் அலட்சியப்போக்கு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியூதின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பொலிஸார் அலட்சியமாக நடந்து கொண்டதற்கான பாதுகாப்பு கமரா காட்சி ஆதரம் அடங்கிய 'டிவிடி' இருவட்டு ஒன்றினையும் இணைத்து ரிசாத் பதியூதின் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார். 'பொலிஸார் மக்களை பாதுகாக்க தவறியதை கிரான்ட்பாஸ் மக்கள் நேரடியாக அவதானித்துள்ளனர். அத்துடன், தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் பொலிஸார் இணைந்து செயற்பட்டதாக முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். அரசாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் நான் இது குறித்து கவலை அடைகிறேன். பொலிஸாருக்கு எதிரான குற்றச…
-
- 6 replies
- 542 views
-
-
கடலில் தத்தளித்த பிரான்ஸ் பிரஜை உயிருடன் மீட்பு தென்பகுதிக் கடற்பரப்பில் படகொன்று கவிழ்ந்ததில் உயிருக்காகப் போராடி கடலில் தத்தளித்த பிரான்ஸ் பிரஜையொருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். இச் சம்பவம் ஹம்பாந்தோட்டை பகுதியிலுள்ள கொஹுலன்கல கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு இரு படகுகளுடன் விரைந்த இலங்கை கடற்படையினர் மார்க் அந்திரே பிரான்கோஸ் என்ற பிரான்ஸ் நாட்டவரை உயிருடன் மீட்டதுடன் அவர் பயணித்த படகையும் மீட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து காலிக்கு கடற் பயணமாக பயணித்த பிரான்ஸ் நாட்டு பிரஜையி…
-
- 0 replies
- 221 views
-
-
கனடாவுக்கான சிறிலங்கா தூதுவர் தயா பெரேராவை சிறிலங்கா அரசு திரும்பி அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அந்நாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசியல் வட்டாரங்களில் தோன்றியுள்ள உள்விவகார நெருக்கடிகளின் காரணமாக கனடாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் தயா பெரேராவை அரசு திரும்ப அழைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. சிறிலங்கா திரும்பியதும் அவர் தனது பதவியில் இருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பாக தயா பெரேரா தனது கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. கனடாவின் நிழல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொப் றே சிறிலங்கா அரசினால் நாடு கடத்தப்பட்ட பின்னர் கனடாவுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள…
-
- 1 reply
- 703 views
-
-
தனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா? பாரிய கருத்து மோதல்களை சந்தித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரு அணிகளாக பிரிந்து மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது. Image captionமே தினக் கூட்டங்கள் தொடர்பாக சிறிசேன அணியின் சுவரொட்டி ஜனாதிபதி சிறிசேன அணியின் மே தினக் கூட்டம் இன்று திங்கள்கிழமை மாலை கண்டியில் நடைபெறவுள்ளது. கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணியின் மே தினக் கூட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீ …
-
- 0 replies
- 475 views
-
-
கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை குறித்து இன்றையதினம் விவாதம்! எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்றைய தினம் (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று முற்பகல் 10 மணிமுதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது. அத்துடன், நாளைய தினமும் விவாதம் இடம்பெற்று நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்…
-
- 0 replies
- 237 views
-
-
இலங்கையில் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவதற்கும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படுவதற்கும் அமெரிக்கா உறுதியான ஆதரவு அளிக்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் அவரைச் சந்தித்த அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக செயலவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க தமிழ்ச் சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அமைப்புகளைச் சேர்ந்த 3 தமிழ் நாட்டுத் தமிழர்கள் உட்பட 16 பிரதிநிதிகள் 'அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை' (US Tamil Political Action Council - USTPAC) என்ற ஒரு குடையின் கீழ் இணைந்து பங்கேற்றனர். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அத…
-
- 0 replies
- 620 views
-
-
அனைத்து மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை இன்று வியாழக்கிழமை (29.08.13) பிறப்பித்துள்ளது. சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவவை பிறப்பித்தது. இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95878/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 626 views
-
-
பாரத பிரதமர் இன்று வருகிறார் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்புக்கு ஏற்பாடு (ரொபட் அன்டனி) இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மாலை இலங்கைக்கு வருகை தருகின்றார். வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் ஆகியோரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த…
-
- 1 reply
- 502 views
-
-
பூநகரி- கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் ஆரம்பம் பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பயனாளர்கள், கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான வலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகுதி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன. பொருத்தமான இடங்கள் த…
-
- 0 replies
- 207 views
-