ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சர்வதேச நாணய நிதியத்துடனான... பேச்சுவார்த்தை, இம்மாத இறுதியில் நிறைவடையும்- பிரதமர் ரணில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஒன்றிணைந்த வணிக சபை பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடம் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களை மீள செலுத்துவதற்கு 5 பில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதே அரச…
-
- 0 replies
- 109 views
-
-
புதிய கூட்டணியின் பெயர், தலைமை தொடர்பாக... தீர்மானிக்கவில்லை – விமல் புதியக் கூட்டணியின் பெயர் தொடர்பாகவே, யார் தலைமை வகிப்பார்கள் என்பது தொடர்பாகவோ இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். முற்போக்குகொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ஸ, புதிய கூட்டணியின் தலைவராக தனது பெயரை முன்மொழிவதற்கு வாசுதேவ நாணயக்காரர் தயாராக உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை எதிர்கொண்டுள்ள சமூக அரசியல் நெருக்கடிகள் குறித்து கட்சியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள்…
-
- 0 replies
- 213 views
-
-
தமிழர்களின் அறிவுப் புதையல்... யாழ்.பொது நூலகம், தீக்கிரையாகி இன்றுடன்... 41 ஆண்டுகள்! தமிழர்களின் அறிவுப் புதையல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் எரியூட்டப்பட்டது. இன உரிமைப் போராட்டத்த்தை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ்நூலகத்தை எரித்தனர். இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை பாரம்பரிய சொத்திழப்பை, தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள். தெற்காசியாவில் மிகப் பெரும் நூலாகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்த…
-
- 15 replies
- 787 views
-
-
கச்சைதீவை... மீளப்பெற்றால், வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் – சீ.வி.கே. கச்சைதீவை மீளப்பெறுவதன் காரணமாக எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண அவைத்தலைவர் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள போதே இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக மீனவர் சார்ந்த கருத்தை தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்ராலின் தெரிவித்தற்கு தேசிய ரீதியாக அண்ணாமலையும் ஆதரித்து இருந்தார். ஆனால் உண்மையான நிலை எனனவென்றால் ஸ்டாலினை பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் தலைவராக நாம் பார்…
-
- 1 reply
- 185 views
-
-
ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் யாழ்மாவட்டத்தில் பயிர்விதைகள், நாற்றுக்கள் வழங்கிவைக்கப்பட்டது. Posted on May 29, 2022 by சமர்வீரன் 56 0 நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் யாழ்மாவட்டத்தில் இளவாலை, உரும்பிராய், கைதடி ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களில் 136 குடும்பங்களுக்கு 23,26/05/2022 ஆகிய நாட்களில் பயிர்விதைகள் மற்றும் நாற்றுக்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது இவ் உதவியை வழங்கிய ஜேர்மன் வாழ்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இளவாலை,உரும்பிராய்,கைதடி பிரதேச மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர். …
-
- 2 replies
- 455 views
-
-
VAT வரியை... 12 சதவீதமாக அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது ! VAT வரியை 12 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் அல்லாத பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான இறக்குமதி அல்லது மிகை வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவிவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியாகியுள்ளது. 2019 நவம்பர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டம் தொடர்பான வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டு இன்று முதல் புதிய வரைமுறை அமுலுக்கு வந்துள்ளது. https://athavannews.com/2022/12…
-
- 5 replies
- 232 views
- 1 follower
-
-
விலைவாசி உயர்வு: இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி உலக நாடுகளுக்கும் பரவுமா? பிரசாந்த் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விலைவாசி உயர்வால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? நீங்கள் மட்டும் அல்ல. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, போக்குவரத்து கட்டணங்களின் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு உலக நாடுகளில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்ற நாடுகளுக்க…
-
- 1 reply
- 385 views
- 1 follower
-
-
நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் விசேட உரைக்கு தயாராகும் பிரதமர்! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவர் அதன்போது தகவல்களை வெளியிடவுள்ளார். தற்போது அரச வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்கு கொண்டு வருவதற்காக விசேட வேலைத்திட்டங்களை நிதி அமைச்சு முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொருட்கள், சேவைகள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. http://www.samakalam.com/நாட்டின்-நிதி-நிலைமை-தொட/
-
- 1 reply
- 146 views
- 1 follower
-
-
ஜனாதிபதியை எங்கள் பிரதிநிதிகள் எவரும் சந்திக்கவில்லை - கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை தாங்கள் சந்தித்ததாக வெளியான தகவல்களை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக தெரிவித்து இரண்டு பௌத்தமதகுருமார் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கேட் ஜீரோ அல்லது அரகலய அல்லது கோட்டா கோ கமவை சேர்ந்த எவரும் ஜனாதிபதியை சந்திக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்களின் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வீட்டிற்கு செல்லவேண்டும் என்பதே எங்களது முக்கிய வேண்டுகோள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை சேர்ந்த ரண்டிமல் கமகே தெரிவித்துள்ளார். காலிமுகத்திட…
-
- 0 replies
- 269 views
-
-
ஒரே நாடு, ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின்... பதவிக்காலம் நீடிப்பு. ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் கடந்த 27 ஆம் திகதி நிறைவடைந்த நிலையிலேயே தற்போது அதன் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1285026
-
- 0 replies
- 192 views
-
-
வவுனியாவில் மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு 0 0 வவுனியா கணேசபுரம் 8 ஆம் ஒழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ராசேந்திரன் யதுசி (வயது–16) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் தாய் தந்தையை இழந்த நிலையில் மாமனாருடன் வசித்து வந்துள்ளார். நேற்று நண்பகல் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதயைடுத்து குறித்த சிறுமியை தேடிய உறவினர்கள் காணாது நெளுக்குளம் பொலிஸ் நில…
-
- 8 replies
- 724 views
- 1 follower
-
-
ஆட்சியாளர்களை... இலக்கு வைக்கும், சீனாவின்... புதிய முயற்சி? இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தத்துடன் தான் ‘இராஜதந்திர உறவுகள்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், சீனா தனது கனவுத் திட்டமான ஒரே பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியினுள் இலங்கையை உள்வாங்குவதற்கு கடுமையான பிரயத்தனம் செய்தது. அதில் வெற்றியும் கண்டது. இதற்காக சீனா பல விலைகளை கொடுத்தது. குறிப்பாக, கூறுவதானால் அரசியல்வாதிகளுக்கு இலவச பயிற்சிப்பட்டளைகள் என்ற பெயரில் சீனப்பயணங்கள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னெடுத்த…
-
- 0 replies
- 271 views
-
-
திங்கட்கிழமை முதல், பேருந்து... சேவையில் ஈடுபடாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை! அரசாங்கம் இந்த வாரம் டீசல் வழங்குவதற்கு முறையான ஏற்பாட்டைச் செய்யாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நாட்டில் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்று நான்கில் ஒரு பங்கு பேருந்துகளே டீசல் வரிசையில் நிற்கின்றன. டீசல் பிரச்சினை காரணமாக 3,500 பேருந்துகளே நாடளாவிய ரீதியில் தற்போது சேவையில் ஈடுபடும் நில…
-
- 0 replies
- 257 views
-
-
அமைச்சுப் பதவிக்காக... பிரதமரின் வாசஸ்த்தலம் முன்பாக, பாய்போட்டு படுத்திருக்கும் எம்.பிக்கள்! மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காமல் இராஜாங்க அமைச்சு பதவி தங்களுக்கு வழங்க கூறி மட்டக்களப்பு இரண்டு அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாசஸ்த்தலம் முன்பாக பாய் போட்டு படுத்து கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரில் நேற்று (புதன்கிழமை) எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துடன் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது. மட்டக்களப்பு நகரில் கடந்த ஏழு தினங்களுக்கு மேலாக எரிவாயுவினை எதிர்பார்த்துக்காத்திருக…
-
- 0 replies
- 265 views
-
-
அரசியல் – பொருளாதார, நிலைமையை தீர்க்க... இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து, முன்மொழிவு! தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய சுருக்கமான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்தே இந்த முன்மொழிவுகள் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு நட்பான புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வ…
-
- 0 replies
- 138 views
-
-
மஹிந்தவை... இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு, அழைப்பு! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “எனது நண்பரும் இலங்கைத் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வருமாறும் டெல்லியில் பொதுக் கூட்டத்தில் பேசவும், இந்து மற்றும் புத்த கோயில்களுக்குச் செல்லவும் அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளேன். அவர் பருவமழைக்கு முன்னர் ஜூன் மாதத்தில் நாட்டுக்…
-
- 0 replies
- 145 views
-
-
சிறு போகத்திற்கு... தேவையான உரத்தை, வழங்குவதை துரிதப்படுத்த... இந்தியப் பிரதமர் இணக்கம் – ஜனாதிபதி! நாட்டில் எதிர்வரும் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவியுடன் வழங்கப்படும் இந்த உரமானது நாட்டிற்கு கிடைக்கப்பெறும் தினத்திலிருந்து 20 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பி…
-
- 0 replies
- 177 views
-
-
வன்முறைச் சம்பவங்கள் குறித்து... ஆராய, விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார் ஜனாதிபதி! நாட்டின் பல பகுதிகளில் 2022.03.31 முதல் 2022.05.15 வரை இடம்பெற்ற தீ வைப்பு, கொள்ளை, கொலை உள்ளிட்ட அனைத்து வகையான சொத்து சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி வழக்கறிஞர் பி.பி.அலுவிஹார தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது. அதன்படி, ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் சிர…
-
- 0 replies
- 128 views
-
-
வைத்தியசாலையில்... தஞ்சம் புகுந்தார், துமிந்த சில்வா: கைது செய்ய விரைந்த சி.ஐ.டி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிட் ஒன் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா வைத்தியசாலையில் வார்டு 18ல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவரை கைது செய்வதற்காக சி.ஐ.டி.யி அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட அவரை மீண்ட…
-
- 1 reply
- 384 views
-
-
பொருளாதார நெருக்கடி ; மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் நெருக்கடி (இராஜதுரை ஹஷான்) பொருளாதார நெருக்கடி காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை உட்பட ஏனைய மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கான உணவு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் துரிதகரமான செயற்படுத்த வேண்டும் என மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். பொருளாதார நெருக்கடி மனிதர்களுக்கு மாத்திரமல்ல,விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிருகங்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவ…
-
- 3 replies
- 315 views
-
-
துமிந்த சில்வா... கைதானார். இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார். உடல் நலமின்மையை காரணம் காட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிபெற்ற அவரை, அங்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரைக் கைது செய்து சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (31.05.22) உத்தரவு பிறப்பித்தது. துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு, உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் 18 ஆ…
-
- 0 replies
- 544 views
-
-
மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு – முழு விபரம்! பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயினாலும், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாயினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1284938
-
- 2 replies
- 192 views
-
-
சஜித்.... காகத்திற்கு, பாதுகாவலனாகவும் செயற்படுகிறார் – பாலித ரங்கேபண்டார எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன் கதவின் ஊடாகச் சென்று பொதுமக்களுக்குப் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும் அவர் பின் கதவு வழியாக பசில் ராஜபக்ஷவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் வேடத்தில் மாத்திரமல்ல காக்கை பாதுகாவலனாகவும் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் பிரதிநிதிகள் நடத்திய கலந்துரையாடலின்போதே பாலித ரங்கேபண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “21ஆவது திருத்தச் சட்டத்த…
-
- 0 replies
- 309 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... வழங்கப்படும் உணவு தொடர்பாக... நாளை தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டமொன்று நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போதே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/20…
-
- 0 replies
- 230 views
-
-
இன்றைய... நாணய மாற்று, விகிதம் ! இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்கள் படி டொலரின் விற்பனை விலை 365.09 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை இன்று டொலரின் கொள்வனவு விலை 355.77 ரூபாய் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. டொலரின் விற்பனை விலை நேற்று (31) 365.74 ரூபாயாக பதிவாகிய நிலையில் ரூபாயின் மதிப்பு 65 சதம் மேலும் உயர்ந்துள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 445.60 ரூபாயாகவும் விற்பனை விலை 461.11 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்விலை 381.42 ஆகவும் விற்பனை விலை 392.25 ரூபாயாகவும் அவுஸ்ரேலிய டொலரின் கொள்ளவில்லை 252.69 ஆகவும் விற்பனை விலை 264.07 ஆகவும் பதிவாகியுள்ளது. https://athavann…
-
- 0 replies
- 281 views
-