ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
உலக வங்கியிடமிருந்து.. நிதியுதவி – பெட்ரோலினை கொள்வனவு செய்வது குறித்து, அவதானம்? உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர் நேற்று கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் எரிபொருள் கொள்வனவுக்காக பயன்படுத்த முடியுமா என ஆராய்வதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1282494
-
- 0 replies
- 132 views
-
-
கோதுமை மாவின் விலையை.. 35 ரூபாயினால், அதிகரிக்க நடவடிக்கை! ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையிலேயே இலங்கையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1282480
-
- 0 replies
- 140 views
-
-
‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர், டான் பிரியசாத் கைது! ‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு எதிரே நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக சாட்சியங்கள் ஏதும் இருப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நாடாளுமன்ற உறு…
-
- 0 replies
- 159 views
-
-
மொரட்டுவை மேயர்... சமன் லால் பெர்னாண்டோ, டான் பிரியசாத் உள்ளிட்ட பலர் கைது ! கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 07 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவக்கை பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். இதேவேளை ‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத் இன்றும் மாநகரை சபை ஊழியர்கள் இருவர் நேற்றும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 143 views
-
-
தொழிலை... தொடர்ந்தும், நடத்திச் செல்ல முடியாத நிலை – அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் கவலை 31 SHARES 1k VIEWS Share on FacebookShare on Twitter வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவ…
-
- 0 replies
- 148 views
-
-
எரிபொருள் விலை... மீண்டும், அதிகரிக்கப்படுகின்றதா? எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது. இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என ஐஓசி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1282590
-
- 0 replies
- 112 views
-
-
ராஜபக்சேக்களுக்கு அடுத்த ஆப்பு தயாராகிறது சண்டே லீடர் எடிட்டர், லசந்தா விக்கிரமதுங்கவின் விசாரணை நெதர்லாந்தின், ஹேஜ் நகரத்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் (People’s Tribunal) சத்தமில்லாமல் ஆரம்பமாகி உள்ளது. மே 12ம் திகதி ஆரம்பமான இந்த விசாரணையில், இந்த விசாரணையை நடாத்தி, இலங்கையில் இருந்து தப்பி ஓடிய, போலீஸ் ஆய்வாளர் நிசாந்த சில்வா, தனது விசாரணையின் முடிவாக, (உக்கிரைன் நாட்டு) மிக் விமான ஊழலை வெளியிட்டமையினாலே லசந்தா படுகொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்தார். லசந்தாவின் கொலை, கீத் நெய்யர் என்னும் பத்திரிக்கையாளர் கடத்தி தாக்கப்படமை, கிரிசாந்த கூரே எனும் வர்த்தகர் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டமை அனைத்து தொடர்பில், சம்பவங்களை நடாத்திய நபர்களின் தொலைபேசிகள் ஆய்வ…
-
- 3 replies
- 666 views
-
-
பிரதமர் ரணிலின், நடத்தை... வெட்கக் கேடானது – சுமந்திரன் எதிர்க்கட்சி சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் பேசிய அவர், ஜனாதிபதியை யார் பாதுகாக்கிறார்கள், யார் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் என கூறினார். ஜனாதிபதிக்கு எதிரான இந்த பிரேரணை தயாரிக்கப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியில் இருந்த பிரதமர் அதற்கு ஆதரவு என கூறியதாகவும் தெரிவித்தார். பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒருகொள்கையோடும் பிரதமர் பதவி கிடைத்த பின்னர் இன்னொரு கொள்கையை கொண்டுள்ளார் என்றும் சுமந்திரன் க…
-
- 6 replies
- 726 views
- 1 follower
-
-
பிரதமர் அலுவலகத்தின், செலவீனங்களை குறைக்க... தீர்மானித்தார் ரணில்! எதிர்வரும் ஜூன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பிரதமர் அலுவலகத்தின் சேவைக்காக வேறு அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டிருந்த 26 பணியாளர்கள் அவர்களது நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 16 வாகனங்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை நிறை…
-
- 1 reply
- 211 views
-
-
பாதிக்கப் பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... புதிய வீடுகள்! நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போது பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வன்முறைச் வம்பவங்களின்போது, 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களுக்கு விரைவாக புதிய வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு …
-
- 6 replies
- 446 views
-
-
ஜனாதிபதிக்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை: மீண்டும், ஆளும்தரப்பு... வாக்கெடுப்பில் வெற்றி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகைக்காக நிலையிறக் கட்டளையை இடைநிறுத்துவதா இல்லையா என்பதை கண்டறிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது. ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார். இதற்கு சபை முதலவர் தினேஷ் குணவர்தன கடும் அதிருப்தியை வெளியிட்ட நிலையில் நிலையிறக் கட்டளையை இடைநிறுத்துவது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு எதிராக... பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன் ஆகியோர் வாக்களித்தனர். அந்தவகையில்…
-
- 2 replies
- 208 views
-
-
வடக்கு, கிழக்கு ஆயர்கள் விடுத்துள்ள விசேட கோரிக்கை அமைதியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டமைக்கு கூட்டாகக் கண்டங்களை தெரிவித்துள்ள வடக்கு கிழக்கு ஆயர்கள், மே 18 நினைவேந்தலை அனைவரும் முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மனுவேல் பெர்ணான்டோ, மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா, திருமலை ஆயர் நோயல் இம்மானுவேல் ஆகியோர் இவ்வாறு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள கூட்டுக்கோரிக்கை ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மே மாதம், இலங்கையில் முரண்பாடான உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.வடக்கு-கிழக்கு தமிழினப் படுகொலையில் இறந்தவர்களை நி…
-
- 0 replies
- 293 views
-
-
தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கும் கட்டமைப்பை உருவாக்காவிடின் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது - கஜேந்திர குமார் (எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்) இன அழிப்பிற்கு காரணமானவர்கள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும். தூக்கிலிடப்பட வேண்டும். தமிழர் இன அழிப்பிற்காக கால்கோளிட்ட ரணில் விக்கிரமசிங்க சமாதான ஒப்பந்தத்தின் ஊடாக விடுதலை புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தி, இராணுவத்தை பலப்படுத்தி இராணு தீர்வினை நோக்கி சென்றார். ஒற்றையாட்சி அரசியலமைப்பினை மாற்றி தமிழ் தேசியத்தை அங்கிகரிக்கும் கட்டமைப்பு உருவாக்கப்படாவிடின் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கஜேந்திர குமார் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன…
-
- 0 replies
- 291 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பம்! கதிர் May 18, 2022 #முள்ளிவாய்க்கால் மண்ணில் நூற்றுக்கணக்கான மக்களுடன் #முள்ளிவாய்க்கால்இனப்படுகொலை #நினைவேந்தல் நிகழ்வு 10.29 மணிக்கு உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது. https://newuthayan.com/308-2/
-
- 0 replies
- 220 views
-
-
இன்னும்... இரண்டு நாட்களுக்கு, பெற்றோல் கிடைக்காது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்: அரசாங்கம். நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1282466
-
- 0 replies
- 157 views
-
-
வலி கிழக்கு பிரதேச சபையில்... முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை ஈகைச் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது. இன்று (புதன் கிழமை) (மே 18) காலை 7 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபை உறுப்பினர்கள் பணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தனர். இவ் அஞ்சலியைத் தொடர்ந்து தவிசாளர், மற்றும் சபையின் உறுப்பினர்கள் செல்வதிசைநாயகம் தவநாயகம் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். இவ் அஞ்சலியுரைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமைகளுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச…
-
- 0 replies
- 136 views
-
-
முள்ளிவாய்க்கால் தினம் – நீதியும் பொறுப்புக்கூறலும், இன்னும் மறுக்கப்படுகின்றன: சாணக்கியன் நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவ தினத்தை முன்னிட்டு ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உயிர்களையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் நினைவு கூர்கிறோம். நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன. பொறுப்பாளர்கள் இன்னும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறு ந…
-
- 0 replies
- 206 views
-
-
யாழ். திருநெல்வேலி பகுதியில்... இடம்பெற்ற விபத்தில், மூவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 17, 23 மற்றும் 25 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்…
-
- 0 replies
- 174 views
-
-
மூன்று தசாப்த கால யுத்தம், நிறைவடைந்து... இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த்தி! நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று தசாப்த காலமாக இந்தப் போர் இடம்பெற்றிருந்தது. போரின் முடிவில் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றதாக அறிவித்து போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இறுதிப் போரின்போது நாற்பதாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. எவ்வாறிருப்பினும் இந்த யுத்தத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்…
-
- 0 replies
- 318 views
-
-
நாடாளுமன்றம்... மொட்டுக் கட்சிக்கு, மாத்திரம் உரியது அல்ல – தினேஸ் குணவர்த்தனவிடம் தெரிவித்தார் சாணக்கியன்! நாம் கதிரைகளுக்காக நாடாளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் சபைத்தலைவர் தினேஸ் குணவர்த்தனவிற்கு இடையில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்றன. இன்றைய நாடாளுமன்ற அமர்விற்கு தலைமை தாங்கிய சபாநாயகர், ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது, தமக்கு அடுத்ததாக நாடாளுமன்றத்துக்கு தலைமை தாங்குவதற்காக தன்னை அழைத்த போதும், அவைத் தலைவர் தினேஸ் குணவர்த்தன, அதனை…
-
- 0 replies
- 99 views
-
-
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – தேசபந்துவிடம், இன்று காலை ஒரு மணிவரை 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இன்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்குத…
-
- 0 replies
- 130 views
-
-
கைது செய்யப்பட்ட... பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோர் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் இருவரும் செய்யப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1282406
-
- 0 replies
- 129 views
-
-
நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடவுள்ளது – அண்மைய நிகழ்வுகள் குறித்து விவாதம்! நாடாளுமன்றம் சபாநாயகரின் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. நாட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொடர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதம் இன்றும் நடைபெறவுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1282398
-
- 0 replies
- 141 views
-
-
சமையல் எரிவாயுவை... தரையிறக்கும் பணிகள், தாமதம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! சீரற்ற வானிலை காரணமாக சமையல் எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, மறு அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும்படியும் தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது வரையில் 7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது. இதற்கமைய, நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து 2,800 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கும் பண…
-
- 0 replies
- 116 views
-
-
இப்போது... நான், எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று... எனக்குத் தெரியவில்லை – ரணில் நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இப்போது தான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் என்னால் பங்கேற்க முடியாது ஆளும் கட்சியின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. இன்று நாடாளுமன…
-
- 4 replies
- 345 views
-