ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் கிடையாது என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு காணி அதிகாரம் முக்கியமானதொரு அடிப்படை காரணம். வடகிழக்கின் இனவிகிதாசாரத்தை மாற்றக்கூடிய வகையில், அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தமிழ்-சிங்களத் தரப்பிடையே பல உடன்பாடுகள் செய்யப்பட்…
-
- 0 replies
- 724 views
-
-
சில தினங்களாக பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரத்திற்கு முதல்வர் விக்னேஸ்வரன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். விசாரணை அறிக்கையில் பெயர் குறிபிடப்பட்டுள்ள விவசாய அமைச்சரான பொ.ஜங்கரநேசனும், கல்வி அமைச்சரான குருகுலராஜாவும் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று விக்னேஸ்வரன் அறிவித்திருக்கின்றார். அதேவேளை ஏனைய இரண்டு அமைச்சர்களான சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் மீதும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் அவர்கள் இருவரும், அவர்கள் மீதான விசாரணை முடிவடையும் வரையில், தமது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு நிலையில் இருக்க வேண்டுமென்றும் விக்னேஸ்வரன் கட்டளையிட்டிருக்கின்றார். இதனை மீறினால் …
-
- 0 replies
- 438 views
-
-
ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் - ததேகூவுக்குள் சர்ச்சை வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இ…
-
- 23 replies
- 1.9k views
-
-
போருக்குப் பின்னரான... முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்தது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், அமைதி மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார். இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அந்த …
-
- 0 replies
- 223 views
-
-
"தமிழ் ஊடகங்களில் வந்த தகவல்கள் போல் முகாம் தமிழர்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை. தங்கள் ஊருக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே தவிர வேறுஎந்த கோரிக்கை யையும் முன்வைக்க வில்லை." என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பிக்கள் குழு தெரிவித்துள்ளது. முகாம்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியை சர்வதேச ஊடகங்களுக்கும், இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகளுக்கும் தொடர்ச்சியாக மறுத்துவரும் இலங்கை அரசு, தமிழக நாடாளுமன்றக் குழுவிற்கு மட்டும் அனுமதி வழங்கியிருந்ததமை குறிப்பிடத்தக்கது. முகாம்களைப் பார்வையிட்ட தமிழகக் குழுவின் சார்ப்பில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் யாவும், …
-
- 4 replies
- 978 views
-
-
அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு... சாணக்கியன் பாவிக்கும் ஆயுதம் மண் – வியாழேந்திரன் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக மையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடைசியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் மண் அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். நாடாளுமன்…
-
- 0 replies
- 146 views
-
-
இன்று காலை மகிந்த அவர்கள் இரு நாள் விஜயமாக வியட்னாம் சென்றுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வெளினாட்டு அமைச்சு வியட்னாம் சென்று இருதரப்பு வாணிப மற்றும்தொழில் நுட்ப ஒப்பந்தங்கள் பற்றி பேசியுள்ளனர். தன் தொடர்ச்சியாகவே சில ஒப்பந்தங்களில் கைசாத்திட மகிந்த செல்வதாக கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 525 views
-
-
காணாமற்போனோரைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறுகின்றது : 16 அக்டோபர் 2013 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமற்போனோரைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்டன. காணாமற் போன சுமார் 1000 பேர் பற்றிய விவரங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன. இந்தப் பதிவு நடவடிக்கை தொடர்ச்சியாக இன்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்று மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். காணமற் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருந்தது. இதற்…
-
- 0 replies
- 265 views
-
-
காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என கண்டறிந்து கூறவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிந்து கூறவேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும் அதிலிருந்து விலகிச்செல்ல முடியாது என காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். காணாமல்போனோரின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலைமையில் அதுதொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், …
-
- 1 reply
- 263 views
-
-
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் – ஐ.தே.க. நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியானது தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வருவதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கியத் தேசியக் கட்சியின் கருத்துப்படி, எந்தவொரு புதிய சட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் அதன் பின்னர், நீதி அமைச்சின் மற்றும் குறிப்பாக சட்டமா அதிபரின் உதவியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தெ…
-
- 0 replies
- 139 views
-
-
பொருத்துவீடு: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு பணிப்பு! கோப்புப் படம் வடக்கின் 5 மாவட்டங்களிலும் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு மாகாணத்திலுள்ள 5 மாவட்டச் செயலர்களுக்கும் மீள்குடி யேற்ற அமைச்சு பணித்துள்ளது. முதற்கட்டமாக 5 ஆயிரத்து 400 பொருத்து வீடுகளை அமைக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தில் போர் காரணமாக வீடுகளை இழந்து வாழும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாகவுள்ளன. இந்த நிலையில் வடக்கு–கிழக்கில் 60 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைத்து வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்…
-
- 0 replies
- 378 views
-
-
சரத்பொன்சேகாவின் பாதுகாப்பு வாகனத்தினை அவரது பாதுகாப்பு பிரிவினரின் வளாக கட்டிடத்தில் இருந்து இராணுவ பொலிசார் அகற்ற முயன்றனர். இதனை தொடர்ந்து பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் சரத்பொன்சேகாவுக்கு அறிவித்தனர். உடனடியாக சரத் பொன்சேகா சம்பந்தப்பட்ட இராணுவ பொலிசாருடன் நேரடியாக பேசினார். தனக்கு இந்த வாகனம் தேவை எனவும் கூறினார். அதனை தொடர்ந்து தாம் மேலிடத்து கட்டளையின் படியே வந்ததாகவும் அதற்காக வருந்துவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளனர். சரத்பொன்சேகா மீதான நடவடிக்கைக்கு கோத்தபாயவின் ஒரு பரீட்சாத்த முயற்சியாக இருக்கலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 813 views
-
-
செனல் - 4 தொலைக்காட்சியின் கெலம் மக்கரேக்கு இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்கியமை அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும். இதனை எதிர்க்கின்றோம். மெக்கரே அத்து மீறி செயற்பட்டால் உடனடியாக அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் சேதப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் சென்றால் அது இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமையும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், செனல் 4 தொலைக்காட்சியின் கெலம் மக்கரே இலங்கைக்கு எதிரான செய்திகளையே வெளியிட்டு எமது நாட்டை அகௌரவப்படுத்தியவர். அண்மையிலும் சோடித்த தகவல்களுடன் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சித்திரிக…
-
- 0 replies
- 630 views
-
-
‘நான் நன்கறிவேன்’ அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித சேனாரத்ன பதிலளித்தார். கேள்வி: 2008ஆம் ஆண்டு இளைஞர்கள், காணாமல் போன விடயம் தொடர்பில் இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவ்வாறு குற்றம் சுமத்த முடியுமா? பதில்: சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடத்தப்பட்டன. தமிழ் இளைஞன் ஒருவர், மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்கு, செல்லவிருந்த முதல்நாள், நண்பர்களுடன் விருந்துபசாரத்தில், கலந்துகொண்டார். அதில், கலந்துகொண்டவர்களையே கடத்தி, கப்பம் கோரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 397 views
-
-
மாவீரர் தினத்தை தடை செய்ய வேண்டும் – சரத் பொன்சேகா மாவீரர் தின அனுஷ்டிப்பை இலங்கை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். மேலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், 2 ஆயிரத்து 500 விடுதலைப் புலிகள் 75 ஆயிரம் இந்திய இராணுவத்தையே தோற்கடித்தார்கள் என்றும் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தம் இல்லாத இந்த சூழ்நிலையில், இராணுவத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என சில தரப்பினர் இங்கு குறிப்பிடுகிறார்கள்…
-
- 7 replies
- 873 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதியும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டுமென சுதந்திர ஊடக அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. freemediaஜெனரல் சரத் பொன்சேகா ஊடக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சரத் பொன்சேகா ஊடகங்களின் மீது அடக்குமுறையை பிரயோகித்ததாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. சரத் பொ…
-
- 0 replies
- 595 views
-
-
சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர் யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனா…
-
- 1 reply
- 329 views
-
-
நீலப்படையணியினர் ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்சே பெரும் அதிருப்தி அடைந்திருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் சமல் ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத் தலைவராவார். இந்த நிலையில், இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பும் அதன் இணை அமைப்பான நீலப்படையணியின் தலைவரான நாமல் ராஜபக்சே நேற்று முன்தினம் தங்காலையில் விசேட கூட்டமொன்றை நடத்தியதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தன்வசப்படுத்தியுள்ளார். நாமல் ராஜபக்சேவின் இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்சேவின் ஆசீர்வாதமும் கிடைத்திருப்பதாக …
-
- 0 replies
- 1.3k views
-
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தமிழ் மக்களுக்கு முழு உரிமை உண்டு. அதேபோன்று சிங்கள மக்களும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு முன்வர வேண்டும். இந்த நாட்டின் அரசமைப்பின்படி அனைவரும் தமக்குப் பிடித்தவற்றை செய்வதற்கு உரிமையுண்டு. மாவீரர் தினத்துக்கு பயங்கரவாதிகள்தினம் என முத்திரைக் குத்தியது இனவாத அரசியல்தான். இது பிழையான செயல். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் இந்த உரிமையை அரசியல் சுயநலம் கொண்டு தடை செய்யக் கூடாது இவ்வாறு ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினரும், சகோதரத்துவத்துக்கான மக்கள் அரணின் உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்து;ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 'போர் முடிவடைந்து தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவு…
-
- 1 reply
- 536 views
-
-
விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார் என்று வைகோ பேசினார். தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், ஈழத்தில் பல ஆயிரம் குழந்தைகள், பெண்கள், தமிழர்களைக் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறார். பிரதமர், ஜனாதிபதி போன்றோர் செல்லும் பிரதான வாயில் வழியாக அவர் வந்து செல்கிறார். ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் இருந்து வந்த அந்நாட்டின் எம்.பி., சிவாஜிலிங்கத்தை மாநாட்டுக்கு வரக் கூடாது என்று கூறி, தமிழக அரசு திருப்பி அனுப்புகிறது. இத்தனை துயர…
-
- 5 replies
- 1.3k views
-
-
அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளது ; சிவஞானம் சிறீதரன் (எம்.நியூட்டன்) இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் வரவேற்கும் நிகழ்வு பூநகரி பிரதேச சபையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சின்னக் குழந்தைகளைக்கூட பட்டினி போட்டு சாகடிக்கும் ஒரு நிலையை இந்த அரசாங்கம் உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. குடிக்கும் பால்மா கூட அளவிற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது. சொந்த…
-
- 0 replies
- 232 views
-
-
வெள்ளை நிறவெறி ஒடுக்குமுறையிலிருந்து தென்னாபிரிக்கா மக்களுக்கு விடுதலை தேடித்தந்த – கறுப்பின மக்கள் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சிய – மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகிலே விடுதலை உணர்வின் முழு வடிவமாக மண்டேலா அவர்கள் விளங்கினார். ஆடுகள், மாடுகள் போல் ஒரு காலத்தில் அடிமைகளாக ஏலத்தில் விலைகூறி விற்கப்பட்ட ஆபிரிக்காவின் கறுப்பின மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மனவுறுதியையும் உருவாக்கி 'எங்களுக்கும் மானமுண்டு, வீரமுண்டு – எங்களுக்கும் நாடு உண்டு, அரசு உண்டு' என வெள்ளை இன ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடச்செய்த ஆயிரம் வலிமை கொண்ட ஓர் பேராற்றலின் குறியீடு மண்டேலா என…
-
- 0 replies
- 265 views
-
-
ஒரு நாள் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்ததும், முன்பின் தெரியாத இரண்டு பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களை எனது கணவரின் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உள்ளே அழைத்து உட்கார வைத்த போது அவர்களை என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். நான் கத்தியதால் தப்பியோடினர். ஆனால், போவதற்கு முன்பு மீண்டும் வருவோம் என்று மிரட்டியபடியே சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, பயத்துடனும், எந்த ஆதரவும் இல்லாத நிர்கதியான தமிழ் பெண் என்ன செய்வது என்று தெரியாமல், தனது இரண்டு பிள்ளைகளை கூட்டிக் கொண்டு, தனது உடமைகளை எடுத்துக் கொண்டு போர் நடந்த வடக்குப் பகுதிக்கு சென்றுவிட்டாள். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிரான போர் வேண்டுமானால் ஓய்ந்திருக்கலாம…
-
- 1 reply
- 713 views
-
-
நெடுந்தீவு கடற்பரப்பில் 16 தமிழக மீனவர்கள் கைது! February 8, 2022 நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்றைய தினம் (07.02.22) இரவு கைது செய்யப்பட்டதுடன், இவர்களது , மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நீரியல்வள திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எட…
-
- 5 replies
- 428 views
-
-
மாபெரும் போராட்டத்திற்கு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்பு! வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி இந்த அழைப்பினை விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. இலங்கை அரசிடம் தீர்வு கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நாங்கள் போராடி வருகின்றோம். …
-
- 1 reply
- 261 views
-