ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
'எப்போது போவார் பிரணாப் முகர்ஜி?' 'இலங்கை இனப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில் ஒரு வடிவமைப்பை நாங்கள் ஏற்படுத்தி னோம். தனிச்சிறப்பு மிக்க இனப்பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படை ஆவலை நிறைவேற்றுவது; அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை நிர்வகிக்கும் வகையில் அரசியல் சுயாட்சி; இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான அரசு சக்தி; இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடமாக அறிவித்தல்; இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசில் தமிழை ஒருஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ள டக்கிய ஒப்பந்தம் இது.' - இவை இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து 1987 ஜூலை 31-ம் நாள், அன்றைய பிரதமரான ராஜீவ்காந்தி மாநிலங்கள…
-
- 9 replies
- 1.7k views
-
-
Mohan Peiris nominated as next Chief Justice MONDAY, 14 JANUARY 2013 14:47 Mohan Peiris, a former Attorney General and currently Legal Adviser to the Cabinet of Ministers has been nominated by President Mahinda Rajapaksa to be the next Chief Justice of Sri Lanka. His name has been submitted to the Parliamentary Council headed by Speaker Chamal Rajapaksa under the 18th Amendment to the Constitution that replaced the Constitutional Council (17th Amendment) which vets names of those nominated to hold high office. The move comes in the wake of the controversial sacking of incumbent Chief Justice Shirani Bandaranayake by President Rajapaksa after a Parliamentary vote o…
-
- 0 replies
- 517 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க-அரசை வலியுறுத்துகிறார் சம்பந்தன் இலங்கையின் சட்டத்தில் இருப்பதற்கு, தகுதியற்ற சட்டம் என்று அரசாலேயே விமர்சி க்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல்கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சம்பந்தன், எதிர்வரு…
-
- 0 replies
- 281 views
-
-
யாழ். பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி இணையத்தள மகஜர் தயாரிப்பு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் இணையத்தள மகஜரில் கையெழுத்திடும் போராட்டமொன்று இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மகஜரில் கையெழுத்திட வேண்டுமாயின் http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் கையெழுத்திட முடியும் என்று மேற்படி சம உரிமை இயக்கம் அறிவித்துள்ளது. (படப்பிடிப்பு - நிசல் பதுகே) http://tamil.dailymirror.lk/2…
-
- 1 reply
- 278 views
-
-
விடுதலைப் புலி சந்தேகநபர் மரணம்: முன்னாள் இராணுவ வீரருக்கு தண்டனை முன்னாள் இராணுவ லுத்தினல் ஒருவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் 20 இலட்சம் ரூபா நஸ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட நிலையில் தப்பிச் செல்ல முற்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபர் ஒருவரை, கவனயீனமாக துப்பாக்கியால் சுட்டு அவரது மரணத்துக்கு காரணமானதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 1998ம் ஆண்டு பேதுருதுடுவ இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரே இவ்வாறு பலியானார். இதன்படி சம்பந்தப்பட்ட இராணுவ வீரருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீண்…
-
- 3 replies
- 590 views
-
-
சிறிலங்காவில் போர் நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
492 பேரை உள்ளடக்கிய சன் சீ கப்பல் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி கனாடவை சென்றடைந்தது. இதில், 380 ஆண்களும் 63 பெண்களும் 49 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இந்தநிலையில், கடந்த வாரத்தில் 50 பேர் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். 63 பேரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 23 பேர் தமது கோரிக்கையை மீளப்பெற்று கொண்டார்கள். 25 பேருக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 16 பேருக்கு நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இந்தநிலையில், சன் சீ கப்பலில் சென்றவர்களில் புகலிட கோரிக்கை அந்தஸ்து வழங்கப்பட்ட ஒருவரிமிருந்த அந்த உத்தரவு மீள பெறப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 408 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் `நாங்கள் ஒன்றும் புலி வாலல்ல! யானையின் முறுக்கிய தும்பிக்கை!' என்று அடிக்கடி காட்டி வருகிறார்கள் விடுதலைப்புலிகள். ''கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு முல்லைத்தீவுக்குள் நுழைவதற்காக கிளிநொச்சி அருகே தருமபுரத்திலிருந்து கிளம்பி வந்தது சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை. எறிகணை, எந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையுடன் கூடவே விமானப்படையின் `கிளஸ்டர்' குண்டுவீச்சும் துணை வர முன் நகர்ந்தது. அடிமேல் அடி வைத்து முன்னேறிய சிங்களப் படையை எதிர்கொண்டது வெறும் பதினைந்தே பேர் கொண்ட புலிகளின் படை. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக புத்தம்புதிய பி.எம்.பி.-1 டாங்கியைப் புலிகள் பயன்படுத்த 51 ராணுவத்தினர் பலி! 150 …
-
- 2 replies
- 2.6k views
-
-
துண்டுக் காணி கூட இன்றி 11,500 தமிழ்க் குடும்பங்கள் யாழ். குடாநாட்டில் ஒரு காணித்துண்டு கூட இல்லாமல் 11 ஆயிரத்து 500 தமிழ்க் குடும்பங்கள் நிரந்தரமாக வசிக்கின்றன என்று, வடமாகாணப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பதிவுகளிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரமே இது எனத் தெரிவிக்கும் அதிகாரிகள் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் தமிழ் மக்களுக்குக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் பொருட்டு காணிக் கச்சேரிகளை வடமாகாண காணி ஆணையாளர் அலுவலகம் நடத்தவுள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலுமுள்ள காணியற்றோரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய…
-
- 4 replies
- 471 views
-
-
அமைச்சர் ரிசாத் பதியூதீன் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு எந்தவித அறிவிப்பினையும் வழங்காது, ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அமைச்சர் பதியூதீன் செஷ் வரியை விதித்துள்ளார். அதன்படி எந்த அடிப்படையில் ரிசாத் செஷ் வரியை அறவீடு செய்தார் என ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டில் தற்போது ஏற்றுமதியினைக் கண்டு வரும் தேயிலை கைத்தொழிலை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினால் சிறு தேயிலை ஏற்றுமதியாளர்க அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். எமது நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமான வழிகளில் ஒன்றான தேயிலை ஏற்றுமதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்…
-
- 6 replies
- 554 views
-
-
'எழுக தமிழ்' நிகழ்வுக்கு 'நாம் ஆதரவு': இ.தொ.கா தெரிவிப்பு எம்.செல்வராஜா “எழுக தமிழ்” பேரணியில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நியாய பூர்வமான கருத்துகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறது என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். ஆகவே, முதலமைச்சரின் இம்முயற்சிகளுக்கு வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, முழு மலையக மக்களும் எத்தகைய கருத்து வேறுபாடுமின்றி அனைவரும் தத்தமது பூரண பங்களிப்புகளை வழங்க வேண்டியது, காலத்தின் அவசிய தேவையாக இருப்பதாவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 291 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணய குழுவில் தமிழர்கள் எவரும் இடம்பெறாமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்க அதிபர் தலைமையிலான இக்குழுவில் தேர்தல் தினைக்களம், புள்ளி விபரத் தினைக்களம், மாகாண உள்ளுராட்சி தினைக்களம் மற்றும் நில அளவை திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மொத்தமாக ஆறு பேர் இடம்பெறுவார்கள் என்று இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் வாழ்கின்ற போதிலும் அரசாங்க அதிபர் உட்பட நான்கு சிங்களவர்களும் இரு முஸ்லிம்களும் இந்தக்குழுவில் அங்கம் வகிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் புதன்கிழமை மட்டக்களப்பில் பத்திரிகையாளர்களிடம் தெர…
-
- 0 replies
- 424 views
-
-
நீர்வேலி விவகாரம்: வளர்ப்புத் தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் தனது 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி காலை, முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே சிறுமியைத் தாக்கிய தாய், பொ…
-
- 0 replies
- 311 views
-
-
தீவிரமடைந்துவரும் போராட்டங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி இலங்கையில் அப்பõவித் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் முன்னொரு போதும் இல்லாத அளவு தீவிரமடைந்து வரும் நிலையில், அவ ற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்கின்றது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என இவை நீடித்து வருகின்றன. இதேபோல், இலங்கையில் போர் நிறுத்தம்கோரி தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் 4 ஆம் திகதி புதன்கிழ மை பொது வேலை நிறுத்தத்திற்கு …
-
- 0 replies
- 913 views
-
-
வட மாகாண சபைக்கான பொதுத் தேர்தலை வடப் பகுதியில் வாழும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்துமாயின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் பொது எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில், வட மாகாண மக்களின் வட மாகாண சபைக்கான தேர்தல் விருப்பத்தை கருத்தில் கொண்டு தேர்தலை உடன் நடத்த வேண்டும். இதன் மூலம் மக்களின் பிரதிநிதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த …
-
- 1 reply
- 536 views
-
-
தாக்கினால் திருப்பி தாக்குவோம். தேரருக்கு எச்சரிக்கை
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கையில் சிங்கள அரசின் பீரங்கி தாக்குதலும் விமானங்களின் குண்டு வீச்சும் தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழர் களின் நெஞ்சங்களைத் தாக் கிக்கொண்டிருக்கிறது. தன் இனம் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கிறோமே என்ற கையறு நிலையில் இங்குள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள், வணி கர்கள், பொதுநல அமைப்பினர் எனப் பலரும் வேதனைப் படுவதுடன் தங்களால் முடிந்த அளவில் போராட் டங்களையும் நடத்தி வருகின்றனர். இலங்கைப் பிரச்சினை உச்சகட்டத்தில் உள்ள நிலையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த மனநிலை எப்படி இருக்கிறது என்பதையறிய களமிறங்கினோம். இதோ தமிழர்களின் இதயத்திலிருந்து வெளிப்படும் குரல்கள்... வேல்முருகன்- புலிவலம்-கடலூர் மாவட்டம்- இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவதைக் கண்டித்து அ.…
-
- 2 replies
- 1.2k views
-
-
-ஹேமந்த் போரின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மண் அணைகள் மற்றும் பதுங்கு குழிகளை அகற்றுவதற்கு 14 மில்லியன் ரூபாய் நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு உதவியாக படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. போரின்போது கிளிநொச்சி மாவட்டத்;தில் ஏற்படுத்தப்பட்ட மண் அணைகளை அகற்றுவது பற்றி ஆராயும் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. போரின்போது ஏற்படுத்தப்பட்ட மண் அணைகளும் பதுங்கு அகழிகளும் நீர் வாடிகாலமைப்பையும் நில அமைப்பையும் பாழாக்கியுள்ளன. இதனால் மழையினால் ஏற்படும் வெள்ளம் ப…
-
- 0 replies
- 281 views
-
-
(நா.தனுஜா) 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்த போதிலும், அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 முதலீட்டுத்திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வடமாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான தரவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதனுடன் இணைந்ததாக அவர் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, வடக்கில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கி…
-
- 0 replies
- 644 views
-
-
பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 326 views
-
-
சிறீலங்கா அரசு முன்னெடுக்கும் போரின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என, சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ரஜீவ் காந்தி பற்றி மணிசங்கர் ஐயர் எழுதியுள்ள நூல் பற்றி ஆய்வுக் கூட்டத்திற்கு இந்தியத் தலைநகர் டெல்லி சென்றுள்ள சந்திரிக்கா, அங்கு செய்தியாளர்கள் மத்தியில் இந்தக் கருத்தினை வெளியிட்டார். அத்துடன், அதிபர் மகிந்த ராஜபக்ச தன்டைய அறிவுரையைக் கேட்க மறுப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், இது தொடர்பாக தாம் கவலையடைந்திருப்பதாகவும் கூறினார். 1995ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் இருந்து ஐந்து இலட்சம் மக்களின் இடப்பெயர்வுக்கும், தனது இரண்டு முறை ஆட்சிக் காலத்த…
-
- 7 replies
- 1k views
-
-
வெளிநாடுகளில் பணியாளர்களாக சென்றுள்ள இலங்கையர்களின் நிதியே அரசாங்கத்தின் பிரதான வருமானமாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் நிதியினால் கிடைக்கின்ற வருமானம் மாத்திரமே தற்போது அரசாங்கத்தின் பிரதான வருமானமாக காணப்படுகிறது. எனினும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/54476
-
- 1 reply
- 330 views
-
-
தனக்கு கிடைத்த பதவி தொடர்பில் யோசிதவின் கருத்து பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக கடமையாற்ற தனக்கு அனுபவம் இருப்பதாக யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பதவி தனது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=135406
-
- 2 replies
- 1.1k views
-
-
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில்,2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவிருப்பதாக தெரிவித்தார். 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இம்முறை கழங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 270 பேர் பொறியியல் பீடத்திற்கு 405 பேர் என்ற ரீதியில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக…
-
- 2 replies
- 829 views
-
-
பிரணாப் முகர்ஜி சிரிலங்காவுக்கு அறிவுரை - புலிகளின் யுத்த நிறுத்த அழைப்பை மக்களை மீட்பதற்க்காக பயன்படுத்துங்கள். அவரது கருத்துக்களில் சில... * புலிகளின் இந்த யுத்த நிறுத்த அழைப்பு, ஆயுதக்களைவுக்கான விருப்பமாகவும் இருக்கலாம். * இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிரிலங்கா சண்டையை இடைநிறுத்தலாம். * உடனடியாக மாட்டுப் பட்டிருக்கும் மக்களை "பாதுகாப்பான" வேறு இடத்திற்க்கு கொண்டு செல்வதற்க்கான திட்டத்தை வகுக்குமாறு இந்திய அரசாங்கம் சிரி லங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொ(ல்)ள்கிறது. "தமிழா, நீ சரணடை இல்லையெண்டால் செத்துப் போ" எண்ட ஒரே விடயத்த வேறு வேறு வாக்கியங்களில் சொல்லும் இந்தியாவின் கெட்டிதனத்துக்கு நிகர் இந்தியாவேதான். எல்லாம் அந்த "தேர்தல்" என்ற நாலு எழுத்து …
-
- 5 replies
- 1.3k views
-