Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அமைச்சரவை நியமனம் – ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில்... முறுகல்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கக் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களிடையே பல வாரங்களாக கடுமையான அரசியல் ஸ்திரமின்மை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பலர் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்து 11 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியுடன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அண்மைய அமைச்சரவை நியமனங்கள் மற்றும் அரச அமைச்சு நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் தெரிவினால் மாத்திரமே இடம்பெற…

  2. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்... தற்போதைய எண்ணிக்கை 116 – பெரும்பான்மையை, இழக்க வாய்ப்பு? நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரசாங்கத்திற்கு ஆதரவளித்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அறிவித்தனர். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பைசல் காசிம் நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். இதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த நில…

  3. 13ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்…

  4. கடனை மீளச்செலுத்துவதற்கு இலங்கைக்கு காணப்படும் இயலுமை தொடர்பில் ஆராய வேண்டும் - சர்வதேச நாணய நிதியம் (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு எந்தவொரு கடனையும் வழங்குவதற்கு, கடனை மீளச் செலுத்துவதற்கான உறுதிப்பாடு அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான மாற்றுத்திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பு தொடர்பில் வொஷிங்டன் சென்றுள்ள தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பிலான குழுவின் தலைவர் மஷிஹிரோ நொசாகி கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை மிக விரைவில் நிலையான முன்னேற்றப்பாதை நோக்கி கொண்டுசெல்வதற்கு சர்வதேச ந…

  5. இலங்கைக்கான.. அவசர மனிதாபிமான, உதவிகளை... வழங்குகின்றது சீனா! இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சும், சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகமையும் இந்த உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், அவ்வாறான உதவிகள் தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1277745

  6. காலி முகத்திடல் போராட்டம் : நீதிமன்ற அதிகாரத்தை கொழும்பு பிரதான நீதிவானுக்கு வழங்கவும் - பிரதம நீதியரசருக்கு கடிதம் (எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20) பத்தாவது நாளாகவும் காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார் நீதிமன்ற உத்தரவினைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை செய்கின்றமை தெளிவாகியுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற தலையீடு ஒன்றுக்கு பொலிஸார் முயற்சிக்கும் நிலையில், அந் நீதிமன்ற நடவடிக்கைகளை கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்காது, அவ்வதிகாரத்தை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அளித்து உத்தரவிடுமாறு பிரதம நீதியரசர் உ…

  7. யாழ். பல்கலையில்... முதன்முதலாக, உடற் கல்வியியலில் விஞ்ஞானமானி... சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme) நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ். பல்கலைக் கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி சி. சபா ஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் ப…

  8. கட்டாயமாக முகக்கவசம் அணிவதை... நீக்கியது, அரசியல் முடிவு அல்ல – சுகாதார அமைச்சு! கொரோனா கட்டுப்பாடு தொடர்பான நிபுணர் குழுவின் முடிவினைத் தொடர்ந்து கட்டாயமாக முகக்கவசம் அணிவதை தளர்த்துவதாக கூறிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, இந்த முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று பணிப்புரை விடுத்ததாக தெரிவித்தார். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொது போக்குவரத்து மற்றும் உள்ளக இடங்கள் தவிர மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை நீக்குவது அரசியல் முடிவு அல்ல என்றும் பேராசிரியர் நீலிகா மாளவிகே போன்ற தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய கொரோனா கட்டுப்பாட்டு நிபுணர் குழுவால் இந்த முடிவு…

  9. ’21’ ஆவது திருத்தச்சட்ட விவகாரம் – இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(வியாழக்கிழமை) விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 21ஐ கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1277729

  10. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக... அரச உத்தியோகத்தர்கள், பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக கவலை! எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அரச உத்தியோகத்தர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாத அரச உத்தியோகத்தர்கள் இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமைக்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1277706

  11. புதிய பிரதமரின் கீழ்... இடைக்கால அரசாங்கத்தை, நியமிக்கவும் – SLPPஇன் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்! அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கத் தவறினால் மனசாட்சிப்படி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர். கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த அவர்கள், ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மகஜரில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, வசந்த யாப்பா பண்டார, உதேனி கிரிந்திகொட, குமார…

  12. ரம்புக்கனையில்... அமுல் படுத்தப்பட்டிருந்த, ஊரடங்குச் சட்டம் நீக்கம் ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். எனினும், அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். எவ்வாறிருப்பினும் முச்சக்கர வண்டிக்கு குழுவொன்று தீ வைத்…

  13. மட்டு நாவலடியில்அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற அவரது பிள்ளைகளை அஞ்சலி செய்யவிடாது தடுத்தி நிறுத்திய பொலிசார் – ( திருக்கோவில் நிருபர்) மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் 34 நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தசென்றவேளையே தங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் …

  14. எரிபொருள் விலையேற்றத்திற்கு.. எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது... கண்ணீர்ப்புகை தாக்குதல் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனையில் முன்னெடுக்கப்படும் போராட்டதில் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். புகையிரத கடவையை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட பதட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1277386

  15. இலங்கையில் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள்‌ ஒத்தி வைப்பு- நாடாளுமன்றத்தில் தகவல் 20 ஏப்ரல் 2022, 05:12 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று (ஏப்ரல் 20) இலங்கையில் உள்ள நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். தள்ளி வைக்கப்பட்டுள்ள அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில்‌ ஏற்பட்டுள்ள சிக்கல்‌ நிலை காரணமாக சில மருத்துவமனைகளில் திட்டமிடப்‌பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகள்‌ ஒத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார் என தமிழன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில்‌ 14 உயிர்கா…

  16. பசில் ராஜபக்ஷவிற்கு... ஆசி வேண்டி, பூஜை வழிபாடுகள்! பசில் ராஜபக்ஷவிற்கு ஆசிவேண்டி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அத்துருகிரியவிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(புதன்கிழமை) போதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சரொருவரும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் களுத்துறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் உட்பட பலரும் இந்த பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. சில் ராஜபக்ஷவிற்கு நெருக்கமான சிலரும் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ தற்போது குணமடைந்துள்ள நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக குறிப்பிடப்படுக…

  17. தமிழர்களை... கொலை செய்யும் போது, சிங்கள மக்கள் வேடிக்கை பார்த்தது போன்று... நாங்கள் இருக்கமாட்டோம் – இரா.சாணக்கியன்! மனித படுகொலைக்கு எதிராக தற்போது சிங்கள மக்களுடன் ஒன்றினைந்துள்ளோம். படுகொலைக்கு இனி இடமளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் காலி முகத்திடல் பக்கம் சென்றால் சுவையான உணவு உண்டுவிட்டு வரலாம். சமிந்த லக்ஷான் என்ற இளைஞரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒ…

  18. நாட்டை மீட்டெடுப்பதற்காக... அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, வெற்றி பெறுவதற்கான... ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை – செந்தில் தொண்டமான் நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் மீண்டும் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மலையக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, இந்த அரசாங்கத்துடன் பயணிக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு மக்கள் ஆணை வழங்கினர். இந்நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்தே, இலங்கைத் தொழிலாளர் …

  19. மட்டக்களப்பை சேர்ந்த மூவர்... அகதிகளாக, தனுஷ்கோடியை சென்றடைந்தனர்! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று (புதன்கிழமை) அதிகாலை சென்றடைந்துள்ளனர். தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2022/1277559

  20. ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு... ஆளான, பிரதமர் ! ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com…

  21. ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு... உண்மையைக் கண்டறியவும்: நாமல் ரம்புக்கனை சம்பவம் குறித்து சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிய சாதாரண சோதனைகளை மேற்கொள்ள முடியும். முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காட்டும் காணொளிகள் வெளியாகின. இந்நிலையில் விசாரணைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் குற…

  22. பொலிஸார்... சட்டத்திற்கு முரணாக, எதையும் செய்யவில்லை : துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து... பொது பாதுகாப்பு அமைச்சர் ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விசாரணையை விரைந்து முடித்து அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் சட்டத்திற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்தில் அரசியல் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே செயற்பட்டதாகவும் ப…

  23. ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு: நீதிமன்றில் திரண்ட சட்டத்தரணிகள் ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக கேகாலை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் திரண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாவோம் என சாலிய பீரீஸ் நேற்று அறிவித்திருந்தார் https://athavannews.com/2022/1277634

  24. தவறை உணர்கிறேன் – பணத்தை திருடவில்லை – நாடாளுமன்றத்தை, அரசியல் அமைப்பை மதிப்பேன்! April 18, 2022 இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே இவ்விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய …

    • 11 replies
    • 693 views
  25. கொட்டகலையில்... வீதி மறியல், போராட்டம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் கொட்டகலை நகரில் இன்று (புதன்கிழமை) மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் படுத்தும், ஒப்பாரி வைத்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கொட்டகலை நகர வாசிகள், சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.