ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142874 topics in this forum
-
-
- 0 replies
- 1k views
-
-
ஆள் சேர்த்தவர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டவர் கேரளாவிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு ஆட்களைச் சேர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்துல் றஷீத் அப்துல்லா, அவரது தீவிரக் கருத்துகள் காரணமாக, இலங்கையிலுள்ள இஸ்லாமியப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டவர் என, இந்திய தேசிய புலனாய்வு முகவராண்மையின் குற்றச்சாட்டுப் பத்திரம் குறிப்பிட்டுள்ளது என்று, இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த நபர், கேரளாவைச் சேர்ந்த 22 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் சேர்வதற்குத் தூண்டுகோலாக இருந்தார் என, இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அப்துல்லாவுக்கும் சாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் விருந்தினர் உறவு …
-
- 0 replies
- 178 views
-
-
ஆள்கடத்தலை முறியடிப்பதற்கு பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்பட முன் வரவேண்டும். இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத முறியடிப்பு மற்றும் நாடு கடந்த குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராயும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: வங்காள விரிகுடா பிராந்தியத்திலுள்ள நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு கூட்டு உறவினை தமக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். தமது நாடுகளின் புலனாய்வுத்துறையை பலப்படுத்துவதுடன் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு கூட்டுறவினை பிராந்த…
-
- 0 replies
- 958 views
-
-
ஆள்கடத்தல் அரசு அனுசரணையுடன் ஆசியாவில் இலங்கை முதலிடத்தில்! தண்டனை விலக்குடன் ஊக்குவிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல் வல்வந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. அரசாங்கத்துக்கும் அதன் சார்பு அமைப்புகளுக்கும் எதிரானவர்களே கடத்தப்பட்டு காணா மற்போகச் செய்யப்படுகிறார்கள். இவற்றில் ஈடுபடுவோருக்கு தண்டனை விலக்கு அளிக்கப் படுகிறது. இவ்வாறு அறிவித்துள்ளது, ஹொங்ஹொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு. இன்று ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி, காணாமற்போனோர் சர்வதேச தினமாகும். அதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை யிலேயே ஆணைக்குழு மேற்சொன்ன தக வல்களை வெளியி…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆள்கடத்தல்கள், கொலைகள் பற்றி விசாரிக்க தனிநபர் ஆணைக்குழு. கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மனிதப் படுகொலை கள், கடத்தல்கள் ஆள்கள் காணாமற்போகும் சம்பவங்கள் பற்றி விசாரிக்கவென ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி மகாநாம தில கரட்ணவை தனிநபர் ஆணைக்குழுவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என நேற்று ஜனாதிபதி செயலகம் அறி வித்துள்ளது. கடத்தல்கள், காணாமற்போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு மக் கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இந்த ஆணைக்குழுவில் பொதுமக்கள் தமது முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மற்றும…
-
- 2 replies
- 1k views
-
-
ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த சட்ட மா அதிபர் திணைக்களம் முயற்சிக்கிறதா? நீதவான் கேள்வி… October 8, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த சட்ட மா அதிபர் திணைக்களம் முயற்சிக்கின்றதா? என கேள்வி எழுப்பிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, மனுதாரரின் வயதைக் கருத்திற்கொண்டு விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் குறித்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளில் இன்று (12) திங்கட்கிழமை இடம்பெற்ற முக்கிய சாட்சியப் பதிவின் போது, 5ஆவது பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்…
-
- 0 replies
- 388 views
-
-
சம்பந்தன் பங்கெடுக்கவிருந்த கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஆள்பிடிக்க சென்றிருந்த உள்ளுராட்சி தலைவர்கள் மீது வலி.வடக்கு முகாம் மக்கள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். இச்சம்பவத்தினை அடுத்து முகாம் தலைவர்களை மாவை சேனாதிராஜா கலந்துரையாட அழைத்திருந்த போதும் அச்சந்திப்பினை முகாம் மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் மருதனார் மடப் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சேர்ப்பதற்கு வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் உள்ள மக்களை அணிதிரட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி சுன்னாகம் பிரதேச சபைத் தலைவர் பிரகாஷ் மற்றும் சுகிர்தனும் முகாம் மக்களை கூட்டமைப்ப…
-
- 2 replies
- 553 views
-
-
ஆழ ஊடுருவும் அணி சிறிலங்காவின் இன்னுமொரு போர்க்குற்ற சாட்சி ஆழ ஊடுருவும் அணியால் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் குறிப்பாக மருத்துவ வாகனங்கள் அவர்களால் குறிவைக்கப்பட்டன. நெடுங்கேணி வைத்தியசாலைக்கான ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டதில் மருத்துவர் உட்பட ஐந்து ஊழியர்கள் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள் ஆனைவிழுந்தானில் மருத்துவ வாகனம் தாக்கப்பட்டதில் மருத்துவத்தொண்டர் கொல்லப்பட்டார் மாவீரர் நாளன்று ஐயன்குளத்தில் ஆம்புலன்ஸ் மீதான தாக்குதலில் பத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகளான முதலுதவித்தொன்டர்கள் கொல்லப்பட்டனர் அடம்பன் சுகாதார வைத்திய அதிகாரியின் வாகனம் வெள்ளாங்குளத்திற்கு அர…
-
- 0 replies
- 607 views
-
-
சிறீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் நெடுங்கேணிக்கு உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த பொதுமகன் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் ஆனந்தர் புளியங்குளப் பகுதியில் படுகாயமடைந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்தவர் 55 அகவையுடைய குலசிங்கம் எனவும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது
-
- 1 reply
- 880 views
-
-
ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி. மன்னார் மாவட்டம் பாலம்பிட்டி - நட்டாங்கண்டல் வீதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஈருளியில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர் மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா பாவற்குளம் 8 ஆம் யூனிட்டை சொந்த முகவரியாகவும், பெரியதம்பனை தட்சணாமருதமடு முகாமைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோரான ரவீந்திரன் ரவி (வயது 54), ரவி சிந்து (வயது 42) ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர். -Puthinam-
-
- 3 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.5k views
-
-
மன்னார் மாவட்ட கூராய்க்கும் சிராட்டிக்குளத்திற்கும் இடையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் மீன் வியாபாரி ஒருவர் அவ்விடத்திலேயே உடல்சிதறிப் பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மு.ப 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆத்திமோட்டை கூராய்ப் பகுதியில் வசிக்கும் செல்லத்துரை (வயது 42 ) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். இவர் ஆத்திமோட்டைப் பகுதியிலிருந்து மீனுடன் தனது உந்துருளியில் நட்டாங்கண்டல் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்து வருகையில் சிராட்டிக்குளத்திற்கும் கூராய்க்குமிடையில் இராணுவத்தினர் கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவரின் உடல் மல்லாவி வைத்தியசாலையில் சடல அறையில் வைக்கப்பட்டு உறவினரால் அடையாளம் காணப்பட்டது.…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆழ ஊடுருவும் இராணுவத்தினரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் சிறப்பிப்பு [சனிக்கிழமை, 17 யூன் 2006, 18:44 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] வவுனியா நைனாமடுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தினரை கடந்த மூன்று நாட்களாக சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி அந்த முற்றுகையை உடைத்து செல்ல முயன்ற சிறிலங்கா இராணுவத்தரப்பைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் இன்று சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டனர். நைனாமடுப் பகுதிக்குள் ஊடுருவிய சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த மூன்று நாட்களாக விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய துணைப்படை மற்றும் மக்கள் படை ஆகியவற்றால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர
-
- 1 reply
- 1.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பகுதியில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நேற்றுமுன்தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்ட 8பேரும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி மதியம் 12.30 அளவில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் அதே கிராமத்தைச் சேர்ந்த பாடசாலைச் சிறுமிகள் நால்வர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களின் உடல்…
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள கனகராயன்குளம் காட்டுப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 697 views
-
-
போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் கடந்த சில வருட காலங்களில் மிகவும் ஆழமான முறையில் வேரோடிச் சென்றுள்ளதாகவும், இந்தியா நேரடியாகவே பல இராணுவம் சார் உதவிகளை சிறிலங்காவிற்குச் செய்து வருவதாகவும் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
ஆழஊடுருவும் அணி பற்றிய தகவல்கள் ஐ.நாவுக்கு வழங்கப்படாது! - ஜனாதிபதி உறுதி [Wednesday 2016-01-27 07:00] ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர் காலத்தில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் கோரியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படமாட்டாது என …
-
- 1 reply
- 560 views
-
-
ஆழஊடுருவும் அணியை வழிமறித்து விடுதலைப்புலிகள் தாக்குதல் - ஒருவர் கயம். வவுனியா நாவற்குளம் ஊடாக ஊடுருவ முயன்ற சிறிலங்காப்படையினரின் ஆழஊடுருவும் அணியை வழிமறித்து விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவ உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று மதியம் 12.00மணியளவில் நாவற்குளம் உடாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஆழஊடுருவும் அணியினரை வழிமறித்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். -Sankathi-
-
- 0 replies
- 1k views
-
-
ஆழமாக்கப்படுகிறது புல்லுக்குளம் யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள புல்லுக்குளத்தை ஆழமாக்கும் பணிகள் மிகவும் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. யாழ் குடாநாட்டில் கரும வரட்சி நிலவி வருகின்றதனால் புல்லுக் குளமானது நீர்வற்றி காணப்பட்டது எனிவரும் காலப்பகுதி மழைகாலம் என்பதால் இதனை ஆழமாக்கும் பணிகள் மிகவும் விரைவாக இடம் பெற்று வருகின்றது. http://onlineuthayan.com/News_More.php?id=172511450222507216
-
- 0 replies
- 795 views
-
-
கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது நாட்டிலுள்ள தூதரகங்களில் பணியாற்றும் உலக நாடுகளின்பாதுகாப்பு அதிகாரிகளை தனது தலைநகரத்திற்க்கு வருமாறு சீனா அரசாங்கம் தீடீர் உத்தரவொன்றை பிறப்பித்தது. அந்த சந்திப்பின் போது சீனா அதிகாரிகள் தமது நாட்டின் நீர்மூழ்கி விரைவில் மலாக்கா நீரிணையூடா பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.- மலாக்கா நீரிணை என்பது இந்தோனேசியாவிற்க்கும்- மலேசியாவிற்க்கும் நடுவில் அமைந்துள்ள பகுதி,உலகின் பெருமளவு வர்த்தகம் இப்பகுதியூடாகவே இடம்பெறுகின்றது. இந்த சந்திப்பிற்கு இரண்டு நாட்களுக்கு பின்னர்-எதிரி நாடுகளின் கலங்களை கண்டுபிடித்து தாக்கி அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சீனாவின் அதிநவீன நீர்மூழ்கிகளில் ஒன்றான-ஹன்டர்கில்லர்- மலாக்கா நீரிணை பகுதியில் பயணம்செய்…
-
- 0 replies
- 565 views
-
-
2004 ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நாட்டின் பலபாகங்களிலும் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு http://onlineuthayan.com/News_More.php?id=365143753526663185
-
- 1 reply
- 258 views
-
-
ஆழிப்பேரலை அனர்த்த நிதியை அள்ளிச்சென்றமை எங்ஙனம்? முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வினா கொழும்பு, டிச. 31 ஆழிப்பேரலை அனர்த்தத்தைத் தொடர்ந்து புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பெருமளவு நிதி காணாமல் போனமை குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆச்சரியம் வெளியிட்டுக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து 2005 நவம்பரில் நான் பதவிவிலகிய காலத்தில் ஆழிப்பேரலை அனர்த்த நிதியை மத்திய வங்கியில் ஜனாதிபதி நிதியின் கீழ் தாம் வைப்பிலிட்டு வைத்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆழிப்பேரலைக்குப் பின்னர் பதவியிலிருந்த 11 மாத காலப் பகுதியிலும் தான் முழுமையான கணக்குகளை பேணி வந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 250 கோடி ரூபாவு…
-
- 1 reply
- 869 views
-
-
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண நிதியில் 53 கோடி 70 லட்சம் அமெரிக்க டொலர்கள் எங்கே? சிறிலங்காவிடம் கேள்வி! .ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் சிறிலங்காவுக்கு வெளிநாடுகள் வழங்கிய உதவியில் பல கோடி ரூபா நிதி கையாடப்பட்டிருக்கிறது. சுமார் 53 கோடி 70 லட்சம் அமெரிக்க டொலர்கள் நிதியிற்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. சுமார் 68 கோடி 60 லட்சம் அமெரிக்க டொலர்கள் நிதி ஆழிப்பேரலை அனர்த்தத்துக்கு சம்பந்தமே இல்லாத அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஜேர்மனை சேர்ந்த "ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல்" என்ற அரச சார்பற்ற அமைப்பு விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் ஊழல் இடம்பெறும் நாடுகள் தொடர்பான விவரங்களை கண்காணித்து அதனை ஆதாரத்துடன் அம…
-
- 0 replies
- 614 views
-
-
சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் - கடலுக்கு அடியில் - ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு - நினைவு - நாள் இன்றாகும். பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது. இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்து களை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது. இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் கிழக்குப் புற கடலோர மக்கள் இன்னும் மீளவேயில்லை. …
-
- 0 replies
- 516 views
-
-
ஆழிப்பேரலை அனர்த்த மீட்சியிலும் இனப்பாகுபாடும் ஓரவஞ்சனையும் - இன்று 1462 நாள் சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு நினைவு நாள் இன்றாகும். பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது. இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்துகளை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது.இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்க…
-
- 0 replies
- 554 views
-