ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக்காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தடையாகவுள்ளதென்ற ஜனாதிபதியின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கெளரவமானதொரு தீர்வை நோக்கிப் பயணிப்பதற்கு ஜனாதிபதி தயாரானால் தாமும் சில நிபந்தனைகளுடன் பேச்சுக்குத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைத் தம்மிடமிருந்த அந்நியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி தீவிரம் காட்டி வருகின்றார் என்றும் சம்பந்தன் எம்.பி. குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடை பெற்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். அவர் அங…
-
- 0 replies
- 435 views
-
-
முல்லைத்தீவில் கிபிர் தாக்குதல். இன்று காலை 7.15 மணியளவில் சிறீலங்காவின் கிபிர் விமானங்கள் முல்லைத்தீவு கரையோர பகுதிகளில் குண்டுதாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்திகளை வெளியிட்டுள்ளன. இத் தாக்குதல் தொடர்பாள சேதவிபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை. -pathivu-
-
- 1 reply
- 1k views
-
-
படைக்குறைப்பு என்பது பொய் – 13 ஆயிரம் பேரைப் புதிதாக சேர்க்கிறது சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், வடக்கு, கிழக்கில் பல முகாம்கள் விலக்கப்படவுள்ளதாகவும், வெளியான செய்திகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவம், இந்த ஆண்டில், சுமார் 13,193 படையினர் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘வடக்கு கிழக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் பல பிரிவுகள் விலக்கிக் கொள்ளும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளியான செய்திகள் தவறாகும். பொதுமக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கும் அதிருப்தி அரசியல…
-
- 0 replies
- 267 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றி தமிழர் தரப்பிலிருந்து தெளிவான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் நாடாளுமன்றில் நேற்று ஹக்கீம் அறிவிப்பு. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரவேண்டும் என்றுகொருவதை ஏற்க முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு வழங்கபடும் அதிகாரம் என்ன என்பது பற்றித் தமிழர் தலைமைகள் தெளிவான உறுதி மொழிகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இணைப்புக்கு ஆதரவு கோரினால் ஒருபோதும் நிபந்தனைகளற்ற முறையில் முஸ்லிம்கள் இணைப்புக்கு ஆதரவு வழங்க முன் வரமாட்டார்கள். சுடர் ஒளி தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி நன்றி சுடர் ஒளி 11 ஜன 2007
-
- 7 replies
- 2.2k views
-
-
கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 00:45 கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ஒரு பகுதி நேற்றுறு இடிந்து விழுந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த மகசின் சிறைச்சாலையின் சமையலறை கட்டிடம் நேற்று இடிந்து விழுந்துள்ளதாகவும் அவ்வேளையில் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கைதிகள் 15 பேரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. சமையலறை முற்றாக இடிந்து விழுந்துள்ளதால் கைதிகளுக்கான உணவு வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் கைதிகளை தடுத்து வைத்துள்ள சிறைச்சாலையின் ஏனைய பகுதிகளும் இடிந்து விழலாம் என்ற அச்சத்துடன் கைதிகள் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது. tam…
-
- 0 replies
- 789 views
-
-
மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் - பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை 06 Mar, 2023 | 11:28 AM மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பல…
-
- 0 replies
- 679 views
-
-
புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் தாக்குதல்களை அரசு தொடரும்: கெஹெலிய ரம்புக்வெல. கிழக்கு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டில் இருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அரசு பாரியளவு வெற்றியீட்டியுள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டிற்குள் சிக்கும் மக்களை இனவேறுபாடின்றி மீட்டெடுப்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும். இவ்வாறு அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கிழக்கில் மூவின மக்களையும் இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல…
-
- 0 replies
- 831 views
-
-
அரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம் அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன். விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “இந்தவிடயம் தொடர்பான விசாரணைகள் முடியும் போது இதற்கான பதில் கிடைத்து விடும். எனினும், இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை. நான் அமைச்சர் பதவியை இழந்திருக்கக் கூடும், ஆனாலும், அரசியலை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவ…
-
- 0 replies
- 217 views
-
-
மட்டக்களப்பின் மற்றொரு கிராமமும் பறிபோகிறது! Posted by admin On April 13th, 2011 at 10:24 pm / மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கெவிலியமடு தமிழ் கிராமம் முழுமையாக சிங்களவர்களிடம் பறிபோகும் நிலை உள்ளதாக இக்கிராமத்தில் குடியேறியுள்ள தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கெவிலியமடு எல்லைக் கிராமத்தில் பூர்வீகமாக வசித்து வந்த தமிழ் மக்கள் கடந்த 83யூலை இனக்கலவரத்தின் பின்னர் முழுமையாக இடம்பெயர்ந்ததோடு 2004ம் ஆண்டு சமாதான காலத்தில் குடியேறிய சில குடும்பத்தினரும் இறுதியுத்த காலத்தில் முழுமையாக வெளியேறியிருந்தனர். இன் நிலையில் 27ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தவருடம் குடியேறிய தங்களுக்கு இத…
-
- 0 replies
- 870 views
-
-
புதிய அரசமைப்பு வரைவு புதனன்று சமர்ப்பிக்கப்படும் புதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் உப பிரிவு 6இன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி புதிய அரசமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில், பல்வேறு கட்சியினர் வழங்கிய யோசனைகள் அடங்கிய குறிப்பொன்றும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அவர் க…
-
- 0 replies
- 327 views
-
-
இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை - இந்தியா அவதானம் Published By: NANTHINI 22 MAR, 2023 | 05:14 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் இந்தியா - இலங்கைக்கு இடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையில் டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை பெற்றுக்க…
-
- 0 replies
- 593 views
- 1 follower
-
-
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளான இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. பல்வேறு நெருக்கடியான சூழல்களிலும் விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக இருக்கும் மக்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளில் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2011’ தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/02/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 19/04/ 2011. அன்பான தமிழ் மக்களே! இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி பதவியைக் குறிவைக்கவில்லை: சுமந்திரன் காட்டம்! ஜனாதிபதிப் பதவியை பறிப்பதற்காக நானும் ஜயம்பதி விக்கிரமரட்ன மற்றும், சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் முயற்சிப்பதாக வதந்தி ஒன்றை தயாசிறி ஜெயசேகர போன்றவர்கள் கிளப்பி விட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,”நிபுணர்குழு அறிக்கையை சபையில் எடுத்துக்காட்டி தயாசிறி ஜெயசேகர அதிலே ஜனாதிபதியை நீக்கும் படிமுறை இருப்பதாகவும், பிரதமர் எதிர்கட்சி தலைவர், சபாநாயகர், இணங்கினால் ஜனாதிபதியை நீக்கலாம் என கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நானு…
-
- 1 reply
- 396 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார். இருவருக்குமிடையிலான இந்தச் சந்திப்பு கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. பெங்களூர் யலகங்கா விமானப் படைத் தளத்தில் நடைபெறும் இந்திய விமானக் கண்காட்சியில் கலந்து கொண்ட போதே அங்கு இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். கோதாபாய ராஜபக்ஷ தலைமையில் விமானப் படைத் தளபதி உட்பட சிரேஷ்ட விமானப் படை அதிகாரிகள் பெங்களூர் சென்றுள்ளனர். இந்தக் கண்காட்சியை இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர் அமைச்சர் அந்தோனியை சந்தித்த கோதபய, இலங்கையின் தற்போதைய …
-
- 0 replies
- 891 views
-
-
தயான் ஜெயதிலக அர்ஜெண்டன் நகரிலிருந்து பின்வாங்குகிறார். தமிழீழ மக்களை நேரில் சந்திக்க அச்சமா? பிரான்சுக்கான சிறி லங்காவின் துதுவர் தயான் ஜெயதிலக அர்ஜெண்டன் நகரில்லிருந்து பின்வாங்குகிறார். தமிழீழ மக்களை நேரில் காண அச்சமா? அர்ஜெண்டன் நகரில் ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி நடைபெற இருக்கும் QUASIMODO என்று அழைக்கப்படும் கண்காட்சி களியாட்ட நிகழ்விற்குசிறி லங்காவின் பிரான்சுக்கான தூதுவர் தயான் ஜெயதிலக இந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் தான் பங்கேற்க முடியாது என்று தன் வருகையை ரத்து செய்திருக்கிறார். தனக்கு பதிலாக நான்கு ராஜதந்திரிகளை (Diplomates) யை அனுப்பி வைப்பதாக கூறியிருக்கிறார். ouest france பத்திரிகை பார்வையிட இந்த நிகழ்வு நடைபெற…
-
- 1 reply
- 938 views
-
-
நலிவுற்ற மக்களின் மேம்பாட்டிற்கான சமூகநலப்பணிகளை ஆற்றிவரும் தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகரின் 63 ஆவது அகவையை நினைவு கூறும் வகையில் பல்வேறு அறப்பணி நிகழ்வுகள் கடந்த 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. வவுனியா, நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நிறுவனத்தின் பணிப்பாளர் செ.கமலநாதன் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ப.சிவநாதன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் உதவி பிரதேச செயலர் செல்வி தனிஸ்கா வசந்தராஜா, சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு செயலாளர் எஸ். பரமநாதன், வவுனியா சர்வோதயம் வடமாகாண ஆலோசகர் அ.கி.சிவசுப்பரமணியம், யாழ் பிரதி கல்விப்பணிப்பாளர் சி.மாணிக்கராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவு…
-
- 1 reply
- 971 views
-
-
கோட்டாவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது தவறு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் “தவறு” செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/…
-
- 1 reply
- 491 views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினையே ஐ.நா. சபை தலையிடக்காரணமானது கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன . ஏகாதிபத்திய சக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முழு அளவில் உதவியதாகவும் தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் நவசமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்ததும் பல்வேறுபட்ட சர்ச்சைகள், விவாதங்கள், குற்றச்சாட்டுகள் வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: T. SARANYA 21 APR, 2023 | 10:55 AM மட்டக்களப்பில் விசேட தேவையுடைய இரு சிறுமிகளை கட்டிவைத்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் மனித உரிமை ஆணைக் குழுவினர் குறித்த பராமரிப்பு நிலையத்துக்கு வியாழக்கிழமை (20) சென்று விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்தில் 22 பெண்கள் 4 ஆண்கள் உட்பட 26 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அங்குள்ள ஒரு சிறுமியின் இரு கைகளை பின்பக்கமாவும் இரு கால்களையும் கயிற்றினால் கட்டி அறையில் வைக்கப்பட்ட காட்சியும், இன்னுமொரு …
-
- 3 replies
- 515 views
- 1 follower
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையின் மீது நம்பிக்கையில்லையென்றால் அது குறித்து மேடைகளில் விமர்சிப்பதை விடுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியோ அவரது அரசாங்கமோ இதனை ஒருபோதும் செய்யப்போவதில்லை எனவும் அதற்கான தைரியம் அரசிடம் கிடையாதெனவும் சுட்டிக் காட்டியுள்ளது. சமஷ்டிவாதிகளும் ஒற்றையாட்சிவாதிகளும் இரண்டறக் கலந்த அரசாங்கத்தால் தீர்வுக்கான யோசனைகள் எதனையும் முன்வைக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க.தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் செய்தியாளர் மாநாட்டின்போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராள…
-
- 0 replies
- 900 views
-
-
புகையிரதம் மீது கல் வீச்சுத் தாக்குதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளார். நேற்றிரவு ஏழு மணியளவில் யாழ்.பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதமானது கிளிநொச்சி புகையிரத நிலையத்தை கடந்து பயணிக்கையில் அதன் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் புகையிரதத்தில் பயணித்த பயணியொருவர் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்திருந்தார். இதனையடுத்து புகையிரதம் அப் பகுதியில் அவசரமாக நிறுத்தப்பட்டதையடுத்து அப் பகுதி கிராமம் மக்கள் ஒன்று கூடியதையடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவியது. …
-
- 0 replies
- 202 views
-
-
பிரபாகரன்...? விடை சொல்கிறார் உருத்திரகுமாரன் சமஸ் ''உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகள் நடந்த சூடான் பிரிவதையும், தெற்கு சூடான் உதயமாவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' ''தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் சமாந்திர நிகழ்வுகள் பல உள்ளன. ஈழத் தமிழ்த் தேசிய இனமும், தென் சூடானிய மக்களும், ஒரே வகையில் அமைந்த இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். இருவருமே, தத்தமது போராட்டத்துக்குக் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும், ஏறத்தாழ ஒரே காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்தாம். இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளையும் நெறிப்படுத்தியவர்கள்கூட ஏறத்தாழ ஒரே நாடுகள்தாம். ஆனால், தென் சூடானிய மக்களுக்குத் …
-
- 0 replies
- 2.7k views
-
-
28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி (இரண்டாம் இணைப்பு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன் எச்.என்.டீ.ஏ (HNDA) மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைத் தாக்குதலில் காயமடைந்த 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (முதலாம் இணைப்பு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் செய்த குழுவினர் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஆர்ப்பாட்டத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=441003744322829836#sthash.QRI8lQjK.dpuf
-
- 2 replies
- 570 views
-
-
இந்த கட்டுரையை படியுங்கள் ... http://transcurrents.com/tamiliana/archives/291
-
- 2 replies
- 1.3k views
-
-
என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில் வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும் என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால் இவற்றை எல்லாம் எழுத எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. ஏனெனில் இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன். நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான். எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன். இனி…… புளியங்குளத்திலும் முகமாலையிலும்…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-