ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
நாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு : October 21, 2018 கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் இறப்புத் தொடர்பான வழக்கு நாளை 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில் போதநாயகியின் கணவர் செந்தூரன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின் தாயார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் காவற்துறையினர் வழக்கை முன்னெடுக்கவுள்ளனர். போதநாயகியின் பெற்றோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு கா…
-
- 1 reply
- 705 views
-
-
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் ஜனாதிபதிக்கு முன்மொழிவு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதிக்கு தமது முன்மொழிவினை அனுப்பியுள்ளனர். 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் 5/6 பெரும்பான்மையுடன் 13 ஆவது அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஏற்கனவே அரசியலமைப்பின் ஒரு பகுதிய…
-
- 0 replies
- 416 views
-
-
இலங்கை உயர்ஸ்தானிகரை ஜெயலலிதா சந்திக்க உள்ளார் 07 ஜூலை 2011 இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை தமிழக முதல்வர் ஜெயலிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரங்களில் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் குறிப்பிடப்படுகிறது. பிரசாத் காரியவசம் கடந்த செவ்வாய்கிக்கிழமை கொழும்பிலிருந்து, இந்தியா திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக பிரதமர் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/…
-
- 10 replies
- 622 views
-
-
இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் சமர்ப்பிப்பதனை கால தாமதிக்கும் யோசனையை, மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைன் ஆதரிப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை சில மாதங்களுக்கு காலம் தாழ்த்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. புதிய விசாரணைப் பொறிமுறைம ஒன்றை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு அவகாசம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30ம் அமர்வுகள் வரையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைக்கும் யோசனையை ஆதரிக்கின்றேன். இலங்கை நிலைமைகளின் மாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை காலம் தாழ்த்துவது நிய…
-
- 0 replies
- 169 views
-
-
17 AUG, 2023 | 07:56 PM வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றிருந்த போது நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இன்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இரண்டாவது தினமான இன்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.…
-
- 7 replies
- 990 views
- 1 follower
-
-
மே தினத்தை கொண்டாட அரசுக்கு அருகதையில்லை [01 - May - 2007] * அடைக்கலநாதன் எம்.பி. தற்போதைய அரசு தொழிலாளர் தினமான மே தினத்தைக் கொண்டாடுவதற்கு எவ்வித அருகதையும் அற்றது என்பது எனது கருத்தாகும். இலங்கை வாழ்மக்கள் யாவரும் நாளாந்தம் துன்பத்திற்குள்ளாகியிருக்க
-
- 0 replies
- 743 views
-
-
ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி நாளைமறுதினம் இடம்பெறும் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசு அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலங்களுக்கு ஆறு வருடங்களை எட்டிய நிலையிலும் நீதி கிடைக்கவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைச் சபையிலே இது தொடர்பான பிரேரணைகள் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டு வந்தன. ஆனால் அதற்கெல்லாம் கடுகளவும் அசையாத நிலையிலேயே மஹிந்த தலைமையிலான இலங்க…
-
- 0 replies
- 313 views
-
-
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்ட…
-
- 11 replies
- 1.9k views
-
-
26 AUG, 2023 | 07:38 PM ஆர்.ராம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் ட்ரக்கினால் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக ஒழுங்கமைப்புக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஜெனிவாவில் நடைபெறவுள்ளதோடு, இம்முறை நடைபெறும் ஜெனிவா அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51 கீழ் 1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்க அடைவு மட்டம் சம்பந்தமான மதிப்பீடும் வெளிப்படுத்தப்படவுள்ளது. …
-
- 6 replies
- 809 views
- 1 follower
-
-
இராணுவம் தேர்தல் பணியில் ஈடுபடாது-தேர்தல் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்-யாழ்.வந்த பிரதித்தேர்தல் ஆணையர் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-14 10:29:02| யாழ்ப்பாணம்] தேர்தல் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, தேர்தல் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.மொகமட் தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நேற்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் யாழ்.தேர்தல் முறைப்பாட்டு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக இங்கு…
-
- 0 replies
- 354 views
-
-
சிறிலங்கா விவகாரம் குறித்து ஹிலாரி பேசுவதைத் தடுக்க இந்தியா முயற்சி? – இந்திய ஊடகம் குற்றச்சாட்டு [ செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2011, 01:44 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக பேசுவதை தடுக்க இந்தியா முயற்சிப்பதாக இந்தியாவின் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. இரண்டுநாள் பயணமாக நேற்றிரவு புதுடெல்லியை சென்றடைந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இன்று இந்தியப் பிரதமருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார். நேற்றிரவு 8.40 மணியளவில் சிறப்பு விமானம் ஒன்றில் புதுடெல்லியை அடைந்த ஹிலாரியுடன் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றும் வந்துள்ளது. …
-
- 0 replies
- 603 views
-
-
இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்துள்ளதாக தகவல்; இல்லை என்கிறது கடற்படை இராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள் 7 பேரையும் அவர்களது படகு ஒன்றையும் இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் பிடித்து வைத்திருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாம்பனைச் சேர்ந்த மைக்கேல் என்பவருக்குச் சொந்தமான படகில் 7 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து கடந்த1ஆம் திகதி மாலை கடலுக்குச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தியதுடன் பணம் கொடுக்காவிட்டால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் மிரட்டி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்…
-
- 0 replies
- 258 views
-
-
ஏறாவூரில் மின்மாற்றி தகர்ப்பு [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஏறாவூர் - களுவங்கேணி வீதியிலுள்ள மின்மாற்றியை அடையாளம் தெரியாதோர் தகர்த்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் நடந்ததாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் ஏறாவூர் சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். புதினம்
-
- 0 replies
- 760 views
-
-
-
நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்! நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) நான்காவது முறையாகவும் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி தலைமையில் மாலை அனைத்துக் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்த்க்கது. http://athavannews.com/நாடாளு…
-
- 1 reply
- 394 views
-
-
இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர். இலங்கையிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக சிறிய மீன்பிடி படகில் புறப்பட்டவர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு டியாகோ கார்சியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். 2021 ஒக்டோபர் 3 முதல் அவர்கள் அந்த தீவில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் புகலிடக்கோரிக்கையை கோரியவேளை பிஐஓடி ஆணையாளர் அவர்களை சட்டபூர்வமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என தெரிவித்தார். புகலிடக்கோரிக்கையாளர்கள் பத்து பேர் இதற்கு எதிராக உச்சந…
-
- 0 replies
- 213 views
-
-
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிமீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு உரிமையுள்ளது என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதற்கு அமைச்சரவை பேச்சாளர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை பிரதமரின் இந்த கருத்தினை தான் அங்கீகரிக்கவில்லையென அமைச்சரவை பேச்சாளர் ராஜிதசேனரத்தின இந்தியன் எக்ஸ்பிரசிற்கு தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்க ஏன் மீண்டும் இவ்வாறு கருத்துவெளியிடவேண்டும் என்ற கேள்விக்கு ரணில்விக்கிரமசிங்க இந்திய மீனவர்களின் ஊருடுவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மீனவர்களின் ஆதரவை பெறும் நோக்கத்துடன் இ;நத கருத்தை வெளியிட்டிருக்கலாம் என ராஜிதசேனரத்தின தெரிவித்துள்ளார். மேலும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனான …
-
- 2 replies
- 424 views
-
-
சண்டேலீடரின் இயக்குனருக்கு மகிந்த அச்சுறுத்தல்! - எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம்!! கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையின் இயக்குனர் லால் விக்ரமதுங்கவை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியமையை பிரான்ஸைத் தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கும் அவர்கள் விரும்பியபடி பயன்படுத்தும் வகையில் சீனா பணம் வழங்குவதாக சண்டே லீடர் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனாலேயே அந்நிறுவனத்தின் இயக்குனர் லால் விக்ரமதுங்கவை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொ…
-
- 0 replies
- 759 views
-
-
தற்போது சர்வதேச விமான நிலையமாக செயற்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் வசதிகளை மேம்படுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (16) விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். சென்னையிலிருந்து நாளாந்தம் 60 பயணிகளுடன் Alliance நிறுவனத்தின் விமானமொன்று பயண வசதிகளை வழங்கி வருவதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் IndiGo நிறுவனமும் சென்னை – பலாலி இடையே விமான சேவைகளை வழங்கவுள்ளது. இந்த சர்வதேச விமான சேவைகளுக்கு மேலதிகமாக இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து …
-
- 0 replies
- 398 views
- 1 follower
-
-
ஹெட்லைன் ருடே வெளியிட்ட புதிய போர்குற்ற ஆதாரங்கள் (video in ) Wednesday, August 10, 2011, 2:25இந்தியா, உலகம், காணொளி, தமிழீழம் ” ஹெட்லைன்ஸ் டுடே” காட்சி ஊடகத்தில் , “போருக்கு பிறகு” தமிழீழப் பகுதிகளில் “நேரடியாக” ஒரு ஊடகவியலாளர் சென்று, ” இலங்கை அரசாங்க அனுமதியோ” அல்லது அவர்கள் நிபந்தனை விதிப்பதைப் போல ” பாதுகாப்பு அமைச்சக அனுமதியோ” பெறாமல், அதனாலேயே “சுதந்திரமாக” யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கும், அங்குள்ள ” இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்கும்” சென்று அவர்களது நேர்காணல்களையும், காநோளிகளையும் “கைகேமரா” மூலம் பதிவு செய்து வந்துள்ளவற்றை காணலாம். சென்னையில் உள்ள அந்த காட்சி ஊடகத்தின் பெண் ஊடகவியலாளரான” பிரியம்வதா” அந்த சாதனையை செய…
-
- 3 replies
- 1.3k views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள் என்று முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் மேற்படி வழக்கிற்கு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சென்றிருந்த நிலையில் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு என்றும், அனந்தியே உனது கணவன் காணாமல் போனதாக நீ கூறும் நாடகம் எப்போது முடிவுக்கு வரும்?, எங்கே எமது பிள்ளைகள் ஒழிந்திருக்கும் உன் கணவரிடம…
-
- 2 replies
- 1.6k views
-
-
December 6, 2018 அரசியல் குழப்பிற்காகவே மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த செயற்பாட்டை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 12 ஆவது அமர்வு மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று நடைபெற்றபோது மாநகரசபை மேயரினால் குறித்த கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணை முன்வைத்து உரையாற்றிய மட்டக்களப்பு மாநகரசப…
-
- 0 replies
- 359 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 OCT, 2023 | 04:06 PM யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது. அது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து , அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி , எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என…
-
- 1 reply
- 612 views
-
-
ஆயுதக் கொள்வனவு விவகாரம்: சிங்களவர் எதிர்ப்பும் தமிழரின் எச்சரிக்கையும். சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவது சரியே என்ற கருத்துருவாக்கத்தை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேரடியாகக் களம் இறங்கியுள்ளார். புதுடில்லியில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் சென்னைக்குப் பறந்து வந்து மீண்டும் சென்னையிலும் கருணாநிதியை சந்தித்த எம்.கே.நாராயணன், "இராணுவ தளபாடங்களை இந்தியா அளிக்காவிட்டால், சீனா அல்லது பாகிஸ்தானிடம் அவற்றை பெறப்போவதாக சிறிலங்கா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. நம்மை சிறிலங்கா அணுகினால் அது குறித்து பரிசீலித்து மு…
-
- 2 replies
- 1.1k views
-
-
புங்குடுதீவில் தென்னிலங்கை மீனவர்களை குடியமர்த்த முயற்சி .. 15 ஆகஸ்ட் 2011 உள்ளுர் மீனவர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை கடற்படையினரது ஏற்பாட்டினில் நூற்றுக்கணக்கான தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் புங்குடுதீவுப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்கள் சிலிண்டர் பொருத்தி கடலட்டைமற்றும் சங்கு பிடிக்கப்போவதாக கடற்படையினரால் உள்ளுர் மீனவர்களுக்கு தெரிரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்திய மீனவர்களால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உள்ளுர் மீனவர்கள் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை அ…
-
- 1 reply
- 839 views
-