ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142886 topics in this forum
-
தன்மீது பொய்யான தகவலை தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்துள்ளார். வடக்கில் தொழிலில் ஈடுபடும் 500 இழுவை வலை படகுகளிடமிருந்தும் நான் ஒரு இரவுக்கு ஒரு படகிடமிருந்து 5000 ரூபா கப்பமாக பெறுவதாக சுமந்திரன் எம்.பி. தனது சிறப்புரிமையை பயன்படுத்தி சபையில் கூறியுள்ளார், அவர் முடியுமானால் இந்தக் கருத்தை பொதுவெளியில் ஊடகங்களுக்கு சொல்ல முடியுமாவென கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட கடற்றொழில் அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு (07.12.2021) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த விவாத்தில் தொடர்ந்தும்…
-
- 1 reply
- 599 views
-
-
(எம்.மனோசித்ரா) வடக்கில் 3 தீவுகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த மின் திட்டங்களை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நெடுந்தீவு , அனலைத்தீவு மற்றும் நயினதீவில் சீனா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை கைவிடுவதாக கடந்த 2 ஆம் திகதி சீனா அறிவித்திருந்தது. மூன்றாம் தரப்பினரால் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் சீனா குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் செவ்வாய்கிழமை (7) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை இண…
-
- 0 replies
- 320 views
-
-
சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட விவசாய உரத்தை இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது. இதையடுத்து, விவசாய உரத்தை ஏற்றி வந்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் சுமார் 70 நாட்கள் இருந்த நிலையிலேயே, தற்போது அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து மாயமாகியுள்ளது. இவ்வாறு மாயமான கப்பல் எங்கே சென்றது என்பது குறித்து தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இலங்கையினால் நி…
-
- 0 replies
- 298 views
-
-
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் தமிழ் தேசத்தின் இருப்பை அழிக்க உதவுகின்றனவா? Posted on December 8, 2021 by தென்னவள் 19 0 தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான வேலைத் திட்டங்களுக்காகவா உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் இலங்கைக்கு உதவிகளை வழங்குகின்றனவென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு,வன ஜீவராசி கள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு …
-
- 0 replies
- 309 views
-
-
எதிர்க்கட்சி பிரதான விவாதத்தை கூட்டமைப்புக்கு தாருங்கள் - தமிழ் தேசிய கூட்டமைப்பு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அமைச்சுகளுக்காக நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகியோர் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு வாய்ப்பளிக்குமாறு கோரி ஆளும் கட்சியின் எம்.பிக்கள் 33 பேரும் சபாநாயகரிடம் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர். வரவு செலவு திட்ட விவாதத்தை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சி இணக…
-
- 0 replies
- 265 views
-
-
இலங்கையர் பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பாகிஸ்தானில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த நபரை கும்பலொன்று அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன. பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ஏற்றுமதி முகாமையாளரை அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக்கொளுத்தினார்கள் என தகவல்கள் வெளியா…
-
- 31 replies
- 2.7k views
- 1 follower
-
-
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த கால சிவில் சமூக செயற்பாடுகள் , நடாத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாகவும் குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு கோணத்தில் கேள்விகள் தொடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த விசாரணைகள் ஊடாக எம்மை சிவில் சமூக செயற்பாடுகளில் இரு…
-
- 1 reply
- 312 views
-
-
“குடியிருப்பு பகுதிகள் காடுகளாக அறிவிக்கப்படக்கூடாது”-தர்மலிங்கம் சித்தார்த்தன் December 7, 2021 குடியிருப்பு பகுதிகள் காடுகளாக அறிவிக்கப்படக்கூடாது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் உரையாற்றுகையில், “குடியிருப்பு பகுதிகள் காடுகளாக்கப்பட்டு அந்த பிரதேசங்கள் பின்னர், வடக்கின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. வவுனியா நெடுங்கேணியில் இது போன்ற குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது” என குற்றம்சுமத்தியுள்ளார். இதேவேளை அம்பாறை வட்டமடு பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் காணிப்பிரச்சனை…
-
- 0 replies
- 289 views
-
-
செயலாளர்கள் புலிகளின் தங்கம் தேடிய இடத்தில் அகழ்வுப் பணி இறுதி யுத்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக 2 பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை நேற்று (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் இன்று (02) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதா…
-
- 3 replies
- 374 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கிறாரா சஜித்? சபை நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் புறக்கணித்துவரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தால், சபை நடவடிக்கைகளில் சஜித் பிரேமதாஸ விரைவில் கலந்துகொள்வார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜோன்ஸ்டன், ஐக்கிய மக்கள் சக்தி சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ள நிலையில், சபைக்கு ரணில் வந்திருப்பதால் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மிகுந்த அச்சத்தில் உள்ளதாக அக்கட்சியின் எம்.பி ஒருவர் என்னிடம் தொலைபேசியில் கூறினார் என்றார். மேலும் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தில் உள்ள எதிர்க்…
-
- 0 replies
- 247 views
-
-
அரசாங்கம் பின்பற்றுவது கப்ரால் வழியா? ராஜபக்ஷ வழியா? – ரணில் கேள்வி அரசாங்கம் கப்ரால் வழியை பின்பற்றுகிறதா அல்லது ராஜபக்ஷ வழியை பின்பற்றுகிறதா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் இந்த கேள்வியை எழுப்பினார். குறிப்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திடீர் இந்திய விஜயம் குறித்து கவலைகளை வெளியிட்டு ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்திருந்தார். மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளாத நிலையில் அரசாங்கம் கப்ரால் வழியை பின்பற்றுகிறத…
-
- 0 replies
- 183 views
-
-
கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் உள்ளூராட்சி சபைகள் தோற்கடிக்கப்படுகின்றன – சுரேஷ் கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது. தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களின் செயற்பாடுகளில் பிழைகளை கண்டு இருக்கலாம் அல்லது அவர்கள் நன்றாக செயற்படுகிறார்கள் என மக்கள் மத்தியில் அபிப்பிராயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இவற்றை உடைக்க வேண்டும் ஆயின் அவர்களை தோற்கடிக்க வேண்டும். கட…
-
- 0 replies
- 321 views
-
-
வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி – சபையை இழக்குமா கூட்டமைப்பு? தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு 9 மேலதிக வாக்குளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. வவுனியா வடக்குபிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. கடந்தமாதம் இடம்பெற்ற அமர்வில் சபையின் 2022 ஆம் ஆண்டிறக்கான பாதீடு முன்வைக்கப்பட்ட நிலையில் அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றையதினம் அது மீளவும் முன்வைக்கப்பட்டது. இதன்போது மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்…
-
- 0 replies
- 254 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்துக்கு தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் -இரா.துரைரெத்தினம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்றத் தலைவருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் -ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் இன்று (திங்கட்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 1990ம் ஆண்டு இருந்து இன்றுவரையும் மாகாணமுறை நிருவாகம் அமுலில் உள்ளது இது நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தில் உள…
-
- 0 replies
- 174 views
-
-
யாழிலுள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்ற கோரி போராட்டம்! யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான குறித்த களஞ்சிய சாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரியே அப்பகுதியை சேர்ந்த மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். இதேவேளை அப்பகுதியை சேர்ந்த ஜே / 81 பிரிவை சேர்ந்த மக்கள் ஸ்ரீ மீனாட்சி சனசமூக நிலையம் ஊடாக, குறித்த களஞ்சியசாலை மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு உள்ளதாகவும் களஞ்சிய சாலைக்கு முன்பாக கன…
-
- 0 replies
- 226 views
-
-
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 000 கண்கள் யாருடையவை? சர்ச்சை பதிவு! கண் தானமாக இலங்கையிடமிருந்து 35,000 விழிவெண்படலங்களை பாகிஸ்தான், பெற்றதாக அந்நாட்டின் மருத்துவர் ஒருவர் கூறியிருந்தார். சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவை ஒரு குழுஅடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவிக்கையில் குறித்த கண் மருத்துவர் இத்தகவலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 000 கண்கள் யாருடையவை என மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் பதிவொன்றினை தனது முகநூலில் இட்டுள்ளார். https://jvpnews.com/article/35-000-eyes-were-donated-sri-lanka-to-pakistan-1638…
-
- 0 replies
- 344 views
-
-
எறிகணையை வெட்டமுயன்ற இளைஞர் உடல் சிதறிப் பலி;சிறுவன் படுகாயம்! கிளிநொச்சி, உமையாள்புரத்தில் நேற்று மாலை நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயமடைந்தார். உமையாள்புரம், சோலைநகர் பகுதியில் இடம்பெற்றஇந்தச் சம்பவத்தில் சிவலிங்கம் யுவராஜ் (வயது-25) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். அவரது சகோதரரான சிவலிங்கம் நிலக்சன் (வயது-13) படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெடிக்காத நிலையில் இருந்த எறிகணை ஒன்றைக் கண்டெடுத்த இளைஞர், அதைக் கிரைண்டரால் வெட்ட முற்பட்டபோது அது வெடித்தது என்று தெரியவருகின்றது. அந்தப் பகுதியில் பல ஆபத்தான வெடிபொருள்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பழைய இரும்பு…
-
- 4 replies
- 481 views
-
-
நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்திற்காக மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும், இன்று பகல்12.30 மணியளவிலேயே சபை அமர்வுகள் முடிந்து விட்டன. நாடாளுமன்ற சம்பிரதாயப்படி வாக்கு வெட்டு பிரேரணை (cut Motion) சமர்ப்பிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்காமையினால், நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறவில்லை. நாடாளுமன்றத்திற்குள் தமது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் இன்றும் நாடாளுமன்றத்திலிருந்த வெளிநடப்பு செய்தனர். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 11ஆம் நாள் விவாதம் இன்று இடம்பெறவிருந்தது. …
-
- 0 replies
- 320 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்…
-
- 25 replies
- 1.2k views
- 1 follower
-
-
இலங்கையில் சீனாவின் எரிசக்தி திட்டங்களில் இந்தியா தலையிடுவதாக குற்றச்சாட்டு இலங்கையில் சீன நிறுவனங்களின் எரிசக்தி திட்டங்களில் இந்தியா தலையிடுவதாக சீன ஆதாரங்களும் நிபுணர்களும் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளனர். புதுடெல்லியின் தலையீடு இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் கூறினர். "மூன்றாம் தரப்பினரின் பாதுகாப்புக் கவலைகள்" காரணமாக, சில இலங்கையில் கலப்பின எரிசக்தித் திட்டங்களை நிறுவும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்ததை அடுத்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இலங்கை போன்ற அண்டை நாடுகளை இந்தியா எப்போதுமே தனது கொல்லைப்புறமாக எடுத்துக்கொண்டுள்ளது, மேலும் இலங்கையில்…
-
- 0 replies
- 242 views
-
-
நல்ல முடிவை சொல்லிட்டு போங்கள் என இ.போ.ச பிரநிதிகளை அலுவலகத்தினுள் இருத்தி வைத்த ஆளுநர் December 5, 2021 நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு வடமாகாண ஆளுநர் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார். யாழ்.மாவட்டத்தில் இருந்து இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் புதிதாக அமைக்கப்பட்டது. அங்கிருந்து தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபை மறுத்து வருவதனால் , அவர்கள் அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே நாமும் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. அதனால் புதிய…
-
- 5 replies
- 561 views
-
-
டாக்டர் நடராஜா முகுந்தனும் அவரது குடும்பத்தினரும், இலங்கையில் சித்திரவதைகளை அனுபவித்தனர் பிரித்தானியாவில் இருந்து அவர்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டு இருந்தனர். https://www.theguardian.com/uk-news/2021/nov/30/home-office-u-turn-on-sri-lankan-scientists-asylum-claim
-
- 186 replies
- 10.4k views
-
-
இலங்கையில் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலை இழிவாக இருப்பதாக ஐ.நா அலுவலர் கவலை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BARATH AULLSAMY படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடாவின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பான பரத் அருள்சாமி சந்தித்தார் இலங்கையின் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் வ…
-
- 1 reply
- 369 views
- 1 follower
-
-
யாழில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – சம்பிக்க! யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு, காலி போன்ற நகரங்களினை போல யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்ன…
-
- 1 reply
- 288 views
-
-
தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடிவதுடன் அரசாங்கம் எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து…
-
- 8 replies
- 586 views
-