ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
`எயார் கனடா' சொர்ணலிங்கம் உருவாக்கிய புலிகளின் விமானங்கள் [09 - April - 2007] புலிகள் இயக்கத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்ப காலகட்டங்களில் சைக்கிள்களில் வந்தே திடீரென்று தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிள்களில் வந்தும் அதன் பின்னர் சிறிய, பெரிய வாகனங்களில் வந்தும் தாக்குதல்களை விரிவுபடுத்தினர். இவ்வாறே கடற்பிராந்தியங்களில் ஆரம்ப காலகட்டங்களில் படகுகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கிய புலிகள் பின்னர் கப்பல்கள், நீர்மூழ்கிப் படகுகளில் வந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தனர். இன்று விமானங்களில் வந்து தாக்குதலை நடத்துகின்றனர். இது மிகவும் பயங்கரமான விடயமாகும். புலிகள் அமைப்பு ஹெலிகொப்டர்கள், விமான…
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழ். குடாநாட்டுக்கான ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும், 6 இலட்சம் மக்கள் யாழ். குடாநாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஒலப்ஸ் டொற்ரியர் தெரிவித்துள்ளார். "ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப் பேச்சுக்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், ஏ-9 பாதையை மூடியிருப்பதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை" என்றும் அவர் கூறினார். ஐரோப்பாவிலிருந…
-
- 0 replies
- 1.4k views
-
-
`ஏன் இந்தத் தயக்கம்?' இலங்கைப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால், இந்திய அரசாங்கம் தனது தார்மீக கடமையிலிருந்தும் விலகி நிற்பது நியாயமில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழகத்தின் முன்னணி நாளேடான `தினமணி' ஈழப்பிரச்சினைக்கு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் முன்னின்று செயற்பட்டால் நல்ல தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. `ஏன் இந்த தயக்கம்' என்று மகுடமிட்டு நேற்று வெள்ளிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் `தினமணி' மேலும் தெரிவித்திருப்பதாவது; விடுதலைப் புலிகள் எப்போது? எப்படி? எங்கே? தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை இராணுவம் குழம்பிப…
-
- 0 replies
- 993 views
-
-
`ஓசோன்படல அழிவு தொடர்ந்தால் 50 ஆண்டுகளில் இலங்கையின் கரையோரம் கடலில் மூழ்கிவிடும் அபாயம்' [05 - October - 2007] "பூமி இயங்குவதற்கும் ஜிவராசிகள் வாழ்வதற்கும் சூரியனே முழுமுதற் காரணமாக அமைகின்றான். எனவே நாம் தினமும் சூரியனை பொங்கல் வைத்து வழிபாடு செய்யவேண்டும்" என்று சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் தேசிய ஓசோன் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டபிள்யூ எஸ்.சுமதிபாலா "எதிர்கால சந்ததியினருக்காக ஓசோன் படலத்தைப் பாதுகாப்போம்" என்ற பொருளில் விரிவுரையைாற்றும் போது குறிப்பிட்டார். "சூரியனிலிருந்து பூமிக்கு பயணிக்கிற வெவ்வேறு கதிர்களிலிருந்து ஜீவராசிக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஊதாக் கதிர்கள் இயற்கையான சூரியத்திரையாக செயற்பட்டு வரும் ஓசோன் படலத்தினால் உறிஞ்…
-
- 1 reply
- 2.4k views
-
-
`கிழக்கின் உதயம்' சிங்கள ஆக்கிரமிப்புக்கான அரசாங்கத்தின் உபாயம்? -(அஜாதசத்ரு) [05 - August - 2007] அரசபடையினரால் கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது என்று பிரகடனப்படுத்திய அரசாங்கம் அது தொடர்பான தேசிய விழாவொன்றை கொழும்பு சுதந்திரசதுக்கத்தில் கொண்டாடியதுடன் அது தொடர்பான நிகழ்வுகளை அரச ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரங்களிலும் ஈடுபட்டது. இதனைவிட `கிழக்கின் உதயம்' என்ற பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான ஆரம்ப நிகழ்வுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் ஆரம்பித்துவைத்துள்ளது. 1987 இல் அப்போதைய மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன ஆகியோரால் கைச்சாத்திடப்பட…
-
- 2 replies
- 1.1k views
-
-
கெற்றபோல்' கொண்டு பிரபாகரனை தாக்க முடிந்தால் ஆயுதக் கொள்வனவு அவசியமில்லை [20 - September - 2007] [Font Size - A - A - A] *அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துடன் வைராக்கியத்துடன் செயற்படுவதினால் நாட்டுக்கோ மக்களுக்கோ அதில் எந்தப் பலனும் கிட்டப்போவதில்லையென சுட்டிக்காட்டிய வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன பிரபாகரனை "கெற்றபோல்" மூலம் தாக்க முடியுமெனில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது, அரசாங்கத்துக்கு நிதி நெருக்கடிகளும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்), பெறுமதிசேர் வரி, பொ…
-
- 2 replies
- 2.1k views
-
-
மலையக அரசியல் தலைவர்களின் போட்டா போட்டி காரணமாக நடந்து முடிந்த சம்பள உயர்வுப் போராட்டம் தொழிலாளர்கள் மத்தியில் விரக்தி நிலையை தோற்றுவித்துவிட்டன. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக் கொடுப்பதை விட அவர்கள் தங்களுடைய புகழை இந்தப் போராட்டத்தின் மூலம் எவ்வளவு உயர்த்திக் கொள்ள முடியுமென்பதில் தான் அக்கறை கொண்டிருந்தார்கள். இதனால், கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு கிடைக்காமல் போய்விட்டது. தொழிலாளர், விடுதலை முன்னணியின் பசறை, மடுல்சீமை மாவட்ட தொழில் உறவு அதிகாரி எம். ஞானப்பிரகாசம் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பசறை மாவட்ட அமைப்பாளர் பி. செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில்; தொழிற்சங்கம் தொழி…
-
- 0 replies
- 630 views
-
-
`சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளும் தீர்வே இனநெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும்' [06 - June - 2007] * வாசுதேவ நாணயக்கார "தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தினை சமர்ப்பித்து, யுத்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியது, காலத்தின் அவசியத் தேவையாகும்" என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பதுளை நூலக சேவை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நீதியமைச்சர் டிலான் பெரேராவின் அரசியல் பிரவேசத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவினையொட்டி, இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் அங்கு மேலும் கூறியதாவது; "இந்நாட்டிற்கு பெரும் அழிவினை ஏற்ப…
-
- 0 replies
- 785 views
-
-
`தமிழர், சிங்களவரிடையேயான பிரச்சினையாகவே இலங்கை விடயத்தை சர்வதேசம் பார்க்க வேண்டும்' [13 - December - 2007] * தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆற்றிய உரை தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறுமிடத்து எனது சிந்தனைக்கு சில விடயங்கள் வருகின்றன. ஒரு நாடு உலக நாடுகளால் மதிக்கப்படுவது என்பது வெறும் பொருளாதார அளவீடுகளாலோ, தொழில்நுட்பத்திறன்களாலோ, அல்ல. அந்த நாட்டின் நாகரிக வளர்ச்சியால், தேசிய மரபுகளால், கலாசாரத்தால் மட்டுமே ஒரு நிலையான கௌர…
-
- 0 replies
- 772 views
-
-
`தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதில் மோசமாக நடந்துகொள்வது யாரென்பதில் இரு பிரதான சிங்களக் கட்சிகளிடையே போட்டி' [15 - October - 2007] * புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின பரிசளிப்பு விழாவில் சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமாகிய பெ. சந்திரசேகரன் ஆற்றிய உரை. கல்வி என்பது ஒரு சமூகத்தின் அச்சாணியாகத் திகழ்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களுக்கே தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களே உலக வரலாறுகளில் இடம்பிடித்துள்ளன. இந்த உண்மையை கருத்திற் கொண்டு சமூக அபிவிருத்தி அமைச்சு மலையகத்தின் கல்வித்துறை மேம்பாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றி வருகி…
-
- 0 replies
- 837 views
-
-
`தீர்வுத் திட்டத்தை முன்வைக்க ஜனாதிபதிக்கு விருப்பமில்லை' [23 - February - 2007] [Font Size - A - A - A] * ஐ. தே.க.வுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை அவர் முறித்ததற்கான காரணத்தைக் கூறுகிறார் ரணில் -ஏ.ரஜீவன்- அரசாங்கத்திடம் இனப்பிரச்சினை தீர்விற்கான யோசனைகள் எதுவுமில்லை என குற்றம் சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் யோசனைகளை முன்வைக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளார். கொழும்பில் வர்த்தக சமூகத்தின் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கான விருப்பம் இல்லாததாலேயே ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கையை முறித்ததாக குற்…
-
- 1 reply
- 946 views
-
-
`படுகொலைகளுக்கு கருணாநிதி துணைபோகப்போகிறாரா?' [27 - January - 2008] கச்சதீவு நெடுந்தீவு கடலில் வைக்கப்படும் கண்ணிவெடிகள் மனிதாபிமானத்துக்கு வைக்கப்படும் அணுகுண்டுகள் என்று கடுமையாக சாடியிருக்கும் தமிழக முன்னணி நாளேடான `தினமணி' நடக்க இருக்கும் படுகொலைகளுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி துணைபோகப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. `என்ன கொடுமை இது' என்று மகுடமிட்டு நேற்று சனிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் தினமணி, இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் எடுத்துக்கூறி கடல் கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால் வரலாறு மன்னிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது; இந்தியப் பெருங்கடல் பகுதிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது [04 - March - 2008] "பிரபாகரன்" என்ற பெயரில் 25 வருட இனப்பிரச்சினையை சித்திரிக்கும் திரைப்படத்தை வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கைச் சபை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த திரைப்படம் வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில் பொது மக்கள் படும் துயரங்களை எடுத்துக் காட்டுவதாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதையானது விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த தற்கொலைக் குண்டுதாரியையும் அவர் எப்படி அந்த கடுமையான முடிவுக்கு தள்ளப்பட்டாரென்பதை…
-
- 13 replies
- 3.7k views
-
-
HOT NEWS நாகர்கோவில் மோதலில் இராணுவ வீரர் பலி****இலங்கையில் அக்கிரமத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்-அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர்****சூடுபட்ட இளைஞன் உதவி கோரி அவலக்குரல் எழுப்பியபோதும் ஒருவரும் உதவ முன்வரவில்லை-வவுனியா மாவட்ட நீதிபதி விசனம்***வவுனியாவில் ஒருவர் சுட்டுக் கொலை****முகத்துவாரம் எலி ஹவுஸ் வீதியில் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை* `புதிய அரசியல் கலாசாரம்' வெறும் பசப்பு வார்த்தை [19 - January - 2007] [Font Size - A - A - A] ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இன நெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள்…
-
- 0 replies
- 912 views
-
-
`புலிகளுடன் பேசுவதற்கு அரசு தயார் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டோம்' [31 - October - 2007] * சர்வதேச சமூகத்தின் ஆதரவு முக்கியமானதல்ல பசில் ராஜபக்ஷ தினக்குரலுக்கு விசேட செவ்வி ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு தயாரெனவும் ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளின் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அடிபணிய மாட்டாதெனவும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை `தினக்குரல்'க்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு; ஜனாதிபதி தேர்தலின்போது புலிகளி…
-
- 1 reply
- 1.2k views
-
-
`புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்' [19 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு உலகிலேயே அதிக பலம் வாய்ந்த ஆயுதக் குழுவுடன் யுத்தம் செய்தவாறே அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் கடினமான காரியமாக அமைந்தாலும் நாட்டு மக்களின் நலன்களைப் புறக்கணிக்க முடியாது என்று அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்தார். நவன்வெலயில் அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: உலகின் பயங்கரவாதக் குழுக்களிலொன்றான புலிகள் நாட்டில் நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளனர். புலிகளைத் தோற்கடித்து, வடகிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
`போர்க்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்' இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடைமுறை குறித்து, இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் இணைந்து முடிவெடுக்கும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார். தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் முடிவில், வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய மூன் இக் கருத்தைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்துப் பேசிய அவர், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தான் விஜயம் செய்தபோது இருந்த நிலைக்கும் தற்போதுள்ள நிலைக்கும் பெருத்த மாற்றம் இருப்பதாகவும், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். "தற்போது, பல்வேறு முன்…
-
- 3 replies
- 360 views
-
-
`மிஹின்' விமான சேவைக்கு பாராளுமன்ற அனுமதியின்றி பொதுமக்களின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக விசனம் பழைய விமானங்களை கொள்வனவு செய்திருப்பதாக சாடுகிறார் ரவி கருணாநாயக்க மிஹின் எயார்' விமான சேவைக்கு பாராளுமன்றத்தின் அனுமதியின்றி பொது மக்களின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயணிகளின் விமான சேவைக்கு உதவாத பழைய விமானமே கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை, மிஹின் லங்கா நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்கென சமர்ப்பித்து பேசிய போதே ரவி கருணாநாயக்க எம்.பி. இவ்வாறு கூறினார். …
-
- 2 replies
- 964 views
-
-
`வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவோர்' மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயரும் அகதிகளின் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கள்வர்கள் திருடி விற்பனை செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் உறுகாமம், மாவடி ஓடை, இலுப்படிச்சேனை, கரடியனாறு போன்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நாடி வரும் மக்களின் உடைமைகள், ஆடு, மாடு போன்ற கால்நடைகளே இவ்வாறு திருடி விற்பனை செய்யப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான உறுகாமம் என…
-
- 0 replies
- 892 views
-
-
-வெள்ளிக்கிழமைத் தொடர்ச்சி- ஒரு காலத்தில் எங்கள் தேசத்தில் நாங்கள் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சியை ஐரோப்பியர்களிடம் இழந்தோமே தவிர, சிங்கள அரசுகளிடமல்ல. அவற்றின் எந்தவோர் அரசியலமைப்பையும் நாங்கள் ஏற்றுக் கொண்டவர்களும் அல்லர், இறைமை மக்களிடம் தான் இருக்கின்றது என்ற அடிப்படையில் எங்களுடைய இறைமை எங்களுடைய மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த அடிப்படையில், எங்களுடைய இறைமையையும் எங்களுடைய ஆட்சிக் கட்டமைப்பையும், எங்களுடைய சுதந்திரத்தையும் நீங்கள் அங்கீகரிப்பதன் மூலந்தான் இந்தத் தேசத்திலே நாங்கள் ஓர் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றையாட்சியில் அல்ல - இருக்க முடியும். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் தனியாகத் தங்களுடைய சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கு இடமிருக்க முடியுமா என்பதை இந்த ஆட்சிக் காலத…
-
- 0 replies
- 823 views
-
-
`ஹியூமன் றைற்ஸ் வோச்' கோரியதற்கு மாறாக நிதியுதவியை அதிகரித்தது ஜப்பான் [30 - May - 2007] சிறிலங்காவிற்கு நிதி உதவிகளை வழங்கவேண்டாமென்று அமெரிக்காவில் இயங்கும் `ஹியூமன் றைற்ஸ் வோச்' (Human Right Watch) அமைப்பு அண்மையில் விடுத்த கோரிக்கையை ஜப்பான் அரசு நிராகரித்துள்ளது.அதுமட்டுமன
-
- 0 replies
- 1.1k views
-
-
வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் அமைச்சர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் சென்றுள்ளார். சாவகச்சேரி பிரதேச மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவ விடுதிகளைப் பார்வையிட்டதோடு அங்கிருந்த சிறுவர்களை தூக்கி ´வாங்க மச்சான் வாங்க´ என்ற பாடலைப்பாடி மகிழ்வித்தார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22185
-
- 0 replies
- 289 views
-
-
பாராளுமன்றத்தில் இரு நாள் விவாதத்தை கோருவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு தீர்மானம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்துவதற்காக புதுடில்லி செல்வதற்கு முன்னர் இனப் பிரச்சினைக்கான தீர்வு தாமதமாவது குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த இரண்டு நாட் கள் விசேட விவாதத்துக்கான கோரிக்கையை கூட்டமைப…
-
- 2 replies
- 746 views
-
-
தமிழர்களே, இலங்கையில் நடைப்பெறும் IIFA - FICCI-யின் கலை விழாவில் இந்தி நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். இறுதியாக நடிகர்கள், தயரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலதரப்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன. இனி அவர்கள் அங்கு செல்வதும், செல்லாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம் ஆனால் நம்முடைய இப்போராட்டம் மூலம் அவர்கள் அங்கு நடைப்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் ஆகியவற்றை அவர்களுக்கு அறிய செய்தல் நம்முடைய நோக்கம். miranair@aol.com info@akprod.com biz@akprod.com ashish@akprod.com info@redchillies.com casting.redchillies@gmail.com kanika@redchillies.com a.g.group@hotmail.com kutty.amc@hindujagroup.com ashish@akprod.com helloajay@yah…
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழ் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பின் சுத்துமாத்துக்கள் அம்பலம்! சனி, 30 ஏப்ரல் 2011 17:00 .இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை சட்ட சிக்கலில் அகப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை அரசு. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு எதிராக புலம் பெயர்ந்த தமிழருக்கு ஆதரவாக செயற்படும் போது இந்தியா இலங்கை அரசு தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் இலங்கைக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. ஐ.நாவின் சட்ட சிக்கலில் இருந்து தன்னை தப்ப வைத்துக்கொள்ள இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாக பயன்படுத்த உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து இலங்கை அரசு ஒரு தீர்வை நோக்கி சாதகமாக நகர்வதாக இந்தி…
-
- 4 replies
- 2.7k views
- 1 follower
-