ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
நவ-20 அழைப்பை மீளப்பெற வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஆயர் பேரவையுடன் P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினர் சந்திப்பு! இதுதொடர்பில் P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, போரினால் இறந்தோர் நினைவு தொடர்பான வடக்கு கிழக்கு ஆயர்களுடனான சந்திப்பு மேற்படி விடயம் தொடர்பாக அண்மையில் வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட போரினால் இறந்தோர் நினைவு எனும் தலைப்பிலான அறிக்கை பல தரப்பினருக்கு அதிருப்தியையும், கவலையையும் தமிழ்த் தேசியத்தின் பால் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களாக இவ்விடயம் தொடர்பாக நடைபெற்ற பல்வேறுபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் தொடக…
-
- 0 replies
- 217 views
-
-
மன்னார் ஆட்காட்டிவெளி. மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு. மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இது அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான செயல் என மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமாகிய வி.எஸ் சிவகரன் கருத்து வெளியிடும் போது, “துயிலுமில்ல நுழைவாயிலுக்கு அருகில் இராணுவம் உள்ள போது யார் உடைத்திருக்க முடியும் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. பல வருடங்களாக இருந்த இந்த…
-
- 0 replies
- 205 views
-
-
அரசாங்கம் கவிழ்ந்ததாக... ஒருநாள், விசேட செய்தி வரும் – ராஜித அரசாங்கம் கவிழ்ந்ததாக ஒருநாள் காலை நித்திரைவிட்டு எழும்போது விசேட செய்தி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சிலர் உடனடியாக தம்முடன் இணைய விரும்பியபோதும் அதற்கு இன்னும் சிறிது காலம் கடக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். எந்தவொரு சக்தியுடனும் இணைந்து இந்த அரசாங்கத்தை வி…
-
- 0 replies
- 160 views
-
-
கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு! மாவீரர்களை நினைவு கூரும் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று விபரங்களை திரட்டி அச்சுறுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகப்பிரிவினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேலேயே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று திருநகர் பகுதியிலும் அதை அண்டிய பகுதியிலும் இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2021/1250810
-
- 0 replies
- 264 views
-
-
யாழில்... விறகுக்கு, கிராக்கி. எரிவாயு விலையேற்றம், தட்டுப்பாடு மற்றும் மண்ணென்ணய் தட்டுப்பாடு காரணமாக யாழில் விறகுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றில் விறகு கட்டி விற்பனையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஒரு சைக்கிள் கட்டு விறகு 1800 ரூபாய்க்கும், ஒரு மோட்டார் சைக்கிள் கட்டு விறகு 2500 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. https://athavannews.com/2021/1250848
-
- 0 replies
- 260 views
-
-
1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாள் ஒன்றிற்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக தகவல்! சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் 1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாள் ஒன்றிற்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “உள்வரும் அழைப்புகளில் 50% பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை மற்றும் பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகள் குறித்து சுமார் 80 முதல் 100 முறைப்பாடுகள் பெறப்படுகின்றன. மேலும், குடும்பங்களில் நிலவும் …
-
- 0 replies
- 338 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை – அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவோ அல்லது ஹர்ஷ டி சில்வா கூறுவது போல டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளும் போது அரசாங்கம் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டிய நிலை வரும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை மூலமான வேலைத்திட்டத்திற்கு அது தடையாக அமையலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதற…
-
- 0 replies
- 113 views
-
-
சுமந்திரன், சாணக்கியன் மீது கடுமையான விமர்சனம் - திலீபன் - ஸ்ரீதரனுக்கிடையில் சபையில் வாக்குவாதம் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) முஹம்மது சாணக்கியன் எனவும் வன்னியில் யுத்தத்தில் இறந்த மக்களின் நகைகளை திருடிய சுமந்திரன் எம்.பி என .பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு.திலீபன் கூறிய விமர்சனத்தினால் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் புதன்கிழமை (17) இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு.திலீபன் உரையாற்றியபோது, அவர் வழக்கம் போலவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை கடுமையாக சாடியும் விமர்சித்தும் பேசிக்கொண்டிருந்தார். இதன்போது தமிழ்நாட்டில் உள்ள சீமான் போன்று …
-
- 8 replies
- 507 views
-
-
மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பாகி விடும்-பொ. ஐங்கரநேசன் November 16, 2021 மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் போரால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுநாளாக நவம்பர், 3ஆவது சனிக்கிழமையைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேல…
-
- 15 replies
- 955 views
-
-
அடுத்த மாதம் முதல் இலங்கை இருளில் மூழ்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எச்சரித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு எரிபொருள் கப்பல் வரும் என்று அரசு உறுதியளித்த போதிலும், அதற்கு செலுத்துவதற்கு போதிய டொலர் அரசிடம் இல்லை. பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை. கச்சா எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய டொலர் இல்லாத காரணத்தால் தான் மூடப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்துக்கான எரிபொருள் நிறுத்தப்பட்டு, விமான சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இலங்கை இருளில்! - உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 3 replies
- 600 views
- 1 follower
-
-
இலங்கையில் சராசரியாக நான்கு பேரில் ஒருவர், நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சுகாதார கொள்கைகள் தொடர்பான நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் அச்சமூட்டுவதுடன், படித்த இளைஞர்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறும் விருப்பம் 50% ஆல் உயர்ந்துள்ளதையும் காணமுடிகிறது. அறிக்கையின்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 34 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முழுமையான விருப்பத்தைக் கொண்டுள்ளனர்என்றும் அவர்களில் 24 வீதமானவர்கள் ஏற்கனவே அதற்காக திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் 20 வீதமானவர்கள் இன்னும் நாட்டை விட்டு வெளியேறும் முறைகளைப் பின்பற்றுவதாகவும் அந்த அறிக்கை க…
-
- 3 replies
- 284 views
- 1 follower
-
-
சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள், துயிலுமில்லங்களில் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2009ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்ரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று தற்போதைய அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செ…
-
- 0 replies
- 146 views
-
-
(எம்.நியூட்டன்) யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது என தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் பயணங்கள் இதர செயற்பாடுகளின்போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என தெரிவித்தார். யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார . அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் இற்றுவரை 469 மரணம் பதிவாகியுள்ளது தற்பேதைய சுழலில் 634 குடும்பங்கள் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா அதிகரித்து செல்கிறது. பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கவேண்டும். சமுக இடைவெளி முகக்கவசம் அணிதல் போன்றவை கட…
-
- 0 replies
- 318 views
-
-
அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் பௌத்த மத குரு- இரா.துரைரெட்னம் எச்சரிக்கை November 18, 2021 அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையேற்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பௌத…
-
- 1 reply
- 464 views
-
-
கோழி இறைச்சியின், விலை அதிகரிப்பு! கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 830 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிவதாகவும், கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2021/1250730
-
- 2 replies
- 208 views
-
-
நடைமுறைக்கு வந்த இரு சட்டமூலங்கள் : November 18, 2021 தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதெல்லை மற்றும் தொழிலாளர்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (17) சான்றுரைப்படுத்தியுள்ளாா். இந்த இரு சட்டமூலங்களும் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தன. தனியார் துறை தொழிலாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிப்பது இந்தச் சட்டமூலங்களின் நோக்கமாகும். இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் தனியார்துறை ஊழிய…
-
- 1 reply
- 177 views
-
-
76 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் மகிந்த! பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இன்று தனது 76 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் புகைப்படத்தை அவரின் மகனான அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். ”எனக்கும் எனது தம்பிமாருக்கும் ஒரு சிறந்த தந்தையாக நாம் இன்று இருக்கும் நிலைக்கு எங்களை உயர்த்த நீங்கள் எடுத்த முயற்சிகளை எப்போதும் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.” என நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார். 1945 ஆம் ஆண்டில் பிறந்த மகிந்த ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு …
-
- 1 reply
- 316 views
-
-
தமிழர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் பூர்வாங்க ஆய்வைக்கோரும் அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (நா.தனுஜா) ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதிநிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் இலங்கையில் தண்டனையின்மைக்கு எதிராகப்போராடுகின்ற முக்கியமானதோர் சர்வதேச நடவடிக்கையாகவும் ரோமசாசனத்தின் 15 ஆவது பிரிவின்கீழ் பூர்வாங்க ஆய்வொன்றினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தகவல் அறிக்கையொன்று கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ…
-
- 0 replies
- 124 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் விளக்கமளித்துள்ளனர். இந்து மதத்தை இழிவுபடுதும் எந்தவொரு நோக்கத்திலும் இவை முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர். கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணிக்கு பொலிஸாரினால் ஏற்படுத்தபட்ட இடையூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள…
-
- 5 replies
- 468 views
-
-
இலங்கை இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை! இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தீர்ந்துவிடும் என்றும் அன்றிலிருந்து நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை என்றும் மசகு எண்ணெய்க்குச் செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாத காரணத்தினால்தான் மூ…
-
- 1 reply
- 146 views
-
-
கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு... யாழில் களைகட்டும் சிட்டி வியாபாரம்! இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற விழாக்களுள் ஒன்றான கார்த்திகைத் தீபத் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் சிட்டி வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது. தமது வீடுகளிலும், ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபடுவதற்காக மக்கள் பலரும் ஆர்வத்துடன் சிட்டிகளைக் கொள்வனவு செய்து செல்கின்றனர். சி…
-
- 1 reply
- 370 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் ரோமசாசனத்தின் 15 ஆவது பிரிவின்கீழ் பூர்வாங்க ஆய்வொன்றினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தகவல் அறிக்கையொன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமத்தினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கையில் தமிழ் மக்களை இலக்குவைத்து மனிதாபிமானமற்ற மிகமோசமான குற்றங்களும் போர்க்குற்றங்க…
-
- 0 replies
- 304 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை! முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 47 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 23 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அத்துடன் புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், மாங்குளம், மல்லாவி மற்றும் ஐயன் குளம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 24 பேருக்கு குறித்த நிகழ்வுகளை நடத்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம், நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்…
-
- 0 replies
- 144 views
-
-
கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் – டக்ளஸ் சமுர்த்தி திட்டத்தை பெறும் மக்கள் கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், அதை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , “அத்துடன், இம்முறை பாதீட்டில் 17 இலட்சத்து 93 ஆயிரத்து 533 சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கென 50 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சமுர்த்தி நிவாரண…
-
- 0 replies
- 169 views
-
-
கலாநிதி வஜிரா சித்ரசேனவுக்கு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ விருது! இலங்கையின் நடனக் கலையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லே அவர்களினால் இன்று (புதன்கிழமை) அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2020 ஆம் ஆண்டிற்காக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கும், இலங்கையில் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்தி இலக…
-
- 0 replies
- 372 views
-