ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
இதோ இந்தக் காணொளியில் முஸ்லீம்களின் கடை உடைக்கப்படும்போது சிங்கள போலீஸ்காரன் செய்வதை பார்க்க இந்த சிங்கள காணொளி உதவும். http://www.alaikal.com/news/?p=125726
-
- 4 replies
- 802 views
-
-
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
அம்பிட்டிய சுமணரத்தின தேரர் பிணையில் விடுதலை எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்; 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில், இன்று(14) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில்; நடந்து கொண்டார், இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி, அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து தேரரை, இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பானை விடுத்திருந்தது. இதற்கமைவாக, அம்பிட்டிய சுமணரத்தின தேரர், இன்று புதன…
-
- 0 replies
- 195 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடி காவல்துறை பயிற்சிக் கல்லூரிப் பணிப்பாளரும் காவல்துறை அத்தியட்சகருமான எம்.ஜமால்தீன் இன்று அடையாளம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் கல்முனையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) நீதிஅமைச்சர் அலிசப்ரி அடிப்படைவாதத்தை தூண்டும்வகையில் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படலாம் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்து சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். அந்த முறைப்பாட்டிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 532 views
-
-
ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார் December 29, 2020 யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால் முதல்வர் பதவியை இழந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் அந்தப் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அறிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் நாளை தெரிவு இடம்பெறவுள்ளது. இந்த நிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சார்பில் இம்மானுவேல் ஆனல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். #இம்மானுவேல்_ஆர்னோல்ட் #யாழ்ப்பாணம்_மாநகரசபை #பாதீடு #…
-
- 0 replies
- 574 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வரும் போராட்டங்களினால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பல வழிகளிலும் நெருக்கடிகள் தோன்றியிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இது தொடர்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பிரித்தானியாவில் உள்ள தேம்ஸ் பௌத்த நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கள சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு பிரித்தானிய காவல்துறையினர் பாதுகாப்புக்களை வழங்க மறுத்ததனால் கைவிடப்பட்டுள்ளன. இக்கொண்டாட்டங்களில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ரஜபக்சவின் சகோதரரும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தித்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கனடாவில் நடைபெறும் தமிழ்…
-
- 0 replies
- 549 views
-
-
-கெலும் பண்டார பாடசாலைக்கு செல்வதற்காக நாளொன்றுக்கு 24 கிலோமீற்றர் நடக்கும் நான்காம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன் இரத்தினபுரி,பலாங்கொடை நான்பெரியல்ல தோட்டத்தில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாணவர் விவேகானந்தா வித்தியாலயத்திலேயே கல்விபயின்று வருகின்றார். இந்த பாடசாலை மற்றுமொரு தோட்டத்திலேயே இருக்கின்றது. சப்ரகமுவ மாகாண சபை உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழு முதலமைச்சர் மஹிபால ஹேரத்துடன் இப்பகுதிக்கு விஜயம் செய்தது. நான்காம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவன் பாடசாலை செல்வதற்கு அதிகாலை 4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவார் என்றும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்கு இரவு 7 மணியாகிவிடும் என்றும் இந்த குழுவினர் கண்டறிந்துக்கொண்டனர். குடும்பத்தில் மூத்தப…
-
- 3 replies
- 630 views
-
-
ஒற்றையாட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது மகாநாயக்க தேரர்கள் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) உத்தேச அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கு எந்தவொரு பாதிப் பும் ஏற்படக் கூடாது. அத்துடன் மாகாண சபை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும்போது மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அர சின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் காணப்பட வேண்டும். அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்த இரண்டு கடிதங்களிலேயே வலியுறுத்தியுள்ளனர். இனவாதம் ப…
-
- 0 replies
- 206 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் நடத்திவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்திரை புத்தண்டு கொண்டாட்டங்களுக்காக தனது சொந்த ஊரான தங்காலைக்கு சென்ற மகிந்தவை அவரது தங்காலை இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்த விமல் வீரவன்ச புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தபோதே இந்த வேண்டுகோளையும் விடுத்ததாக கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படையினர் முடிவுக்கு கொண்டுவரும் வேளையில் புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் போ…
-
- 0 replies
- 1k views
-
-
இணையத்தின் ஊடாக பிரித்தானிய வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் By General 2013-04-24 22:58:37 இணையத்தின் ஊடாக பிரித்தானிய வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் பிரித்தானியாவிற்கான சகல வீசா விண்ணப்பங்களும் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் கையெழுத்து மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளது. வீசா விண்ணப்பத்திற்கான நேர்முகத் தேர்வின் விண்ணப்பங்களை கணனிப் பிரதி எடுத்துக் கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=4177
-
- 1 reply
- 312 views
-
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என எச்சரிக்கை by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/PHI-UNION-1.jpg இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவெனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிலைமைகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கைய…
-
- 0 replies
- 376 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
ஹம்பாந்தோட்டையில் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது ஹம்பாந்தோட்டையின் நாளைய தினம் முதல் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது என ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நாளைய தினம் (07) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 26 பேருக்கு இது தொடர்பில் தனிப்பட்ட முறையில் அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.virakesari.lk/article/15178
-
- 0 replies
- 134 views
-
-
http://www.morgenpost.de/berlin/article107..._in_Berlin.html
-
- 0 replies
- 823 views
-
-
நல்லாட்சியில் இணையும் விவகாரம்: ஈ.பி.டி.பி; இ.தொ.கா விளக்கம் ப. பிறின்சியா டிக்சி நல்லாட்சி அரசாங்கத்துடன், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துகொள்ளப் போவதாக வெளியான செய்தி தொடர்பில், அவ்விரு கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், “அமைச்சுப் பதவியொன்றை ஏற்பதையோ அல்லது நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதையோ நான் தற்போதைக்கு விரும்பவில்லை. “எனக்கும் இந்தச் செய்திக்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. வெளியில் இருந்துகொண்டுதான் செ…
-
- 0 replies
- 231 views
-
-
(நா.தனுஜா) நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியமான நிதியினளவு 8 பில்லியன் ரூபாவாகும். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளது. இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மீளவலுப்படுத்த முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/144140/champika.jpg அநுராதபுரத்தில் 27 ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க…
-
- 2 replies
- 745 views
-
-
பொதுமக்கள் செறிவாகவுள்ள பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது போர்க்காலச் சட்டங்கள் அரசாங்கப்படைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மீறப்பட்டிருப்பது தொடர்பாக அனைத்துலக ஆணைக்குழு ஒன்றின் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவையை உணர்த்தியிருக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) சுட்டிக் காட்டியிருக்கின்றது. "கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும் அரச தலைவரின் செயலகத்தால் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அண்மைக்கால போர்களின் போது கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது"…
-
- 0 replies
- 642 views
-
-
தமிழர்களுக்கான ஆகக் குறைந்த தீர்வுத் திட்ட வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்காக மூவர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று இடம் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. முற்பகல் 11.30 மணி வரை நீடித்த இந்தக் கலந்துரையாடலில் எந்தத் தீர்மான முடிவும் எட்டப்படவி…
-
- 6 replies
- 949 views
-
-
மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவரவா சர்வஜன வாக்கெடுப்பு கோரப்படுகின்றது? டிலான் கேள்வி ; தமிழ்க் கூட்டமைப்புக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்கிறார் (ரொபட் அன்டனி) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதி முறையை நீக்கும் நோக்கில் புதிய அரசியலமைப்பை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தினால் அரசியல் தீர்வை பெறுவதற்கான இறுதி சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுவோம். அத்துடன் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக உருவெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். சர்வஜன வாக்கெ…
-
- 1 reply
- 261 views
-
-
இலங்கையின் மற்றுமொரு பரிணாமம் : மத்தலயில் குவியும் விமானங்கள்! கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை காரணமாக அதன் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக கடந்த 6ஆம் திகதியில் இருந்து மத்தல விமான நிலையத்தில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்றுவரை 84 வரையான விமான பயணங்கள் மத்தல விமான நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் பீஜிங் மற்றும் ஷாங்காய் விமான பயணங்கள் இரண்டும், பிளே டுபாய் விமான சேவையும், இந்தோனேஷியாவின் ஸ்ரீ விஜய விமான சேவையும் தற்போது …
-
- 0 replies
- 251 views
-
-
வவுனியா தடுப்ப முகாமில் தனியே தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்களில் 22வயதுக்கு மேற்பட்டவர்களை சிங்கள இராணுவம் சுமார் 15 பேரூந்துகளில் ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர்
-
- 5 replies
- 1.5k views
-
-
"தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுபவர்கள் முடிந்தால் ஒரு பிரச்சினையையாவது சுட்டிக்காட்டட்டும். போருக்குப் பின்னர் வடபகுதியில் புதிதாக ஒரு விகாரையேனும் அமைக்கப்படவில்லை. இதனை நான் பொறுப்புடனேயே கூறுகின்றேன். எனது கூற்று தவறாயின், இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டவேண்டும். மாறாக, வீரவசனம் பேசுவதில் பயனில்லை'' இவ்வாறு தமிழ்க் கூட்டமைப்புக்கு சவால் விடுத்துள்ளது அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய. வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்களே தவிர, அவர்களின் வாழ்வைக் கெடுக்கவில்லை என்றும், தமிழ் மக்களைக் கூட்டமைப்பு அதலபாதாளத்தை நோக்கி அழ…
-
- 4 replies
- 1k views
-
-
மத்திய வங்கி மீதான தாக்குதல் 21 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வில்லை இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதி க்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அன்று முதல் இன்று வரையுள்ள அரசாங்கங்கள் தோல்வி யடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு மட்டுமே வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி தாக்குதலால் மரணித்த மற்றும் ஊனமுற்றவர்களுக்கான சங்கத்தின் தலைவர் எல்.டி.எல்.ஏ.குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். மேலும், இச் சம்பவத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு 55 வயதிலேயே …
-
- 0 replies
- 255 views
-
-
இலங்கை அரசு மாற்று வழிகளை நாட நாம் வழிவகுத்து விடக்கூடாது * இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது சாத்தியமில்லை சென்னையில் இந்திய பிரதமர் அறிவிப்பு சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றுக்கு இராணுவத்தை அனுப்புவது எளிதான காரியமல்லவென்று தெரிவித்திருக்கும் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றையே தாங்கள் விரும்புவதாகக் கூறியிருக்கின்றார். சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதியைப் பார்வையிட குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்ட கலாநிதி மன்மோகன் சிங் செய்தியாளர் மகாநாடொன்றிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார். பொதுத் தேர்தலின் பின்னர் தனது ச…
-
- 1 reply
- 1k views
-