Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆர்.ராம்) இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் இருநாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிமைகளில் நடைபெறவுள்ளதாக சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த விஜயத்தின் போது, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதோடு, கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர் | Virakesari.lk

  2. வியாழேந்திரனின் தம்பியோடு இணைந்தே எனது மகனை கொன்றனர் ; கதறும் தாய் -திடுக்கிடும் தகவல் பேரினவாத சிங்கள அரசுக்கான இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் பாலசுந்தரத்தின் கொலையை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரனும் சேர்ந்தே செய்ததாக கொலை செய்யப்பட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எனது மகனை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மய…

  3. ஊழல் மோசடிகள் அம்பலமாவதை தடுக்கவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதா? – எதிர்க்கட்சி நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த குழுக்களில் இருந்து பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்களை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் ஆளும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களை இந்த குழுக்களில் நியமிக்க கூடாது என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் முற்றாக பொதுஜன பெரமுன உறுப்பினர்களை மாத்திரம் குறித்த தெரிவுக் கு…

  4. சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என அறிவிப்பது தவறு – ஆனந்த சங்கரி குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஊடாக குறித்த விடயத்தினை குறிப்பிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தினால் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சில கட்சிகள…

  5. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதா? இல்லையா?: இன்று அரசாங்கம் முடிவெடுக்கும்! நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பல்வேறு தர்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அது தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கல்துகொள்ளுமாறு நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட…

  6. இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்ப தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானம்! 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் இன்று தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்களான இரா. சம்பந்தன், ரவூப் ஹக்கீம், சி.வி. விக்னேஸ்வரன், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை …

  7. யாழில். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் December 12, 2021 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் 43 நபர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வு பெற்ற காவல்துறை மா அதிபர் சந்திரா பெனாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யா…

  8. இன்று விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை பாராளுமன்றை ஜனாதிபதி 18/01/2022 வரை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளார் (prorogued). நன்றி @Nathamuni https://www.dailymirror.lk/breaking_news/Parliament-prorogued/108-226724

  9. மூதூரில் குண்டு வெடிப்பு Posted on December 12, 2021 by தென்னவள் 15 0 மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் அல்லேநகர் பிரதேசத்தில் குண்டொன்று வெடித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 15 வயதான சிறுவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்தார். இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தங்களது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இலை,குழை வெட்டுவதற்காக, அருகிலிருக்கும் பாலடைந்த இடத்துக்குச் சென்றுள்ளான். அங்கு, மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த போதே, குண்டு போன்ற ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்…

    • 0 replies
    • 343 views
  10. முடிந்தால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் – அரசாங்கத்திற்கு மனோ சவால்! முடிந்ததால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று(ஞாயிற்றுக்கிழம) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் …

  11. அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் டொலர்களாகக் குறைந்தது இரு வாரங்களுக்குப் போதுமான அத்தியாவசியப் பொருட்களை மாத்திரமே இறக்குமதி செய்யலாம்- மத்திய வங்கி பதிப்பு: 2021 டிச. 10 19:45 புலம்: யாழ்ப்பாணம், ஈழம் புதுப்பிப்பு: டிச. 11 20:36 தற்போதைய சூழலில் கையில் இருக்கும் இலங்கையின் அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு வாரங்களுக்குப் போதுமான அந்நியச் செலவாணியே கையிருப்பில் உள்ளதென்றும் விஜேவர்த்தன கூறியுள்ளார். மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச நாணய…

  12. அமெரிக்காவின் அறிவிப்பு மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களின் காரணகர்த்தாக்களுக்கான எச்சரிக்கை சமிக்ஞை - யஸ்மின் சூக்கா (நா.தனுஜா) இலங்கைப் பாதுகாப்புப்படையின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு எதிராகத் தடைவிதிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பானது வெறுமனே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கீழ்மட்ட அதிகாரிகளின் வீசாக்களை முடக்குவதற்கானது மாத்திரமல்ல. மாறாக அவர்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்த - தற்போதும் உயர் அதிகாரங்களைக்கொண்ட பதவிகளிலிருக்கும் பலருக்கான எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இதுகுறித்து மேற்படி செயற்திட்டத்திடம் கருத்து வ…

  13. பொதுமக்கள் வீதிக்கு இறங்கினால் ! அரச படைகள் பதிலளிக்கும் ஆபத்து !- புதிய செயற்றிட்டம் அவசியம் என்கிறார் பாக்கியசோதி (ஆர்.ராம்) நாட்டின் பொருளாதார நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் வீதிக்கு இறங்குவதற்கான ஏதுநிலைகள் அதிகரித்துவருகின்றன. அவ்விதமான நிலைமையொன்று ஏற்படுமாயின் அம்மக்களுக்கு பதிலளிப்பதற்காக அரசாங்கத்தினால் படைகள் களமிறக்கப்படும் ஆபத்தான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கான அரசியல் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்…

  14. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க தயாராகும் தமிழ்த் தேசிய கட்சிகள் குழு (ஆர்.ராம்) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவொன்று தயாராகியுள்ளது. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் குறித்த குழுவினர் விரைவில் தமிழகம் செல்வுள்ளனர். தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரங்களை பகிர்ந்து இனப்பிரச்சினைக்கான நிரந்த அரசியல் தீர்வினைப் பெற்றுத்தருவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊடாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மேற்படி குழுவினர் முன்வைக்கும் முகமாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. …

  15. சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பிக்குவை உடனடியாக நீக்குமாறு சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!! மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் வசித்து வரும் சிங்கள மக்கள் தங்களது கிராமத்தில் இருக்கும் பிரதான பிக்குவை உடனடியாக நீக்குமாறு கோரி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக 11 வயது மதிக்கத்தக்க பிக்கு படிப்பினை படிப்பிற்காக வந்த சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக சிறைப்பிடிக்கப்பட்டு இருந்தார். பிணை மனு அடிப்படையில் மீளவும் வெளியில் வந்த பிக்கு குறித்த விகாரையில் தொடர்ந்தும் இருப்பதனால் பிக்குவை உடனடியாக நீக்குமாறு கோரியும் தங்களது மாணவர்களது சமய நடவடிக்…

  16. தோண்டும் இடமெல்லாம் வெளிக்கிளம்பும் எலும்புக் கூடுகள்! December 11, 2021 கிளிநொச்சி – பளை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (11.12.21) கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் தொடர்பில் பளை காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பளை காவற்துறைனரால் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாளை அகழ்வு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்…

  17. தமிழ் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு ஆரம்பம்! தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியன் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களு…

  18. அம்பாறையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை ஒரே இரவில் அகற்றப்பட்டது! பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்பை வெளியிட்டதோடு, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நடவடிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இதனால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டமையை அடுத்து, பொலிஸார் பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவ…

    • 5 replies
    • 439 views
  19. இலங்கை கடலில் 250 கிலோ போதைப் பொருள் பிடிபட்டது - கடற்படை நடவடிக்கை 11 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,SRI LANKA NAVY MEDIA இலங்கை கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பில், பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் தெற்கு கடல் பிராந்தியத்தில் 900 கடல் மைல் தொலைவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 250 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து, போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாட்டு மீன்பிடி படக…

  20. இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும் அழைப்பு ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் அந்நியச் செலாவணி மற்றும் நாணயக் கையிருப்பு நிலவரம் குறித்து விசாரிப்பதற்காகவே இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகிறது. வரவு செலவுத் திட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-மததய-வஙக-ஆளநரககம-அ…

  21. டொலர் இல்லை: அத்தியாவசிய உணவுப்பொருள் கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்; பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் (சி.எல்.சிசில்) சுமார் 1500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட் கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய உணவுப் பொ…

  22. தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் முதல் இடம்! தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் தேசிய ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்று அதி சிறந்த அரசாங்க அலுவலகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது. பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் வழிகாட்டலுக்கிணங்க தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால், வருடாந்திரம் தேசிய உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டி நடத்தப்படுகிறது. உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் பற்றி நிறுவனம் கொண்டுள்ள அறிவினை நடைமுறையில் யதார்த்தமானதாக மாற்றுகின்ற செயற்பாங்கு அதன்போது மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படுகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்…

    • 1 reply
    • 1k views
  23. நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது – ஜீவன் தொண்டமான் நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன். என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ” எதையும் செய்யவில்லை என சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். புதுமையாக நான் எதையாவது செய்வதாக இருந்தால் அரசியல் பழிவாங்கலில் தான் ஈடுபட்டிருக்க வேண்டும். அதை நான் செய்யவில்ல…

  24. கரையோரங்களில் கரையொதுங்குவது சரணடைந்தவர்களின் சடலங்களா? வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா? இவ்வாறு சடலங்களாக கரையொதுங்குகின்றனர் என்றும் கேள்வியெழுப்பினார். சரணடைந்தவர்கள், இப்போதுதான் கொலை செய்து கடலில் வீசுகிறார்களா? எனும் சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதம் நேற்று (10) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…

  25. வரவு செலவுத்திட்டம் விவாதிக்கப்படும்போதே கடன் கேட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டியநிலை - சித்தார்த்தன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வரவு செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடனுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ அல்லல்பட்டுத்திரிகின்றார். இந்த வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போதே அவர் கடன் கேட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.