Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.மனோசித்ரா) பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது வேறு எந்தவொரு தேசிய அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் செயற்பாடுகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் உயர்தர இராணுவ படையணியாக புதிய படையணியொன்று உறுவாக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு, விசேட அதிரடிப் படையணி மற்றும் ஏனைய படையணிகள் ஆகியவற்றினை இணைத்து 'முதலாவது இலங்கை இராணுவ படையணி' உருவாக்கப்பட்:டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு சாலியபுர கஜபா படையணித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இராணுவத் தளபதியின் முன்னோக்கு வழி மூலோபாய 2020 - 2025 திட்டக் கொள்கையின் ஒரு அங்கமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் கு…

  2. குற்றவியல் நடைமுறைக்கோவைத் திருத்தங்களினால் ராஜபக்ஷக்களுக்கு எதிரானவர்கள் இலக்குவைக்கப்படலாம் - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து (செய்திப்பிரிவு) குற்றவியல் நடைமுறைக்கோவைத் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், எதிர்வருங்காலங்களில் அதனால் யார்வேண்டுமானாலும் பாதிப்படையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக ராஜபக்ஷக்களுக்கு எதிராக செயற்படக்கூடியவர்களை இலக்குவைத்து எவ்வித இன, மத, மொழிபேதங்களுமின்றி அதனைப் பயன்படுத்தும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார். நாட்டில் தற்போது அமுலில் உள்ள குற்றவியல் நடைமுறை தொடர்பான வழிகாட்டல்களில் திர…

  3. நில அபகரிப்பு விவகாரம்- மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் October 20, 2021 மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணியை சிலர் அபகரிக்க முற்படுவதாகத் தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தாறுமூலை கிழக்கு தேவாபுரம் என்னும் பகுதியில் உள்ள மக்களே இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், காவல்துறையினரே சட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்து, விளையாடுவதற்கு மைதானம் தரவேண்டும்,ஏறாவூர்பற்று பிரதேசசபையே எமக்கான விளையாட்டு மைதானத்தினை பெற்றுத் தாருங்கள்,விளையாட்டு மைதானத்திற்கான நிரந்தர தீர்வினை தாருங்கள்,50வருட எங்கள் உரிமையினை மீறாதே போன்ற வாசகங்…

  4. தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம் ஆனால் தடம்புரள கூடாது காலம் சூழ்நிலைக்கேற்றவாறு சிந்திக்க வேண்டும். – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்! தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம் தமிழ் தேசியம் ஒருபோதும் தடம்புரள கூடாது இதுதான் யதார்த்தம். 1983 இற்கு முதல் அகிம்சை வழி சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் தேசியம் ஆயுதம் தூக்காத போராட்டமாக இருந்திருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக “ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தினூடாக ஆயித்தியமலை மணிபுரம் தணிகாச்சலம் வீதியினை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று(19) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப…

    • 2 replies
    • 338 views
  5. சீல் உடைத்தார் – பலவந்தமாக திறந்தார்- ஜீவன் தொண்டமான்! October 20, 2021 ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமை தொடர்பில், சீல் வைக்கப்பட்ட ஹற்றன்- டன்பார் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி கூடமொன்று, தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் சீல் உடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஹற்றன்- டிக்கோயா நகர சபை மூலம் நிர்வகிக்கப்படும் ஹற்றன்- டன்பார் மைதானத்தின் நடத்திச் செல்லப்படும் உடற்பயிற்சி நிலையத்திலிருந்து இந்த வருடத்துக்கான வரி, செலுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் இதற்கமைய, நகர சபை நிதிக் குழுவில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த நிலையத்தை சீல் வைத்து மூட ந…

  6. போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய... பலர் முயற்சிப்பதாக சுமந்திரன் குற்றச்சாட்டு வடக்கில் நடத்திய போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரான போராட்டமாக சித்தரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றது என கூறினார். மீனவர்களுடைய போராட்டத்தினை வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாட்டில் பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த தடைசட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு ஒரு இந்திய மீனவரின் உயிர் பிரிந்திருக்காது என்றும் சுமந்திரன் தெரிவித்தார். மேல…

  7. ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து: டீசலுக்கு 35, பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பு என்கின்றார் கம்மன்பில 3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 5 வருடத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் 20 வருட காலத்திற்குள் மீண்டும் அக்கடனை செலுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். உலகளாவில் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறினார். தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலுக்கு 35 ரூப…

  8. அதிகாரத்திற்கு உட்பட வகையில், வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் – ஜீவன் தியாகராஜா தனது அதிகாரத்திற்கு உட்பட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுத் தயாராக இருப்பதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து அவர் இந்த உறுதிமொழியை வலங்கையுள்ளார். மேலும் மக்களின் உடனடி தேவைகளை எழுத்துமூலமாக ஒப்படைக்குமாறும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரியுள்ளார். இந்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன் சில விடயங்களை முன்னிலைப்படுத்தியிருந்தார் என்றும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டார். வடக்கு மாகாண எழுச்சி தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்தை வரவேற்…

    • 4 replies
    • 533 views
  9. லசந்த கொலை உள்ளிட்ட பல வழக்கு விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஏனைய சில வழக்குகளின் விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஏன் மௌனமாக உள்ளதென ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தின் முன் வழக்குகள் அல்லது சட்டமா அதிபரால் கையாளப்படுவது குறித்து அரசாங்கம் கருத்து தெரிவிக்காது என்று கூறினார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் மற்றும் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் கட்டாய காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வ…

  10. மலைநாட்டு திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி மலைநாட்டு திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் முரண்பாடுகளை இரத்து செய்து சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1997 ஆம் ஆண்டு திருமணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சிறுவயதுத் திருமணங்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் தேவை என்ற நிபந்தனை காணப்படுகின்றது. பதிவாளர் நாயகத்திற்கு எதிரான குணரத்தினம் வழக்கின் தீர்ப்பின்படி, 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இலங்கையில் சட்டபூர்வ திருமணத்தைப் பதிவு செய்வதற்கு இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்புக்கமைவாக அத்தகைய திருமணத்திற்கு பெற்றோரின் அனுமதி அல்லது ஒப்புதல் சட்டத்தின் முன் செல்லுபடியற்றது. அ…

  11. 13 வது திருத்தம் கடனுக்கான முன்நிபந்தனை அல்ல – அரசாங்கம் அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இந்தியாவிலிருந்து கடன் பெறுவதற்கான முன்நிபந்தனை அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் வாங்குவதற்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இருப்பினும் இந்த விடயத்திற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தம் ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வன…

  12. பொது இடத்தில் மோதிக்கொண்ட... விமல் – பசில் ஆதரவாளர்கள்!! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ பொதுஜன பெரமுனவின் சாமர சுபாஷன டி சில்வா ஆகியோரே கைகலப்பில் ஈடுபட்டனர். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கொத்மலை பிரதேச அபிவிருத்தி கூட்டத்தின் போது வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலில் முடிவடைந்தது. அபிவிருத்தி பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த மோதலுக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள் பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச இடையேயான வெளிப்படையான மோதல், தற்போது கட்சி உறுப்பினர்களிடையே கூட ப…

    • 5 replies
    • 568 views
  13. சாணக்கியன்... நம்பிக்கைக்கு உரியவர் அல்ல – டக்ளஸ் குற்றச்சாட்டு! தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நம்பிக்கையில்லாத ஒருவர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில்முறைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இழுவை வலை தடைச் சட்டம் பயன்படுத்தப்படாமையினாலேயே இந்தியக் கடற்றொழிலாளர் அதிகளவில் எல்லை தாண்டி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த …

    • 1 reply
    • 342 views
  14. "குஷிநகர்" விமான நிலைய திறப்பு – நாமல் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய முதல் விமானம் இந்தியாவுக்குப் பயணம்! இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான முதலாவது விமானம் இலங்கையிலிருந்து இன்று அதிகாலை 5.20 மணியளவில் புறப்பட்டுச் சென்றுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 1147 என்ற விமானமே இவ்வாறு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த விமானத்தில், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தின் 95 பௌத்த தேரர்கள் சென்றுள்ளனர். அவர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பயணத்தில…

    • 4 replies
    • 536 views
  15. ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சந்தைகளில் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் புண்ணாக்கு, தற்போது 2,800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || புண்ணாக்கின் விலையும் அதிகரிப்பு

  16. இலங்கையில், மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள்/கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் அவர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆ…

  17. ரம்பேவ - சங்கிரிகம, சிறிபாபுர பிரதேசத்தில் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டமானது வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை மற்றும் உரப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) போன்ற தோற்றத்துடன் நபரொருவர் வாகனத்தில் வந்திறங்கியிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். https://tamilwin.com/article/protest-at-rambeva-1634632265

  18. ’ஊழலை மறைக்கவே சுமந்திரன் உழத் தொடங்கினார்’ -க. அகரன் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே, சுமந்திரன் வயலை உழத் தொடங்கினார் எனத் தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், அதன் பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் எனவும் கூறினார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21ஆவது ஆண்டு நினைவு நாள், இன்று (19), தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டப் பந்தலில் அஞ்சலி செலுத்திவிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம் எனவும் நிமலராஜன் படுகொலை, தமிழ் ஜனநாயகத்தை கொன்றது எனவும் கூறினார்.…

  19. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 180 நாட்களில் 4,743 முறைப்பாடுகள் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, நாளொன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந…

  20. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியரிடம் விடுத்துள்ள வேண்டுகோள் (எம்.நியூட்டன்) மாணவரின் கல்விக்காக ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரிய சங்கம் தெரிவிக்கையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. ஒரு சில அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் உள்ளன. மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. குறிப்பாக அதிபர்களும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கொடிய யுத்தம் நடந்த காலத்தில்கூட இத்தகைய வீழச்சி வந்ததில்லை. இது திட்டமிட்டு செய்யப்படுகின்ற சூழ்ச்சி. …

  21. அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பயிர்நிலங்களை அரசு விடுவிக்க வேண்டும் – ரவிகரன். October 19, 2021 தற்போது விவசாயிகள் உரப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு உரங்களை இறக்குமதிசெய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன், மகாவலி (எல்), வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என பலதரப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய பயிர்ச்செய்கை நிலங்களையும் அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். உரப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைகள் திணைக்களத்தின் முன்பு நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்த…

  22. காரைநகரில்... கடற்படை படகு மோதியதில், இந்திய மீனவரின் படகு மூழ்கியது – ஒரு மீனவர் மாயம் எல்லை தாண்டி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் – கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக்…

  23. "திவி நெகும" மோசடி வழக்கு : சட்டமா அதிபருக்கு கடிதம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான திவி நெகும மோசடி குறித்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக தொழில் நிபுணர்கள் தேசிய முன்னணி சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிகைகள் மீளப்பெற்றுக்கொள்வதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட நிலையில் இதேபோன்ற மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறித்த கடிதத்தில்சுட்டிகாட்டப்பட்டுள்ளது. எனவே, அவரது அறிவுறுத்தலின் பேரில் திரும்பப் பெறப்பட்ட வழக்கின் எண்ணையும், திரும்பப் பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்திய முந்தைய வழக்கு எண்ணையும் வழங்குமாறு சட்டமா அதிபரை தொழில்நிபுணர்கள் தேசிய முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. …

  24. அமைச்சர்கள், வெளிநாடு செல்லத்தடை! எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஜனாதிபதி செயலாளரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் நிதி அமைச்சரின் உரை இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம…

  25. கெரவலபிட்டிய மின் நிலைய ஒப்பந்தம் : இடைக்கால தடை உத்தரவு கோரி மனுதாக்கல் கெரவலபிட்டிய மின் நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோரால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். செப்டம்பர் 6 ஆம் திகதி கூறப்பட்ட ஒப்பந்தத்தில் அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவை இரத்து செய்து, விண்ணப்பம் மீதான விசாரணை முடியும் வரை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படுவதைத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.