ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
நிவாட் கப்ராலின்... பொறுப்பில் இருந்த, இராஜாங்க அமைச்சின் பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ரால் அண்மையில் பதவி விலகிப் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம் பெற்றார். இதனையடுத்து அந்த அமைச்சின் செயற்பாடுகள், பொறுப்புக்கள், மு…
-
- 0 replies
- 176 views
-
-
வன்முறை கும்பலை சேர்ந்தவரை... தப்ப விட்ட, சுன்னாக பொலிஸார் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை! பொது மக்களால் மடிக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த நபரை மக்கள் சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றமை தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அழைப்பாணை அனுப்பியுள்ளார். ஏழாலை பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவித்தனர். சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய போது, வன்முறைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் போது அக்கும்பல…
-
- 0 replies
- 197 views
-
-
இலங்கையில் புதிதாக... எரிபொருள் நிறுவனம் ஒன்றை, உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி! இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை எரிசக்தி அமைச்சரினால், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1243272
-
- 0 replies
- 195 views
-
-
ஆபாசப் பேச்சுகளுக்கு... விரைவில் தடை! ஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு …
-
- 0 replies
- 262 views
-
-
வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை இன்று முதல் நீடிப்பு தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இந்த விசா செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துட…
-
- 0 replies
- 166 views
-
-
நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு... இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டார். இந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அந்த ஆணைக் குழ…
-
- 0 replies
- 149 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பாராளுமன்றம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் பெற்றோலிய வளங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவிருந்தது நிலையில் வெள்ளைப்பூண்டு, லிற்றோ காஸ் தொடர்பில் அரச, எதிர்க்கட்சியினரிடையில் நீண்ட நேரமாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் எதிர்க்கட்சி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் முக்கியமான விவாதம் இருப்பதாகவும் அமைச்சர் நேரத்தை வீணடிப்பதாகவும் கூறி இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அரசு தரப்பினர் அமைச்சருக்கு விளக்கமளிக்கும் உரிமை உள்ளதென வாதிட்டு அமைச்சரை விளக்கமளிக்க அனுமதிக்குமாறு ச…
-
- 1 reply
- 410 views
-
-
அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை(வியாழக்கிழமை) மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1243178
-
- 1 reply
- 288 views
-
-
போருக்குப் பின்னரான... முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்தது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், அமைதி மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார். இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அந்த …
-
- 0 replies
- 233 views
-
-
யாழ் .குருநகர் பகுதியில் இருந்து நேற்றையதினம் இரவு 12 மணியளவில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற நிலையில், இந்திய மீனவர் படகால் மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம், இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை கக்கடதீவு கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கக்கடதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர் படகு இலங்கை மீன்பிடி படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்திய தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாக குருநகர் மீனவர் தெரிவிக்கின்றனர். இதேவேளை குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்து…
-
- 1 reply
- 368 views
-
-
லங்கா சதொச நிறுவனத்தில்... மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல – பந்துல லங்கா சதொச நிறுவனத்தில் பாரிய வெள்ளைப்பூண்டு மோசடி நடந்திருப்பதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் லங்கா சதோசாவில் இதுபோன்ற மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல என்றும் முந்தைய ஆட்சியின் போது இதுபோன்ற மிகப்பெரிய மோசடிகள் தொடர்பான ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த பூண்டு மோசடி சதொச தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு தெரியாமல் நடந்ததாகக் கூறினார். இந்த மோசடி தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நடத்தப்படுவதாகவும்…
-
- 0 replies
- 183 views
-
-
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர் - கஜேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அமெரிக்காவுக்கு சென்று அங்கு தனது பேரப்பிள்ளையை கொஞ்சி தூக்கி மகிழ்ந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே இறுதி யுத்தக் காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்ட மூலத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்…
-
- 0 replies
- 266 views
-
-
அரசாங்கம் எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது – சபையில் சாணக்கியன் அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இன்றைய தினம் பாராளுமன்றத்தில். 13வது சட்டத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வினை பற்றி நாம் கதைத்துக் கொண்டிருக்கும் அதேவேளை அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்கள…
-
- 0 replies
- 170 views
-
-
காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? பாராளுமன்ற உறுப்பினர் - கோ.கருணாகரம் ஜனா ShanaOctober 5, 2021 (துதிமோகன்) காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? உங்களிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள், நீங்கள் கொலைக் குற்றவாளிகள், நீங்கள் தண்டனை பெற வேண்டியவர்கள் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்கின்றீர்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஐநா உரை …
-
- 0 replies
- 179 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் சிறுவர்களுக்கு உள்ள உயிர்வாழும் உரிமைக்கூட இலங்கையில் பறிக்கப்படுகின்றது இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் குற்றம்சாட்டிய நிலையில் அரச தரப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சபையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தின் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் பேசியபோது, இம்மாதம் முதலாம் திகதி சிறுவர் தி…
-
- 0 replies
- 268 views
-
-
”சீனாவுடனான தொடர்புகள் தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம்”: இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு! சீனாவுடனான தொடர்புகள் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி கூறியுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் இன்று (05) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்ப…
-
- 0 replies
- 222 views
-
-
யாழ். பல்கலைக்கழக நிகழ்நிலைப் பட்டமளிப்பு வியாழன்று October 5, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதனை நிகழ் நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் ப…
-
- 0 replies
- 272 views
-
-
இந்தியா - இலங்கை இருதரப்பு கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. மித்ர சக்தி என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் இந்த இராணுவ பயிற்சியானது 8 ஆவது தடவையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த இரு தரப்பு பயிற்சியானது எதிர்வரும் 15 ஆம் திகதி அம்பாறை இராணுவ பயிற்சி முகாமில் நடைப்பெறுகின்றது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் குழுவுடன் இலங்கை பாதுகாப்பு படைகள் கூட்டுபயிற்சி நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளனர். இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான நெருங்கிய உறவை மேம்படுத்துவதோடு, கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறந்த செயல்பாடுகளைப் பகிர்வதையும் மேம்படுத்துவதையும் இந்தப் பயிற்சியின் நோக்க என பாதுகாப்பு…
-
- 1 reply
- 284 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான அரசதலைவர் என்று குறிப்பிட்டால் மக்கள் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். அரசாங்கம் நாட்டை பாதுகாக்க வந்துள்ளதா, அழிக்க வந்துள்ளதா என்று எண்ண தோன்றுகிறது. கொவிட் வைரஸ் தாக்கம் இல்லாமலிருந்தால் நாட்டு மக்கள் வீதிக்கிறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடுவார்கள். நாட்டை பாதுகாக்க சர்வ மத தலைவர்களையும் ஒன்றினைத்து சம்மேளனத்தை நடத்த தீர்மானித்துள்ளோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின தலைவரும்,அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் க…
-
- 1 reply
- 389 views
-
-
தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில்... இந்தியா, உறுதியாக இருக்க வேண்டும் – கூட்டமைப்பு எடுத்துரைப்பு 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனூடாக முழுமையாக அதிகார பகிர்வை வழங்குவதன் மூலமாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டிருந்தார். தமிழ் மக்களின் நீண்ட…
-
- 2 replies
- 406 views
-
-
அரவிந்தா திஸாரா ரதுவிதான பிபிசி 'ஒரு நாள் நான் பேருந்து தரிப்பிடத்தில் பகல் வேளையில் நின்று கொண்டிருந்த போது, போலீஸார் என்னை அழைத்து சென்றனர். எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றியே என்னை அழைத்து சென்றார்கள். இரவு 11 மணி வரை போலீஸ் நிலையத்தில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைத்திருந்தார்கள். இரவு 11 மணிக்கே வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார்கள். பிறகு வீதியில் அலைந்து திரிந்ததாக குற்றம்சாட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்கள்." வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள ஏன் இரவு வரை காக்க வைத்தார்கள் என்பதை பின்னரே நான் அறிந்துக்கொண்டேன். "இரவு வேளையிலேயே இவரை நாம் கைது செய்தோம் என நீதிமன்றத்தில் அப்போது தானே உரக்கக் கூற முடியும். போலீஸாரு…
-
- 0 replies
- 478 views
-
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதியைக் கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து, 20 அடிநீளமான இரும்பு கொள்கலன் ஒன்று கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படை வீரர்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்காரணமாக தேங்கும் உடலங்களை பேணுவதற்கான குளிரூட்டல் வசதியை மேற்கொள்வதற்காக கொள்கலன் ஒன்றை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்து வழங்கியிருந்தார். மாவட்ட கொவிட்-19 நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலின்போது மாவட்டச…
-
- 0 replies
- 404 views
-
-
இந்திய நலன்களுக்கு வடக்கு கிழக்கை பயன்படுத்த இடமளியோம்- இந்தியத் துணைத்தூதுவரிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு October 4, 2021 இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்துகின்ற வகையிலே, வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பினை பயன்படுத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எக்காரணம் கொண்டும் ஒத்துழைக்காது என்பதுடன், அத்தகைய விடயங்களை எதிர்ப்போம் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனிடம் தான் தெரிவித்துள்ளதாக, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்…
-
- 9 replies
- 877 views
-
-
வடக்கில்... காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள், இடம் பெறவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். வன சரணாலயப் பகுதிகளில் தனியார் காணிகள், விவசாய நிலங்கள் மற்றும் பாரம்பரிய விவசாய நிலங்கள் இருந்தால் அவை கையகப்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது வன்னி மாவட்ட உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் முல்லைத்தீவில் நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகியன வர்த்தமானியில் 2017 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்…
-
- 1 reply
- 256 views
-
-
அரசியல் அழுத்தம் காரணமாக... உண்மையை மறைக்கும், நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம் உள்ளிட்ட காரணிகளினால் தாக்குதலின் உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது இடம்பெறுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொதுப் பிரச்சினை தொடர்பாகவும் அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். 70 வருடகாலமாக ஊழல் நிறைந்த ஆட்சிமுறைமையே தொடர்ந்தது என்…
-
- 0 replies
- 210 views
-