ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
"மகாராஜா" குழும நிறுவனங்களின், தலைவர் ராஜமஹேந்திரன் காலமானார். கெப்பிடல் மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார். கொரோனா தொற்று தொடர்பான நோய் காரணமாக அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2021/1230588
-
- 1 reply
- 252 views
-
-
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு, ஆளானவர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் – ஐக்கிய மக்கள் சக்தி சிறுவர் கடத்தல், சிறுவர் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளுடன் தமது கட்சியால் இணைந்து பணியாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடக சந்திப்பில் கூறிய அவர், சிறுவர்கள் மீதான அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் கண்டிக்கும் என்றும் அதுவே கட்சியின் நிலைப்பாடு என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கூறினார். கூட்டணியில் கட்சிகளுக்கு சொந்த கொள்கைகள் இருந்தாலும் கட்சியின் கொள்கையை யாராவது மீறுவார்களாயின் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 244 views
-
-
நீண்ட கால கொள்கை... கட்டமைப்பு, நாட்டுக்கு அவசியம் – ரணில் சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை நிராகரித்து சீரான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதேவேளை இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு நல்ல உறவைப் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டிற்கு தேவைப்படுவது பொதுவான எதிர்க்கட்சி கூட்டணி அல்ல, மாறாக நாட்டை கொண்டு நடத்த நீண்ட கால கொள்கை கட்டமைப்பு என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சரியான கொள்கை கட்டமைப்பை நிறுவ தவறியமையே நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சீனா, ஜப்பான் மற்றும் ஐ…
-
- 0 replies
- 216 views
-
-
ஜனநாயகப் போராளிகள் மற்றும் சுமந்திரன் M.P மட்டக்களப்பில் சந்திப்பு SayanolipavanJuly 24, 2021 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், கட்சியின் மட்டு அம்பாறை ஊடகப் பேச்சாளர் சாந்தன் உட்பட கட்சியின் மட்டக்களப்பு நிருவாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது சமகால…
-
- 4 replies
- 652 views
-
-
முஸ்லிம் எம்.பி கள் முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களில் மௌனமாக இருப்பது ஏன்? நாங்கள் அநீதிக்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்போம். சாணக்கியன் எம் .பி SayanolipavanJuly 23, 2021 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஜனாசா குறித்து கோசம் எழுப்பினேன் ஆனால் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுர்தீன் அவர்களின் வீட்டில் மரணமான சிறுமி குறித்து நீதி நிலை நாட்ட பட வேண்டும் என குறிப்பிட்டேன் அது குறித்து பல விமர்சனங்கள் எழுகின்றன . அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை .பலதடவைகள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் மீனவர்களின் பிரச்சினைகளை பேசியுள்ளேன். ஆனால் எவ்வித பயனுமில்லாமல் இருக்கும் இவர்களுக்கு பாடம் புகட்டும் நடவடிக்கை…
-
- 1 reply
- 361 views
-
-
முதியோர் துஸ்பியோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும் – யாழ் மறை மாவட்டக் குருமுதல்வர் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக குரல்கள் எழுப்பப்படுவதுபோல் முதியோர் துஸ்பியோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்டக் குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். சில்லாலை புனித யாகப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்று நடைபெற்றபோது திருவிழா திருப்பலியை தலமையேற்று ஒப்புக்கொடுக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தற்போது இணையத்தளங்களில், பத்திரிகைகளில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுமி கொலை தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றது. குறித்த சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டாள், …
-
- 0 replies
- 233 views
-
-
பொதுத் தலைவராகிறார் ரணில் ? ; சம்பந்தன், ஹக்கீம், மனோ, அநுரவுடன் முக்கிய கலந்துரையாடல் (லியோ நிரோஷ தர்ஷன்) பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளுக்கு பொதுத் தலைமைத்துவம் வழங்கும் வகையிலான கலந்துரையாடல்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்க உள்ளார். இதன் முதற்கட்ட கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான கலந்துரையாடல் அடுத்த வாரம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் ஜனாநாயக விழுமியங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் பொது நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. இதனை மையப்படுத்தி பாராளுமன்றத்தை பிரதிநிதித…
-
- 11 replies
- 800 views
-
-
கொ கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, ஆசிரியர், அதிபர் சங்கங்கள், முன்னிலை சோஷலிச கட்சி, அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட 41 தொழிற்சங்களின் பிரதிநிதிகளே இவ்வாறு கையெழுத்திட்டுள்ளனர். https://athavannews.com/2021/1230526 த்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கை கைச்சாத்து!
-
- 0 replies
- 299 views
-
-
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து சர்வதேசத்தினால் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் – செல்வராஜா கஜேந்திரன் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் ஜுலை கலவரம் உள்ளிட்ட இனப்படுகொலைகள் ஆகியவற்றுக்கு சர்வதேசத்தினால் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்படல் வேண்டும் மற்றும் தமிழ்த் தேசமும் இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என மக்களும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில…
-
- 0 replies
- 135 views
-
-
நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமானம் SayanolipavanJuly 24, 2021 நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், அவரை காப்பாற்றி விட்டு தன்னுயிரை தியாகம் செய்த பொலிஸ் பரிசோதகரின் 4ஆம் ஆண்டுநினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரின் படத்தில் விளக்கு ஏற்றி, அவரது கல்லறைக்கு முன்னால் மதச் சடங்குகளில் நீதிபதி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். பொலிஸ் பரிசோதகர் இறந்த பிறகு, அவரது இரண்டு பிள்ளைகளையும் தனது பிள்ளைகள் போல் பார்த்துக்கொள்வதுடன், அவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் கவனிக்கின்றார். 2017 அன்று ஜூலை மாதம் 22ஆம் திக…
-
- 3 replies
- 559 views
-
-
மூடநம்பிக்கைகளை நம்பி தடுப்பூசிகளை ஏற்றுவதில் பின்னடிக்கின்றனர்! ஊடகவியலாளர்கள் தடுப்பூசி ஏற்றும் மையங்களில் தங்களுக்குரிய ஆவணங்களை வழங்கி எந்தவொரு நாட்களிலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார் . அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் (23) மாலை நடாத்திய விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது சினோபாம் மிகச்சிறந்த ஒரு தடுப்பூசி.இலங்கையில் 80 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது.பக்கவிளைவு மற்றும் வினைத்திறன் குறைவு எதையும் ஏற்படுத்தாது மிகச…
-
- 0 replies
- 459 views
-
-
ஓகஸ்ட் 1ம்திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து ஆரம்பம் July 24, 2021 பயணக் கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவா் இதனைத் தொிவித்துள்ளாா். அண்மையில் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதற்கமைய மாகாணங்களுக்கிடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் இடம்பெறும் எனவும் பயண கட்டுப்பாடு நீக்…
-
- 0 replies
- 285 views
-
-
”மக்களின் நலன்களின் அடிப்படையிலேய தன்னுடைய தீர்மானங்கள் அமையும்”: டக்ளஸ் மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். வடமாராட்சி பிரதேச கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சரின் யாழ். செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரை…
-
- 0 replies
- 245 views
-
-
டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் July 24, 2021 டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான குறித்த போராட்டம் பேரணியாக , புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது. https://globaltamilnews.net/2021/163793
-
- 0 replies
- 190 views
-
-
நாட்டை, விற்பதற்கோ... அல்லது இந்தியாவிற்கு, பாதிப்பு ஏற்படும் வகையிலோ... செயற்பட மாட்டேன் – டக்ளஸ் நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, சீன நிறுவனத்திற்கு பூனகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக…
-
- 11 replies
- 1k views
-
-
யாழிற்கு... புதிய, இந்திய துணைத் தூதுவர் நியமனம்! யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் விரைவில் யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். https://athavannews.com/2021/1230095
-
- 3 replies
- 1.3k views
-
-
சுவரொட்டிகளை கிழித்தெறிந்த ஸ்ரீலங்கா இராணுவம் கறுப்பு யூலையை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் இரவோடு இரவாக பொலிஸ், இராணுவம், புலனாய்வாளர்களால் முற்று முழுதாக கிழித்தெறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை நினைவு கூருவதற்கு ஸ்ரீலங்கா அரசு தடை போடுகின்றது என்றால் இங்கு ஜனநாயகம் எங்கு உள்ளது எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. இலங்கை அரசின் மிலேச்சத்தனமான இச் செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது…
-
- 1 reply
- 469 views
-
-
”இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் முடிவுக்கு உடன்பட முடியாது” - ஜனாதிபதி ஆணைக்குழு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பிலான இடைக்கால அறிக்கையை இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (21) மாலை கையளித்திருந்தனர். மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையானக குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்…
-
- 5 replies
- 364 views
- 1 follower
-
-
ஐ.நா மனித உரிமை பேரவையில் 2012 இல் இருந்து இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாகரசபை முதல்வர் ரி.சரவணபவான் மாநகசைபை ஆணையாளருக்கு எதிரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாணைக்கு இன்று வியாழக்கிழமை (22) ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை கடந்த பெப்ரவரி ம…
-
- 9 replies
- 954 views
-
-
மாகாண அதிகாரத்தை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் - விக்கி மாகாண பாடசாலைகளை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்தது தெரிவிக்கும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள அரசானது மாகாணங்களுக்கே உரித்தான கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை மாகாணங்களுக்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு சிலர் துணை போகிறார்கள்…
-
- 0 replies
- 258 views
-
-
சீனாவிடமிருந்து 200 மில்லியனுக்கு பதிலாக, 500 மில்லியனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படவுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை 500 மில்லியன் டொலராக அதிகரிக்க நடவடிக்கை இடம்பெற்று வருவதாக நிதி அமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை கையாளும் முகமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பான ஒப்பந்தம் குறித்து தற்போது நிதி அமைச்சிற்குள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இலங்கை சார்பாக கடன் வழங்குநராக செயற்படும் நிதி அமைச்சிற்கும் சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் இந்த இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீன அபிவிருத…
-
- 7 replies
- 610 views
-
-
தமிழர்களின் பொருளாதாரம், இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது – காணாமல் போனவர்களின் உறவுகள்! தமிழர்களின் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது. அதனை உருவாக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவி தமிழர்களுக்கு தேவை என வவுனியாவில் கடந்த 1616 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “முதலில், கொரோனா தடுப்பூசி அனுப்பிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். புதிய டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக பைசர் மற்றும் மொடர்னா இர…
-
- 0 replies
- 401 views
-
-
இராணுவச் சிப்பாய்... தன்னைத் தானே சுட்டு, தற்கொலை – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணம் – நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இராணுவச் சிப்பாயின் சடலம் இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில், வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் பெற்றோரிடம் ஒப…
-
- 0 replies
- 353 views
-
-
டக்ளஸின் பரிந்துரையில் வேலனையில் 100 நகரத் திட்டம் - ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த Published by T. Saranya on 2021-07-21 15:27:57 நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய யாழ். வேலனையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜீலை 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாவற்குழி ரஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்ப…
-
- 4 replies
- 672 views
-
-
மூன்று ஆண்டுகளில் நாற்பதாயிரம் வேலை வாய்ப்பு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருகும் பொருளாதாரத்தினை உருவாக்கும் வகையிலே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடலட்டை போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000 நேரடி வேலை வாய்ப்புக்களையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்ற…
-
- 8 replies
- 502 views
-