ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் இருவர் கைது மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயற்பாட்டாளர்களான சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன ஆகிய இருவரும் பொலிஸில் சரணடைந்தனர். அதன்பின்னர், அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 1ஆம் திகதியன்று பொரலந்த பகுதியில் இடம்பெற்ற, விவசாய ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே அவ்விருவருக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பெருந்திரளான மக்களை ஒன்றுதிரட்டி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜ-வ-பயன-மககயஸதரகள-இரவர-கத/175-275778
-
- 0 replies
- 183 views
-
-
சீன கம்யூனிஸ்ட் கட்சியின்... 100ஆவது ஆண்டு பூர்த்தி – 1000 ரூபாய் நாணயம் வெளியீடு! இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, புதிதாக 1000 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி.லக்ஷ்மனவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று இந்த நாணயம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசி…
-
- 0 replies
- 137 views
-
-
ஏன்... எமது மக்களை, அச்சுறுத்துகின்றீர்கள் – சாணக்கியன் சபையில் கேள்வி! நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பொலிஸார் ஊடாக அச்சத்தினை விதைத்து எதனை சாதிக்கப்போகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மடக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில பொலிஸார் எனது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிப்பது இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான எனது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிப்பது இல்லை. அவ்வாறானவர்களின் பெயர்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. போதைப்பொருள் கடத்தல் குற்ற…
-
- 0 replies
- 155 views
-
-
13,16 திருத்தம் சீனா ஆகியவை குறித்து தமுகூ, இந்திய தரப்புடன் பேச்சு 13,16 திருத்தம் சீனா ஆகியவை குறித்து தமுகூ, இந்திய தரப்புடன் பேச்சு – மனோ கணேசன் 13ம் திருத்தம், 16ம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், வேலுகுமார் பா.கூ, உதயகுமார் பா.கூ, பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இன்று இந்தியா இல்லத்தில் சந்தித்தனர். …
-
- 0 replies
- 195 views
-
-
ரிஷாட் பதியுதீன் மனுமீதான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்ற நீதியரசர் விலகியுள்ளார். அதன்படி, மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் கொண்ட அமர்வில் இருந்து நான்காவது நீதியரசராக மஹிந்த சமயவர்தன விலகியுள்ளார். குறித்த மனுமீதான விசாரணை இன்று காலை எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதியரசர் மஹிந்த சமயவர்தன தனிப்பட்ட காரணங்களுக்காக அமர்வில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். முன்னதாக, நீதியரசர்கள், ஏ.எச்.எம்.டி நவாஸ், யசந்த கோத்தாகொட மற்றும் ஜனக டி சில்வா ஆகியோர் இதில் இருந்து விலகிக் கொ…
-
- 2 replies
- 248 views
-
-
வவுனியாவில் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் (14 வயது) உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற மாணவன் காயங்களுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டுக்குப் பின் பகுதியில் தலை மற்றும் முகத்தில் அடிபட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக காணப்பட்டதுடன் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன. குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான இவருக்கு மூன்று அக்கா, அண்ணன் ஒருவர் என நான்கு சகோதர்கள் உள்ளனர். இவர்களது காணியில் வர்த்தக நிலையக் கட்டிடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன் பெரிய வீடு ஒன்றிற்கான நிர்மாணப்பணிகளும் இடம்பெ…
-
- 0 replies
- 438 views
-
-
வவுனியா: இளம் குடும்பப் பெண்ணைக் காணவில்லை – காவல்துறையில் முறைப்பாடு வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பெண் கொக்குவெளி மகாறம்பைக்குளம் அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த நபர் காணாமல் போனது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் நேற்றுமுன்தினம் (04-07-2021) மாலை 6 மணியளவில் தனது தாய் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள கடைக்கு சென்று முட்டை வேண்டி வருவதாக கூறிவிட்டு வெளியேறி சென்றுள்ளார். இந்நிலையில் பலமணிநே…
-
- 0 replies
- 244 views
-
-
கிளிநொச்சியில் அக்கிராசன் மன்னனுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வில் பாதுகாப்பு தரப்பினரால் பதற்றம் கிளிநொச்சி, அக்கராயனை பகுதியை ஆண்ட குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களிடம் பாதுகாப்புத் தரப்பினர் இடையூறு விளைவித்த சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழல் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை 05ஆம் திகதியன்று கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் சிலை திறந்து வைக்கப்பட்டது. சிலை திறக்கப்பட்ட நாளான நேற்று மன்னனுக்கு வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்ப…
-
- 1 reply
- 320 views
-
-
கம்மன்பிலவுக்கு... எதிரான பிரேரனை குறித்து, கூட்டமைப்பின் அறிவிப்பு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இந்த அவநம்பிக்கைப் பிரேரணை மீதான விவாதத்தைக் கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திலேயே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என சுமந்திரன் கூறினார். எரிபொருள் விலையே்ற்றத்தை கண்டித்து உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த மாதம் 19ஆம் …
-
- 0 replies
- 779 views
-
-
மிருசுவில் படுகொலையாளிக்கு... பொதுமன்னிப்பு குறித்த வழக்கில் இருந்து நீதியரசர் விலகல் மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனைக் கைதி சுனில் ரத்னாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமையை சவாலுக்கு உற்படுத்திய மனுமீதான வழக்கில் இருந்து நீதியரசர் விலகியுள்ளார். குறித்த பொதுமன்னிப்பு தொடர்பான தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதியரசர் முர்து பெர்ணான்டோ, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, நீதியரசர் முர்து பெர்ணான்டோ, தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரணை நடவடிக்கைகளி…
-
- 0 replies
- 521 views
-
-
இலங்கைக்கான... பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரி…
-
- 0 replies
- 203 views
-
-
செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் – ஜனாதிபதி நாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 99ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். உலகளவில் பரவியுள்ள கொரோனா நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன என்றும் மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு இந்த மாதத்தில் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். அவற்றை மக்களுக்கு செலுத்துவதன் மூலம் நாட்டை செப்டம்பர் மாதமளவில் முழுமையாக திறக்…
-
- 0 replies
- 563 views
-
-
வேலணையில்... உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை யாழ்ப்பாணம்- வேலணை துறையூர் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கரை ஒதுங்கிய கடலாமையை இனங்கண்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்திருந்தனர். கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. அண்மையில் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, நடுத்துருத்தி கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கி இருந்தது. குறித்த கடலாமையினையும் உடற்கூற்று பரிசோதனைக்காக வனஜீவராசிகள் …
-
- 0 replies
- 827 views
-
-
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து இரண்டு நாட்கள் விவாதம் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஜூலை 19 மற்றும் 20 திகதிகளில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரச…
-
- 0 replies
- 281 views
-
-
பலாலியில்... மக்களின் விவசாய காணிகளில், இராணுவம் விவசாயம்! யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைய “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை இலக்காக கொண்டு விவசாய பண்ணையில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சூழவுள்ள பொதுமக்களின் பெருமளவான நிலப்பரப்பினை இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பபு வலயமாக அறிவித்துள்ளனர். அப்பகுதிக…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் வெளிமாட்ட மீனவர்கள் ஈடுப்படுவதாக வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்படாத சுருக்கு வலைகள் மற்றும் வெளிச்சம் பாச்சி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பவதனால் தங்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சிறியளவில் முதலீடுகளை மேற்கொண்டு கடற்றொழிலையே தமது முழுமையான வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள கடற்றொழிலாளர்கள் இதனால் அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள வட மாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் தாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட ம…
-
- 2 replies
- 356 views
-
-
“மேதகு” திரைப்படம் குறித்து முகநுாலில் பதிந்தவர் பயங்கரவாதச்சட்டத்தில் கைது தென் தமிழீழம் :- தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனை போற்றி முகநூலில் கருத்து வெளியிட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பேரினவாத சிங்கள காவல்துறை குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் முச்சக்கரவண்டிச் சாரதியாக கடமையாற்றும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட காவல்துறைப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண, “தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை இட்டிருப்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல், சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ…
-
- 38 replies
- 3.3k views
- 1 follower
-
-
சமாதான முயற்சிகளை ரணில் பலவீனப்படுத்துவார் என சந்திரிகா அஞ்சினார் சந்திரிகா குமாரதுங்க சமாதான முயற்சிகளை முன்னெடுக்க விரும்பியவேளை ரணில் அதனை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அஞ்சினார் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கொழும்பின் இரு முக்கிய கட்சிகளும் அவ்வேளை சமாதான முயற்சிகள் விடயத்தில் ஒத்துழைத்து செயற்படவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தில்- அரசாங்கத்தில் ஒரே பதவிக்காக போட்டியிட்டுக்கொண்டிருந்தனர். பொதுவான நலனிற்காக இலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் இணைந்து செயற்பட தயாராக யில்லாத…
-
- 4 replies
- 503 views
-
-
அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அரசாங்கம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனுப்பிய கடிதத்தில், தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 1948 இல் இராஜதந்திர உறவுகள் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவுடனான இலங்கையின் உறவு தொடங்கும் பேணப்படுவதாகவும் இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த உறவை வலுப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொர…
-
- 2 replies
- 285 views
-
-
தமிழ்த் தேசியத் தளத்திலுள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து செல்ல முடிவு: மாவை,செல்வம், சித்தார்த்தன் இடையே தொடரும் பேச்சுவார்த்தை (ஆர்.ராம்) தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அரவணைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியத்தளத்தில் கூட்டமைப்பு வெளியில் உள்ள கொள்கை அளவில் உடன்பட்டு இணைந்து பணிப்பதற்கு கூடிய சகல தரப்புக்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதென்றும் மாவை, செல்வம், சித்தார்த்தன் ஆகியோர் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 260 views
-
-
அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான இறப்புகளைக் காண வாய்ப்புள்ளது - வைத்தியர் ரவி ரன்னன் எலிய எச்சரிக்கை (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று அதாவது 14 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய நிலைமையாகும். இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் தற்போது நாட்டில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும் என்று சுகாதார கொள்கை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை மேலும் 14 டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ …
-
- 0 replies
- 274 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ! கே .குமணன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (05.07.2021) முன்னெடுக்கபட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டம் இடம்பெறும் இடத்தில் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட அளவினர்களுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்துக்கான ஏற்பாடுகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார…
-
- 0 replies
- 218 views
-
-
கொழும்பு துறைமுக நகரை... பார்வையிட, மக்களுக்கு வாய்ப்பு! கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக திறக்கப்படும் என துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, கொழும்பு துறைமுக நகர வளாக பூங்கா மற்றும் கரையோரப் பகுதிகளை மக்கள் அடுத்த மாதம் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை துறைமுக நகர் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பந்து விக்ரம கூறினார். https://athavannews.com/2021/1226608
-
- 1 reply
- 463 views
-
-
இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் ஆலோசனை நடத்தினார். இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் வெங்கடேஸ்வரன் நேற்று புதுச்சேரி சென்ற போது, ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருநாட்டு நல்லுறவுகள், அரசியல் பண்பாட்டு தொடர்புகள் குறித்து பேசினர். புதுச்சேரியில் வாழ்ந்த பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர் ஆகியோர் குறித்தும், புதுச்சேரியின் சிறப்புகள் குறித்தும் துணைத் தூதரிடம் ஆளுநர் விளக்கினார். புதுச்சேரி தூய்மையான நகரமாக இருப்பதா…
-
- 1 reply
- 198 views
-
-
தமிழீழ வனவளப் பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாக்கப் பட்ட தேக்கம் காடுகள் அழிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறிப்பு கிராமத்தை அண்டியுள்ள நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தேக்கமரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்கின்றமை குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக வனவள பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவுடனேயே குறித்த தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற நிலைமை தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் கடந்த 2009ம் ஆண்டுக்கு முன் தமிழீழ வனவளப்பாதுகாப்பு பிரிவினரால் நடப்பட்டு பாதுகாக்கப்பட்ட குறித்த தேக்கம் காடுகள் தொடர்ச்சியாக அழ…
-
- 0 replies
- 182 views
-