ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள்... நல்லிணக்கத்தை முன்னெடுக்காது – மிச்சேல் பெச்சலட் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து 300 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை தடைசெய்வது உள்ளிட்ட சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது என ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விசாரணையின்றி, இரண்டு ஆண்டுகள் வரை மக்களை தன்னிச்சையாக தடுத்து வைக்க பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் அனுமதிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போதே ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இதனைத் தெரிவித்தார். மேலும்…
-
- 0 replies
- 223 views
-
-
கொரோனா இறப்பு குறித்த குற்றச்சாட்டு: தொற்றுநோயியல் பிரிவு மீது விசாரணை ! கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தொற்றுநோயியல் பிரிவு மீது சுகாதார அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இறப்புக்கள் தொடர்பான குறைபாடுகள் காரணமாக அவற்றை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக எந்தவொரு அதிகாரியின் தரப்பிலும் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார். இந்த பிரச்சினையை அடுத்து முன்னாள் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர அந்த அடிப்படைய…
-
- 0 replies
- 243 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பா? ஆதரவா? – நாளை முடிவு என்கின்றது கூட்டமைப்பு அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை இடம்பெறும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை எரிபொருள் விலையேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் முடிவை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்க…
-
- 0 replies
- 195 views
-
-
சீன பிரஜையுடன் இணைந்து... போலி கடன் அட்டை மூலம் பண மோசடி செய்த கும்பல் கைது போலி கடன் அட்டையை பயன்படுத்தி பண மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சீன பிரஜையுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்லைனில் பொருட்கள் வழங்கும் நிறுவனம் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர்கள் ஒன்லைன் மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை முன்பதிவு செய்ததாகவும் பின்னர் கட்டணம் வசூலிக்கச் சென்றபோது அந்த அட்டைகளில் பணம் இல்லை என தெரிய வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்ப…
-
- 0 replies
- 191 views
-
-
தொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் இருவர் கைது தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் இருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து 174 கிலோ கிராம், கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த சம்பவத்தில் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இருவரை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1224066
-
- 0 replies
- 149 views
-
-
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு அரசாங்கம் குறித்து அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் விமல்வீரவன்சவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகிள்ளன. மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் …
-
- 8 replies
- 774 views
-
-
காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் கவலை 39 Views இலங்கையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்தும் நாட்டின் சமீபத்தைய பயங்கரவாத தடை சட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கரிசனை வெளியிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 47வது அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லீம்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என கருதப்படுபவை குறித்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் நான் கரிசனை கொண்டு…
-
- 0 replies
- 237 views
-
-
யாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு நாட்டில் 100 நகரங்களை பல் பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய பெரு நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம் நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. நாட்டில் நூறு நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்…
-
- 6 replies
- 864 views
-
-
கடந்த ஒருமாத காலமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பயணத்தடை தளர்த்தப்பட்டது. அத்தோடு, மதுபான நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் அறிவித்தது. எவ்வாறாயினும், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் பயணத்தடை தளர்த்தப்பட்டதும் தொழிலுக்குச் சென்று குடும்பங்களை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதைக் கடந்து மதுப்பிரியர்கள் காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெயில் படாமல் வீட்டுக்குள் முடங்கி இருந்தவர்கள் எல்லாம் இன்று உழைப்பாளர் தின பேரணியில் பங்கேற்பது போன்று வரிசையில் சென்று மது…
-
- 5 replies
- 463 views
-
-
(எம்.மனோசித்ரா) கொழும்பு, மாதிவெல பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மாதிரியொன்று அசாதாரணமான தன்மையுடையதாகக் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மாதிரி மரபணு பரிசோதனைக்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அசாதாரண தன்மையுடையதாக இனங்காணப்பட்டுள்ள இந்த மாதிரியில் டெல்டா வைரஸ் இனங்காணப்படலாம். அல்லது வேறொரு நிலைமாறிய வைரஸ் இனங்காணப்படலாம். எதிர்பாராத விதமாக புதியதொரு வைரஸாக இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் இனங்காணப்படும் பகுதிகள் தொடர்பில் மி…
-
- 0 replies
- 235 views
-
-
அரசாங்க தகவல் நிலையத்தின் தமிழ் மொழிக் கொலை கண்டிக்கத் தக்கது – விக்னேஸ்வரன் 15 Views அண்மையில், கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக அரசாங்க தகவல் நிலைய இணையம் வெளியிட்டுள்ள விபரங்களில் மிக மோசமான தமிழ் மொழி கொலை இடம் பெற்றுள்ளதாகவும் இதனை திருத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களின் மாவட்டங்கள், பிரதேசங்கள், கிராமங்கள் மற்றும் தென்னிலங்கையின் தமிழ்பெயர்கள் முழுக்க முழுக்க எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டுள்ளமை பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் …
-
- 0 replies
- 185 views
-
-
பயணத்தடை நீக்கப்பட்டதையடுத்து யாழ் நகரில் குவிந்த மக்கள் கூட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீண்ட நாட்களுக்குப்பின் இன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.இருப்பினும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை காணக்கூடியதாகவுள்ளது. இதேவேளை யாழ் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவ…
-
- 0 replies
- 234 views
-
-
மீண்டும் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு- கருணாகரம் ஜனா 20 Views மேய்ச்சல் தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். இன்றைய தினம் பாரம்பரிய மேய்ச்சற்தரைப் பிரதேசமாக விளங்குகின்ற மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்ட அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பிரச்சினை சம்மந்தமான தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் முகமாக மேற்கொண்ட பணயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 213 views
-
-
கொரோனா வைரஸை விட இந்த பேரினவாதம் பெரும் பயங்கரமாக இருக்கின்றது- அருட்தந்தை மா.சத்திவேல் 28 Views இலங்கைக்கு வந்திருக்கின்ற கொரோனா வைரஸை விட இந்த பேரினவாதம் பெரும் பயங்கரமாக இருக்கின்றது எனத் தெரிவித்த சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், ஏனெனில் அந்த பேரினவாதமே அரசியல் கைதிகளை சமூகம் நீக்கம் செய்திருக்கின்றது என்றார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், உயிரை பாதிக்கும் ஒரு பயங்கர நோயாக…
-
- 0 replies
- 157 views
-
-
யாழ்.கடற்கரையில்... சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் யாழ்ப்பாணம்- வேலணை, துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய குறித்த டொல்பினின் உடல், சிதைவடைந்த நிலைமையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக, டொல்பினை எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1223893
-
- 0 replies
- 352 views
-
-
பதவியை துறக்க, அதுரலிய ரத்ன தேரர் மறுப்பு : ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுத்துள்ள நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எங்கள் மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கட்சி கோரியது. இருப்பினும் அப்பிடியான எந்தவொரு உடன்படிக்கையும் இல்லை என தெரிவித்து அதுரலிய ரத்ன தேரர் பதவியை துறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எங்கள் மக்கள் சக்தியின் தேசிய அமைப்ப…
-
- 0 replies
- 224 views
-
-
கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு! எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சரே பொறுப்பு என குற்றம் சாட்டி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1223922
-
- 0 replies
- 185 views
-
-
பயணத்தடை நீக்கம் – வீட்டிற்கு இருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி! நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் ஜூலை ஐந்தாம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பேருந்தில் 50 வீதமானோர் பயணிக்க முடியும் எ எனினும் மேல் மாகாணத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும். அனைத்து மாகாணங்களிலும் ஒரு வீட்டிலிருந்து இருவர் மாத்திரம் வெளியில்…
-
- 0 replies
- 159 views
-
-
பொதுமக்களை முழந்தாளிட வைத்த சம்பவம்- இராணுவ வீரர் இருவர் உடனடி இடமாற்றம் மட்டக்களப்பு- ஏறாவூர், மிச்நகர் பகுதியில் பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார் மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர்கள் இருவரையும் உடனடி இடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏறாவூர் மிச் நபர் பிரதேசத்தில் பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட சிலரை, இராணுவத்தினர் பிடித்து, வலுக்கட்டாயமாக முழந்தாளிட வைத்து, கைகளை உயர்த்துமாறு பணித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் இரு…
-
- 2 replies
- 650 views
-
-
கல்முனையில் மூன்று கடலாமைகள் கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலில் மூன்று கடலாமைகள் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளன. கடந்த மாதம் இலங்கை கடல்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற பாரிய இரசாயன கப்பல் தீப்பற்றி எரிந்ததை அடுத்து நாடளாவிய ரீதியில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கி வருகின்றன. குறிப்பாக கடலாமைகளே அதிகம் கரையொதுங்குகின்றன. அந்த வகையில் இன்றும் மூன்று கடலாமைகள் கரை ஒதுங்கியுள்ளன.http://www.battinews.com/2021/06/blog-post_212.html
-
- 6 replies
- 721 views
- 1 follower
-
-
அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியான மாகாணசபையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்-கோவிந்தன் கருணாகரம் வாழைச்சேனை மாகாணசபையை அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்காவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றோம். அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழத் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தினால் நடாத்தப்பட்ட தியாகிகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்…
-
- 1 reply
- 470 views
-
-
சர்ஜுன் லாபீர், எம்.என்.எம் அப்ராஸ்) நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா அலையைக் கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த ,வசதி குறைந்த சுமார் 160 குடும்பங்களுக்கு 4000/-ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியும்,1000/- ரூபாய் பணமும் வழங்கும் நிகழ்வு கிளுகிளுப்பு சமூக சேவை அமைப்பினால் தலைவர் ஏ.எல்.எம் ஆஸீர் தலைமையில் கல்முனையில் (20) நடைபெற்றது. இவ் மனிதாபிமான நிவாரணம் வழங்கும் நிகழ்வில்,பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பிரதேச ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர் களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வை…
-
- 0 replies
- 650 views
-
-
யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கபடவுள்ளது யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள…
-
- 7 replies
- 679 views
-
-
கருணா விவகாரத்திற்கு பொறுப்பேற்று ரணில் விக்கிரமசிங்க என்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார்- என்னை பலிக்கடாவாக்கினார் : அலிஷாஹிர் மௌலானா By Sayanolipavan 7 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார், எனக்கு துரோகமிழைத்தார். இதனை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன், நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவ…
-
- 5 replies
- 525 views
-
-
எம் எஸ் எம் நூர்தீன் காத்தான்குடியில், அனுமதிப் பத்திரமின்றி இயங்கி வந்த பாமசியொன்றை, விஷேட அதிரடிப் படையினர், நேற்று (18) வெள்ளிக்கிழமை (18) இரவு திடீரென சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர். அந்த தேடுதலின் போது, அந்த பாமசியிலிருந்து போதையூட்டக்கூடிய, மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், பாமசி உரிமையாளரும் மற்றுமொருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த பாமசி முற்றுகையிடப்பட்டு, சுற்றிவளைத்து தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. அத்துடன், வைத்தியர்களினால் மருந்து துண்டு இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட்டு வந்த…
-
- 1 reply
- 434 views
-