ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
சர்வதேச ரீதியில் மெய்நிகர் வழியூடாக நடைபெறவுள்ள தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்துசர்வதேச ரீதியில் மெய்நிகர் வழியூடாக நடைபெறவுள்ள தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18 அன்று ஐரோப்பிய நேரம் மாலை 18 மணிக்கு நடைபெற உள்ளது. இவ் நிகழ்வில்தமிழர் தாயகத்திலிருந்து மதகுருமார்கள் , அரசியற் தலைவர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , சாட்சியங்கள் , அனைத்து நாடுகளிலும் வசிக்கும் தமிழ் உறவுகள் , அரசியற் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் நாமும் இவ் இணைய வழி zoom இல் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளகிறார்கள். எம்மினமே எம்முறவே! சிறிலங்கா அரசு ,எம்மினத்தின் வேரறுத்து, படுகொலை…
-
- 0 replies
- 306 views
-
-
தடையை மீறி இரகசியமாக நடைபெற்ற திருமணம் – கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா 1 Views யாழ்., தையிட்டி பகுதியில் நடைபெற்ற இரகசியத் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாப் பெருந்தொற்று காரணமாக நாட்டில் திருமணம் உள்ளிட்ட பொது மக்கள் ஒன்றுகூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பிரதேசத்தில் இரகசியமான முறையில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் பின்னர் தகவல் அறிந்த சுகாதாரப் பிரிவினர் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட சிலரை இனங்கண்டு தனிமைப்படுத்தி இருந்தனர…
-
- 0 replies
- 518 views
-
-
முள்ளிவாய்க்காலில் நினைவு நிகழ்வுகள் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு 68 Views முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் பொது வெளியில் அமைக்கப்பட்ட பொது மண்டபத்தில் ஆண்டு தோறும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது வழமை. இந்த ஆண்டு கொரோனா நிலைமையினை காரணம் காட்டி இந்நிகழ்வை தடை செய்வதற்கு முல்லைத்தீவு பொலிசார் நீதிமன்றத் தடை உத்தரவை பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைந்த பகுதியில் ஏற்பாட்டுக் குழுவினால் நினைவுக்கல் கொண்டு சென்ற வேளை பொலீசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தடுத்துள்ளதுடன், குறித்த நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ள…
-
- 1 reply
- 262 views
-
-
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஏ -9 , 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரங்களுக்கு கீழ் புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிள்ளையார் சிலையானது இதே வீதியில் தற்போது பொலிஸ் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த பிள்ளையாருக்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள் எல்லை பரப்புக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப…
-
- 17 replies
- 1.3k views
-
-
80ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நேற்று சினோபார்ம்,ஸ்புட்னிக் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: பேராசிரியர் சன்ன ஜெயசுமன (சி.எல்.சிசில்) கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் சுமார் 80,277 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி ஆகியன நேற்று இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டன. கம்பஹா, கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையான தொற்றா ளர்கள் பதிவான நிலையில் இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதிகளவு மக்கள் தடுப்பூசி போட வந்ததால் நீண்ட வரிசைகள் காணப்…
-
- 2 replies
- 485 views
-
-
முதியவரின் முகக் கவசத்துக்குள் புகைந்த பீடி பீடியொன்றை பற்றவைத்தவாறு சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், வீதியில் பொலிஸாரைக் கண்டவுடன், வாயில் வைத்திருந்த பீடியுடன் முகக் கவசத்தை அணிய முற்படுகையில் பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று முன்தினம் (11) கிரிஉல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. முகக் கவசங்களை அணியாதவர்களை கைதுசெய்வதற்கான பணியில், கிரிஉல்ல பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில், நபரொருவர் சைக்கிளை நிறுத்தி அவசரஅவசரமாக முகக் கவசத்தை அணிவதை பொலிஸார் கண்டுள்ளதுடன்,அந்த முகக் கவசம் தீப்பற்றுவதையும் அவதானித்து கூக்குரலிட்டு முகக் கவசம் அணிவதை தடுத்துள்ளனர். பொலிஸாரைக் கண்ட பதற்றத்தில் வா…
-
- 1 reply
- 912 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்- வீடுகளிலேயே நினைவு கூறுமாறு மக்களுக்கு அறிவிப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வு கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல் இன்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆரம்பத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் வாரம் மே 12 தொடக்கம் மே 18வரை ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்…
-
- 1 reply
- 263 views
-
-
இலங்கை தமிழர்களை அழிக்க நீண்ட கால திட்டத்தில் அரசாங்கம் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கொரோனா தொற்றை காரணம் காட்டி தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (13) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உரிமை போரின் போது யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் நினைவு கூர்ந்து உறவினர்கள் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்வது வழமை. ஆனால் தற்போது உள்ள அரசாங்கம் யு…
-
- 0 replies
- 349 views
-
-
அரசாங்கம் இறுதி ஊர்வலத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது – இரா.சாணக்கியன்
-
- 0 replies
- 340 views
-
-
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டது வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இந்த நடைமுறை இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டிற்குத் திரும்பும் இலங்கையர்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை பிரஜைகள், இரட்டை குடியுரிமைகளைக் கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும…
-
- 6 replies
- 418 views
-
-
இவ்வாண்டும் மே 18 முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்: சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றிய…
-
- 1 reply
- 598 views
-
-
முள்ளிவாய்க்காலில் “நினைவுக் கல்” கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் May 12, 2021 முள்ளிவாய்க்கால் நினைவேந்த வளாகத்தில் நாட்டுவதற்காக நினைவுக் கல் ஒன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினரால் அங்கு கொண்டுவரப்பட்ட நிலையில் படைத்தரப்பினருக்கும் அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி காவல்துறையினரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளனர். https://www.ilakku.org/?p=49358
-
- 3 replies
- 443 views
-
-
தொடரும் நெருக்கீடுகள் – துரைசாமி நடராஜா 71 Views மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினர் மீதான நெருக்கீடுகளின் அதிகரித்த தன்மையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது இலங்கையின் வரலாற்றில் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்ற ஒரு நிகழ்வாகும். இத்தகைய நிலைமைகளைச் சமாளிப்பதற்கு சிறுபான்மையினரிடையே ஒரு ஐக்கியம் மிக்க சக்தியினைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகியுள்ள போதும், இது கால்வரை இது சாத்தியமாகவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். இதனால் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் மழுங்கடிப்பிற்கு உள்ளாகும் நிலையே மேலெழுந்து காணப்படுகின்றது. இலங்கைக்கு இனவாதம் புதியதல்ல. அது சுதந்திரத்திற்கு முன்னரும் சரி, அல்லது பின்னரும் சரி இன…
-
- 0 replies
- 881 views
-
-
இனப்படுகொலை நடந்த மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை-சபா குகதாஸ் 21 Views குருந்தூர் மலையில் தமிழர்களின் கலாசார மத அடையாளங்களை அழித்து, புத்தர் சிலை வைத்து வழிபாடுகளை நடத்துவதன் மூலம் மீண்டும் முல்லை மண்ணில் கலாசார படுகொலையை அரசு அரங்கேற்றியுள்ளது. ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்தியிருந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் குருந்தாவஷோக ரஜமஹா விகாரை அமைக்கப்பட்டு, நேற்று முதல் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ், “2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ, அதே மே மாதத்தில் முல்லைத்தீவு மாவட்…
-
- 0 replies
- 449 views
-
-
மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்’-முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம் 21 Views அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது. முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல. முள்ளிவாய்க்கால் நினைவுத்திறம் கடந்த காலம் தொடர்பானது மட்டுமல்ல, எதிர்கால அடக்குமுறைக்கெதிரான இயங்கியல் தொடர்பானது. கொத்துக் கொத்தாய் இறுதிப்போரில் கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை, அவர்களது கனவுகளைச் சுமந்து கனத்து நிற்கின்றது முள்ளிவாய்க்கால் மண். மே 18 நினைவேந்தல் தமிழ் இனப்படு…
-
- 0 replies
- 917 views
-
-
குருந்தூர் மலையில் விழா எடுக்கலாம்: ‘இறந்த மக்களை நினைவு கூர முடியாதா?’ பி.யானுஜன் 20 Views கொரோனா பரவலுக்கு மத்தியில் குருந்தூர் மலையில் புத்தரை அமர்த்தி விழா செய்கிறார்கள் ஆனால், இறுதிப்போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது என வவுனியா நகரசபைஉறுப்பினர் பிரபாகரன் யானுஜன் கவலை தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர். அண்மைக்காலமாக சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அந்த இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்.மாநகர மேயர் மணிவண்ணன…
-
- 0 replies
- 196 views
-
-
தமிழினப் படுகொலையை நினைவுகூர வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு 17 Views போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம் என வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மே மாதம் 18ஆம் திகதி இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்…
-
- 0 replies
- 362 views
-
-
உயர்தர பெறுபேற்றின் புதிய பாடத்திட்ட பாடசாலைப் பெறுபேற்றின்படி கிழக்கு மாகாணம் மீண்டும் கடைசி நிலைக்கு வந்துள்ளது! By கிருசாயிதன் (எப்.முபாரக்)அண்மையில் வெளிவந்த 2020 க.பொ.த (உ.த) பெறுபேற்றின் புதிய பாடத்திட்ட பாடசாலைப் பெறுபேற்றின்படி கிழக்கு மாகாணம் மீண்டும் கடைசி நிலைக்கு வந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2018 பெறுபேற்றின்படி 9 ஆம் நிலையில் இருந்த கிழக்கு மாகாணம் 2019 புதிய பாடத்திட்ட பாடசாலைப் பெறுபேற்றின்படி 4 ஆம் இடத்திற்கு முன்னேறியிருந்தது. இம்முறை அது மீண்டும் பழைய இடத்திற்கு அதாவது 9 ஆம் இடத்திற்கு வந்துள்ளது.2020 பெறுபேற்றின்படி சகல விடயங்களிலும் கிழக்கு மாகாணம் பின்னடைந்திருப்பதை பரீட்சைத் திணை…
-
- 2 replies
- 442 views
-
-
குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் இன்று ஆரம்பம் – இராணுவத்தினர் ஏற்பாடு 33 Views முல்லைத்தீவு – குருந்தூர்மலை தொல்லியல் பகுதியில் பௌத்த விகாரைக்கான புனர்நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்த தொடக்க நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபால குருநதூர்மலைப் பகுதிக்கு வருகை தரவுள்ளார் என்று அறிய வருகின்றது. புனர்நிர்மாணப் பணிகளை இன்றைய தினம் ஆரம்பிப்பதற்காக நேற்றிரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், 29 பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதிய…
-
- 9 replies
- 1.4k views
-
-
மே.18 நினைவேந்தலை செப நாளாக அனுசரிக்க அழைப்பு May 11, 2021 போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம் என வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மே மாதம் 18ஆம் திகதி இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவாகும். இறுதிப் போரின் போது கொல்லப்ப…
-
- 0 replies
- 228 views
-
-
இலங்கையில்... இன்று நள்ளிரவு முதல், மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்யத் தடை! இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கைக்கு அமைய, மாகாணங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார். ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. இலங்கையில் மாகாண…
-
- 1 reply
- 276 views
-
-
சீனாவின்... "சினோபார்ம்" தடுப்பூசியை, இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது தொடர்பாக சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிலையில், இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, இந்தக் கலந்துரையாடல் மிகவும் சாதகமாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1215066
-
- 9 replies
- 731 views
-
-
அனைத்து... மதுபான, நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குறித்த உத்தரவு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலமையை கட்டுப்படுத்தும் நோக்குடன் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மதுக்கடைகள் தொடர்பாக இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். https://athavannews.com/2021/121520…
-
- 0 replies
- 318 views
-
-
(நா.தனுஜா) ஒரு மாதகாலத்திற்கு முன்னர் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிலிருந்தே தற்போதைய கொவிட் - 19 மரணங்கள் பதிவாகி வருகின்றன. எனவே தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், எதிர்வரும் மூன்று வாரங்களில் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இலங்கை மருத்துவ அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியார…
-
- 1 reply
- 330 views
-
-
- நூருல் ஹுதா உமர்- சேர் பொன்னம்பலம் ராமநாதன் தொடங்கி பிரபாகரன் வரைக்கும் காலத்துக்கு காலம் வந்த தமிழ் தலைமைகள் எந்த வகையான கழுத்தறிப்புகளை முஸ்லிம் சமுகத்திற்கு செய்தார்களோ அதையே சாணக்கியனும் செய்கிறார். இதை பார்த்து வியந்து பேசவோ ஆச்சரியப்படவோ வேண்டியதில்லை என்று இழப்பீட்டுக்கான ஆய்வு மையத்தின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர் தெரிவித்தார். அக்கரைப்பற்று இழப்பீட்டுக்கான ஆய்வு மைய காரியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த நிர்வாகிகள் தேர்வு நடைபெற்ற பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தனியான இனம் என்பதை 85களில் தமிழ் மொழி மாநிலமாக ஆரம்பித்த போராட்டம் 90களில…
-
- 14 replies
- 1.1k views
-