Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மழுப்ப வேண்டாம் கேட்ட கேள்விக்கு பதிலளியுங்கள் யாழில் சுமந்திரனை அதிர வைத்த இளைஞர்| https://youtu.be/cSl6NKI9A8I

    • 4 replies
    • 896 views
  2. இலங்கையில்... "டிஜிட்டல்" தடுப்பூசி அடையாள அட்டை – நாமல் இலங்கையில் டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டை (digital vaccine identity card) எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த அடையாள அட்டை தடுப்பூசி திட்டத்தை சீராக செயற்படுத்த உறுதி செய்யும் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் டிஜிட்டல் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். அடையாள அட்டையில் தடுப்பூசி பெற்ற நபரின் விபரங்கள், தடுப்பூசியின் வகை, பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியின் விபரங்கள், வழங்கப்பட்ட திகதி மற்றும் இரண்டாவது ஜப் வரவிருக்கும் திகதி மற்றும் தடுப்பூசி செயன்முறை…

  3. கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் – கலையரசன் 12 Views சில முஸ்லிம் தலைவர்களால் முஸ்லிம் மக்கள் மேலும் அடிவாங்கும் நிலையிலேயே உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து பயணிக்க வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என்று செயற்படுகிறார்கள். இது இந்த பேரினவாத அரசு தற்காலத்தில் கையாளுகின்ற பிரித்தாளும் விடயங்களுக்குத் தீணி போடுகின்றதாகவே இருக்கின்றது. மேலும் முஸ்லிம் சமூகம்…

  4. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று கூடும் அனைவரும் கைது செய்யப்படுவர் – இராணுவ தளபதி May 10, 2021 நாட்டில் கோவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார். கோவிட் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வ…

    • 2 replies
    • 617 views
  5. கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு 11 Views தொற்றுநோய் பரவலால் ஸ்தம்பிதமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு எந்தவொரு பயனுள்ள ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற் கொள்ளவில்லை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலாக தோல்வியுற்ற இணையவழி கல்வியை வழங்க அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “தற்போது, கல்வி அமைச்சு, மாகாண கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.” பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கும்வரை, ஆசிரியர்கள் த…

  6. இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்க கொரியா இணக்கம்! கொரிய அரசாங்கம், 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு சலுகைக் கடனாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதி- இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின், பொருளாதார அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக இந்த கடன் தொகையை வழங்க கொரிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது. மேலும் கடன் வட்டி விகிதம் 0.15% -0.20% வரை குறைவாகவும், கடனுக்கு 10 ஆண்டுகள் சலுகை காலமும், சுமார் 40 ஆண்டுகள் சலுகை காலமும் உள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2021/1214869

  7. முகக்கவசம் அணியாதவர்களைத் தூக்கிச் சென்ற பொலிஸார்! பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலகவின் தலைமையில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை நகரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, முகக் கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினைப் பின்பற்றாத 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத சிலரை பொலிஸார் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவமும் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1214490

  8. ‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ சட்டமூலம் நிறைவேற்றம்- இலங்கை அரசாங்கம் அதிருப்தி ‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம், கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, குறித்த செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் தனது கவலையை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது தினேஸ் குணவர்தன, கனடா உயர்ஸ்தானிகரிடம் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக இனங்காணப்படவில்லை என்ற கனடா அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மாறாக…

  9. இலங்கையின் நிலைமை மிக மோசம்: மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் – அரசிடம் ரணில் 9 Views கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் மக்களின் சுகாதாரப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாகச் செயற்பட்டு, பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவசர வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் விசேட காணொலியொன்றை அவர் இன்று வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலைவரம் நீடித்தால் ஜூன், ஜுலை மாதங்களில் நாளொன்றுக்கு 100 பேர் வரை உயிரிழக்கும் அவல நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால், அமைச்சரபையும், ஜனாதிபத…

  10. வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க புதிய அமைப்பு! May 9, 2021 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ‘யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்’ என்னும் பெயரில் 11 அங்கத்தவர்களுடன் இந்த அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்வது இந்த அமைப்பின் நோக்கமாகும். மரவுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முயற்சியை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், மாநகர முதல்வரின் தலைமை…

  11. தமிழ் எம்.பிக்களுக்கு தனிச் சிங்களத்தில் கடிதமா? சுமந்திரன் சீற்றம் 29 Views நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அதிகாரிகள் மொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் குறைவான அணுகுமுறையைக் கையாள்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்தக் கோரி, சுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்…

  12. புலிகளின் தலைவரின், ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். குறித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் …

  13. நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்குங்கள். இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர் மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும், தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே துறைமுக நகருக்கு தரும் முன்னுரிமையை கொரோனா அழிப்புக்கு கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தேரர் முருத்தெடுகல ஆனந்த பிக்கு சொல்வதை போன்று, நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமை ஏற்படலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் …

    • 0 replies
    • 530 views
  14. நம்ப வைத்து ஏமாற்றியது கூட்டமைப்பு – சாடுகிறது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பதவியை ஒரு வருடத்திற்கு தமது அமைப்பிற்கு தருவதாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றியுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ் ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் சி. ஜனார்த்தனன் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2018ம் ஆண்டு இடம்பெற்ற பிரதேசசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு மாத்திரம் மலையக மக்கள் சார்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஒன்றியத்தின் ச…

  15. யாழ்ப்பாணத்தில், மேலும் மூன்று இடங்களில் கொரோனா சிகிச்சை நிலையம்! யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன. இதன்படி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச கஞ்சியக் கட்டடம் ஆகியவை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வயாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, நாவற்குழி அரச களஞ்சியம் 300 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட சிகிச்சை நிலையமாக அமைக்கப்படவுள்ளது. அத்துடன், வட்டுக்கோட்டை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வயாவிளா…

  16. விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டால் சிதறி வாழும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் – மனோ 18 Views விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டால் சிதறி வாழும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: “வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டால், இந்த மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் மாகாணசபைகளிலும், பாராளுமன்றத்திலும் குறைந்து விடும…

  17. முல்லைத்தீவின் எட்டு கிராம சேவையாளர்கள் பிரிவு குறித்து அமைச்சர் சமல் மாவைக்கு உத்தரவாதம் 15 Views மகாவலியால் முல்லைத்தீவு குடிப்பரம்பல் மாற்றமடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மாவை. சோ.சேனதிராஜாவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின்போது இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மகாவலி எல் வலயத்தினை விஸ்தரிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, செம்மலை ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த எட்டுகிராம சேவகர் பிரிவுகளை மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்…

  18. இலங்கையில் 5 நாடுகளின் 6 வைரஸ் திரிபுகள் பரவி வருகின்றன – வைத்தியர் சந்திம ஜவந்திர இலங்கையில் 5 நாடுகளின் 6 வைரஸ் திரிபுகள் பரவி வருகின்றன என்று ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என அதன் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜவந்திர தெரிவித்துள்ளார்.டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பி.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்திலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நல்லூரை மையமாகக் கொண்டு குறித்த வைரஸ் பரவி வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் சில பிரதேசங்களில் பி.1.411 என…

  19. இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் – I.H.M.E எச்சரிக்கை May 9, 2021 இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா தொற்றால் நாளாந்தம் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான (University of Washington’s Institute for Health Metrics and Evaluation) I.H.M.E தெரிவித்துள்ளது. தற்போதைய புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்தசுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐஎச்எம்மீ தெரிவித்துள்ளது. செப்டம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் 20876 பேர் கொரோனாவைரசினால் உயிரிழப்பார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன்14 ம் திகதியளவில் நாளாந்த உயிரிழப்பு உச்சத்தை அடை…

  20. அரசியல் கைதிகள் விடயத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். May 9, 2021 கல்முனை விவகாரத்தை போல அரசியல் கைதிகள் விடயத்திலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் ஒன்றிணைந்து அமைச்சர் சமல் ராஜ பக்சவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அதன் பிந்திய பெறுபேறுகளுக்கு அப்பால் இது ஒரு ஆரோக்கியமான அவசியமான ஒருங்கிணைந்த முன்னெடுப்பாகும் இதே போன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இது காலத்தின்…

  21. டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு! (துதி)தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மல…

    • 29 replies
    • 3.2k views
  22. -பா.நிரோஸ் யுத்தம் செய்து, நாட்டிலிருந்த பயங்கரவாதத்தை ஒழித்தார்கள் என்பதற்காக, எவரையும் கொலை செய்வதற்கு, இராணுவத்தினருக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கொலைக்காரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கைத் தவறெனவும் விமர்சித்தார். கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கைது செய்யப்படுவார் என்ற அச்சத்திலேயே ஹரீன் பெர்ணான்டோ எம்.பி இருப்பதாகவும் 'ஹோர்ன்' அடித்த குற்றத்துக்காக நபரொருவர் கைது செய்யப்படும் நிலைமைக்கு, இந்நாடு சென்றுள்ளதென்றும் இவை அனைத்தும், ஜனநாயக விரோதச…

    • 4 replies
    • 1.1k views
  23. தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்! By கிருசாயிதன் (வா.சுதர்ஸ்சன்)இராணுவத் தளபதியின் 'இராணுவ முன்னோக்கு மூலோபாயம் திட்டம் - 2020-2025' க்கு இணங்க புரிதல், இன நல்லிணக்கம் , தேசபக்தி சகவாழ்வு ,பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஒரு புதிய திருப்புமுனையாக 359 தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி செவ்வாய்க்கிழமை (27) யாழ்ப்பாணம்விடத்தல்பலை பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.இந்த ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறியானது 2021 ஓகஸ்ட் மாதம் 27 வரை யாழ்ப்பாண பாதுகாப்புப் …

    • 21 replies
    • 1.6k views
  24. சாணக்கியனுக்கு அறிவு இருந்திருந்தால் நாடாளுமன்றில் இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார்- கடுமையாக சாடிய கருணா! கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று செங்கலடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்பொ…

    • 10 replies
    • 1.1k views
  25. போலி முக நுால் கணக்குகளை நிறுத்த நடவடிக்கை – ரம்புக்வெல 21 Views இலங்கையில் 2 மில்லியன் போலி முக நுால் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமென வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். “இலங்கையில் சுமார் 27 வீத முக நுால் கணக்குகள் போலியானவை. நீதியமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து போலிச் செய்திகள், போலி சமூக ஊடக கணக்குகளை அகற்ற புதிய சட்டங்களை வகுப்பதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதியைத் தொடர்ந்து போலி சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் என்பதுடன் இது நாட்டில் போலிச் செய்திகள் வெளியாவதைக் குறைக்கும் முயற்சி” என அமைச்சர் ஹ…

    • 2 replies
    • 650 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.