ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
இலங்கை மீனவர் சமூகம் சார்பாக இந்தியாவுக்கு நன்றி – மனோ கணேசன் எக்ஸ்பிரஸ் – பேர்ள்’ கப்பல் மூலமான இரசாயனக் கழிவினால் இலங்கைக் கடல் வளத்துக்கு ஏற்பட்ட அழிவை ஆய்வு செய்து பாதுகாக்க, இந்தியக் கடற்படை கப்பல் ‘சர்வேக்ஸக்’ மூலம் இந்திய அரசு எடுத்தாண்ட முயற்சி பாராட்டத் தக்கது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ‘எக்ஸ்பிரஸ் – பேர்ள்’ கப்பலின் இரசாயனக் கழிவுகளை ஆய்வு செய்து, இலங்கைக் கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு தனது கடற்படை மூலம் செய்து வரும் உதவிகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறுகையில், “வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத பேரழிவு, இலங்கைக் கடல் வளத்துக்கு, எக்ஸ்பிரஸ்-பேர்…
-
- 0 replies
- 219 views
-
-
நாம் ஏற்கமுடியாத பூகோள அரசியல் நடவடிக்கை என்றாலே சீனாவின் வருகையை எதிர்ப்போம்; கஜேந்திரகுமார் “வடக்கில் அமைக்கப்படும் கடல் அட்டை பண்ணைகள், நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நோக்கத்துடன் – பூகோள அரசியல் நோக்கங்களுடன் எடுக்கும் அரசியல் நடவடிக்கையாக நாங்கள் கருதினால், நிச்சயமாக எதிர்ப்போம்” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந் தொற்றால் புதுக்குடியிருப்பில் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உலருணவு வழங்கும் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று முன்தினம் மாலை முன்னெடுத்தது. இதில் கலந்து கொண்ட போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். மேலும், கொ…
-
- 0 replies
- 195 views
-
-
தமிழர்களின் பூர்வீக நிலங்கள் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் — நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கனகராசா சரவணன் கல்முனையில் தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். அரச காணியில் சட்டவிரோதமாக மண் நிரப்பப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கை இடம்பெற்ற இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டு தடுத்து நிறுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரி…
-
- 13 replies
- 549 views
-
-
வட பகுதி கடல்வளத்துறை... இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்! கலாநிதி. சூசை ஆனந்தன்! இதுவரையில் வட பகுயின் கடல் வளங்களானது ஒரு புறத்தில் தென்இந்திய திராவிடர்களாலும்,மறுபுறத்தில் தென்பகுதி சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க இப்போது சீனர்களும் கரையோர ஏரிப்பகுதிகளில் கடலட்டைவளர்ப்பு என்று களம் இறக்கப்பட்டிருக்கின்றனர். ஒட்டு மொத்தத்தில் வடபகுதி கடல்வளம் அந்நியரால் விழுங்கப்பட வடபகுதி மீனவர்களோ பிச்சைப்பாத்திரம் ஏந்தும் பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றனர். தென்னிந்திய திராவிடர்கள் தென் இந்திய திராவிடர்கள் ,அழிவை ஏற்படுத்துகின்ற இழுவைமடியினை( bottom trawl net) பாரிய இயந்திரப்படகுள் கொண்டு பாக்கு நீரிணை,பாக்கு குடாப்பகுதிகளை ஆக்கிரமிக்க …
-
- 6 replies
- 926 views
-
-
இந்திய இழுவைப் படகுகளினால் வடமராட்சி மீனவர்கள் வாழ்வாதாரம் இழப்பு இந்திய இழுவைப் படகுகளினால், வடமராட்சி மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவரும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உப தலைவருமான வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.அத்துடன் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் கடற்படைக்கு அறிவித்து, இந்திய இழுவை படகுகள் எமது எல்லைக்குள் வராமல் தடுப்பது அவசியமானதாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி தடைக்காலம் என்பதால் கடந்த 2 மாதமாக இப்பகுதிகளுக்கு வரவில்லை.ஆனால் கடந்த புதன்கிழமை இரவு , கடந்த வியாழக…
-
- 2 replies
- 449 views
-
-
பஸில் பாராளுமன்றம் செல்வது தாமதமாகும்; ஜூலை நடுப்பகுதியிலேயே எம்.பி.யாவார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை பிற்போகக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதாக இருந்தால் ஆளுங்கட்சி எம்.பியொருவர் பதவி துறக்கவேண்டும். அதன் பின்னர் பஸிலின் பெயர் பரிந்துரைக்கப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தி தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட வேண்டும். இவ்வாறான நடைமுறைகளால் ஜூலை நடுப்பகுதியிலேயே பஸில் பாராளுமன்றம் வரக்கூடும் என ஆளுங்கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றுள்ளது. ஜ…
-
- 0 replies
- 291 views
-
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள் , மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீண்டும் பொருத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது . யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை ( Plastic Surgery ) வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன் , மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள் தாத…
-
- 8 replies
- 926 views
-
-
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கையில் ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் தொற்று காரணமாக குறித்த செய்கையினை முழுமையாக அழிக்கும் நிலைக்கு தோட்டச் செய்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பாலையடி புதுக்குளம், பாலப்பெருமாள் கட்டு, குருவில் ஆகிய கிராமங்களில் மேட்டு நில பயிர்ச் செய்கையான தோட்டச் செய்கை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வருடம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உளுந்து மற்றும் கச்சான் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றிற்கான உரம், மற்றும் கிருமி நாசினி போன்றவற்றிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகள் காரணாக உளுந்…
-
- 1 reply
- 394 views
-
-
புதிய... செயலியினை, உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டிலிருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். மிகத்துல்லியமான முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் த…
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
அரசு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை – சாணக்கியன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகவே பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அரசுடன் இணைந்திருப்பவர்கள் வெறுமனே பாதைகளை புனரமைப்பது அபிவிருத்தி அல்ல மக்களின் வாழ்வாதாரத்தினை பலப்படுத்துவதுடன் உண்மையான அபிவித்தி எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கண்டறியும் வகையில் அப்பகுதிக்குச் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சென்றிருந்தார். …
-
- 0 replies
- 360 views
-
-
(ஆர்.யசி) பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும். அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாவிட்டால் நாடே பாரிய நெருக்கடிக்குள் விழும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/89712/Bandula.jpg நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்பட்டுள்…
-
- 28 replies
- 1.3k views
-
-
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- கருணாகரம் எம்பி சாடல் ! By கிருசாயிதன் July 3, 2021 கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த நிகழ்வில் கோவிந்தன் கருணாகரம் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட நாள் முதல் சுகாதார பிரிவினர், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இது பாராட்டத்தக்கதோர் விடய…
-
- 0 replies
- 631 views
-
-
தென் இலங்கை மீனவர்களின் பொறுப்பற்ற செயலால் முல்லைத்தீவுக்கு ஆபத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாயாறு பகுதியில் பருவத்தொழிலுக்கு வருகைதரும் தென்பகுதி மீனவர்களால் முல்லைத்தீவு மீனவ சமூகம் பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றது. இங்கு வருகைதரும் மீனவர்கள் இங்கு குடியிருக்க அனுமதி வழங்கப்படாத நிலையிலும் அவர்கள் கடற்கரை பகுதிகளில் வாடிகளை அமைத்து அங்கு சடடவிரோதமாக தங்கியிருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை மிக பாரதூரமான விளைவுகளை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது தற்போதைய கொரோனா அபாய சூழலில் முல்லைத…
-
- 1 reply
- 471 views
-
-
காகத்தை கொன்று அதன் ஒரு இறக்கையை தொங்கவிட்டால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அச்சத்தில் மௌனமாகிவிடுவார்கள் – அரசாங்கத்திற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆலோசனை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விமர்சனங்களை வெளியிடுபவர்களை மௌனமாக்குவதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச காகமொன்றை கொன்று அதன் இறக்கையை தொங்கவிடவேண்டும் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பல்வேறுஸ்தாபனங்களே ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸமஹராமா வாவி திட்டம்…
-
- 3 replies
- 840 views
-
-
செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு July 2, 2021 Share 24 Views செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு – அரச அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகள் செல்வந்தர்களாளேயே இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வதற்கு ஒரு துண்டு காணி கூட இல்லாத சுமார் 3750 ஏழைக் குடும்பங்கள் தமக்கு வாழ்விடத்திற்கு ஒரு துண்டு காண…
-
- 4 replies
- 628 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் – சுமந்திரனிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கோமகன் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.. சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுமாறு கோரி அனை…
-
- 3 replies
- 329 views
-
-
1600 ஆவது நாளை நெருங்கும் போராட்டம் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டமானது எதிர்வரும் திங்கள்கிழமை 1600ஆவது நாளை எட்டவுள்ளது. எனவே அந்த நாளைக் குறிக்கும் வகையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். இன்று வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”எதிர்வரு…
-
- 0 replies
- 289 views
-
-
கௌதாரிமுனைக்கு சிறிதரன் குழுவினரை ஏற்றிச் சென்ற படகோட்டி இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணை கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – கெளதாரிமுனையில் கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை ஏற்றிச் சென்ற படகு உரிமையாளரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். கெளதாரிமுனையில் மூன்று மாதங்களாக சீன நாட்டவரால் நடத்தப்படும் கடலட்டைப் பண்ணை தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் உதவியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் கெளதார…
-
- 1 reply
- 558 views
-
-
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு UAE விதித்துள்ள தடை கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு இலங்கை, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியம் அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், தென் ஆபிரிக்கா மற்றும் வியட்நாம் உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை உட்பட குறிப்பிட்ட நாடுகளுக்கான விமான சேவைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷேடமாக டெல்டா வகை வைரஸ் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.l…
-
- 0 replies
- 383 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரி சலுகையை அரசியல் தீர்விற்கு பயன்படுத்த வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜி.எஸ்.பி வரி சலுகையை, பயங்கரவாத சட்டத்தை அகற்ற மாத்திரம் பயன்படுத்தாமல் அரசியல் தீர்விற்கும் ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்த வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார். வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கோ.ராஜ்குமார்…
-
- 0 replies
- 246 views
-
-
சபையை இழந்தது யானை: மொட்டு மலர்ந்தது ஒலுமுதீன் கியாஸ் திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது. கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்த சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பிரேரணை இன்று (2) முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன் போது சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் உறுப்பினர் டப்ளியு.ஏ.ஜயசிரி, மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். இதனூடாக, இந்த சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது. மொத்தம் 15 உறுப்பினர்களைத் கொண்ட இந்த சபையில் ஐ.தே.கட்சி 6 உறுப்பினர்க…
-
- 0 replies
- 405 views
-
-
(இராஜதுரை ஹஷான்) சுபீட்சமாக எதிர்கால கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி ஒருபோதும் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆகவே ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் ஆற்றும் உரை பயனற்றதாகவே கருதப்படும். தேசியத்திற்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது. நாட்டை பிற தரப்பினருக்கும் விற்கும் கொள்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்குள் நாடு இருக்குமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. பொறுப்பற்ற வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் மகாசங்கத்தினரை ஒன்றினைத்து வீதிக்கிறங்க…
-
- 17 replies
- 758 views
-
-
கப்பல் விபத்தினால்... பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு, டக்ளஸ் தேவானந்தாவினால்.. உபகரணங்கள் வழங்கி வைப்பு! எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கமைய, தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் செயற்பாடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://athavanne…
-
- 8 replies
- 781 views
-
-
தொடர்பாடலை மேம்படுத்தும் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்த முன்னாள் போராளியின் மகன்! கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் மகனான சுபாஸ்சந்திரபோஸ் சுகிர்தன் என்ற கலைப்பிரிவு மாணவன் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார். குறித்த செயலியை வடிவமைக்க ஆரம்பித்தபோது, அதற்கான பெயரிடலை திட்டமிடாமையால் தனது பெயரை அதற்கு சூட்டியுள்ளார். குறித்த செயலி ஊடாக பயன்பாட்டில் உள்ள ஏனைய செயலிகள் போன்று, தரவுகளை பரிமாறுதல், காணொளி தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்களை அதில் உள்ளடக்கியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவபாதகலையகம் பாடசாலையில் சாதாரண …
-
- 1 reply
- 322 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின்... சில விதிகளை, மீள ஆராய நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்தது இலங்கை! பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும். …
-
- 0 replies
- 342 views
-