Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம். 'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என…

  2. மட்டக்களப்பில் 1500 வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டம் (படங்கள்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று காலை மகாம்மா காந்தி பூங்காவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் ஆரம்பமானது. மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாமலுள்ள சுமார் 1500 பட்டதாரிகள் இதில் இணைந்திருந்தனர். நிரந்த நியமனம் வழங்குமாறு மாகாண முதலமைச்சரைக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். அதிகளவிலான பெண் பட்டதாரிகளும் இதில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். காலவரையறையின்றி எமது போராட்டம் தொடருமென பட்டதாரிகள் சங்க தலைவர் கே.கிரிசாந்த் தெரிவித்தார்…

  3. மட்டு- ஈரளக்குளம் பகுதியில் பௌத்த பீடம் அமைக்க திட்டம் 167 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் என்னும் பகுதியில் பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியானது நூறு வீதம் தமிழர்கள் வாழும் பகுதியாக காணப்படும் நிலையில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயற்கை வனப்பும் வயல் நிலங்களும் நிரம்பிய ஈரளக்குளம் பகுதியானது தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் பகுதியாக…

  4. முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் 600 க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரியும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்யக் கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு எதிரே நடைபெறவுள்ளது. இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப் படுகின்றது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் சி.அருள்ஜெனிபேர்ட் தெரிவித்ததாவது: தொடர்ந்தும் எமது பகுதியில் உள்ள மீன்களை அத்துமீறி தென்பகுதி மீன…

    • 1 reply
    • 392 views
  5. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கத்திக் குத்து : பெண்ணொருவர் படுகாயம் கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் கத்திக் குத்துக்கு இலக்காகி பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாந்தபுரம் கிராமத்தில் இருந்து இரணைமடு குளத்திற்கு நன்னீர் மீன் தொழில் நடவடிக்கைக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது இரணைமடு இராணுவ தலைமையகத்திற்கு பின்புறமாக காட்டுக்குள் மறைந்திருந்த ஒருவர் திடீரென குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார். இதன்போது பெண் குறித்த நபரை தடுத்து நிறுத்தியதால் கத்தியால் கழுத்தில் குத்தியதாக தெரிவிக்கப்படு…

  6. நெருக்கடியை தீர்க்க மஹிந்த அழைத்த கூட்டத்தில் சலசலப்பு – வாசு, விமல், கம்பன்பில வெளிநடப்பு 36 Views மொட்டுக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தணிக்கும் விதத்தில் இன்று முற்பகல் பிரதமர் தலைமையில் கூடிய கூட்டம் பிசுபிசுத்துப் போனது. பல்வேறு சிறிய கட்சிகளையும் சேர்ந்த பல டசின் பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்துக்கு பஸில் ராஜபக்ஷ கூட்டி வந்தமையால், பிரதான கூட்டத்தில் பங்குபற்றாமல் விமல் வீரவன்ஸ, உதய கம்பன்பில்ல, வாசுதேவ நாணயக்கார போன்றோர் வெளியேறியமையால் கூட்டம் பிசுபிசுத்துப் போனது. இன்றைய கூட்டத்துக்கு மொட்டுக் கூட்டணியின் பிரதான பத்துக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், சிறிய சிறிய கட்சிகள், அமைப்புக…

    • 1 reply
    • 842 views
  7. கருணா தரப்பினர்களிடம் எஞ்சியிருக்கும் ஆயுதங்களை இரகசியமாகக் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென இரகசியமானதொரு இடம் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக

    • 2 replies
    • 1.4k views
  8. வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புக்குள் இழுபறி நிலையே தொடர்கின்றது. http://tamilworldtoday.com/?p=22337

    • 5 replies
    • 875 views
  9. இலங்கைக்கான ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’இலங்கைக்கான சமாதான கட்டமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஜப்பானிய பிரதிநிதி என்ற வகையில் எனது பயணம் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. 2003ம் ஆண்டு பேச்சுவார்த்தையின் போது நாம் 4 பில்லியன் டாலரை அன்பளிப்பாக கொடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக புலிகள் இதனை புறக்கணீத்தனர்’’என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’இலங்கை தொடர்பான தெளிவு எமக்கு இருந்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை’’என்று தெரிவித்தார். நன்றி நக்கீரன்.

  10. சி.வீ.விக்னேஸ்வரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என முன்னாள் நீதியரசரும், வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளருமான சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார் அப்போதைய தமிழ்த் தமிழ்த் தலைவர்கள் கடவுளாலேயே தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இளையவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினர் என அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் ஆயுதப…

  11. புட்டினை சந்தித்தார் ஜனாதிபதி..! ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை சந்தித்துள்ளார். ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை மொஸ்க்கோவில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் பொது இருநாட்டு வர்த்தக மற்றும் அரசியல் புரிந்துணர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், மேலும் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான 60 வருடகால ராஜதந்திர உறவுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மொஸ்க்கோவிலுள்ள கெர்மிளின் மாளிகையின், பச்சை அறையில் இடம்பெற்ற குறித்த…

  12. இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டி உள்ளது -சுரேஷ் பிரேமச்சந்திரன் 56 Views இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். அதேபோல் இறுதி யுத்…

  13. ஈழத்தில் கடந்த 35 ஆண்டுகளில் குறைந்தது 25 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டியே சிங்கள மற்றும் இந்திய அரசுகள் கையளித்த ஆயுதங்களை, பணத்தை, செல்வாக்கை வைத்து ஈழம், தமிழ் மக்கள் என்ற பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழ் மக்கள் முன்னெடுத்த தாயக விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக எதிரியின் காய்நகர்தல்களுக்கு முழுமையாக உதவி வந்த ஒட்டுண்ணி தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆயுள் சேடம் இழுக்கும் நிலையை எட்டியுள்ளது. 2006ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இன அழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தத்தை சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசு ஆரம்பித்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகளின் நேரடி உதவியூடு இவ்வாண்டின் மே மாதத்தில் புலிகளை வென்று குறித்த யுத்தத்த…

    • 50 replies
    • 4.7k views
  14. சந்தியா ஏக்னலிகொடாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விருது இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் ``2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர் விருது`` வழங்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைEMBASSY OF THE UNITED STATES OF AMERICA இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் ``2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர்…

  15. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.நேற்று ஜலனி பிரேமதாஸவின் தொற்று உறுதியாகியதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, தாமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டபோதே, தனக்கும் தொற்று உறுதியானதாக சற்றுமுன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.இதேவேளை இந்த நெருக்கடியான தருணத்தில் பொதுமக்களி…

  16. கடலின் கீழ் மின்சார கேபிள்களை அமைக்க இந்தியா இலங்கை திட்டம் வீரகேசரி நாளேடு 6/30/2009 9:10:34 PM - இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முயற்சியில் இந்தியாவிலிருந்து மின்சாரம் பெறுவதற்கென ஆசியாவிலேயே புதிய முறையிலான கடலின் கீழ் கேபிள் தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை ஆராய்வதற்கென புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் இரண்டு அயல் நாடுகளும் விரைவில் கைச்சாத்திட இருக்கின்றன. இதற்கான நகல் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றும் விரைவில் அது கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய மின்சார வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான யோசனையை ஊக்குவிக்கும் ஈரிடை திட்டமொன்…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது – மஹிந்த வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை என்னிடம் இருந்து பறித்துக்கொள்ள முடியாது என மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடனான சந்திப்பொன்று இன்று (30) இடம்பெற்றது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால், பாரிய சவால்கள் ஏற்படுமா என கேட்டதற்கு கருத்து தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் தொடர்ந்தும் இருக்குமென மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது கூறினார். என்றபோதிலும், தாம் எண்ணியதற்கும்…

    • 1 reply
    • 842 views
  18.  ‘பௌத்தர்களுக்கு உணர்வு இல்லை’ “கண்டி, ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வீதியைத் திறப்பதற்கு முயன்றபோது, மாகாண சபையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவரே, முதலாவதாக எதிர்ப்பினை வெளியிட்டார். அவருக்கு இருக்கும் உணர்வு கூட, பௌத்தர்களுக்கு இல்லை” என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விமலஜோதி தேரரின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கொட்டாஞ்சேனையில் உள்ள விஹாரையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பௌத்தம் தொடர்பான புத்தகங்கள், ஒருகாலத்தில் தேடிக்கொள்ள முட…

  19. என் கருத்து, சிங்கள நண்பர்களுக்கு புரிந்துள்ளன, தமிழ் பேசும் “அறிவாளிகளுக்கு” புரியல’ – மனோ 25 Views தமிழ் முற்போக்கு கூட்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடந்த வாரம், “நாட்டை 10 வருடம் தாருங்கள் முன்னேற்றி தருகிறோம்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வெளியிட்டுருந்தார். அந்த விடயம் தமிழ் ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக காணப்பட்டது.இந்த நிலையில் மனோ கணேசன், கடந்த வாரம் தான் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் தொடர்பில் இன்று மீண்டும் ஒரு அறிக்கை பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டை 10 வருடம் தாங்கோ..! முன்னேற்றி 11ம் வருடத்தில் தாறோம்..!” என்றும் கூறினேன். இவை பல சிங்கள நண்பர்களுக்கு புரி…

  20. செய்தியாளர் மகான் 07/07/2009, 13:57 முன்னாள் காவல்துறை காஸ்டபிள் வெட்டிப் படுகொலை மட்டக்களப்பு தாளங்குடாப் பகுதியில் முன்னாள் சிறீலங்காக் காவல்துறை காஸ்டபிள் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 42 அகவையுடைய இரத்தினசிங்கம் லூயிஸ் பிறவுண் என அடையானம் காணப்பட்டுள்ளார். முன்னர் இவர் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் பணியாற்றியிருந்தார். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இவரது வீட்டு வளாகத்தினுள் உட்நுழைந்த ஆயுததாரிகள் இவரை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலத்தில் கழுத்து, நெஞ்சு, மற்றும் இடுப்பு பகுதிகளில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகக்…

  21. ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுவதற்கான கால அட்டவணையை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் ஐ.நா. தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள 2 வருட கால அவகாசத்தினுள் அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்த கால அட்டவணை ஒன்றை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த அட்டவணையை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்குதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  22. சிறிலங்கா வரவேண்டிய கியூபாவின் டெங்கு நிபுணர்கள் மாயம் டெங்கு ஒழிப்பு பற்றீரியாவை சிறிலங்காவிற்கு எடுத்து வந்த கியூபா தொற்றுநோய் நிபுணர்கள் இருவரும் வரும் வழியில் காணாமல் போயுள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவில் படு வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா சுகாதார அமைச்சு கியூபாவின் உதவியை நாடியிருந்தது. ஆகவே கியூபாவைச் சேர்ந்த இரு தொற்றுநோய் நிபுணர்கள் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்பைக் கட்டுப்படுத்தும் பற்றீரியாவை சிறிலங்காவிற்கு எடுத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை காலை 8.30 அளவில் சிறிலங்கா விமானநிலையம் வந்தடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் வரவேண்டிய விமானத்தில் இருக்கவில்லை என அவர்களை அழை…

    • 2 replies
    • 848 views
  23. பண்டாரவன்னியனின் சிலை திறப்பு... -சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன் வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை, வியாழக்கிழமை (20) முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கோரிக்கைக்கு அமைய, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களால் பயன்படுத்தப்ப…

  24. மடு மாதா பெருநாளுக்கு வரவுள்ள பக்தர்கள் மீதான சோதனை கெடுபிடிகள் குறைப்பட வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 308 views
  25. இராணுவத்தினர் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டிருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யார் உத்தரவிட்டிருந்தாலும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றோம் என்பதனை இராணுவம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளோ அல்லது குற்றவாளிகள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினர் இவ்வாறு நடந்துகொள்வது பாரிய பிரச்சினையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில…

    • 2 replies
    • 617 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.