ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் ஆலயம் விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. குறித்த ஆலயம் நேற்று இரவு விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் இன்றைய தினம் காலை ஆலயம் இடித்தழிக்கப்பட்டதை அயலவர்கள் கண்ணுற்று அது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்தனர். இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிள்ளையார் கோவில் விஷமிகளால் இடித்தழிப்பு - யாழில் சம்பவம் | Virakesari.lk
-
- 2 replies
- 599 views
-
-
வவுனியா பல்கலைக்கழகம்: கல்விச் சமூகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி-சத்தியலிங்கம் 33 Views கல்விச் சமூகத்தின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியே வவுனியா பல்கலைக்கழகம் என முன்னாள் வடக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார் நீண்ட வருடங்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இயங்கிவந்த வவுனியா பூவரசங்களம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக வளாகம் ஆணி முதலாம் திகதி முதல் சுயாதீனமான பல்கலைக்கழகமாக இயங்கும் என்று அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது இதில் பல அரசியல்வாதிகள் தங்களால் தான் வவுனியா பல்கலைக்கழக வளாகம் சுயாதீன பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் கர…
-
- 0 replies
- 447 views
-
-
வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்…
-
- 23 replies
- 1.5k views
-
-
இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கு நன்றி தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இடையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற சந்திப்பின்போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு நன்றி தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இராணுவ பயிற்சி பரிமாற்றத்தின் சீரான செயல்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இருதரப்பு ம…
-
- 7 replies
- 463 views
-
-
இலங்கையில் அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பி.டி.ஏ) .ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை மீதான தீர்மானம் ஆதரவாக 628 வாக்குகள், எதிராக 15 மற்றும் 40 நாடுகள், வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. ஸ்பெயின் / மொராக்கோ எல்லையிலும், ரஷ்யாவிலும், இலங்கையிலும் மனித உரிமை நிலைமைகள் குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilmirror Onli…
-
- 1 reply
- 432 views
-
-
மெல்போர்னில்... கொரோனா கொத்தணி உருவாக, இலங்கையரிடம் இருந்து பரவிய வைரஸ் காரணம் அல்ல அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் கொரோனா கொத்தணி உருவானமைக்கு இலங்கையரிடம் இருந்து பரவிய கொரோனா வைரஸே காரணம் என கூறமுடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அந்தப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வேறொரு நாட்டில் இருந்து இலங்கை ஊடாக மெல்போர்ன் நகருக்குச் சென்ற ஒருவராலேயே குறித்த கொரோனா கொத்தணி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார். http…
-
- 2 replies
- 499 views
-
-
உணவு பொதியை... மிரட்டி பறித்ததாக, யாழில் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு! உணவு விநியோகம் செய்ய சென்ற ஊழியரை மறித்து அவரிடமிருந்த இரண்டு உணவு பொதிகளை நேற்று(வியாழக்கிழமை) இரவு சுன்னாகம் பொலிஸார் மிரட்டி கொள்ளையிட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலையே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மருதனார் மடம் சந்திக்கு அருகில் சீருடையுடன், பொலிஸ் வாகனத்தில் நின்றிருந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸாரே இந்த உணவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “சாவகச்சேரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் உணவு பெற்றுக்கொள்ள தொலைபேசி ஊடாக பதிவு (ஓடர்) செய்துள்ளார். அவருக்கான உணவினை விநியோகம் செய்வதற்காக குறித்த உ…
-
- 1 reply
- 478 views
-
-
ஆபத்தான ‘அல்பா கொரோனா’ இலங்கையிலும் பரவல் – ஒன்பது இடங்களில் அடையாளம் 2 Views இந்தியாவில் புதிய திரிபாக மாறிவரும் பி.1.617.2 (டெல்டா) எனும் ‘அல்பா கொரோனா’ தொற்றுக்குள்ளான ஒருவர், தனிமைப்படுத்தல் மத்திய நிலையமொன்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர, இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட குறித்த கொரோனா தொற்றுக்குள்ளாகி, இலங்கையில் இனங்காணப்பட்ட இரண்டாவது நபர் என்றார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “இலங்கையில் கொர…
-
- 0 replies
- 220 views
-
-
கப்பல் விபத்து; இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும் 10 Views ‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு தொடரும் என்று மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை கடல் பரப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார். மேலும், கொழும்பு கடல் …
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் ஞானசார தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க மூன்று மாதங்கள் மட்டுமே கோரியதாகவும், இருப்பினும் 6 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பின்னர் தனது பதவியை ஞானசார தேரரிடம் ஒப்படைக்க சம்மதித்தார் என்றும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஞானசார தேரரின் கட்சி, மொத்தம் 67,758 வாக்குகளைப் பெற்று தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொண்டது. கடந்த ஆண்டு க…
-
- 4 replies
- 608 views
-
-
கொரோனா பயணதடை – வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மன்னார் மக்கள் 18 Views கொரோனாவினால் இலங்கையில் ஏற்படுத்தப் பட்டுள்ள நீண்ட பயணத்தடை காரணமாக அன்றாட கூலி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது பசி பட்டினியை போக்குவதற்கு சேற்று நீரில் மட்டி எடுத்து உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பயண தடை நடுத்தர குடும்பங்களையே அதிகமாக பாதித்துள்ள நிலையில், ஒழுங்கான தொழில் வாய்ப்பும் இல்லாமல் அத்தியாவசி பொருட்களின் விலையேற்றத்தினால் அன்றாட தொழிலில் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பயணத்தடை ஒரு புறம் மக்களின் வாழ்வாதரத்தை நெருக்கி வரும் நிலையில், அதிகரித…
-
- 1 reply
- 431 views
-
-
"அஸ்ட்ராசெனகா" தடுப்பூசிகளை வாங்க, அவுஸ்ரேலியாவின் ஆதரவை கோரும் இலங்கை! அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வாங்க அவுஸ்ரேலியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. இலங்கை அரசு ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த விடயம் குறித்து அவுஸ்ரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பெய்னுடன் தொலைபேசியில் உரையாடியபோதே இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த கோரிக்கையினை முன்வைத்தார். மேலும் இதன்போது கொரோனா தொற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு அவுஸ்ரேலியா வழங்கிய ஆதரவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். ரூ. 1,787 மில்லியன் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியமை உள்ளிட்டவற்றிக்கு அவர் நன்றி தெரிவித்தார்…
-
- 0 replies
- 553 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம், ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. தினம் தினம் மருத்துவமனைகளுக்கு வருகை தரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளுக்கு அதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த சங்கம் அது தொடர்பில் கடித மூலம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. மேற்படி சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ மற்றும் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவர் ஆர். ஞானசேகரம் ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். …
-
- 1 reply
- 357 views
-
-
மட்டு சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட கஜேந்திரன் எம்பிக்கு அனுமதி மறுப்பு! AdminJune 9, 2021 மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸிற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். கொரோனா வைரஸ் சூழ்நிலையை காரணம் காட்டிஅதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மே 19 நினைவேந்தலை முன்னெடுத்தமைக்காக பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் புகைப்படங்களை பயன்படுத்தியமைக்காக கைதுசெய்யப…
-
- 0 replies
- 452 views
-
-
மன்னார் கடல் பகுதியில் கரை ஒதுங்கும் பேர்ல் கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்; அச்சத்தில் மீனவர்கள் கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதரிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் குறித்த பகுதிக்கு சுகாதார வைத்திய அதி…
-
- 0 replies
- 277 views
-
-
எம்.றொசாந்த் காட்டுக்குள் ஓர் ஒதுக்குப்புறமாக சென்று, காலை கடனை முடித்து விட்டு, வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர் மீது இராணுவத்தினர், தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் மீது கேபிளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பன்புலவு பகுதியை சேர்ந்த ஒருவர் மீதே நேற்றைய (7) தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு உள்ளானவர் கருத்துரைக்கையில், உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன், வடக்கு கப்பன் புலவு பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் அற்ற நிலையில் வசித்து வருகின்றோம். “இது குறித்து பலதடவைகள் அதிகார…
-
- 15 replies
- 1.5k views
-
-
ஐ.நா. தொடர்ந்தும் இலங்கைக்கு உதவியை வழங்கும் – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதி ஐ.நா. தொடர்ந்தும் இலங்கைக்கு உதவியை வழங்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதியளித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பில் தற்போதையை கொரோனா தொற்று நிலவரம், ரஷ்யா- இலங்கை வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. இதற்கிடையில், கொரோனா தொற்றினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு ரஷ்யா அளித்த ஆதரவுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது பாராட்டுகளைத் த…
-
- 1 reply
- 485 views
-
-
(நா.தனுஜா) ஆசியாவின் சொர்க்கமாக விளங்கக்கூடிய இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுக்கும் அதேவேளை, இரு நாடுகளும் ஒன்றிணைந்து கொவிட் - 19 நெருக்கடிக்குப் பின்னர் காணப்படும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவ வலியுறுத்தியுள்ளார். இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தகப்பேரவை மற்றும் கொழும்புப் பங்குச்சந்தை ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் திங்கட்கிழமை ஆரம்பமான இலங்கை முதலீட்டுப்பேரவை மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற…
-
- 2 replies
- 598 views
-
-
பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது, அபராதமும் விதிக்கப்படும் – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறும் அவ்வாறு செய்பவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் 120, 286, 286 ஏ, 291 ஏ, 291 பி, 345, 365 டி, 402, 403, மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என்றும் பொலிஸ் அறிவித்துள்ளது. தண்டனைச் சட்டம், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் பிரிவு 3, கணினி குற்றச் சட்டத்தின் பிரிவு 06, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 02 மற்றும் 03, 1979 ஆம்…
-
- 2 replies
- 540 views
-
-
வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இது தொடர்பான வர்த்தமானியினை வெளியிட்டுள்ளார். வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் என்பனவற்றின் கற்றல் கிளைகளில் உயர் கல்வியை வழங்கும், மேம்படுத்தும் அத்துடன் அபிருத்தி செய்யும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.co…
-
- 7 replies
- 698 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறுதின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்ததான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரு மெளலவி ஆசிரியர்கள் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைது, தடுத்து வைப்புக்கு எதிராக 26,27 வயதுகளையுடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசுருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகிய மெளலவி ஆசிரியர்கள் இந்த மனுவை, சட்டத்தரணி பாலசூரிய ஊடாக தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று அம்மனு இரு நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போது, மனுதாரர்கள் சார…
-
- 0 replies
- 252 views
-
-
மகேஸ்வரி விஜயனந்தன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரதமராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு தயாராகவுள்ளதாக வெளிவரும் செய்திகளை நிராகரித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, அந்தத் தகவல்கள் வெறும் "அரசியல் வாசகங்கள் "என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (8) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இது போன்ற தகவல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாதென தெரிவித்த அமைச்சர், பரப்பப்படும் கதைகளைப் பார்த்தால், நாளை வேறு யாராவது நியமிக்கப்படுவார் என்ற கதைகளும் பரவலாம்…
-
- 3 replies
- 837 views
-
-
கிழக்கு மாகாணத்துக்கு தேவையான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன: சபையில் நாமல்! By கிருசாயிதன் June 9, 2021 கொவிட் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் பொதுசுகாதார வலயங்கள் மற்றும் கிராமசேவகர் பிரிவுகள் தீர்மானிக்கப்படுவது சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலாகும். அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்துக்கு தேவையான தடுப்பூசிகள் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் தமிழ் தேசிய கட்டமைப்பு உறுப்பினர் ராசமாணிக்கம் சானக்கியன் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட…
-
- 0 replies
- 352 views
-
-
சில எம்.பிக்களுக்கு புனர்வாழ்வு அவசியம் – சபையில் எடுத்துரைத்த சாணக்கியன் அரசாங்கத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு முதலில் புனர்வாழ்வு அளிக்க வேண்டும். தற்போது அரசாங்க கட்சியில் இருக்கின்றனர் இதில் சிலர் விடுதலைப் புலிகளில் இயங்கியவர்களும் இருக்கின்றனர் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன் நடராஜா பிரதிப்ராஜா என்கின்ற ஒரு நபர் முப்பத்தாறு வயது மதிக்கத்தக்கவர் திருமணம் முடித்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் போராட்…
-
- 0 replies
- 334 views
-
-
கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணமாகியுள்ளது – சார்ள்ஸ் நிர்மலநாதன் கொரோனா தடுப்பூசிகள் மூலம் மேற்குலக நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கையால் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணமாகியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையினர் செய்யவேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் கொரோனா பரவலை …
-
- 0 replies
- 184 views
-