Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாணக்கியனும், சுமந்திரனும் மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டும் வகையிலே செயற்படுகிறார்கள் : சிறிதரன் குற்றச்சாட்டு சாணக்கியனும், சுமந்திரனும் மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள் கட்சிக்குள் பெரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக அவர் காட்டம் வெளியிட்டுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டமொன்றில் கிழக்கிலிருந்து சாணக்கியனும், சுமந்திரனும் அந்த கூட்டத்தில் பேசியிருந்தார்கள். மாவை சேனாதிராசா ஒரு கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அதில் பங்கு கொள்ளவில…

    • 1 reply
    • 327 views
  2. தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை : பிள்ளையாரை போலிருந்ததாலே பிள்ளையான் என பெயர் வந்தது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை. சிறிய வயதில் அவரை நேசித்ததன் அடிப்படையில் அவரது உடல் காணப்பட்ட விதம் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான். பிள்ளையாரை போலிருந்ததால் எனக்கு பிள்ளையான் என்ற பெயர் வந்தது என்றும் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில், நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த போது குபேரன் என பெயர் வைத்தார்கள். பின்னர் நான்கைந்து பெயர் அதே பெயரில் இருந்ததால் என்னை பி…

  3. இந்தியாவுடன் இராஜதந்திர மோதல் உருவாகும் ஆபத்தை மயிரிழையில் தவிர்த்தது இலங்கை – இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் நடந்தது என்ன ? Digital News Team 2021-03-27T16:49:19 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடன் உருவாகயிருந்த இராஜதந்திரமோதலை இலங்கை மயிரிழையில் தவிர்த்துக்கொண்டது என ஆங்கில இணையமொன்று தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் 54 பேர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடன் இலங்கை இராஜதந்திரமோதலில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ள எக்கனமி நெக்ஸ்ட் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டிற்கு பதில் நடவடிக்கையாகவே இந்த கைது இடம்பெற்றது என இராஜதந்திர வட்டாரங்கள…

  4. (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணை இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முழுமையான நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை உள்வாங்கவில்லை. மாறாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியை சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்புக்குள்ளாக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கினை மாத்திரம் கொண்டுள்ளது. விசாரணைகள் ஏதுமின்றி தண்டிக்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய பிரேரணையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் . ஆகவே 46/1 பிரேரணையின் வெற்றியை தமிழ் மக்கள் முழுமையாக கொண்டாட முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசி…

  5. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், இந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என இயன்றவரை இலங்கை அரசாங்கம் போராடி வருகின்ற நிலையில் அவர்களுடன் இணைந்து ஒரு சில தமிழ் தரப்புக்களும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த பிரேரணையில் வலு கிடைய…

  6. 35 வருடகாலமாக நிராகரித்த தீர்வைத் திணிப்பதில் ஐ.நா.வும் இந்தியாவும் முனைப்பு – தமிழ் சிவில் அமையம் 54 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த மையக்குழுவும் இந்தியாவும் தமிழ் மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் கடந்த 35 வருடங்களாக நிராகரித்தவந்துள்ள ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதில் முனைப்புக் காட்டகின்றன” எனக் குற்றஞ்சாட்டியிருக்கின்றது தமிழ் சிவில் சமூக அமையம். ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டை அமையம் முன்வைத்திருக்கின்றது. அமையத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ. யோகேஸ்வரன், பொ. ந.…

  7. எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 54 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை - இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். அப்போது 2 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து அதில் இருந்த மரியசிங்கம், ராபின்சன், பே…

    • 5 replies
    • 893 views
  8. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் கொரோனா தொற்றுநோயின் அச்சுறுத்தல் இலங்கையில் தற்போதும் காணப்படுவதால் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.இதேவேளை தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். மேலும் குறித்த நாட்களில் தற்போதுள்ள சுகாதார வழிகாட்…

  9. கிளிநொச்சியில் கோர விபத்து ; தந்தையும் இரு மகன்களும் பலி கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் நேற்று (26.03.2021) இரவு இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் அவரது இரு மகன்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில் கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுகிறது. வீதியை விட்டு விலகிய ரிப்பர் காருடன் மோதி விபத்து இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்திருக்கின்றனர். விபத்தில் பளை தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற சிறுவர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த …

  10. தமிழ் மக்களின் போராட்டத்தை தாமதிப்பதற்கானதும், இருட்டடிப்புச் செய்வதற்குமான, இன்னொரு முயற்சியே ஐநா தீர்மானம்! March 27, 2021 தமிழ் சிவில் சமூகஅமையம் Tamil Civil Society Forum 26 மார்ச் 2021 ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையின்46 வதுஅமர்வில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிய செய்திக் குறிப்பு இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்றிய தீர்மானம் 46/1 ஐ தமிழ் சிவில் சமூக அமையம் கவனத்தில் கொள்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைநிறைவேற்றிய இலங்கை குறித்த எட்டாவது தீர்மானம் இதுவாகும். இத் தீர்மானமானது பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதில் குறிப்பிடத…

  11. கிழக்கு இளைஞர்கள் சிலரின் மனதில் கலீபா ஆட்சியை இலங்கையில் உருவாக்கும் எண்ணம் உள்ளது! - பிள்ளையான் By கிருசாயிதன் கலீபா ஆட்சியை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கிழக்கில் ஒரு சில இளைஞர் மத்தியில் உள்ளது எனவும் வெளிநாடுகளில் இயங்கும் அடிப்படைவாத அமைப்புகள் இலங்கையிலும் பெயர் மாற்றப்பட்டு இயங்கிக்கொண்டுள்ளதாகவும் ஆளும் கட்சி உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,எமது நாட்டில் கடந்த காலத்தில் எமது இனத்துக…

  12. மதரஸா பாடசாலைகள் மூடல் விவகாரம்- நான் அவ்வாறு கூறவே இல்லை – அமைச்சர் சரத் வீரசேகர 15 Views இலங்கையில் உள்ள அனைத்து மதரஸா பாடசாலைகள் மூடப்படும் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், “5 வயது முதல் 16 வயது வரையான அனைத்து சிறார்களும், இன, மத வேறுபாடின்றி, கல்வி நடவடிக்கைகளை தொடர வேண்டும். இந்த சிறார்கள், நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தேசிய கல்வி கொள்கைக்கு அமைய, தமது கல்வி நடவடிக்கைககளை தொடர வேண்டும…

  13. யாழ்ப்பாணம், புத்தூர் - நிலாவரை கிணற்றடியில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சித்த அகழ்வுப்பணியை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். இன்று வெள்ளிக்கிழமை (26) காலை நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் நளின் வீரரத்தின தலைமையிலான குழுவினர் நிலாவரையில் துப்புரவு செய்வதாக தெரிவித்து வருகை தந்தனர். சந்தேகத்தில் தவிசாளர் உள்ளிட்டவர்களும் குறித்த முயற்சியினை அவதானித்து கொண்டு நின்றனர். இதனை புலனாய்வாளர்களும் புகைப்படம் எடுத்த வண்ணமிருந்தனர். தொல்லியல் திணைக்களத்தினர் அத்திபாரம் போன்று நிலத்தினை வெட்டுவதற்கு ஆரம்பித்தவுடன் தவிசாளர் வளாகத்தின…

  14. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதல் வீடியோ காட்சிகள் சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் சாரங்கன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு, மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு…

  15. (நா.தனுஜா) இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் புதிய பிரேரணை மிகமுக்கியமானதாக விளங்குகின்றது. நாடொன்றில் நீதி மறுக்கப்படும் பட்சத்தில், கடந்தகாலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் என்பது இந்தத் தீர்மானத்தின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியி…

  16. ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் 33 Views முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்களின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். கிராமத்தில் குடியேறி வாழ்ந்த ஒருவரை கைது செய்துள்ளதோடு குடும்ப பெண்ணொருவரையும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தாக்க முற்பட்டுள்ளார் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. 1984 வரை எல்லை கிராமமாக பல குடும்பங்கள் வாழ்த்த சொந்த ஊருக்கு செல்லமுடியாத நிலையை ஆண்டான்குளம் கிராம மக்கள் எதிர்கொண்டுள்ளனர் https://www.ilakku.org/?p=45527

  17. 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது! பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்தே குறித்த வர்த்தமானி தொழில் அமைச்சரின் செயலாலரினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தீர்மானமானது, எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் செல்லுபடியாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாயாகவும் வரவு – செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாயாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக அதிகர…

  18. யாழ்ப்பாணத்தில் இன்று (25) கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடகக்ப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னதாக கூடிய கொரோனா தடுப்பு செயலணியே குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ். வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும், கே.கே.எஸ் வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் முடக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகளும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது. …

  19. யாழ். புத்தூரில் தொல்பொருள் திணைக்களத்தால் அகழ்வாரய்ச்சி - ஒன்று திரண்ட மக்கள் யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராய்ச்சியானது நிறுத்தட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்றுகூடியுள்ளதை அவதானிக்க முடிந்துள்மையும் அங்கு குழப்பமான நிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதிய…

    • 2 replies
    • 582 views
  20. விமல் வீரவன்சவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு! அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. ‘Dampal Daruwo’ என்ற தேசிய அமைப்பினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது. புகையிலை, ஆல்கஹால் ஆணைய சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது. அண்மையில் அமைச்சர் வீரவன்ச தலைமையில் கறுவாபட்டை சிகரெட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதன்போது அமைச்சர் விமல் வீரவன்ச அறிமுகம் செய்யப்பட்டிருந்த குறித்த சிகரெட்டை வாயில் வைத்திருந்தமை பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் கண்டனங்க…

  21. (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரிட்டன், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. கனடா அந்தவகையில் இதுகுறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர…

  22. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன் வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்…

    • 1 reply
    • 446 views
  23. உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் : த.தே.கூ 39 Views கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபாவேசமடைந்துள்ளனர் எனவும் கடந்த 22 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் பொறுப்பான அமைச்சர் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் க…

  24. தொல்பொருள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிற்கு அழைப்பு! தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இந்த அழைப்பை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின்போது, தொல்பொருள் அகழ்வுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட பலர் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்து உரையாற்…

  25. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொருளாதார தடை விதிக்கப்படாது – அரசாங்கம் நம்பிக்கை மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் மட்டுமே விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேள…

    • 0 replies
    • 314 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.