ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142698 topics in this forum
-
அநுரவைக் கண்காணிக்க ’அனுர மீட்டர்’ அறிமுகம் வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக அதிக பொது நலன் கொண்டதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படும் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காக 22 வாக்குறுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அனுரா மீட்டரைப் புதுப்பிப்பதற்கான தகவல்கள் மூன்று மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன: 1) வெளியிடப்பட்ட ஆதாரங்களில் காணப்படுவது, 2) …
-
- 0 replies
- 101 views
-
-
"சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" திறப்பு! "சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் நேற்று(14) மாலை திறந்துவைக்கப்பட்டது. மருத்துவ கலாநிதி சண்முகநாதன் அருந்ததி தம்பதிகளின் நினைவாக மருத்துவ நிபுணர் மனோமோகன் சிவகௌரி தம்பதிகளால் நிறுவப்பெற்ற இந்த அரங்கம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி. ஆறு திருமுருகன் தலைமையில், மருத்துவ நிபுணர் மனோமோகன் தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குனராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது சிவபூமி திருவாசக அரங்க மண்டப திறப்பு விழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. https://newuthayan.co…
-
- 0 replies
- 70 views
-
-
வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்! adminJuly 15, 2025 யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க தவறியமையால் மேலும் மூவருடன் இணைந்து, பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று, நிர்வாணமாக்கி , அவரை மோசமாக தாக்கி சித்திரவதைகள் புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்ப…
-
- 0 replies
- 65 views
-
-
ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்! adminJuly 15, 2025 ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். குறித்த நபர் சகோதரி குடும்பத்தினருடன் முரண்பட்டு, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (14.07.25) ஜேர்மன் நாட்டில் இருந்து சென்ற நபர் , தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் மது அருந்தியுள்ளார். அவ்வேளை,…
-
- 2 replies
- 223 views
-
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது adminJuly 14, 2025 புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்று 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் காவல்நிலையம் சென்று முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://globaltamilnews.net/202…
-
-
- 19 replies
- 887 views
- 1 follower
-
-
இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு! கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மீனவர் நலன், கடல்வள பாதுகாப்பு, கடற்றொழில் துறை அபிவிருத்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வடக்கு மீனவர்கள் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பிறகு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், தமிழ்…
-
- 0 replies
- 125 views
-
-
வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஆளுநரிடம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார் அத்துடன் இலங்கையிலிருந்து அடுத்த மாதத்துடன் தனது பணியை நிறைவு செய்து திரும்பவுள்ளதாக கனேடியத் தூதுவர் ஆளுநரிடம் தெரிவித்தார். இதுவரை அவர் வழங்கிய ஒத்துழைப்புக்கள் மற்றும் கனேடிய அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகளவில் உள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், போர் காரணமாக ஆவணங்கள் அழிவடைந்தமை இதற்கு பிரதான காரண…
-
- 0 replies
- 135 views
-
-
நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள் மீட்பு. நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் (Wutler) தெரிவித்துள்ளார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார் இதன்போது ”இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 922 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1,386 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், 56 ரக துப்பாக்கிகள் 23 கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439080
-
- 0 replies
- 130 views
-
-
ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். யாழ்ப்பாணம் தையிட்டி சித்த போதனா வைத்தியசாலையின் ஆய்வைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இதனை அவர் வெளிப்படுத்தினார். ஆயுர்வேதத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருந்தாலும், அனைவரையும் அரசாங்கப் பணியில் இணைப்பது சாத்தியமில்லை எனவும், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்குப் பின்னர் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பணி வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும், சில வைத்தியர்களை சுற்றுலாத் துறையில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் மேற்கத்…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்! 14 JUL, 2025 | 02:19 PM பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆனால், போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால், போதைப்பொருள் பாவனை குறைவடைவதை காணக்கூடியதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் ஆவர். குறிப்…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 JUL, 2025 | 01:54 AM மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். வட மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை (12) சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சிறப்பு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வாழும…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
13 JUL, 2025 | 05:12 PM (இராஜதுரை ஹஷான்) ஆட்பதிவுத் திணைக்களம் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞ…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து! அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு…
-
- 0 replies
- 85 views
-
-
வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது. குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது கொக்குத்தொடுவாய்-முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது. அதன்தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசு தேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் 52 மனி…
-
- 0 replies
- 112 views
-
-
மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்! adminJuly 14, 2025 மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த கள விஜயம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது குறித்த கள விஜயதில் வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் வீடு அமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ,நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் கிராம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் தொடர்ந்து அரச திணைக்கள …
-
- 0 replies
- 95 views
-
-
பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்! தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. “பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த பிரமிட் திட்டங்கள் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நிதி நுகர்வோரின் நல்வாழ்வை மேம்படுத்தும…
-
- 1 reply
- 164 views
- 1 follower
-
-
13 JUL, 2025 | 02:41 PM இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். கொட்டகலையில் சனிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை செயல் வடிவம் பெறவேண்டும் - சிறிதரன் 13 JUL, 2025 | 11:19 AM (நா.தனுஜா) தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திர…
-
- 0 replies
- 109 views
-
-
வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு! நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை உள்ளடங்குகின்றன. மேலும், ஒரு தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு அறுவை சிகிச்சை பிரிவு, ஒரு முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளையும் கொ…
-
- 0 replies
- 102 views
-
-
Published By: DIGITAL DESK 3 13 JUL, 2025 | 10:50 AM காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில், கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்த…
-
- 0 replies
- 686 views
- 1 follower
-
-
இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி 13 JUL, 2025 | 09:13 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியதாகவும், அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செம்மணி விவகாரத்தில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டமுடியும் எனத் தெரிவித்தார். செம…
-
- 0 replies
- 97 views
-
-
முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு ; கைத்தொலைபேசியும் செயலிழப்பு 13 JUL, 2025 | 09:19 AM (எம்.வை.எம்.சியாம்) கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது. இதற்கு பதிலளித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்ட தடைகளும் இல்லையென அறிவித்தார். கிரிந்த மீ…
-
- 0 replies
- 117 views
-
-
இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி! இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். தமது முறைப்பாடு குறித்து, காவல்துறையினர் இதுவரையில் உரிய பதில் வழங்காமையினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக முறைப்பாட்டாளர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் வாரத்தை மாத்திரம் காவல்துறையினருக்கான கால அவகாசமாக வழங்கவுள்ளதாகவும், அதற்குள் பதில் கிடைக்காவிடின் ந…
-
- 1 reply
- 123 views
-
-
வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள்! நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இந்த திட்டத்தை தொடக்கி வைத்தவர்கள் வசந்த் சிவாஜிராசாந்த் மற்றும் ஜசிந்தா ஆகியோர், அத்துடன் ஜெர்மன் செஞ்சிலுவை சங்கம், வென்டோர்ஃப் கிளை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியனவும் தமது ஆதரவை வழங்கினார்கள். புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை அடங்கும். இத…
-
- 2 replies
- 112 views
- 1 follower
-
-
வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 36 ஆவது நினைவுதினம் கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் நூலகத்தில் இன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில், கழகத்தின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் க…
-
- 2 replies
- 141 views
-