ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இலங்கை தமிழர்கள் மீதான கரிசனை தேர்தல் நிறைவடைந்த மறுநாள் முடிவடைகின்ற விடயமாகிவிடக்கூடாது – ஜெய்சங்கர் இலங்கை தமிழர் மீதான கரிசனை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்து தேர்தல் நிறைவடைந்த மறுநாளிலேயே முடிவடைகின்ற விடயமாகி விடக்கூடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது இந்தியா கொண்டிருக்ககூடிய கரிசனையானது நீண்ட வரலாற்றைக் கொண்ட உண்மையான விடயமாகும் எனவும் இதனை தேர்தல் கால விவகாரமாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடக நிறுவனமொன்றின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் த…
-
- 0 replies
- 240 views
-
-
2031 இல் இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழர்கள்: சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் இலங்கையில் இதுவரை காலமும் முதலாவது சிறுபான்மை இனமாக இருந்த தமிழர்கள் 2031 ஆம் ஆண்டளவில் இரண்டாவது சிறுபான்மை இனமாக காணப்படுவார்கள் என சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். 11.03.2021 வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித் தொகையியல் நோக்கு எனும் நிகழ்வில் பிரதம வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் சனத்தொகை பெருக்க வீதம் வருடா வருடம் குறைவடைந்தே ச…
-
- 4 replies
- 682 views
-
-
புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்கான சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றில் முன்வைக்க திட்டம் புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். முகத்தை முழுமையாக மூடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகும் என்றும் இதன் ஊடாக பயங்கரவாத நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம் என்பதுடன், ஈஸ்டர் தாக்குதலின் ஊடாக நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம் என அவர் சுட்டிக்காட்டிய…
-
- 16 replies
- 1.2k views
-
-
நேர்காணல்:- ஆர்.ராம் • ஐ.நா.மனித உரிமைகள் பேரவை பிளவுபட்டுள்ளது • இலங்கைக்கு எதிராக மேற்குலம் செயற்படுகிறது • தமிழ் மக்களுக்கு ஐந்து பிரச்சினைகளே உள்ளன • புலிகளின் நீட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு • காணாமலாக்கப்பட்ட உறவுகளுடன் விரைவில் பேச்சு • வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்க முடியாது • உள்ளக ரீதியான பொறிமுறையே முன்னெடுக்கப்படும் • பொருளாதார தடைகள் அனைத்து இனத்திற்குமானதே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படும் 46/1பிரேரணையை நாம் முழுமையாக நிராரிப்போம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல்.பேராசிரி…
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையின் மாகாண சபைகள் தொடர்பில் இந்தியா ஜெனிாவில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதன் காரணமாகவே, அரசாங்கம் தற்போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் நிலைப்பாடுகளை வெளியிடுகிறது. உண்மையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு காணப்படுமானால் எந்த முறைமையில் நடத்தப்படும் என்பதையே முதலில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) எம்பி விஜித ஹேரத் இன்று (14) தெரிவித்தார். மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முறைமை, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது தொடர்பில் அரசாங்கம் ஸ்திரமான நிலைப்பாட்டை நாட்டுக்கு அறிவிக்கவில்லை. ஓரிரு தினங்களின் இந்த விடயம் பரவலாகப் பேசப்படுகிறது. முதலில் மாகாண சபைத் தேர்தலை எ…
-
- 0 replies
- 246 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) * முக்கிய தலைவர்களுடன் மைத்திரி மந்திராலோசனை * ரவி , நவீன், அர்ஜுன , கரு , மங்கள ஆகியோரும் களத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தற்போது நாட்டிற்கு அத்தியாவசியமானதாகியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் கட்சியிலிருந்தும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். எனவே நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டும் நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டும் சாதகமான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாரா…
-
- 0 replies
- 307 views
-
-
(ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் இணை அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையானது திருத்தப்பட்டு முன்னரை விடவும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக 15அவதானிப்புக்கள் மற்றும் 16பரிந்துரைகளுடன் பிரித்தானியா தலைமையில் இணை அனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட ‘பூச்சிய’ வரைவானது முறைசாரா கூட்டங்களில் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட பூச்சிய வரைவின் அவதானிப்புக்களின் ஆறாவது பந்தியில், “பொறுப்புக்கூறலை முன்னேற்றும் நோக்கத்துடன், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றம் துஷ்பிரயோகங்கள் என்பன தொடர்பான சான்றுகளைப் பாதுகாப்பது, பகுப்பாய்…
-
- 0 replies
- 252 views
-
-
(ஆர்.ராம்) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான பொது விவாதமொன்று எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் கடப்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாகவே, இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. பின்வரிசை உறுப்பினர்களாக சியொபெய்ன் மக் டோனா , எலியட் கொல்பேண் , சேர் எட்வேர்ட் டேவி ஆகியோர் இந்த பிரேரணையை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா முன்வைத்துள்ள பிரேரணை மேலும் வலுப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று புலம்பெயர் தமி…
-
- 0 replies
- 198 views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 15வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். போராட்டத்…
-
- 0 replies
- 147 views
-
-
(ஆர்.ராம்) ஸ்டீபன் ராப்பின் குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை பாரிய போர்க்குற்றங்கள் எவையும் நிகழவில்லை காணாமலாக்கப்பட்ட உறவுகளுடன் பேசவுள்ளோம் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் சீனாரூபவ் ரஷ்யா ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான அனுசரணை வழங்கும் நாடுகளால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையை வெற்றி கொள்வது கடினம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சம்பந்தப்பட்ட நாட்டின் இணக்கத்தினைப் பெறாது எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் எவ்விதமான பலனுமில்லை என்று வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொ…
-
- 0 replies
- 159 views
-
-
நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான்’ -அருட்தந்தை மா.சத்திவேல் 40 Views நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவித்த அவர், “அரசியல் கைதிகள் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கான காரணம் ஒட்டுமொத்த அரசியல் தமிழ்த் தலைமைகளுமே. சிவில் சமூகங்கள் பொறுப்பேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதாவது அரச…
-
- 0 replies
- 218 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணி கட்சி விரைவில் பதிவுசெய்யப்படும் : விக்கினேஸ்வரன் நம்பிக்கை தமிழ் மக்கள் கூட்டணி கட்சி விரைவில் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன். இன்று அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவரது வாராந்த கேள்வி பதில் அறிக்கை வருமாறு- எமது கட்சி இன்னமும் பதிவு பெறவில்லை. பதிவு பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எமது தமிழ் மக்கள் கூட்டணியை எடுத்துக் கொண்டால் நாங்கள் எவருமே பாரிய புத்திசாலிகள், கெட்டிக்காரர்கள், திறமைசாலிகள் என்று பெயர் எடுத்தவர்கள் அல்லர். நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள். அரசியலுக்குப் புதியவர்கள். எங்களுக்கிருக்கும…
-
- 0 replies
- 327 views
-
-
தமிழ் அரசியல்வாதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை பேசி வருகின்றனர் – பிள்ளையான் நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளை கேட்டு துப்பாக்கி ஏந்தி போராடினோம். எமது மாவட்டத்தின் இளைஞர்கள் பலர் மரணித்திருக்கின்றனர். அவர்களின் நோக்கம் இங்கு வாக்குகளை பெறுவதாகும்.சாணக்கியன் போன்றவர்களை பயன்படுத்தி சுமந்திரன் வாக்குகளை பெறவேண்டும். தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியை சுமந்திரன் பெறுவதற்காக அவரை பயன்படுத்துவார். கட்சிக்குள் பலத்தினை கூட்டுவதற்கே பார்க்கின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்த…
-
- 0 replies
- 239 views
-
-
இன்றைய தினம் இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும் திருகோணமலையில் சந்தித்த வேளை பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இச்சந்திப்பு எமது மக்களுக்கான எதிர்கால மாற்றத்தின் முதல் படி எனவும் குறிப்பிட்டார். இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் கூறுகையில், வடகிழக்கு மற்றும் எமது மாவட்டம் சம்பந்தமான பல விடயங்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அதில் முக்கியமாக எமது காணி அபகரிப்பு, தொல்பொருள் மற்றும் மகாவலி திட்டம் சம்பந்தமான பிரச்னைகள் சம்பந்தமாகவும். அத்துடன் தகவல் தொழில்நுட்ப துறையை வடகிழக்கில் நிறுவுவதற்கான பரிந்துரை செய்திருந்தேன். …
-
- 1 reply
- 428 views
-
-
14ம் நாள் உணவு தவிர்த்து அன்னை அம்பிகை விடுத்த உருக்கமான வேண்டுகோள்
-
- 0 replies
- 442 views
-
-
தீவிரவாத குற்றச்சாட்டுகளில் கைதாவோரை புனர்வாழ்வுக்குட்படுத்தும் சரத்துக்கள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானியொன்று வெளியாகியது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாவோரை புனர்வாழ்வுக்குட்படுத்தும் சரத்துக்கள் உள்ளடங்கிய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கையெழுத்திடப்பட்டு 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடபட்டுள்ள ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் , பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படு…
-
- 0 replies
- 314 views
-
-
யாழ் மாவட்டத்தில் இவ்வாண்டின் மார்ச் மாதம் முதல் 11 நாள்களில் மட்டும் 101 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் நாள்களில் இங்கு இந்நோய் நிலமையானது தீவிரமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற ஒன்றுகூடல்கள், விழாக்கள், பயணங்களை தவிர்ப்பதுடன் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு அவர் கேட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுகாதார நடைமுறைகளானது சரியாக பின்பற்றப்படாத நிலையில் கொரோனா பரவல் தீவிரமடையுமென அஞ்சப்படுகின்றது. தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று பரம்…
-
- 0 replies
- 321 views
-
-
இலங்கையில் புர்காவுக்கு தடை - உத்தரவில் கையெழுத்திட்டார் வீரசேகர இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே புர்காவை தடை செய்வதற்கான உத்தரவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். https://www…
-
- 2 replies
- 417 views
-
-
மாகாண சபைகள் திருத்த சட்ட வரைபு அல்லது அதன் சிக்கல்களை நீக்கிவிட்டு விரைவில் தேர்தலை நடத்துங்கள் தேசியத்திற்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் ... பேராயரின் இணக்கத்துடனும் நம்பிக்கையின் அடிப்படையிலுமே உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு முன்னெடுத்து செல்லப்பட்டது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பான விடயங்கள் தவிர அறிக்கையில் உள்ள அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டது. ஒரு தேசியவாத அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது செயற்பாட்டுக்கு வரும் எதிர் சக்திகளை விளங்கிக் கொள்ளுங்கள். மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற…
-
- 0 replies
- 374 views
-
-
சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைய சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – ஜனாதிபதி! சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹா சிவாத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி இன்று (விாயழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மஹா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இந்த முறை சிறிது தளர்வு இருந்தாலும் கடந்த வருடத்தைப் …
-
- 12 replies
- 1.3k views
-
-
வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டார். 326 மில்லியன் ரூபா செலவில் இவ்வாலய புனரமைப்புபணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு, பல தசாப்தகாலமாக இலங்கை - இந்தியா இணைப்புப்பாலமாகவிருந்த ராமர்சேது பகுதியில் இந்திய உயர் ஸ்தானிகர் விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டார். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொடர்புகளை உருவாக்குவதில் வரலாற்று கட்டமைப்புக்களின் வகிபாகத்தை நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய இலங்கை மக்களின் பிணைப்புக்கள் வலுவடையும் என குறிப்பிட்டார். இந்திய உயர்ஸ்தானிகர் வடக்க…
-
- 7 replies
- 803 views
- 1 follower
-
-
எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை போராடிக்கொண்டே இருப்போம் :காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப் போராட்டக் கூடாரத்தையும் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்பாக நடைபெற்று வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 10ஆம் நாளான நேற்று பொலிஸாரினால் கூடாரங்கள் அகற்றப்பட்ட போதிலும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கையிலேயே அவர் இவ்வாற…
-
- 0 replies
- 231 views
-
-
அம்பிகையின் கோரிக்கைக்கு ஓரணியில் வலுச்சேர்ப்போம்! அம்பிகையின் கோரிக்கைக்கு ஓரணியில் வலுச் சேர்ப்போம் என ரெலோ இளைஞர் அணி தெரிவித்துள்ளது. இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோவின் இளைஞர் அணி தலைவருமாக சபா குகதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும், இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கு இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பராப்படுத்தும் தீர்மானத்துடன் பிரதான நான்கு கோரிக்கைகளை முன் வைத்து பிரித்தானிய அரசிடம் சாகும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை இன்றுடன் 14 வது நாளாக நடாத்திவரும் பிரித்தானிய வாழ் தாயக உறவு அம்பி…
-
- 0 replies
- 242 views
-
-
யாழில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் சனிக்கிழமை 14ஆவது நாளாகத் தொடர்கின்றது.நீதி வேண்டிய இந்தப் போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கி…
-
- 0 replies
- 238 views
-
-
தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொவிட்−19 (B.1.351) என்ற புதிய வைரஸ் வகையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார். தன்ஸானியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, தற்போது தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்…
-
- 1 reply
- 489 views
-